Home Blog Page 3612

‘கண்டியில் உதயமாகவுள்ள புதிய தமிழ்க் கட்சியின் விசேட கூட்டம்’

கண்டியில் மலரவுள்ள புதிய அரசியல் கட்சியின் விசேட கூட்டமொன்று அடுத்த மாதம் முதல் வாரத்தில் கம்பளையில் இடம்பெறவுள்ளது.

கட்சி கட்டமைப்பு, பதவிநிலைகள், யாப்பை இறுதிப்படுத்தல், அமைப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய கட்சியின் மத்திய செயற்குழுவில் இடம்பெறவுள்ளவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

கண்டி மாவட்டத்தை மையப்படுத்தி இயங்கவுள்ள இக்கட்சியின் பின்னணீயல் பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரே செயற்படுவதாகவும், முக்கியமான சிவில் அமைப்புகள் இக்கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளன எனவும் தெரியவருகின்றது.

கடந்த பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட சில வேட்பாளர்களும் இக்கட்சியில் இணைந்து பயணிக்க தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கண்டி மாவட்டத்தை பிரதான தளமாக இயங்குவதற்கு திட்டமிட்டுள்ள அக்கட்சி, மாத்தளையிலும் தமது அரசியல் பணிகளை முன்னெடுக்கும் என முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

“தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமையகத்தை மீட்கும்வரை ஓயமாட்டேன்’ – திலகர் சபதம்

“தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் தலைமையகத்தை அதன் பிரதித் தலைவர் உதயகுமார் தனது தனிப்பட்ட சொத்தாக கையகப்படுத்திக் கொண்டுள்ளார். தொழிலாளிகளின் சொத்தை இவ்வாறு அபகரித்துக் கொண்டதற்கு எதிராக குரல் எழுப்பினேன். உதயகுமார்தான் கட்சிக்கு செலவழிக்கிறார் என்ற காரணம் காட்டி என்னை ஒதுக்கினார்கள்.தலைமையகம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பெயரில் மக்களின் சொத்தாக மாற்றப்படும் வரை இவர்களுக்கு எதிரான எனது குரல் ஒலிக்கும்.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளர் எம். திலகராஜ் சூளுரைத்துள்ளார்.

தினகரன் ஞாயிறு இதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நேர்காணலில் ஒரு பகுதி வருமாறு,

கே: கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து உங்களை நீக்கி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளனவே ?

2021 – பெப்ரவரி – 10 ம் திகதியுடன் அத்கைய பொறுப்புகளில் இருந்து முடிவுறுத்திக் கொள்வதான தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டு ஓய்வாக இருக்கிறேன். ஆனாலும் என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிக்கை விடுகிறார்களே அன்றி அதற்கான காரணத்தை கூறுகிறார்கள் இல்லை.

அதனால் நானே அதற்கான காரணத்தையும் கூறவேண்டி இருக்கிறது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் தலைமையகத்தை அதன் பிரதித் தலைவர் உதயகுமார் தனது தனிப்பட்ட சொத்தாக கையகப்படுத்திக் கொண்டுள்ளார். தொழிலாளிகளின் சொத்தை இவ்வாறு அபகரித்துக் கொண்டதற்கு எதிராக குரல் எழுப்பினேன். உதயகுமார்தான் கட்சிக்கு செலவழிக்கிறார் என்ற காரணம் காட்டி என்னை ஒதுக்கினார்கள். அவர் கட்சி தலைமையகத்தை கையகப்படுத்திக்கொண்டு செலவு செய்வது எப்படிச் சரியாகும்?

1965 ஆம் ஆண்டு முதல் அமரர் வி.கே. வெள்ளையன் கட்டிவளர்த்த சங்கத்தை எங்கிருந்தோ வந்தவர்கள் கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்பதே எனது உறுதியான முடிவு. சங்கத்துக்கு உள்ளே இருந்த போதும் வெளியே வந்தபோதும் அதற்காக குரல் கொடுப்பேன். தலைமையகம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பெயரில் மகளின் சொத்தாக மாற்றப்படும் வரை இவர்களுக்கு எதிரான எனது குரல் ஒலிக்கும்.

கே: 2020 பொதுத் தேர்தல் பிரசாரத்தில் நீங்கள் இருந்தபோதுபோது தொலைபேசி சின்னத்துக்கு சிங்கள மக்கள் ஆதரவாக இல்லை என்ற செய்தியை புரிந்து கொண்டிருந்தீர்களா?

நிச்சயமாக. தெரிந்ததனால்தான் எனது தேர்தல் வியூகத்தையே மாற்றியமைத்திருந்தேன். சிங்கள மக்கள் மாத்திரமல்ல; தமிழ் மக்களே கூட ஆதரவாக இருக்கவில்லையே! அதற்கு நுவரெலிய மாவட்டமே நல்ல உதாரணம். தொலைபேசி சின்னத்தைவிட மொட்டு அணிக்கே அதிக ஆசனத்தையும் விருப்பு வாக்குகளையும் வழங்கி இருந்தார்கள்.

தொலைபேசி சின்னம் தன்னுடன் இணைந்திருக்கும் சிறு கட்சிகளுக்கு தேசியப் பட்டியல் வழங்கும் அளவுக்கு ஆசனங்களைப் பெறாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனவேதான் அதில் எதிர்பார்ப்பு கொண்டு நுவரெலியா மாவட்டத்தில் பிரசாரத்துக்கு செல்வதை தவிர்த்துக் கொண்டேன். இப்போது நான் மாவட்ட மக்களை ஏமாற்றவில்லை என்ற திருப்தி எனக்குள் நிரப்பவே இருக்கிறது. எனக்கு தேசிய பட்டியல் தருவதாக கூறி மக்களிடத்தில் வாக்குகளை வாங்கிக் கொண்டவர்கள் நிலைதான் பரிதாபமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் தாங்கள்தான் அமைச்சுப் பதவியைப் பெறுவோம் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தும் வாக்கு வாங்கினார்கள். இரண்டுமே நடக்கவில்லை.

எனக்கிருந்த பிரபலத்தை இதுவரை பிரதிநிதித்துவம் கிடைக்காத இரத்தினபுரி மாவட்டத்துக்குப் பெற்றுக்கொடுக்க முயற்சித்தேன். முழு மூச்சாக அதற்காக உழைத்தேன். வெற்றிக்கணி கிடைக்காவிட்டாலும் கணிசமான முன்னேற்றம் தெரிந்தது. அடுத்த முறை இரத்தினபுரியில் ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கே: மாகாணசபைத் தேர்தல் இவ்வாண்டு நடத்தப்படுமானால் மத்திய மாகாண சபைக்கு போட்டியிடும் (சுயேச்சையாகவேணும்) எண்ணம் உள்ளதா?

மாகாண சபைத் தேர்தல் வருமா என்பது சந்தேகமே. அப்படி வந்தால் எனது முடிவு எப்படியானதாக இருக்கும் என்பதை அறிவிப்பேன். அதற்கான நேர்த்தியான திட்டம் ஒன்று குறித்து இப்போதும் உரையாடல்களை நடாத்தி வருகிறேன்.

கே: மலையக அரசியல் பலம் பொருந்தியதாக அமைந்திருந்த காலம் ஒன்றிருந்தது. மலையக அரசியலை இப்போது எவ்வாறு நோக்குகிறீர்கள்?

அரசியல் பலம் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. எமது மக்கள் வாக்குகளை சரியாகத்தானே வழங்கி இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றில் இருந்த ஒன்பது ஆசனங்கள் இந்த முறையும் உண்டு. அமைச்சுப் பதவிகளும் உண்டு.

அமைச்சுப் பதவிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதிவுகளையும் கொண்டு எப்படி பணியாற்றப் போகிறோம், அதற்கான கொள்கைத் திட்டம் என்ன, வேலைத்திட்டம் என்ன என்பதில்தான் வெற்றி தங்கியிருக்கிறது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதனைக் கூறி வாக்கு கேட்டார்களோ அதனை வென்றெடுக்கும் வேலைத்திட்டமும் அவசியம்.

நேர்காணல் – பி. வீரசிங்கம்

பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம் – காலதாமதமும் கலக்கமும்

பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம் இன்னும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கப்படாமலே இருப்பது மலையக மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசின் நிதியொதுக்கீடு, இந்திய அரசின் பங்களிப்புடன் தொடர வேண்டிய இருமுனை வீடமைப்புத் திட்டம் புதிய ஆட்சியின் கீழ் இன்னும் செயல்வடிவம் பெறாதுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்ததான வெளிப்படைத்தன்மை என்னவென்று புரியவில்லை.

மொத்தமாக 9000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் கட்டிமுடிக்கப்பட்டவை இந்திய அரசு வழங்கிய நிதியிலேதான் நடந்திருக்கின்றன என்று அப்போது இ.தொ.கா. குற்றஞ்சாட்டியது.

முன்னைய ஆட்சியின்போது பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம் தாமதமாவதற்கு இங்கு வாழும் மக்களுக்கு காணி உரிமை இல்லாததே காரணமென தமிழ் முற்போக்குக் கூட்டணி கூறியிருந்தது. 100 நாள் வேலைத் திட்டத்தின்போது சில குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன. இவ்விடயத்தில் அமரர் வேலாயுதத்தின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது. எனினும் இது சட்டபூர்வமான உறுதிப்பத்திரம் தானா என்ற குழப்பமும் எழுந்தது. இதனை அமரர் வேலாயுதமும் ஏற்றுக் கொண்டிருந்தார்.

காலக்கிரமத்தில் காணி உறுதியில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படுமென அவர் உறுதி வழங்கியிருந்தார். அவரின் மரணத்தின் பின் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட த.மு. கூட்டணியால் முழுமையாக எதனையுமே செய்ய முடியவில்லை. ஆனால் காணி உரிமைக் கொள்கையை விடுத்து வீட்டுரிமை விவகாரத்தை அக்கட்சி கையாண்டது. இதுவும் மந்தகதியிலேயே நிகழ்ந்தது.

இலங்கை அரசின் நிதியொதுக்கீட்டின் கீழ் இடம்பெறும் வீடமைப்புத் திட்டத்தில் மட்டுமன்றி இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இடம்பெற்றுவந்த வீடமைப்புத் திட்டத்திலும் ஊழல், மோசடி, முறைகேடுகள் இருப்பதாகக்கூறி அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஊழல், மோசடி விசாரணை ஆணைக் குழுவையும் அணுகினார். ஆனால் இதைப்பற்றி த.மு. கூட்டணி கவனத்தில் கொள்ளவில்லை. எனிலும் வீடமைப்பில் காணப்படும் குறைபாடுகளை ஆதாரங்களுடன் ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. இதனாலேயே கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமலே அந்த ஆட்சிக் காலமும் கரைந்துபோனது.

இ.தொ.கா. இந்திய அரசின் அணுசரனையுடன் இடம்பெறும் வீடமைப்புத் திட்டத்திலும் குறைபாடுகள் இருப்பதாக சுமத்திய குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் மறுத்து அறிக்கை விட்டது. இதனால் இ.தொ.காவின் நிலை தர்மசங்கடமானது. சுதாரித்துக் கொண்ட அக்கட்சி இந்திய அரசின் நிதியுதவியிலான வீடமைப்புத் திட்டத்தில் குறையேதும் இல்லை என்று கூறவேண்டி நேர்ந்தது.

இதனால் த.மு. கூட்டணியே அதிகம் குதூகலம் அடைந்தது. ஏனெனில் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பழனி திகாம்பரமே இரண்டு வீடமைப்புத் திட்டங்களையும் கையாண்டார். இதனால் கட்டப்பட்டு கொண்டிருப்பது யாருடைய நிதியொதுக்கீட்டிலான வீடுகள் என்பது குளறுபடியாகவே காணப்பட்டது. உண்மையில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன போன்ற விபரங்களின் நம்பகத் தன்மை பற்றி சந்தேகங்கள் கிளம்பின.

இந்திய வீடமைப்புத் திட்டம் 2012களிலேயே முதன் முதலாக இலங்கையில் ஆரம்பமானது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்காக இந்திய அரசாங்கம் 50,000 வீடுகளை கட்டிக்கொடுக்க முன்வந்தது. ஆரம்பத்தில் இப்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு 6000 வீடுகள் போக எஞ்சியவை தமிழ் மக்களுக்கு வழங்குவது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

பன். பாலா

இலங்கையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது!

இலங்கையில் கடந்த 29 ஆம் திகதி முதல் நேற்றுவரை மூன்று லட்சத்து 2 ஆயிரத்து 857 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவால் இலங்கைக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. முதற்கட்டமாக கொரோனா ஒழிப்பு சமரில் முன்கள பணியாளர்களாக செயற்படும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு கொவிட் – 19 தடுப்பூசி கடந்த 29 ஆம் திகதி முதல் ஏற்றப்பட்டது.

29 ஆம் திகதி 5 ஆயிரத்து 286 பேருக்கும் , 30 ஆம் திகதி 32 ஆயிரத்து 539 பேருக்கும், 31 ஆம் திகதி 21 ஆயிரத்து 329 பேருக்கும், பெப்ரவரி முதலாம் திகதி 36 ஆயிரத்து 396 பேருக்கும், 2 ஆம் திகதி 23 ஆயிரத்து 217 பேருக்கும், 3 ஆம் திகதி 21 ஆயிரத்து 147 பேருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அத்துடன், 4 ஆம் திகதி 6 ஆயிரத்து 413 பேருக்கும், 5 ஆம் திகதி 9 ஆயிரத்து 983 பேருக்கும், 6 ஆம் திகதி 3,838 பேருக்கும்,7 ஆம் திகதி 1,625 பேருக்கும், 8 ஆம் திகதி 5,989 பேருக்கும், 9 ஆம் திகதி 6,431 பேருக்கும், 10 ஆம் திகதி 2,532 பேருக்கும்,11 ஆம் திகதி 1,362 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

12 ஆம் திகதி ஆயிரத்து 110 பேருக்கும்,  13 ஆம் திகதி 7,457 பேருக்கும், 14 ஆம் திகதி 2,695 பெருக்கும், 15 ஆம் திகதி 3,589 பேருக்கும், 16 ஆம் திகதி 3,225 பேருக்கும், 17 ஆம் திகதி 14,242 பேருக்கும், 18 ஆம் திகதி 23,067 பேருக்கும், 19 ஆம் திகதி 30,307 பேருக்கும், 20 ஆம் திகதி 39,078 தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அடிக்கடி உடலுறவு – கணவனை விஷம்வைத்து கொன்ற மனைவி!

அடிக்கடி தாம்பத்திய உறவுக்கு கணவன் வற்புறுத்தியதாக கூறி திருமணமான 7 மாதத்தில் கணவனுக்கு உணவில் விஷம் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 33). இவருக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் சொந்தமாக உள்ளது. விவசாயம் செய்துகொண்டு அந்தியூர் ஜீவா செட் பகுதியில் உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 7 மாதங்கள் முன்பு திருமணமாகி தனது மனைவி மைதிலியுடன் (வயது 20) அந்தியூர் காலனியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 28ஆம் திகதி காலை தனது தோட்டத்தில் விவசாய பயிர்களுக்கு மருந்து அடித்துவிட்டு பின்னர் வீட்டில் காலை உணவு சாப்பிட்டுள்ளார். அப்பொழுது உணவு கசப்பாக இருக்கவே மனைவியிடம் இதுபற்றி கேட்டுவிட்டு அதிகம் சாப்பிட முடியாமல் சிறிது சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார். வேலைக்கு சென்ற இடத்தில் தான் கொண்டுவந்த மதிய உணவை எடுத்து சாப்பிடும் பொழுது மீண்டும் கசப்பாக உள்ளது என்று சொல்லி கீழே கொட்டி விட்டதாக தெரிகிறது.

உடலில் மாற்றங்கள் தெரியவே கடந்த 31ஆம் திகதி அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர் உடலில் விஷம் இருப்பதாக கூறவே, மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி அதிகாலை சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

இந்நிலையில் நந்தகுமார் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது தனது மனைவி தனக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்திருக்கலாம் என வாக்குமூலம் கூறியதாக தெரிகிறது. போலீசார் நந்தகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மைதிலியிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்களை அவர் கொடுத்திருக்கிறார்.

தான் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், இந்நிலையில் அவருடைய கணவர் நந்தகுமார் தன்னை இரவு பகல் பாராமல் தாம்பத்திய உறவு வைத்து அடிக்கடி தொந்தரவு செய்துகொண்டே இருந்ததாகவும் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்து உணவில் விஷம் வைத்து கொடுத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து மைதிலி மீது கொலை வழக்குப்பதிவு செய்த அந்தியூர் போலீசார் மைதிலியை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

‘களுத்துறை பெருந்தோட்ட மக்களை மறந்த மலையகக் கட்சிகள்’

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும், அவர்களின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும், பாதுகாக்கவுமே தொழிற்சங்கங்கள் உருவாகின.

குறிப்பாக இது களுத்துறை மாவட்டத்துக்குப் பொருத்தமாகும். இதுவரை காலமும் இந்த மாவட்டத்தின் இங்கிரிய, மத்துகம ஆகிய இரு நகரங்களில் மட்டும் இ.தொ.காவின் தொழிற்சங்கக் காரியாலயங்கள் இயங்கி வருகின்றன. மத்துகம நகரில் காரியாலயம் இயங்கிவந்த போதிலும் அங்கு பணிபுரிந்து வந்த தொழிற்சங்க சட்டதிட்டங்கள், நுணுக்கங்கள் பற்றிய நல்ல அனுபவத்தைக் கொண்டிருந்த தொழிற்சங்கப் பிரதிநிதியொருவர் சில வருடங்களுக்கு முன்னர் காங்கிரஸை விட்டு விலகிச்சென்றதால் இங்கிரிய மாவட்ட காரியாலயத்தில் பணியாற்றிவரும் தொழிற்சங்கப் பிரதிநிதியே மத்துகம மாவட்டக் காரியாலயத்துக்கும் பொறுப்பாக இருந்து வருகின்றார்.

தொழிற்சங்கக் காரியாலயங்கள் ஊடாக தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில் ஒரு மந்தகதியை பார்க்கிறோம். சங்கங்கள் அடிக்கடி மூடப்பட்ட நிலையில் கிடப்பதையே காணமுடிகிறது. வாலிபர் சங்கம், மாதர் சங்கம், இளைஞர் அமைப்பு இவை இயங்குவதே கிடையாது. தோட்டக்கமிட்டித் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் பெயரளவில் மட்டுமே இருந்து வருகின்றனர்.

எனவே இ.தொ.கா அதன் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி மீள கட்டியெழுப்ப வேண்டிய ஒரு கட்டாய நிலையேற்பட்டுள்ளது. இ.தொ.காவின்  ஜீவன் தொண்டமான் விசேட கவனம் செலுத்தவேண்டிய கடப்பாடு உள்ளது.

இனி அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலத்தில் அவரும் சரி, காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் சரி இந்த மாவட்டம் குறித்து கவனம் செலுத்தி வந்துள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளதுடன் இது குறித்து ஆராய்ந்துபார்க்க வேண்டியுமுள்ளது.

2007இல் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்தராஜபக்ஷவின் ஆட்சியில் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் மலையக இளைஞர்களை நவீன தொழில்நுட்ப உலகுக்கு அறிமுகம் செய்யும் ஒரு ஆரம்ப நடவடிக்கையாக மலையகத்தின் பல பகுதிகளிலும் 2007.11.05ல் பிரஜாசக்தி கணனிப் பயிற்சி நிலையங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, கலஹேன தோட்டத்தில் சுமார் 2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பயிற்சி நிலையமும் ஒன்றாகும்.

மேலும் ஒரு பயிற்சி இந்த மாவட்டத்தின் இங்கிரிய றைகம் தோட்டத்தில் ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கை எழுக்கப்பட்டு வருவதாக பிரஜாசக்தி நிலையத்தின் அப்போதைய இணைப்பாளராக இருந்த ரீ. நிசாந்தன் தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறான ஒரு நிலையம் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை.

ஆனால் 13 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டு இயங்கிவரும் ஒரேயொரு பயிற்சி நிலையமும் இதுவரையில் முன்னேற்றம் கண்டிராது பெயரளவில் மட்டுமே இயங்கி வருகிறது என்பதே பலரினதும் அபிப்பிராயமாகும். பாதுகாப்பானதும் வசதியானதுமான ஒரு இடத்தில் இந்நிலையம் அமைபப் பெற்றிருக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2014ம் ஆண்டின் முற்பகுதியில் இதே பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற களுத்துறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 பேருக்கு அமைச்சினுௗடாக கோழிக்குஞ்சுகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொண்டார்.

அதே ஆண்டு இறுதியில் நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் இ.தொ.கா தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது பிரசார நடவடிக்கைகளில் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனரே தவிர அதன் பின்னர் ஆறு வருடங்கள் கடந்த நிலையில் ஆறுமுகன் தொண்டமானோ அல்லது இ.தொ.காவின் முக்கியஸ்தர்களோ எவரேனும் இந்த மாவட்டத்தின் எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொண்டதில்லை. மக்களின் குறைபாடுகள், பிரச்சினைகள் குறித்து கண்டறியவோ கேட்டறியவோ எவருமே வந்ததில்லை.

நாட்டில் அடுத்து நடைபெறவிருப்பது மாகாணசபைத் தேர்தலாகும். மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் நிச்சயமாக இ.தொ.கா களுத்துறை மாவட்டத்தில் தனித்து களமிறங்கும் என நம்பப்படுகிறது. எனவே இப்போதிருந்தே இ.தொ.கா அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி அதன் வேலைத் திட்டங்களை விஸ்தரிக்க வேண்டும்.

அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகள் பலராலும் ஏமாற்றப்பட்டு புறக்கணிக்கப்பட்டு இனி யாரையும் நம்புவதற்கில்லை என விரக்தியுற்ற நிலையில் வாழ்ந்துவரும் களுத்துறை மாவட்ட மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வில் ஒரு விடிவை ஏற்படுத்தும் பொருட்டு ஜீவன் தொண்டமான் இந்த மாவட்டம் குறித்து விசேட கவனம் செலுத்த முன்வரவேண்டும். தமது தந்தை ஆறுமுகன் தொண்டமானால் ஆகாத காரியங்களை இவர் சாதித்து சாதனை படைக்க வேண்டும்.

தந்தையின் திடீர் மறைவையடுத்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ள இளைஞரான ஜீவன் தொண்டமானுக்கு எண்ணற்ற பொறுப்புக்களும் கடமைகளும் தினமும் குவிந்த வண்ணமாகவே இருக்கின்றன. இவர் என்ன செய்யப் போகிறார்? சாதிப்பாரா? என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இவர் சாதித்துக் காட்ட வேண்டும். காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இவருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி பக்கபலமாக இருந்து அவருடன் சேர்ந்து பயணிக்க வேண்டும். அவரது திட்டங்களும், எண்ணங்களும் நிறைவேற வெற்றிபெற அவருக்கு உறுதுணையாக இருந்து பாடுபட வேண்டும்.

ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட மக்களுக்கு மட்டும் பிரதிநிதியல்ல. ஒட்டுமொத்த மலையக மக்களுக்குமான பிரதிநிதி என்பதை மனதிற்கொண்டு செயற்பட வேண்டும்.

2017ம் ஆண்டு மே மாதத்தில் நாட்டில் ஏற்பட்ட மோசமான இயற்கை அனர்த்தத்தினால் களுத்துறை மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான மக்கள் மற்றும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியிருந்த மக்கள் நலன்கருதி ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? முறையாகப் புூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து அப்போதைய நல்லாட்சியில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. ஆரம்பிக்கப்பட்ட சில வீட்டுத்திட்டங்கள் இன்னும் புூர்த்தி செய்யப்படவில்லை. மக்களிடம் கையளிக்கப்பட்ட இரண்டொரு வீட்டுத்திட்டங்களில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் குடிநீர் வசதி கிடையாது என பயனாளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வோகன் தோட்டம் கீழ்ப்பிரிவு, கொபவெல ஆகிய தோட்டங்களில் மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான 55 குடும்பங்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் இன்னும் பூர்த்தியடையாது கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன. அரப்பொலகந்த, லிஸ்க்லேன் பிரிவில் கையளிக்கப்பட்ட 29 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தில் முறையான குடிநீர் வசதி கிடையாது.

குறைபாடுகள் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படும்போது பத்திரிகைகளைப் பார்த்துவிட்டு எங்களுக்கு நடவடிக்கை எடுக்கமுடியாது என அன்று ட்ரஸ்ட் நிறுவனத்தில் பொறுப்புவாய்ந்த பதவியிலிருந்த அதிகாரியொருவர் கூறியதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

முன்னைய ஆட்சியிலும் சரி, நல்லாட்சியிலும் சரி தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கொன்கிறீட் பாதை, குடிநீர், விளையாட்டு மைதானம், மலசலகூடம், சிறுவர் அபிவிருத்தி நிலையம், கூரைத்தகடுகள் போன்ற விடயங்கள் தொடர்பாக பல புகார்கள் உள்ளன. எந்த ஆட்சியானாலும் என்ன நடந்துள்ளது என்பதை ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியமாகும். இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் களுத்துறை மாவட்ட மக்களின் நிலையை கவனத்திற்கொண்டு விசேட கவனம் செலுத்த முன்வரவேண்டியது அவசியம்.

இங்கிரிய மூர்த்தி

அவுஸ்திரேலிய ஓப்பன் சம்பியன் பட்டத்தை வென்ற நவோமி ஒசாகா : கிராண்ட்ஸ்லாம் வேட்டை தொடர்கிறது

மெல்போர்னில் சனிக்கிழமை (20) நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓப்பன் இறுதிப் போட்டியில் ஜெனிஃபர் பிராடியைத் தோற்கடித்து நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 23 வயது நவோமி ஒசாகா தனதாக்கினார்.

அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் மகளீர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி மெல்போர்னில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் களமிறங்கிய ஜப்பானின் நவோமி ஒசாகா (Naomi osaka) தன்னை எதிர்த்து ஆடிய அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை (Jennifer brady) 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார்.

இதன்மூலம் ஒசாகா தனது நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்..

இதற்கு முன்னர் அறையிறுதியில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை இவர் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Naomiosaka #AustralianOpen #tennis

21/4 தாக்குதல் – ஜனாதிபதியின் புதிய குழுவை ஏற்கமுடியாது! பேராயர் திட்டவட்டம்!

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழுவின் அறிக்கையினை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவை ஏற்கமுடியாது என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அதன் பிரதி தனக்கு அவசியம் என பேராயர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் குறித்த அறிக்கையிலுள்ள விடயங்களை ஆராய்ந்து மார்ச் 15 ஆம் திகதிக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சர் சமல் ராஜபக்ச தலைமையில் ஐவரடங்கிய குழுவை ஜனாதிபதி அமைத்தார்.

அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இக்குழுவையே ஏற்கமுடியாது என பேராயர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மாற்றமின்றி முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

‘சந்திரிக்கா, சஜித்தையும் இணைத்துக்கொண்டு ஜெனிவா சவாலுக்கு முகங்கொடுக்கவும்’

“இறுதிக்கட்டப்போரின்போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஏற்கமுடியாது. அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் இணைத்துக்கொண்டு ஜெனிவா பிரச்சினையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“உள்நாட்டுப்போர் முடிவடைந்த பின்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ஐ.நா. பொதுச்செயலாளராக செயற்பட்ட பான்கீ மூனும் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டனர்.  அதன் விளைவாகவே தாருஸ்மன் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நாம் ஏற்கவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் எனக் கூறப்படும் விடயத்தை நிராகரிக்கின்றோம். போரின்போது சிற்சில சம்பவங்கள் இடம்பெறக்கூடும்.

அதனை அடிப்படையாகக்கொண்டு படையினர்மீது மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதனை ஏற்கமுடியாது. அதேபோல உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதையும் நாம் அனுமதிக்கமாட்டோம். எந்நேரத்திலும் நாட்டுக்காக முன்னிலையாவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

அதேவேளை, போர்காலத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இருக்கின்றனர். மைத்திரிபால சிறிசேனவும் இருக்கின்றார். இவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் இணைத்துக்கொண்டு ஜெனிவா சவாலை எதிர்கொள்வதற்கான திட்டத்தை அரசு வகுக்கவேண்டும். அதனைவிடுத்து ஜெனிவா விவகாரத்தை அரசியல் மயப்படுத்துவதுதான் சிக்கல்களை உருவாக்குகின்றது.” – என்றார்.

80 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 257  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாவிலிருந்து 73 ஆயிரத்து 546 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 305  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 433 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

மலையக மக்கள்மீதான வன்முறை குறித்து 19 ஆம் திகதி முத்தரப்பு சந்திப்பு!

0
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள்மீது, நிர்வாக தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்

0
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது. இது, இந்தப் பணியின் இரண்டாவது கட்டத்தில், அதன் ஏழாவது துறைமுகப் பயணமாகும். இது கடலில் மேற்கொள்ளப்படும் ஒரு தனித்துவமான அனைத்துலக...

நில உரிமைக்காக ஒன்றிணையும் தமிழ் பேசும் சமூகங்கள்: கொட்டக்கலையில் முக்கிய தீர்மானம்!

0
கிழக்கு மாகாண காணி வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொட்டக்கலை சுயசக்தி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்,...