Home Blog Page 3616

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம்

சாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா,  ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.
கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் திகதி நாசா விஞ்ஞானிகள், இந்த விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
இந்தநிலையில், செவ்வாய் கிரகத்தின் வெளிப்பரப்பை, விண்கலம் நேற்று  நெருங்கியதால் விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இதையடுத்து ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் அனுப்பிய தகவலின்படி, அது தற்போது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி விட்டது என்று தெரியவந்தது.
மேலும் செவ்வாய் கிரகத்தில் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் எடுத்த புகைப்படத்தையும் நாசா டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

2ஆவது அலையால் மேல் மாகாணத்தில் 50,181 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மேல் மாகாணத்தில் 50 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 514 தொற்றாளர்களில் 224 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 28,440 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 15,759 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 5,982 பேருக்கும், இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

யார், யாருக்கு கொரோனா தடுப்பூசி போடக்கூடாது? வெளியானது தகவல்!

கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படாது என்று சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டு மையத்தின் ஊடகப்பிரிவு அதிகாரியான வைத்தியர் தேஷானி ஹேரத் (Dr. Deshani Herath)  தெரிவித்தார்.

இலங்கையில் பொது மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றும்பணி இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் எந்தெந்த தரப்புக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படாது, அல்லது அவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடாது என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படாது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் பின்னர் அப்பிரிவினருக்கும் அனுமதி வழங்கப்படலாம். அத்துடன், கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படாது. அதேபோல பாலுட்டும் தாயாக இருந்தால் குழந்தை பிறந்து 6 மாதங்கள்வரை தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இப்பிரிவினர் குறித்தும் இன்னும் ஆய்வு இடம்பெறவில்லை. 6 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசியை பெறுவதற்கு தகுதிபெறுவர்.

அதிகளவு ஒவ்வாமை இருப்பவர்கள்  தவிர்த்துக்கொள்வதே நல்லது.

கொவிட் – 19 தடுப்பூசி 2 கட்டங்களாக ஏற்றப்படும்.  எனவே, முதற்சுற்றில் தடுப்பூசி ஏற்றப்பட்டு, அதனால் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவர் இரண்டாவது டோஸை பெறக்கூடாது.
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சை நிலையங்களில் இருப்பவர்கள் தடுப்பூசியை பெறமுடியாது. குணமடைந்து இரு வாரங்களின் பின்னர் பெற்றுக்கொள்ளலாம்.” – என்றார்.

அதேவேளை, கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் சுகாதார ரீதியிலான அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என சிலர் கருதுகின்றனரே என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வைத்தியர் தேஷாஹினி ஹேரத்,

“நானும் தடுப்பூசி ஏற்றிக்கொண்டேன். நலமாக இருக்கின்றேன். கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு சிற்சில உபாதைகள் ஏற்படக்கூடும். ஊசி ஏற்றப்படும் இடம் சிவப்பு நிறமாகலாம், அந்த இடத்தில் வலி ஏற்படலாம். சிலவேளை சிறு அளவில் காய்ச்சல் ஏற்படக்கூடும். நடுக்கல் ஏற்படலாம். சிலருக்கு உணவு அருந்த முடியாது, வாந்தியும் வரக்கூடும். ஆனால், இரு நாட்களில் இயல்புநிலைக்கு வந்துவிடும். எனினும், கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு அச்சப்படத்தேவையில்லை. நீங்கள் விரும்பினால் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன், தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்ற கருத்தும் சிலர் மத்தியில் நிலவுகின்றது.  குறிப்பாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் கர்ப்பம்தரிக்க முடியாது என பெண்கள் சிலர் கருதுகின்றனர். கர்ப்பமடைந்தாலும் கரு கலைந்துவிடலாம் என சிலர் கருதுகின்றனர். அவ்வாறு எதுவும் இல்லை. எனவே, சுகாதார தரப்பினரிடம் ஆலோசனை பெற்று, வைத்தியரிடம் பிரச்சினைகளை எடுத்துரைத்த பின்னர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.

எவராவது கர்ப்பம் தரிக்க விரும்பினால் 3 மாதங்களுக்கு முன்னர் தடுப்பூசியை பெறுவது சிறந்தது.” – என்றார்.

நாம் கலந்துக்கொள்ளும் போராட்டங்களுக்கு மாத்திரம் தடையுத்தரவு ஏன்? சபாநாயகரிடம் மனோ கேள்வி

” நாட்டின் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு பெறப்படாத தடையுத்தரவுகள், பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் கலந்துக்கொண்ட எம்பீக்களுக்கு எதிராக மாத்திரம் குறிவைத்து பெறப்பட்டு, நேற்று என்னிடம் இது தொடர்பில் பொலிஸ்துறை வாக்குமூலம் பெற்றது ஏன் என்பது பற்றி பொலிஸ் மா அதிபரிடம் வினவி எங்களுக்கு அறிவியுங்கள் என  இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் மகிந்த யாபாவிடம் கேள்வி எழுப்பினேன்.

அதன்பின்னர் எனது செயலாளரை தொடர்பு கொண்ட சபாநாயகர் அலுவலகம், பொலிஸ் மாஅதிபருக்கு இதுபற்றிய கடிதம் நாளை அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது.”

இவ்வாறு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

எதிரணி எம்பீக்களுக்கு எதிராக மாத்திரம் பொலிசார் திட்டமிட்டு, நீதிமன்ற தடையுத்தரவுகளை பெறுகிறார்கள். எம்பிகளாக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் வருவது, அங்கு சபையில் உரையாற்ற மட்டுமல்ல. உண்மையில் அது 25 விகிதம்தான். எமது 75 விகித பணி, என்னை பொறுத்தவரையில், தெருவில், மக்கள் மத்தியில்தான் இருக்கிறது. ஆகவே பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எம்பிக்களின் கடமையை செய்யும் சுதந்திரத்தை, சபாநாயகர் என்ற முறையில் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

கொழும்பில் தினசரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் போது, பெறப்படாத தடையுத்தரவுகள், ஏன் வட கிழக்கில் எமது மக்கள் போராட்டங்கள் நடைபெறும் மட்டும் பெறப்பட்டு எம்பீக்களின் உரிமையை மறுக்கும் வண்ணம் பொலிஸ் செயல்படுகிறது என்பதை பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டு சொல்லுங்கள் என சபாநாயகரிடம் இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் போது கேள்வி எழுப்பினேன்.

இதுபற்றி நான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன். இந்த கட்சி தலைவர் குழுவில் அங்கம் வகிப்பதால், அதற்கு முன் இன்று இங்கும் அதுபற்றி கேட்கிறேன், என சபாநாயகரிடம் நான் கூறினேன். சற்றுமுன் எனது செயலாளரை தொடர்பு கொண்ட சபாநாயகர் அலுவலகம், பொலிஸ் மாஅதிபருக்கு இதுபற்றிய கடிதம் நாளை அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது

எம்பீக்களின் உரிமை தொடர்பில் நான் எழுப்பிய இந்த பிரச்சினைக்கு, கட்சி தலைவர் கூட்டத்தில் இன்று கலந்துக்கொண்ட அனைத்து கட்சி எம்பீக்களும், ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் என்ற கட்சி பேதமின்றி ஆதரவு வழங்கினார்கள். தடையுத்தரவு பெறுவது, நீதிமன்றத்துக்கு இழுப்பது, சிறைக்கு அனுப்புவது என்ற சலசலப்புகளுக்கு அஞ்சி ஓடி ஒளியும் அரசியல்வாதி நானில்லை இன்று இவர்களுக்கு விளக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றதால், இந்த பிரச்சினையை இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நான் எழுப்பினேன்.” – என்றார்.

டெங்கு நோயால் திருகோணமலையில் 7 வயது சிறுமி பலி!

திருகோணமலை -கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பெரியாற்றுமுனை பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி இன்று (18) காலை உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா பெண்கள் மகளிர் கல்லூரியில் இரண்டாம் தரத்தில் கல்வி பயின்று வரும் கிஷோர் ஷம்ஹா மரியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

2 நாட்கள் காய்ச்சல் காரணமாக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

‘P2P எழுச்சி பேரணி’ – பொலிஸாரின் கைது வேட்டை ஆரம்பம்!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இன்று மதியம் கைது செய்தனர்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் வடக்கு – கிழக்கில் கைது செய்யப்பட்ட முதலாவது நபர் இவராவார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இளைஞனின் உறவினர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் முன்பாகக் காத்திருக்கின்றனர். இளைஞனின் தாயார், மகனின் விடுதலையைக் கோரி பொலிஸ் நிலையம் முன்பாக கதறி அழுகின்றார்.

பருத்தித்துறையில் பேரணி இடம்பெற்ற வேளை இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம் – ஹக்கீம் அறைகூவல்

நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம் – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், எம்.பியுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியல் பழிவாங்கலுக்காக முன்னணி அரசியல் தலைவர்களின் குடியுரிமையை பறிக்கும் மிக மோசமான நடவடிக்கையில் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை சம்பந்தப்படுத்தியே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம். நீதித்துறை கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படும் என நம்புகின்றோம்.  அத்துடன், நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம்.” – என்றும் ரவூப் ஹக்கீம் கூறினார்.

‘தோட்ட முகாமைத்துவங்களுக்கு சார்பாக செயற்படும் பொலிஸார்’ – அரவிந்தகுமார்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள், பெருந்தோட்ட முகாமைத்துவங்களுக்கெதிராக சுமத்தப்படும் முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், தோட்ட முகாமைத்துவத்தினரால் தொழிலாளர்களுக்கெதிராக சுமத்தப்படும் முறைப்பாடுகளை, பொலிஸ் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தொழிலாளர்களுக்கெதிராக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இத்தகைய பாகுபாடுகள், பாரபட்சங்களுடன் செயல்படும் பதுளை மாவட்ட பொலிஸ் நிலையங்கள் குறித்து, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பதுளை பிரதி பொலிஸ் அதிபருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றிலேயே மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தின் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர், பதுளை மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

தொடர்ந்து அக்கடிதத்தில்,’ பதுளை மாவட்ட பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை அன்றாடம் எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். தோட்ட முகாமைத்துவதினர்களால் தொழிலாளர்களுக்கெதிரான அடாவடித்தனங்கள், நெருக்கடிகள் உள்ளிட்ட இன்னோரன்ன தொழில் பிரச்சனைகள், குடியிருப்பு மற்றும் வீட்டுத்தோட்டம் உள்ளிட்ட காணி பிரச்சனைகள், தனிப்பட்ட வகையில் எதிர்நோக்கும் நெருக்கடிகள் ஆகியன தொடர்பான தொழிலாளர்களால் செய்யும் முறைப்பாடுகளை, பொலிஸ் நிலையங்களில் ஏற்றுக்கொள்வதில்லை.

ஆனால், அத் தொழிலாளர்களுக்கெதிராக தோட்ட முகாமைத்துவங்களினால் பொலிஸ் நிலையங்களில் செய்யப்படும் முறைப்பாடுகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தொழிலாளர்களுக்கெதிராக உடனடி நடவடிக்கைகளும் பொலிசாரினால் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய செயல்பாடுகளினால் அப்பாவித் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களையும், அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றனர்.

தோட்ட முகாமைத்துவங்களின் இத்தகைய விரும்பத்தகாத செயல்களினால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அசௌகரியங்கள் குறித்து எனது கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளனர்.

தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் தோட்ட முகாமைத்துவத்தினர் ஆகியோரிடையே நாளாந்தம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் முறுகல்கள், தொழில் தகராறுகள், குடியிறுப்பு மற்றும் காணி உள்ளிட்ட வீட்டுத் தோட்ட பிரச்சினைகள் ஆகியவற்றினால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்பாதிப்புக்களிலிருந்து தொழிலாளர்கள் விடுவிக்கப்படுவதற்கு, அவர்கள் பொலிஸ் நிலையங்களையே நம்பி இருக்கின்றனர். இந்நிலையில், பொலிசாரும் தொழிலாளர்களை பாராம்பட்சங்களுடன் நடாத்தி தோட்ட முகாமைத்துவதினர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது,’மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போன்று’ தொழிலாளர்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுகின்றனர்.

அத்துடன், தோட்ட முகாமைத்துவங்களுக்கெதிராக தொழிலாளர்கள், பொலிஸ் நிலையங்களுக்கு செல்லும் போது, அதற்கான முறைப்பாடுகளையும் பொறுப்பேற்காமல் தோட்ட முகாமைத்துவங்களுடனேயே நல்லுறவாகப் பேசிஇ பிரச்சினைகளை நிவர்த்தி செய்து, கொள்ளும்படியும் பொலிசார் தொழிலாளர்களுக்கு அறிவுரைக் கூறி, அனுப்பிவிடும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.

ஆகவே, இச்செயல்பாடுகள் குறித்து, உடனடி விசாரணைகளை மேற்கொண்டு, அப்பாவி தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கவும், பொலிஸ் நிலையங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைக்கும் நிலையினை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திகா அணியின் சிவனேசனுக்கு காங்கிரஸின் சகாதேவன் பதிலடி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை, அமரர் ஆறுமுகன் தொண்டமான் தான் ஆரம்பித்து வைத்தார். அதனடிப்படையில், இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக முடியும் தருவாயில் உள்ளதென்றே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்திருந்தார் என்று   ஹப்புத்தளை பிரதேச சபையின் உறுப்பினர் கலை சகாதேவன் தெரிவித்தார்.

ஆயிரம் ரூபாய் விடயத்தில் அமரர் ஆறுமுகன் தொண்டமான்  கனவு கண்டார் என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணித் தலைவரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பா.சிவனேசன் கூறுவதைப் போன்றதொரு அறிக்கையை, செந்தில் தொண்டமான்   வெளியிடவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பா.சிவனேசன் விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் பதலளித்துள்ள கலை சகாதேவன், கூறியவை வருமாறு,

ஆயிரம் ரூபாய் விவகாரத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள யோசனை வெற்றியடைந்த விவகாரம், சிறு பிள்ளைக்குக்கூட தெரிந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், அது பற்றித் தாங்கள் அறிந்திராதிருப்பது, உங்களுடைய அரசியல் அறியாமையையே எடுத்துக்காட்டுகின்றது.

ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க மறுப்புத் தெரிவித்து வரும் கம்பனிகளைக் கேள்வி கேட்க, தொழிலாளர்களிடமிருந்து சந்தா பெற்றுக்கொள்ளும் அனைத்துத் தரப்பினரும் குறிப்பாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, நீங்கள் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோரும் கேள்வி கேட்டு, மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமையையும் பொறுப்பையும் கொண்டுள்ளீர்கள் என்பதை, நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

13 நாள்கள் மாத்திரமே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுவதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒருபோதும் கூறவில்லை. அந்த விடயம் தொடர்பில், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ்தான், ஊடகங்களிடமும் நாடாளுமன்றத்திலும் கூறியிருந்தார்.

அவர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விட்டுச்சென்று 15 வருடங்களுக்கும் மேலாகின்ற நிலையில், அவரை இன்னமும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினராக நீங்கள் நினைத்துக்கொடிருப்பது, உங்கள் அரசியல் அறியாமையையே மேலும் புடம்போட்டுக் காட்டியிருக்கின்றது.

தாங்கள் கூறியதுபோல், பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முறையாகப் பேச்சார்த்தை நடத்த முடியவில்லை என்று நீங்கள் குற்றஞ்சாட்டுகிறீர்கள். ஆனால், சம்பளப் பேச்சுவார்த்தை தொடர்பில், ஜனாதிபதியிடம் கலந்துரையாடவோ பெருந்தோட்டக் கம்பனிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது ஊடகங்களுக்கு முறையாக அறிக்கையிடவோ செந்தில் தொண்டமான் அவர்களால் முடியும். ஆனால், உங்கள் கட்சியின் தலைவர் பழனி திகாம்பரத்தைப் போன்று ஓடி ஒளிந்துகொண்டுந்து, அல்லைக்கைகளை வைத்துக்கொண்டு அவர் அரசியல் செய்பவரல்ல.

எவ்வாறாயினும், எமது கட்சியின் சார்பில் விடுக்கப்படும் அறிக்கைகள், தங்களுடைய அரசியல் ஞானத்துக்கு எட்டவில்லையென்றால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் பயிற்சி பெற்று வெளியேறி, தற்போது உங்கள் கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளிடம், எமது கட்சிஅறிக்கைகளின் உள்ளடக்கங்கள் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு பதில் அறிக்கைகளைத் தயாரிப்பதே சிறந்ததாகும்” என, தவிசாளர் கலை சகாதேவன் மேலும் தெரிவித்துள்ளார்.

‘எதிரணி தலைவர்களின் குடியுரிமையை பறிக்க முயற்சி’

தமக்கு சவாலாக அமைந்துள்ள எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களின் குடியுரிமையை பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

” அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை. இதற்கிடையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தமது தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே இவ்வாறு இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது.

இந்த அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது. பொருளாதாரம் ஆட்டம் காண்டுள்ளது. எனவேதான் எதிரணி உறுப்பினர்களை அரசியல் ரீதியில் மெளனிக்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இதன் ஓர் அங்கமாக எதிரணி அரசியல் தலைவர்களின் குடியுரிமையை 7 வருடங்களுக்கு பறிக்கலாம். அதற்கான பரிந்துரையை விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைக்க கூடும்.

நேர்வழியில் அரசியலில் மோதமுடியாததால்தான் குறுக்குவழியில் அரசாங்கம் பயணிக்க பார்க்கின்றது. அதற்கு எதிராக நாம் போராடுவோம்.” – என்றார்.

அதேவேளை, அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத செயலை தோற்கடிப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்து அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கையை நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

மலையக மக்கள்மீதான வன்முறை குறித்து 19 ஆம் திகதி முத்தரப்பு சந்திப்பு!

0
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள்மீது, நிர்வாக தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்

0
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது. இது, இந்தப் பணியின் இரண்டாவது கட்டத்தில், அதன் ஏழாவது துறைமுகப் பயணமாகும். இது கடலில் மேற்கொள்ளப்படும் ஒரு தனித்துவமான அனைத்துலக...

நில உரிமைக்காக ஒன்றிணையும் தமிழ் பேசும் சமூகங்கள்: கொட்டக்கலையில் முக்கிய தீர்மானம்!

0
கிழக்கு மாகாண காணி வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொட்டக்கலை சுயசக்தி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்,...