Home Blog Page 3615

நாட்டில் மேலும் 248 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 248 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அத்துடன், கொரோனாவிலிருந்து 72 ஆயிரத்து 566 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 424  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 430 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 74 ஆயிரத்து 619 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சாணக்கியனை சுற்றிவளைத்து ஆறு பொலிஸ் நிலைய அதிகாரிகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்திடம் இன்று ஆறு பொலிசார் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியை மையப்படுத்தி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மூதூர், காத்தான்குடி, கிளிநொச்சி, மாங்குளம், வாழைச்சேனை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இன்றைய விசாரணைகளில் பங்கெடுத்திருந்தனர்.

P2P என்ற தலைப்பில் மூன்று நாட்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், அதனையும் மீறி மக்களின் பெரும் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் காணி, அரசியல் கைதிகள் விடுதலை, மனித உரிமைகள், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, முஸ்லிம்களின் கொவிட் ஜனாசா எரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.

பொத்துவில் முதல் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பல இடங்களில் தடைகளும், இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்ட போதிலும், அவற்றையும் மீறி இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசனிடம் அண்மையில் விசாரணைகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் செயற்பட்ட சாணக்கியன் ராசமாணிக்கத்திடம் இன்று ஆறு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

#lka #குருவி #kuruvi #tamil #P2P # #P2P #sanakkiyan @ShanakiyanR

புதிய அரசமைப்பு வெளியான பின்பே மாகாண சபைத் தேர்தல்?

மாகாணசபைகளுக்கான தேர்தல் இவ்வருடத்துக்குள் நடைபெறும் என முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், புதிய அரசியலமைப்பு இயற்றப்பட்ட பின்னர் தேர்தல் நடத்துவது குறித்து அரச உயர்மட்டம் பரீசிலித்துவருகின்றது.

20ஆவது திருத்தச்சட்டம், கிழக்கு முனையம் உட்பட மேலும் சில விடயங்களால் அரசுமீது சிங்கள தேசியவாத அமைப்புகள் கடும் அதிருப்தியில் உள்ளன. அதுமட்டுமல்ல மாகாணசபை முறைமை அவசியமில்லை எனவும் வலியுறுத்திவருகின்றன.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன்னர் மாகாண தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்தால் அது அரசுக்கு பெரும் பின்னடைவாக அமையும் எனவும், வாக்குவங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அரச கூட்டணிக்குள் பிளவுகளை ஏற்படுத்தலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவேதான் புதிய அரசியலமைப்பு இயற்றப்பட்ட பின்னர் அதன் பிரகாரம் தேர்தலை நடத்தலாம் என்ற ஆலோசனை உயர்மட்ட ஆலோசகர் சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.  அதன்பின்னர் இதர பணிகள் இடம்பெற்று டிசம்பர் மாதத்துக்குள் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் என நம்பப்படுகின்றது. ஆக 2022 இல்தான் மாகாணசபைத் தேர்தலுக்கு சாத்தியம் இருப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சி, தொழிற்சங்க உறுப்பிரிமையில் இருந்து ஜெகநாதன் யோகநாதன் விலகல்

கட்சி மற்றும் தொழிற்சங்க உறுப்பிரிமையில் இருந்து ஜெகநாதன் யோகநாதன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தொழிலாளர் தேசிய முன்னணி சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் நுவரெலியா பிரதேச சபையில் பீற்று வட்டாரத்தில் போட்டியிட்டு வட்டாரத்தில் முதன்மை வேட்பாளராக வெற்றி பெற்ற தான், இன்று வரை தனது சேவையை செவ்வனே செய்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருந்த போதிலும் அன்மைய காலங்களில் குறிப்பாக கடந்த பொது தேர்தலின் பின்னரான காலத்தில்  கட்சி மற்றும் தொழிற்சங்க செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனவும் தான்தோன்றித்தனமான முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சிலமாதங்களாக ஆழ்ந்த சிந்தனையின் பின் இன்று முதல் தொழிலாளர் தேசிய முன்னணியினதும்  தொழிலாளர் தேசிய சங்கத்தினதும் உறுப்புரமையில் இருந்து விலகும் முடிவினை  எடுப்பதில்  மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவை அமைப்புகளின்  தலைமைத்துவத்துக்கும் பொதுச்செயலாளர்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளதாகவும், அடுத்த அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் அறிவிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

– நீலமேகம் பிரசாந்த்

#lka #மலையகம் #தமிழ் செய்திகள், #இலங்கைச் செய்திகள் #மலையககுருவி #குருவி

அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் சிறியளவில் நிலநடுக்கம்

அம்பாறை பொத்துவில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் இன்று (19) வெள்ளிக்கிழமை மதியம் 11.44  மணியளவில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 4.0 ரிச்டர் அளவில்  பதிவாகியுள்ளதாக அம்பாறை மாட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பொத்துவில் சர்வோதயபுரம், சின்னஊறணி,  ஜலால்தீன்சதுக்கம், களப்புகட்டு பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறியினும் குறித்த நிலநடுக்கத்தில் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

கம்பளை இந்துக் கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது

கம்பளை இந்துக் கல்லூரி இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

உயர்தரம் பயின்றுவரும் மாணவர்களில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதியானதை அடுத்து பாடசாலையை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களிடம் நடத்தப்பட்ட துரித எடிஜன் பரிசோதனை போது ஒரு மாணவி கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து குறித்த பாடசாலையின் நான்கு ஆசிரியர்களும், குறித்த மாணவியின் சக மாணவிகளையும் சுய தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் தொற்று நீக்கும் பணிகள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறப்பதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் நேற்று மாத்திரம் 102 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் இதுவரை 6 ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கண்டி மாவட்டத்தில் 4,649 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில்  877 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 759 வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, நேற்று மாத்திரம் மத்திய மாகாணத்தில் 102 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டம் -68

மாத்தளை மாவட்டம்-25

நுவரெலியா மாவட்டம் – 9

யாழ். அணிக்கு எதிராக அர்ஜுன தலைமையில் களமிறங்கும் ‘1996’ அணி!

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை 1996இல் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், 1996 உலகக் கிண்ண வெற்றியின் 25ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பங்குபற்றுகின்ற கண்காட்சி கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் சிறப்பம்சம் என்னவெனில், 1996 உலகக் கிண்ணத்தை வென்ற அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி, யாழ்ப்பாண அணிக்கு எதிராக இந்தத் தொடரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ண வெற்றியின் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நோக்கில், இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் வீதியோர பாதுகாப்பு இருபதுக்கு 20 தொடரிலிருந்து இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட ஐவர் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கடந்த வருடம் குறித்த தொடரில் விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான முத்தையா முரளிதரன், ரொமேஷ் களுவிதாரன, சமிந்த வாஸ், உபுல் சந்தன மற்றும் மார்வன் அத்தபத்து உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஸல் ஆனோல்ட், நுவன் குலசேகர மற்றும் தம்மிக பிரசாத் ஆகிய வீரர்கள் இந்தியாவில் நடைபெறவுள்ள வீதியோர பாதுகாப்பு உலக இருபதுக்கு -20 போட்டியில் இணைந்து கொள்ளவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1996 உலகக் கிண்ண வெற்றியின் 25ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் விசேட வைபவமொன்று எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி கொழும்பில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘அரசியல் பழிவாங்கல் வேட்டை’யை தோற்கடிக்க சகல தரப்புகளுக்கும் சஜித் அழைப்பு!

“அரசின் ஊழல், மோசடிகளை  அம்பலப்படுத்தி வெளிப்படையாகவே விமர்சனங்களை முன்வைக்கும் எதிரணி அரசியல் தலைவர்களின் குடியுரிமையை பறிக்கும் ‘அரசியல் பழிவாங்கல் வேட்டையில்’ தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. எனவே, அரசின் இந்த முயற்சியை ஜனநாயக வழியில் தோற்கடிப்பதற்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் .”

இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி, ஊழல், மோசடிகளை அம்பலப்படுத்தி விமர்சனங்களை முன்வைக்கும் எதிரணி அரசியல் தலைவர்களை தற்போதைய அரசு குறிவைத்துள்ளது. அவர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் வேட்டையை ஆரம்பித்துள்ளது.   குறிப்பாக சிவில் மற்றும் ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டுவருகின்றது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறும், நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம். அது தொடர்பில் விவாதம் வேண்டும் எனவும் கோரிவருகின்றோம்.  ஆனால் அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.

அதுமட்டுமல்ல குறித்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு மேலதிகமாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக 3 மாதங்களுக்குள் அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. அப்படியானால் முதலாவது அறிக்கையை வெளியிடுவதில் அரசு ஏன் தயக்கம் காட்டுகின்றது, எதனை மூடிமறைப்பதற்கு முயற்சிக்கின்றது ?

எதுஎப்படி இருந்தாலும் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் குறித்த அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படவேண்டும், அவ்வாரமே விவாதமும் நடத்தப்படவேண்டும்.

அதேவேளை, இந்த அரசின் நோக்கம் என்ன என்பது எமக்கு தெரிகின்றது. அதனை தெளிவாகவும் ஊகிக்க முடிகின்றது. எதிரணி அரசியல் பிரமுகர்களை மெளனிக்க வைப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையை அனைவரும் இணைந்து ஜனநாயக வழியிலும், அரசமைப்பின் பிரகாரமும் தோற்கடிக்க  முன்வரவேண்டும். கட்சி, பேதங்களுக்கு அப்பால் ஜனநாயகத்துக்காகவும், சிவில் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளவும் ஓரணியில் திரள வேண்டும்.

தேர்தலில் மோதுவதற்கு அச்சம் காரணமாகவே சிவில் உரிமையான குடியுரிமையில் கைவைப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இந்நாட்டின் நீதிமன்ற கட்டமைப்புமீது எமக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கும் அழுத்தங்களை கொடுப்பதற்கு அரசு முயற்சித்தால் அதனை அனுமதிக்கமுடியாது.” – என்றார்.

கொரோனாவால் பதுளையில் 20 வயது யுவதி பலி!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யுவதியொருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

பதுளை பகுதியின் ரிதிமாலியத்தை ஆடைத்தொழிற்சாலையில் தொழில்செய்துவந்த 20 வயது நிரம்பிய யுவதிக்கு கோவிட்19 தொற்றுக்குள்ளாகி,  காகொல்லை கொரோனாசி கிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

அந்நிலையில் அவருக்கு மேலதிக சிகிச்சைகளுக்கென, பதுளை  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பயனளிக்காமையினால், அவர் உயிரிழந்துள்ளார்.

எம்.செல்வராஜா, பதுளை

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

மலையக மக்கள்மீதான வன்முறை குறித்து 19 ஆம் திகதி முத்தரப்பு சந்திப்பு!

0
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள்மீது, நிர்வாக தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்

0
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது. இது, இந்தப் பணியின் இரண்டாவது கட்டத்தில், அதன் ஏழாவது துறைமுகப் பயணமாகும். இது கடலில் மேற்கொள்ளப்படும் ஒரு தனித்துவமான அனைத்துலக...

நில உரிமைக்காக ஒன்றிணையும் தமிழ் பேசும் சமூகங்கள்: கொட்டக்கலையில் முக்கிய தீர்மானம்!

0
கிழக்கு மாகாண காணி வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொட்டக்கலை சுயசக்தி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்,...