Home Blog Page 3614

‘தடுப்பூசி ஏற்றினாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்’

கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும், சுகாதார பழக்கவழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டு மையத்தின் ஊடகப்பிரிவு அதிகாரியான வைத்தியர் தேஷானி ஹேரத் (Dr. Deshani Herath)  தெரிவித்தார்.

கொவிட் – 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லையா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தடுப்பூசியை பெற்றதும் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டது என நினைக்ககூடாது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அதேவேளை இதுவரை கடைபிடித்த சுகாதார பழக்கவழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக சமூகஇடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல் போன்றவற்றை செய்யவேண்டும்.

கொவிட் – 19 தடுப்பூசியை ஏற்றினால் எதிர்காலத்தில் எவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படாது என்பது இன்னும் பரிசோதனைமூலம் உறுதிசெய்யப்படவில்லை. நடவடிக்கைகள் ஆய்வு மட்டத்திலேயே உள்ளன. ஆனாலும் வைரஸ் தொற்றினால்கூட பாதிப்புகளை குறைத்துக்கொள்ளலாம். எனவே, இதனை சாதகமானதாக பார்க்கவேண்டும்.” – என்றார்.

கட்சிக்குள் உள்ள கறுப்பாடுகளை களையெடுக்க தயாராகும் திகா!

தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜை, அம்முன்னணி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றியுள்ள நிலையில், திலகர் அணி உறுப்பினர்கள் சிலரும் தாமாகவே வெளியேறிவருகின்றனர்.

எதிர்காலத்திலும் எப்படியும் கட்சியிலிருந்து நீக்கப்படுவோம் என்பதை அறிந்துவைத்துள்ள அவர்கள், தாமாகவே இராஜினாமாக் கடிதங்களைக் கையளித்து வெளியேறுவதை காணமுடிகின்றது.

அதேவேளை, தொழிலாளர் தேசிய முன்னணியில் இருந்துகொண்டு, இரட்டை நிலைப்பாட்டில் அரசியல் நடத்தும் உறுப்பினர்கள் சிலரை நீக்குவதற்கும் கட்சி தலைவர் திகாம்பரம் திட்டமிட்டுள்ளார் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான பெயர் பட்டியல் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

பல வருடங்கள் குடிநீர் வசதியின்றி அல்லல்படும் பொகவந்தலாவை டின்சின் பாடசாலை

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் பாடசாலை மாணவர்கள் குடிநீர் வசதியின்மையால் நாளாந்தம் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

சுமார் 100 வருடங்கள் பழமை வாய்ந்த இப்பாடசாலையில் 500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்கின்றனர், 30 ஆசிரியர்களும் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பாடசாலையில் முறையாக குடிநீர் வழங்கப்படாமையால் மாணவர்கள், ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாவதாக பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பாடசாலையில் ஒவ்வொரு நாளும் மாணவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னும் பின்னும் சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்து சேமித்து வைத்தே பயன்படுத்த வேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு அயலிலுள்ள வீடுகளுக்கு செல்ல வேண்டி ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாக பொகவந்தலாவை பகுதியில் காணப்படுகின்ற நிலையில் கை கழுவுவது கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என சுகாதார பிரிவினர் வலியுறுத்தி வருகின்ற போதிலும் இங்கு குடிநீர் வசதியின்மையால் எவ்வாறு மாணவர்கள் இத்தொற்றிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வது என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

குறித்த பாடசாலைகளில் ஆண் பெண் ஆகிய இருபாலரும் கல்வி பயில்கின்ற நிலையில் நீர் இன்றி மலசல கூடங்களை பயன்படுத்துவதன் காரணமாக பல மாணவர்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சுற்றுப்புற சுழலில் துர்நாற்றும் வீசுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பலரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதே வேளை பாடசாலை நிறைவு பெற்றதன் பின் பிரதேசத்தில் உள்ள ஒரு சிலர் சுற்றுப்புற சூழலில் மது அருந்துவதற்கு பயன்படுத்துவதனால் பாடசாலை சூழல் பாதுகாப்பற்ற சூழலாக மாறிவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.பாடசாலையில் உள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதாகவும் இது குறித்த உரிய அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் அவர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த வாரத்தில் கூட பாடசாலையில் மாணவர்கள் விளையாடுவதற்காக முதலாம் தர வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களால் செலவு செய்து கட்டப்பட்ட விளையாட்டு வீடும் இனந்தெரியாதவர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது

இது குறித்தும் பொகவந்தலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே பாடசாலையின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்குமாறும் பாடசாலையின் சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ளுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நேற்று மாத்திரம் 30,307 கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது

இலங்கையில் கடந்த 29 ஆம் திகதி முதல் நேற்றுவரை இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 779 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவால் இலங்கைக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இவற்றை 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு செலுத்த முடியும்.

அந்தவகையில் முதற்கட்டமாக கொரோனா ஒழிப்பு சமரில் முன்கள பணியாளர்களாக செயற்படும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு கொவிட் – 19 தடுப்பூசி கடந்த 29 ஆம் திகதி முதல் ஏற்றப்பட்டுவருகின்றது.

இதன்படி 29 ஆம் திகதி 5 ஆயிரத்து 286 முன்கள பணியாளர்களுக்கும், 30 ஆம் திகதி 32 ஆயிரத்து 539 பேருக்கும், 31 ஆம் திகதி 21 ஆயிரத்து 329 பேருக்கும், பெப்ரவரி முதலாம் திகதி 36 ஆயிரத்து 396 பேருக்கும், 2 ஆம் திகதி 23 ஆயிரத்து 217 பேருக்கும், 3 ஆம் திகதி 21 ஆயிரத்து 147 பேருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அத்துடன், 4 ஆம் திகதி 6 ஆயிரத்து 413 பேருக்கும், 5 ஆம் திகதி 9 ஆயிரத்து 983 பேருக்கும், 6 ஆம் திகதி 3,838 பேருக்கும்,7 ஆம் திகதி 1,625 பேருக்கும், 8 ஆம் திகதி 5,989 பேருக்கும், 9 ஆம் திகதி 6,431 பேருக்கும், 10 ஆம் திகதி 2,532 பேருக்கும்,11 ஆம் திகதி 1,362 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

12 ஆம் திகதி ஆயிரத்து 110 பேருக்கும்,  13 ஆம் திகதி 7,457 பேருக்கும், 14 ஆம் திகதி 2,695 பெருக்கும், 15 ஆம் திகதி 3,589 பேருக்கும், 16 ஆம் திகதி 3,225 பேருக்கும், 17 ஆம் திகதி 14,242 பேருக்கும், 18 ஆம் திகதி 23,067 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

7 பெண் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட 8 பேருக்கு விளக்கமறியல்

மஸ்கெலியா, சாமிமலை ஓல்டன் தோட்டத்திலுள்ள ஏழு பெண் தொழிலாளர்கள் உட்பட எட்டுபேர் கைது செய்யப்பட்டு 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டபோதே குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஓல்டன் தோட்ட முகாமையாளரையும், உதவி முகாமையாளரையும் தாக்க முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே 8 தொழிலாளர்கள் பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தோட்டதுரையை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி ஓல்டன் தோட்டத்தில் நான்கு பிரிவுகளிலும் உள்ள தொழிலாளர்கள் கடந்த 3 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதேவேளை, பொலிஸார், தோட்ட துரைக்கு சார்பாக செயற்பட்டதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆயிரம் ரூபா விடயத்தில் இழுத்தடிப்பு தொடர்கிறது – இன்றைய சந்திப்பிலும் இணக்கம் இல்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு என்பது தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே இருந்துவருகின்றது. இன்று நடைபெற்ற சந்திப்பில்கூட உறுதியான முடிவு எதுவும் எட்டப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பிலான கூட்டம் சம்பள நிர்ணய சபையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் சார்பில் ஒருவரும் தொழிற்சங்கங்கள் சார்பில் 8 பேரும் கலந்துகொண்டிருந்தனர். பெருந்தோட்ட நிறுவனங்களின் சார்பில் ஒருவர் மாத்திரமே கலந்துகொண்டதால் முடிவு எதுவுமின்றி கூட்டம் பிற்போடப்பட்டது என தொழிற்சங்க பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

” பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் சார்பில் ஒருவர் மாத்திரமே வருகை தந்ததால், பேச்சுவார்த்தையை காலம் கடத்த வேண்டிய தேவை சம்பள நிர்ணய சபைக்கு ஏற்பட்டது.” – என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்துள்ளார்.

சகல அதிகாரங்கள் கொண்ட அரசாங்கத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் எவ்வாறு அழுத்தம் கொடுக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டி மாவட்டத்தில் மலர்கிறது புதிய தமிழக்கட்சி – முக்கிய புள்ளிகள் இணைவு!

கண்டி மாவட்டத்தை மையப்படுத்தி விரைவில் புதியதொரு அரசியல் கட்சி உதயமாகவுள்ளது எனவும், இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரே இதன் பின்னணியில் செயற்படுவதாகவும், முக்கியமான சிவில் அமைப்புகள் இக்கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளன எனவும் தெரியவருகின்றது.

கடந்த பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட சில வேட்பாளர்களும் இக்கட்சியில் இணைந்து பயணிக்க தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கண்டி மாவட்டத்தை பிரதான தளமாக இயங்குவதற்கு திட்டமிட்டுள்ள அக்கட்சி, மாத்தளையிலும் தமது அரசியல் பணிகளை முன்னெடுக்கும் என முக்கிய பிரமுகர் ஒருவர் ‘மலையக குருவி’யிடம் தகவல் வெளியிட்டார்.

கார்த்திகேயன், யோகி பாபு உட்பட 42 பேருக்கு கலைமாமணி விருது

நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கலைமாமணி விருது பெறும் நடிகர்கள்

ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கலைமாமணி விருது பெறும் நடிகைகள்

பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி ஆகியோருக்கும், நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைமாமணி விருது பெறும் இசையமைப்பாளர்கள், பாடகர்கள்

இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா ஆகியோருக்கும், பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைமாமணி விருது பெறும் தயாரிப்பாளர்கள்

கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ் ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கலைமாமணி விருது பெறும் இயக்குனர்கள்

கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா ஆகிய நால்வருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது.

கலைமாமணி விருது பெறும் சீரியல் நடிகர்கள்

நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகொடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை எண்ணெய்க் களஞ்சியம் இந்தியா வசமே : ஏற்கனவே வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லை என்கிறது இந்தியா

திருகோணமலை எண்ணெய்க் களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து இயக்குவது தொடர்பான இந்திய – இலங்கை இடையிலான உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டதாக செய்திகளில் உண்மையில் இல்லை என்று கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

குறித்த உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், இதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் உயர் ஸ்தானிகராயலம் அறிவித்துள்ளது.

2021 பெப்ரவரி 17ஆம் திகதியன்று நடைபெற்ற நிகழ்வொன்றில், இலங்கை மின்சக்தி அமைச்சர், நிகழ்த்திய உரையை, இந்த அறிக்கைகள் சரியாக பிரதிபலிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மின்சக்தி அமைச்சர் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமைச்சரின் ஊடக சந்திப்பில் கூறப்பட்டது போலவே, 2017இன் புரிந்துணர்வு உடன்படிக்கை உட்பட ஏற்கனவே அமுலில் இருக்கும் இருதரப்பு உடன்படிக்கைகளின் பிரகாரம் குறித்த எண்ணெய் களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து இயக்குவதற்கு பரஸ்பரம் ஏற்புடையதான முறைமைகள் குறுித்து இரு அரசாங்கங்களும் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராயலம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்க்காட்டியுள்ளது.

அத்துடன், இந்த விடயம் குறித்து உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் அதன் பெறுபேறுகளை பரஸ்பர நலன்களின் அடிப்படையில் துரிதமாக அமுல்படுத்துவதற்கும் இந்தியா ஆவலுடன் உள்ளது என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#lka #SriLanka #Trinco #IndiaInSriLanka

பேருந்தில் மயங்கிய விழுந்த இளைஞன் உயிரிழப்பு  : கொவிட் தொற்று உறுதி

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த 29 வயது இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பேருந்தில் மயங்கிய நிலையில்,  வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் குறித்த இளைஞன் உயிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கெக்கிராவை, மரதன்கடவல, எட்டவீரவெவ பிரசேதத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞன் அனுதாரபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு நடத்தப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் இளைஞனுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பேருந்தில் பயணித்த அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

#CoronaVirus #Death #Anuradhapura #Covid19SL #LKA

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

மலையக மக்கள்மீதான வன்முறை குறித்து 19 ஆம் திகதி முத்தரப்பு சந்திப்பு!

0
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள்மீது, நிர்வாக தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்

0
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது. இது, இந்தப் பணியின் இரண்டாவது கட்டத்தில், அதன் ஏழாவது துறைமுகப் பயணமாகும். இது கடலில் மேற்கொள்ளப்படும் ஒரு தனித்துவமான அனைத்துலக...

நில உரிமைக்காக ஒன்றிணையும் தமிழ் பேசும் சமூகங்கள்: கொட்டக்கலையில் முக்கிய தீர்மானம்!

0
கிழக்கு மாகாண காணி வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொட்டக்கலை சுயசக்தி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்,...