Home Blog Page 3613

‘பிரஜா உரிமையைப் பறித்தாலும் ஓயமாட்டோம்’ – ராஜபக்ச அரசுக்கு ஜே.வி.பி. எச்சரிக்கை

ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் குரலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஒடுக்க முடியாது. பிரஜாவுரிமையை இல்லாது செய்தாலும், எம்மைச் சிறையிலடைத்தாலும் வாழ்வின் இறுதி வரை எமது போராட்டம் தொடரும் என்று க்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

ஜனநாயக ரீதியாகச் செயல்படுகின்றவர்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு சவால் விடுக்கும் வகையிலும் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்சவால் விசித்திரமான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.எமது குடும்பம் சார்ந்த மோசடிகளில் யாரும் தலையிடாதீர்கள் என்று எச்சரிக்கும் வகையிலேயே இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான எமது குரலை முடக்குவதற்கு முயற்சித்தால் வாழ்நாளின் இறுதி வரை அதனை எதிர்த்துப் போராட நாம் தயாராகவுள்ளோம் என ஜனாதிபதியிடம் கூறிக்கொள்கின்றோம்.

எமது குரலை ஒடுக்கும் போராட்டத்தில் கோட்டாபய ராஜபக்சவால் வெற்றிபெற முடியாது. அவரை நாம் தோற்கடிப்போம். பிரஜா உரிமையை நீக்கினாலும் எமது போராட்டம் தொடரும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் பிரஜாவுரிமை எமக்குப் பெரிதல்ல.

1983 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, மக்கள் விடுதலை முன்னணியினரின் பிரஜாவுரிமையை நீக்கினார். ஆனால், எமது செயல்பாடுகளை அவராலும் முடக்க முடியவில்லை.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 22 பேரின் பிரஜாவுரிமையை நீக்குமாறு கூறப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவுக்கு வேறு என்ன செய்வதென்று புரியாமல் இவ்வாறு செய்ய முற்படுகின்றார். அவருக்கு நாட்டை நிர்வகிக்கத் தெரியவில்லை.தமது இயலாமையை அவர்கள் புரிந்துகொள்ளும் போது, உண்மையை வெளிப்படுத்தும் அரசியல்வாதிகளின் குரலை முடக்க முயற்சிக்கின்றனர். ” – என்றார்.

கொரோனாவிலிருந்து 73,456 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 890 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 456  ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 48 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

அரசாங்கத்துடன் இணைகிறாரா ராதா? வெளியானது உண்மைத் தகவல்!

தான் அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நான் அரசாங்கத்துடன் இணைவதாக கூறுவோர் அது தொடர்பான பேச்சுவார்த்தை எப்போது என கூறினால் அதற்கு பதிலளிப்பேன்.” – எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், சம்பள உயர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“சம்பள நிர்ணய சபைக் கூட்டத்தில் பெருந்தோட்டக் கம்பனிகளின் சார்பில் ஒருவரே பங்கேற்றுள்ளார். சம்பள பேச்சுவார்த்தையை இழத்தடிப்பு செய்யும் நோக்கில் கம்பனிகள் இவ்வாறு செயற்படகூடும். அதாவது பேச்சுவார்த்தையை இழுத்தடிக்க கம்பனிகள் இவ்வாறு சூட்சமமான வேலைகளில் ஈடுபடுகின்றன. அதாவது அரசாங்கத்தின் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இவ்வாறு 1000 கொடுப்பதை தவிர்க்க இவ்வாறு செயற்படலாம்.” – என்று குறிப்பிட்டார்.

20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தொடர்பிலும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இங்கு கருத்து தெரிவித்தார்.

“அரவிந்த கமார் தொடர்பில் மக்களின் தீர்மானத்திற்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்படும். நாம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கு அவருடைய பதிலும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த விடயம் குறித்து மீள பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும்.

இலங்கையில் உள்ள இரண்டு கட்சிகள் 20 ஐ ஆதரித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளன. ஆகவே அது தொடர்பில் பேசாது மலையக மக்கள் முன்னணியின் உள்விவகாரத்தில் மாத்திரம் தலையிடுவது எந்த வகையில் நியாயம்?  ” – என்றார்.

க.கிசாந்தன்

ஜெனிவாத் தொடர் – முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இலங்கைக்கே – தினேஷ் நம்பிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு  இம்முறையும் இலங்கைக்கு கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாஸா விவகாரம் இதில் தாக்கத்தை செலுத்தாது எனவும், முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இது குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் கூறிய கருத்து உண்மையே. நிபுணர் குழுவின் பரிந்துரையையே அது தெரியப்படுத்தினார். இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

பசறையில் பெண் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று!

பதுளை  வைத்தியசாலையில் சாதாரண நோயொன்றிற்கு சிகிச்சை பெறவந்த பசறை பிரபல வங்கியொன்றின் பெண் ஊழியர் மற்றும் பதுளை பிரபல ஹோட்டல் விடுதி பிரதி முகாமையாளர் ஆகியோருக்கு சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட உடன் பரிசோதனைகளில் இவ் இருவருக்கும் கொரோனாதொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

பதுளையை வசிப்பிடமாகக்கொண்டு, பசறையில் பிரபல தனியார் வங்கியொன்றில் ஊழியராக இருந்துவந்த 22வயது நிரம்பிய பெண், தமக்கேற்பட்ட சாதாரணவருத்தமொன்றின் காரணமாக, பதுளை அரசினர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட உடன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இவருடன் தொடர்பு கொண்டிருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் ஏனையவர்கள் உட்பட 18பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டள்ளனர்.

அடுத்து, பதுளையில் பிரபல ஹோட்டல் விடுதி பிரதிமுகாமையாளரொருவர் சாதாரணவருத்தம் காரணமாக, பதுளை அரசினர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட உடன் பரிசோதனையில் அவருக்கும் கொரோனாதொற்று உறுதியாகியுள்ளது.

எம். செல்வராஜா, பதுளை

திருமணத்துக்காக கங்கையில் தீபமேற்றும் சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு கங்கையாற்றில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்.

சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்திலும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் நடிக்க சிம்பு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் சிம்பு திடீரென உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு பிரசித்திப் பெற்ற கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கங்கையாற்றில் தீபம் வழிபாடு செய்தது திருமணத்திற்கான பரிகாரம் என்று கூறப்படுகிறது.

‘கொரோனாவால் அமெரிக்காவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி – இத்தாலியிலும் கோரத்தாண்டவம்!

இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்தது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி 8-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27 லட்சத்து 80 ஆயிரத்து 882 ஆக உள்ளது.

ஒரே நாளில் 348 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்து 235 ஆக உள்ளது.

அதேவேளை, கொரோனாவால் அமெரிக்காவில் 507,746 பேர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் 156,240 பேரும், பிரேசிலில் 244,955 பேரும் உயிரிழந்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீச்சட்டி ஏந்தி போராட்டம்

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை தீச் சட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கறுப்பு ஆடைகளை அணிந்து, “சர்வதேசமே இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்து” என்பதனை பிரதான கோரிக்கையாக முன்வைத்து, கோஷமெழுப்பி போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இப்போராட்டமானது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் வரை சென்றடைந்தது.

வடக்கு கிழக்கு விலந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்ப போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன்
(20.02.2021) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தீச்சட்டி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

‘கொரோனா தொற்று’ கண்டி – 57, பதுளை – 19, நுவரெலியா -11, இரத்தினபுரி -23

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகின்றது. எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்கள் பரவலாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 19 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 57 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 23 பேருக்கும் நேற்று கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்கரையில் வீழ்ந்தது மோட்டார் சைக்கிள்- இளம் குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்ததால் அதில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கற்கோவலத்தைச் சேர்ந்த பவிதரன் (வயது-30) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.

இன்று காலை அந்த வீதியூடாகப் பயணித்தவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

மலையக மக்கள்மீதான வன்முறை குறித்து 19 ஆம் திகதி முத்தரப்பு சந்திப்பு!

0
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள்மீது, நிர்வாக தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்

0
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது. இது, இந்தப் பணியின் இரண்டாவது கட்டத்தில், அதன் ஏழாவது துறைமுகப் பயணமாகும். இது கடலில் மேற்கொள்ளப்படும் ஒரு தனித்துவமான அனைத்துலக...

நில உரிமைக்காக ஒன்றிணையும் தமிழ் பேசும் சமூகங்கள்: கொட்டக்கலையில் முக்கிய தீர்மானம்!

0
கிழக்கு மாகாண காணி வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொட்டக்கலை சுயசக்தி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்,...