Home Blog Page 3619

‘சென்றுவா மலை மகனே’ – வருண் பிரதீஸின் கண்ணீர் கதை…..!

பதுளை அசேலபுர கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், செல்வராஜா யோகேஸ்வரி ஆகியோருக்கு மகனாப் பிறந்தவரே சிவனேசன் வருண் பிரதீஸ் என்ற ஆறு வயதுச் சிறுவனாவார்.

இச்சிறுவனுக்கு புத்தம் புதிய சீருடையை உடுத்திவித்து, புதிய பாதணிகள் அணிவித்து, புதிய புத்தகப் பையை முதுகில் மாட்டிவிட்டு, தாயும், தகப்பனின் தாயும், சகோதரியும், சகோதரனுமாக ஐவர் பஸ் மூலம் பாடசாலைக்கு கூட்டி வந்தனர்.

குறிப்பிட்ட வருண் பிரதீஸ் என்ற மாணவனும், அவருடைய சகோதரனும் இரட்டைக் குழந்தைகளாளவர். இவ்விருவருக்கும் பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் 1ற்கு பயிலுவதற்கான அனுமதி கிடைத்தது. அதைத் தொடர்ந்து, மேற்படி ஐவரும் பாடசாலைக்கு 15.02.2021ல் காலை வந்து கொண்டிருந்தனர்.

இவ் ஐவரும் வந்த போதிலும், வருண் பிரதீஸ் தனது பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு பாட்டியுடன் முதலில் ஓடி வந்தார் அவர்களுக்கு பின்பு சிறுவனின் தாயும் உடன் பிறந்த சகோதரனும் இசகோதரியும் வந்தனர். அவர்களில் வருண் பிரதீஸின் உடன் பிறந்தவர் தனது தாயின் கையைப்பிடித்துக்கொண்டு வந்தார்.

அவ்வழியிலவந்த கணரக லொரியொன்று பாட்டியையும், பேரனான வருண் பிரதீசையும் முட்டி மோதியது. அந்நிலையில் சிறுவன் அவ்விடத்திலேயே பலியானதுடன பாட்டியும் ஆபத்தனான நிலையிஇருவரும் பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாகவும், பாட்டியின் நிலை கவலைக்கிடமாகவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், சிறுவனின தாயான செல்வராஜா யோகேஸ்வரி கண்ணீர் மல்க,’எனது இரு பிள்ளைகளையும் பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயத்தில் அனுமதித்துவிட்டு, மகளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு கூட்டிச்செல்லவே திட்டமிட்டிருந்தோம்.

எனது மகள், தம்பிமார் இருவரையும், சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயத்தில் அனுமதித்துவிடுவதை பார்த்துவிட்டு செல்கின்றேன் என்று கூறியதன் பின், அவரும் எம்முடன் வந்தார் அதன் பிறகு ஏற்பட்ட விபரீதம், என்னை திக்குமுக்காடச் செய்து விட்டது. மேலே என்னால் எதுவுமே கூறக்கூடிய நிலையில்லை நான் பைத்தியம் பிடித்தவளாகவே இருக்கின்றேன். எனது உயிரே எனக்கு வெறுத்து விட்டது என்று அழுது புலம்பினார்.

இன்று 17.02.2021 மாலை 3.00 மணியளவில், பதுளை கவரக்கலை தோட்ட மயானத்தில் வருண் பிரதீசின் இறுதிகிரியைகள் மேற்கொள்ளப்பட்டு அடக்கம் செய்யப்படும். இந்நிகழ்விற்கு பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். சகலரும் பெரும் சோகத்திலேயே ஆழ்ந்திருந்ததுடன், அசேலபுர கிராமம், கவரக்கலை தோட்டம் ஆகியவற்றின் மக்கள் பெரும் சோகத்திலேயே, ஆழ்ந்திருப்பதை காணக்கூடியதாகவிருக்கின்றது.

மேற்படி விபத்து குறித்து, பதுளை பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லொரிச் சாரதியை கைது செய்யப்பட்டு, பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில், ஆஜர் செய்த போது, நீதிபதி அந்நபரை எதிர்வரும் 22.02.2021 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இப்விபத்து 15.02.2021ல் காலை 7.35 மணிக்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பதுளை அரசினர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சாமிவேல் ராஜேஸ்வரி என்ற 63 வயது நிரம்பிய பாட்டியின் நிலை, கவலைக்கிடமாகவுள்ளது.

எம். செல்வராஜ, பதுளை

‘பெருந்தோட்டப்பகுதிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் உரிய வகையில் இல்லை’

பெருந்தோட்டப்பகுதிகளில் பாதை சீரமைப்புக்கள் பஸ் போக்குவரத்துக்கள், மின் இணைப்புக்கள், நீர் விநியோகங்கள் ஆகியனவற்றில் பெரும் பின்னடைவுகள் எதிர்நோக்கப்பட்டுவருவதாக, பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டத்தில், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டம், பதுளை அரச செயலக கேட்போர் கூடத்தில் (இன்று) 17.02.2021ல் குழுத்தலைவர் சுதர்சன தெனிபிட்டிய தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில், ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முசாம்மில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகமை உள்ளிட்டு மாவட்ட அரச திணைக்கள பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் என்ற வகையில் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அவ் வேளையில், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் பேசுகையில், பதுளை மாவட்ட பெருந்தோட்டப் பாதைகளின் சீரமைப்புக்கள், முறையாகவோ, கிரமமாகவோ இடம்பெறுவதாகத் தெரியவில்லை. இதனால், பெரும் பாதிப்புக்களை பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். ஆகவே, இது விடயத்தில் காலம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அடுத்து, பதுளை மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளில் முறையாக இ.போ.ச பஸ் சேவைகள் இடம்பெறுவதில்லை. எனது முயற்சினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இ.போ.ச. பஸ்களில் சிலவும் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. எந்தக்காரணம் கூறினாலும், எமது மக்கள் பஸ் சேவைகள் இடம்பெறாதலால், பெரும் பாதிப்புக்களை அடைந்த வண்ணமேயுள்ளனர். பதுளை மாநகருக்கு பல்வேறு தேவைகள் கருதி செல்வோர், கருதி பாடசாலைகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நகருக்கு தொழிலுக்கு செல்வோர், நோயாளாகள்; ஆகியோரே பாதிக்கப்படுபவர்களாவர்.

அத்துடன், பதுளை மாவட்ட பெருந்தோட்டப் பகுதிகளில் மரங்களிலான மின்கம்பங்களே, மின் இணைப்பிற்கான பயன்படுத்தப்படுகின்றன. கொங்கிறீட்டிலான மின் கம்பங்கள் பயன்படுத்துவதே இல்லை. இதற்கென்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும்; அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, மரங்களிலான மின் கம்பங்கள் பயன்படுத்துவதை விடுத்து, கொங்கிறீட்டிலான மின்கம்பங்களை பயன்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு, கேட்டுக்கொளகின்றேன்.

அடுத்து, நீர்வடிகால் அமைப்பு திணைக்களத்தினூடாக விஸ்தரிக்கப்பட்டு வரும் நீர் விநியோகத்திட்டங்களை விஸ்தரிக்கப்படும் பகுதிகளில்இ அமைந்துள்ள தோட்டப்பதிகளையும் இணைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்’ என்றார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரினால் முன் வைக்கப்பட்ட மேற்படி கோரிக்கைகள் குறித்து, கூடிய கவனம் செழுத்தப்படுமென்று இணைப்புக்குழுத்தலைவர் உறுதியளித்தார். அத்துடன், இவ்விடயங்கள் தொடர்பாக குறிப்பிட்ட விடயங்களுக்கு திணைக்களப் பணிப்பாளர்களும், பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை, நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

எம். செல்வராஜா, பதுளை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பல நாடுகள் ஆதரவு – இலங்கை நம்பிக்கை

ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகியதால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இம்முறை பல நாடுகள் ஆதரவு வழங்கக்கூடும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஜெனிவாத் தொடர் மற்றும் புதிய அரசமைப்பு ஆகியன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“கடந்த ஆட்சியின்போது அரசமைப்பு ஊடாக நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சி எடுத்தபோது அதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம். ஒற்றையாட்சி மற்றும் ஒருமித்த நாடு ஆகிய இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை பிள்ளைகளுக்கு எடுத்துரைக்கவும். அவ்வாறு இல்லையேல் அது பிரிவினைவாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

ஒற்றையாட்சி என்பது நாட்டில் எல்லா பகுதிகளிலும் ஒரு சட்டம் அமுலில் இருப்பது. இங்கு 18 வயதில் திருமணம் முடிக்க கூடியதாக இருந்தால் அதே நிலைதான் யாழ்ப்பாணத்தில் இருக்கவேண்டும். அங்கு 15 வயதில் திருமணம் முடிக்க முடியாது.ஆனால் ஒருமித்த நாடெனில் 9 மாகாணங்களில் பல சட்டங்கள் இருக்கும். அதுவே சமஷ்டிக்கு வழிவகுக்கும்.

இந்த நாட்டை பிரித்து வடக்கில் ஈழம் உருவானால் எம்மால் சாசனத்தை பாதுகாக்கமுடியாமல்போகும். எனவேதான் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதால் எந்தவொரு நாடும் எமக்கு ஆதரவு வழங்கவில்லை. ஆனால், இணை அனுசரணையில் இருந்து நாம் விலகியுள்ளதால் 47 நாடுகளில் பல நாடுகள் எமக்கு இம்முறை ஆதரவளிக்ககூடும்.” – என்றார்.

பதுளையில் சில தோட்டங்களை அச்சுறுத்தும் காட்டெருமை!

பதுளை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வேவெஸ்ஸ தோட்ட காரியாலய பிரிவு, மாணிக்கவல்லி, மத்தியப்பிரிவு வேவெஸ்ஸ கம, கல்குடா வத்தை மற்றும் நிக்கவத்தை போன்ற கிராம பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் வாழும் பொது மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மாலை 6மணிக்கு பின்னர் கூட்டங் கூட்டமாக வரும் காட்டெருமைகள் காலை 6மணிக்கு பிறகும் மக்கள் நடமாடும் கிராம, தோட்ட வீதிகளில் நிற்பதால் காலை வேளையில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், தொழிலுக்கு செல்வோர் மற்றும் வேவெஸ்ஸ தோட்டத்தில் இறப்பர் பால் சேகரிக்க வரும் பெண்கள் என அனைவரும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த காலங்களில் இப்பகுதியில் உலாவி வந்த காட்டெருமைகளை காடுகளுக்கு விரட்டும் செயற்பாட்டை பதுளை பிரதேச சபை முன்னெடுத்து வந்தது. எனினும் அச்செயற்பாடு இடைநடுவே கைவிடப்பட்டதால் மீண்டும் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

எனவே காட்டெருமைகளின் நடமாட்டத்தை குறைக்க மக்கள் பிரதிநிதிகளும், பதுளை பிரதேச சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

பசறை நிருபர்

திரிபுரா முதல்வர்போட்ட ‘அரசியல் குண்டும்’ – மனோ வழங்கியுள்ள விளக்கமும்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் பீஜேபி முதல்வர் பிப்லப் டெப் நேபாளத்திலும், இலங்கையிலும், பீஜேபி கிளைகள் உருவாக்குவோம் என்ற மாதிரி சொன்னாராம் என இங்கே சிலர், மிகப்பெரிய தேசபக்தர்களை போன்று வேடம் புனைந்து சும்மா கூச்சல் போட்டு குழப்பி கொள்கிறார்கள். நம் நாட்டின் உண்மை பிரச்சினைகளால் மக்கள் துவண்டு போய் இருப்பதை திசை திருப்ப இது இன்று பயன்படுத்தப்படுகிறது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

இது ஒரு சிறு நிகழ்வு. நம் நாட்டிலும் இந்தியாவை பற்றி, வேறு நாடுகளை பற்றி, அந்நாட்டு அரசுகளை பற்றி, இந்நாட்டு அரசியல்வாதிகள் பேசுவதில்லையா? இதை மறந்து, சாதாரண பாமரருக்கும் தெரிந்த விடயம் பற்றி, அரசியல் சட்ட விற்பன்னர்கள், ஊடகங்களில் வந்து, ஏதோ பெரிய அரசியல் சட்ட வியாக்கியானம் வேறு கொடுக்கின்றார்கள். இவை என்ன என எங்களுக்கு தெரியாதா?

இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் இந்நாட்டில் கட்சி அமைக்க முடியாது. இந்திய பீஜேபியின் நேரடி கிளையை இங்கே அமைக்க சட்டத்தில் இடமில்லை.

ஆனால் இங்கே ஒரு கட்சியை வேண்டுமானால், சட்டப்படி “பாரதீய ஜனதா கட்சி” (பீஜேபி) என பதிவு செய்ய விண்ணபிக்கலாம். அல்லது உள்ள ஒரு கட்சியின் பெயரைக்கூட பீஜேபி என மாற்றிக்கொள்ளலாம். இதற்கு சட்டம், கட்டம் போட முடியுமா, என்ன?

இங்கே ஹெல உறுமய, ருஹுனு ஜனதா, தமிழ் முற்போக்கு, தமிழ் தேசிய, முஸ்லிம் காங்கிரஸ் என பல கட்சிகள் உள. இவை போன்று இதுவும் அவசியமானால் அமையலாம்.

உலகம் முழுக்க, இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட்… என்ற பெயரில் கட்சிகள் இல்லையா? பல நாடுகளில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி…. என்றும், கிரீன் பார்ட்டி…. என்றும் கட்சிகள் இருக்கின்றன. அதேபோல், இஸ்லாமிய… என்ற பெயர் கொண்ட கட்சிகளும் உள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு இலங்கையின் ஆர்சி ஆண்டகை பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் “இலங்கை கிறிஸ்தவ ஜனநாயக கட்சி” என்று ஒரு கட்சி அமைக்க போகின்றாரோ என்ற கதை அடிப்பட்டது. அந்தளவுக்கு அவரது உரைகளில் அரசியல் இருந்தது.

இன்னமும் சில கட்சிகள் பெயரளவில் ஒரு அடிப்படையில் இல்லாவிட்டாலும் கூட, கொள்கை அடிப்படையில், உலகமட்ட ஒருமைபாடுகளை கொண்டுள்ளன. நம்ம ஜேவீபீ, பல உலக புரட்சி இயக்கங்களுடன் ஒருமைபாடு கொண்டிருந்தது. இப்போது கூட அவர்களது மாநாடுகளுக்கு வேறு நாடுகளின் பல கட்சி பிரதிநிதிகள் வருகிறார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, சுதந்திர கட்சி மாநாடுகளுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் வருகின்றார்கள். நம்ம ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிகழ்வுகளில் இந்திய முஸ்லிம் லீக் பிரதிநிதிகளை கண்டுள்ளேன். ஆக இதெல்லாம், சின்ன, சின்ன அரசியல் நகர்வுகள்தான்…!

பிப்லப் டெப், ஒரு துடிப்பான இளம் பீஜேபி அரசியலர். எதிர்கால இந்தியாவின் ஒரு முன்னணி தலைவராக வரக்கூடியவர். இன்று கொஞ்சம் அதிகமாக பேசி விட்டார், அவ்வளவுதான். இப்போ அவரை அழைத்து பிரதமர் மோடி விளக்கம் கேட்டுள்ளார்.

இதை பிடித்துக்கொண்டு இங்கே சிலர் பெரிய யோக்கியர்கள், உலக மகா உத்தமர்கள் போன்று பெரிய கட்டு கட்டுகிறார்கள். இவர்களை பற்றி எனக்கு தெரியாதா ?

போர்த்துகீசியர், ஒல்லாந்தரால் கைப்பற்ற முடியாமல் போன கண்டி ராஜ்யத்தை, ஆங்கிலேயர் எப்படி கைப்பற்றினார்கள்? கண்டியின் கடைசி வீர தமிழ் மன்னன் கண்ணுசாமி நாயக்கர் என்ற ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனை காட்டிக்கொடுத்து, போட்டுக்கொடுத்து தேசத்துரோகம் செய்த, பிலிமத்தலாவை, எகலபொல நிலமே ஆகியோர் யார் என்பதை தேடி பார்த்தாலே விடை கிடைக்கும்.மேடையில் ஏறி தேசப்பற்றும், தமிழ், முஸ்லிம் இலங்கையருக்கு எதிராக இனவாதமும் பேசிவிட்டு, கீழே இறங்கி வந்து இரகசியமாக சீனாவுக்கோ, வெளிநாடுகளுக்கோ நாட்டை விற்று பிழைப்பு நடத்தும் பிலிமத்தலாவை, எகலபொல போன்ற நபர்கள் இந்நாட்டில் இன்றும் இருக்கிறார்கள்.

இதை மனதில் கொண்டு நாம் இலங்கையர்களாக உள்நாட்டில் ஒற்றுமையாக இருந்தால், எவரும் எம்மை ஆக்கிரமிக்க முடியாது, இல்லாவிட்டால் அதோகதிதான் என்பதை உணர்வோம்.

உலகளவில் 11 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 கோடியைக் கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஒரு வருடம் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியன உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 கோடியே 35 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8 கோடியே 48 லட்சத்து 51 ஆயிரத்து 754 பேர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 லட்சத்து 29 ஆயிரத்து 811 பேர் உயிரிழந்துள்ளனர்.

காதல் வலையில் விழுந்துவிட்டாரா கீர்த்தி சுரேஷ்?

அனிருத்தும், எனது மகளும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் இது என்ன மாயம் படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருதும் பெற்றார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேசும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக இணைய தளங்களில் கிசுகிசுக்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இருவரும் சில மாதங்களுக்கு முன்பு நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலானது. விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது. காதல் பற்றி இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் காதல் கிசுகிசுவுக்கு கீர்த்தி சுரேசின் தந்தையும், தயாரிப்பாளருமான சுரேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “கீர்த்தி சுரேசும், அனிருத்தும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஏற்கனவே இதுபோன்ற வதந்திகள் பரவின. இப்போது 3-வது தடவையாக இந்த தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என்றார்.

பெருந்தோட்ட மக்களுக்காக போராடுவதற்கு தயார்- ஜே.வி.பி. அறிவிப்பு

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அனைத்துவிட நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என சம்பள நிர்ணய சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பான பிரச்சினை இன்னும் தீரவில்லை. ஆயிரம் ரூபா என்ற கோரிக்கை 6 வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். அதனை வலியுறுத்தி தொழிலாளர்களுடன் இணைந்து நாமும் போராடினோம். 6 வருடங்களுக்கு முன்னர் இருந்த பொருளாதார நிலைக்கேற்பவே அந்த தொகை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. எனவே, கிடைக்கவுள்ள ஆயிரம் ரூபா போதாது என்பதையும் கூறியாக வேண்டும்.

சம்பள நிர்ணய சபையில் எமது அங்கத்தவர்கள் இருவர் அங்கம் வகிக்கின்றனர். சம்பள உயர்வுக்காக அவர்களும் குரல் கொடுத்தனர். சம்பள நிர்ணயசபை ஊடாக சம்பளம் தீர்மானிக்கப்பட்டுள்ளதால், கூட்டு ஒப்பந்தம் ஊடாக கிடைக்கப்பெறும் சலுகைகள் கிடைக்கப்பெறுமா என்ற கேள்வியும் எழுகின்றது. அவ்வாறு இல்லாது செய்யப்பட்டால் அவற்றை பெறுவதற்காக நாம் போராடுவோம். தொழிலாளர்களின் உரிமைக்காக நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்.

மலையக மண்ணை பெருந்தோட்டத் தொழிலாளர்களே வளமாக்கினர். அவர்கள் சிந்திய வியர்வை மண்ணில் கலந்துள்ளது. அந்நிய செலவணியை பெற்றுக்கொடுக்கின்றனர். ஆனாலும் பெருந்தோட்ட மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். வாழ்வாதாரம் உரிய வகையில் மேம்படவில்லை. மனிதர்களாக வாழ்வதற்கான தேவைகளை இந்த நாட்டை ஆண்ட அரசுகள் செய்துகொடுக்கவில்லை. உழைப்புக்கேற்ப ஊதியம்கூட இல்லை. பலர் இன்னும் லயன் அறைகளில்தான் வாழ்கின்றனர்.

அனைத்து வளங்களையும்கொண்ட பாடசாலைகள் இல்லை. இப்படி பல பிரச்சினைகளை பட்டியலிடலாம். உரிமைகள் மற்றும் சகல அந்தஸ்ததுகளுடனும் பெருந்தோட்ட மக்களும் வாழ வேண்டும். இந்நிலைமையை பெற்றுக்கொடுப்பதற்கு மலையக தலைவர்கள் என கூறிக்கொள்பவர்கள் நடவடிக்கை எடுத்ததில்லை.” – என்றார்.

க.கிசாந்தன்

16 நாட்களில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

நாட்டில் கடந்துள்ள 16 நாட்களில் மாத்திரம் 13,027 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 3,672 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 2,646பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 1,225 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் 132 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 795 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

கொரோனாவால் 16 நாட்களில் 86 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸால் நாட்டில் கடந்துள்ள 16 நாட்களில் மாத்திரம் 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 396 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா முதலாவது அலையின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர்.இதன்படி கொரோனாவால் இதுவரை மொத்தமாக 409 பேர் உயிரிழந்துள்ளனர்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

மலையக மக்கள்மீதான வன்முறை குறித்து 19 ஆம் திகதி முத்தரப்பு சந்திப்பு!

0
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள்மீது, நிர்வாக தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்

0
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது. இது, இந்தப் பணியின் இரண்டாவது கட்டத்தில், அதன் ஏழாவது துறைமுகப் பயணமாகும். இது கடலில் மேற்கொள்ளப்படும் ஒரு தனித்துவமான அனைத்துலக...

நில உரிமைக்காக ஒன்றிணையும் தமிழ் பேசும் சமூகங்கள்: கொட்டக்கலையில் முக்கிய தீர்மானம்!

0
கிழக்கு மாகாண காணி வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொட்டக்கலை சுயசக்தி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்,...