Home Blog Page 3622

மொட்டு கூட்டணிக்குள் மோதல் உக்கிரம்! மன்னிப்பு கோருவாரா விமல்?

ராஜபக்சக்களுக்காக அரசியல் புராணம்பாடி, இனவாதம் கக்கி வாக்கு- வேட்டை நடத்துவதில் சிறப்பு தேர்ச்சிப்பெற்ற விமல் வீரவன்சவுக்கு அரசியலில் சோதனைக்காலம் ஆரம்பமாகியுள்ளது.

ராஜபக்சக்களுக்காக பல பத்தாயிரம் அரசியல் மேடைகளில் அனல்கக்க உரையாற்றிய விமல், அதே ராஜபக்சக்கள் குறித்து கதைக்கபோய்  அரசியல் பொறிக்குள் சிக்கியுள்ளார்.

நாலாபுறங்களில் இருந்தும் அவருக்கு எதிராக மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் சொற்கணைகளையும், விமர்சனக்கணைகளையும் தொடுத்தனர், தொடுக்கின்றனர். இந்நிலையில் விமலும் அவரின் சகாக்களும் , இவற்றுக்கு பதிலடி கொடுக்க ஆளுங்கூட்டணிக்குள் சிறு அரசியல் பூகம்பமே ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சம்பந்தன் ஐயா தும்மினால்கூட அது சர்வதேச சதி எனவும், ஈழத்தை அடைவதற்கான மறைமுக வியூகம் எனவும் கை ,கால், மூக்கு எல்லாம் வைத்து கற்பனை கலந்த தொனியில் உரையாற்றி சிங்கள மக்களை குஷிப்படுத்தும் விமல், தான் எதை பேசினாலும் எதிர்ப்பதற்கு எவரும் இல்லை என்ற அகங்காரத்துடனேயே செயற்பட்டார்.அதே நினைப்பில்தான் மொட்டு கட்சியின் தலைமைப்பதவி குறித்தும்  கருத்து வெளியிட்டார்.  அதுவே விமலுக்கு தற்போது வேட்டாக மாறியுள்ளது.

“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு, அவ்விடத்துக்கு கோட்டாபய ராஜபக்சவை நியமிக்கவேண்டும்.” – என்பதே விமல் வெளியிட்டிருந்த கருத்தின் சுருக்கம். இதுவே அவருக்கு கெடுபலன்களை வழங்கிவருகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு  முனையம் விவகாரத்தில் விமல்மீது கடும் அதிருப்தியில் இருந்த மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு, இக்கருத்து அவர்மீது தாக்குதல் தொடுப்பதற்கு சிறந்த வாய்ப்பாக  அமைந்தது. குறிப்பாக பஸில் அணி உறுப்பினர்கள் நேரடியாகவும், சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் விமலை வெளுத்து வாங்கினர். கருத்தை மீளப்பெறவேண்டும், மன்னிப்பு கோரவேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்தனர். விமலின் வண்டவாளங்களை தண்டவாளமும் ஏற்றினர்.

பதிலுக்கு விமலுக்கு சார்பானவர்களும் மொட்டு கட்சி உறுப்பினர்களை விமர்சிக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமல்ல இந்த மோதலால் சிங்கள தேசியவாத அமைப்புகளும் இரு அணிகளாக பிரிந்தன. அதேநிலை நீடித்தால் சிக்கல் என்பதால் சமரசத்துக்கு செல்வதற்கு இரு தரப்புகளும் முயற்சித்து வருகின்றன. பொதுவெளியில் விமர்சனங்களை முன்வைப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சமரசம் பேசப்பட்டாலும், விமல்மீது மொட்டு கட்சி உறுப்பினர்கள் கண்வொன்றை வைத்துள்ளனர், அரச கூட்டணி கட்சிகளை அவர் வளைத்துப்போட்டுள்ளதால் அவற்றை பிரிப்பதற்கான நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது. கட்சிகளை உடைத்து, நபர்களை அரசியல் ரீதியில் தனிமைப்படுத்துவது பஸிசுக்கு கைவந்தகலை. எனவே, விமலுக்கு இனி சிக்கல்தான் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

விமல் மன்னிப்புகோரியாக வேண்டும் என்பதில் மொட்டு கட்சி உறுதியாகவே இருக்கின்றது.

தேர்தல் காலத்தில் தீர்மானிக்கும் சக்தி பஸில்அணிதான். எனவே இனிதான் மொட்டு அணிக்குள் மோதல் சூடுபிடிக்கும்.

எஸ்.பிரதா வட்டகொடை

சூர்யாவுடன் இணைந்து மீண்டும் களமிறங்கும் வைகைப்புயல்

நகைச்சுவை நடிகர் வடிவேல் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்து விலகியதால் அவர் புதிய படங்களில் நடிக்க பட அதிபர்கள் சங்கம் தடை விதித்தது.

இதனால் பல வருடங்களாக அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் நடிக்க தயாராகி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு வடிவேல் தெரிவித்து இருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடிவேல் ஏற்கனவே சூர்யாவுடன் வேல், பிரண்ட்ஸ், ஆறு, ஆதவன், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இவர்கள் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் நடித்துள்ளார்.

சூர்யா கொரோனாவில் சிக்கி குணமாகி தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதால் அவர் இல்லாமல் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். விரைவில் படப்பிடிப்பில் அவர் பங்கேற்கிறார்.

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை- முதல் 10 இடங்களில் இலங்கை வீரர்கள் எவரும் இல்லை

20 ஓவர் சர்வதேச போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.
இதன்படி துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும், இந்திய அணியின்  தலைவர் விராட் கோஹ்லி 7-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
முதல் 10 இடங்களுக்குள் இலங்கை அணி வீரர்கள் எவரும் இல்லை. குசல் பெரேரா 28 ஆவது இடத்தில் இருக்கின்றார்.
அதேவேளை, sபந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் முதலிடத்தில் தொடருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சி 3 இடங்கள் ஏற்றம் கண்டு 2-வது இடத்தை பெற்றுள்ளார். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

ஊவா ஆளுநர் முஸம்மிலின் மகள் இங்கிலாந்து தேர்தலில் போட்டி!

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷஸ்னா முஸம்மில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மில்டன் கெய்ன்ஸ் கவுன்சில் (Milton Keynes Council) தேர்தலில் போட்டியிட வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெற்றவுள்ள குறித்த தேர்தலில் கன்சர்வேடிவ் (Conservative Party) கட்சி சார்பில் ஷஸ்னா முஸம்மில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் MBA பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ள ஷஸ்னா முஸம்மில், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் பெரோஸா முஸம்மில் ஆகியோரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது

மீண்டும் பாராளுமன்றம் வருகிறார் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்காக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் பதவியேற்கவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்காக அவரை பெயரிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

எனினும், ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானம் கிடைக்கும் வரையில் அந்த நடவடிக்கை தாமதமடைவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் குறித்த தீர்மானம் கட்சிக்கு அறியப்படுத்தப்படும் என்றும தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில், பொதுமக்கள் வாக்களிப்பின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த ஒரு ஆசனமும் கிடைக்கப்பெறவில்லை.

எனினும், கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஒரே ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை மாத்திரம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்தது.அந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்காக, பலரின் பெயர்கள் முன்னதாக முன்மொழியப்பட்ட நிலையில், அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக கட்சியின் செயற்குழு பல தடவைகள் கூடின.

எனினும், அந்த சந்தர்ப்பங்களில் தேசிய பட்டியல் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போனதுடன், கட்சியை மறுசீரமைப்பு செய்வது குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்காக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பெயரிட வேண்டுமென்றும் இணக்கம் காணப்பட்டிருந்தது.இதன்படி, அதுகுறித்து கட்சித் தலைவரின் கருத்து கோரப்பட்டுள்ள நிலையில், அவரின் தீர்மானம் கிடைத்ததை அடுத்து, அதனை சபாநாயகருக்கு பெயரிட்டு அனுப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு என்ன? வெளியானது தகவல்

ரஜினிகாந்த் உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து மீண்டும் சினிமாவில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளார்.

அவரது அண்ணாத்த படப்பிடிப்பு 60 சதவீதத்துக்கு மேல் முடிந்து விட்டது. மீதியையும் முடிக்க இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

முந்தைய படப்பிடிப்பில் படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கொரோனா தடுப்பு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளனர். ஓரிரு மாதங்களில் முழு படத்தையும் முடித்து தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி மேலும் 2 புதிய படங்களில் நடிக்க ஆலோசிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே ரஜினியை வைத்து பேட்ட படத்தை எடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெற்றிப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை அழைத்து ரஜினி பாராட்டியதுடன் தனக்கு கதை தயார் செய்யும்படி கூறியுள்ளார்.

இதுபோல் மேலும் சில இயக்குனர்களும் ரஜினிக்கு கதை வைத்துள்ளனர். அண்ணாத்த படப்பிடிப்பை முடித்ததும் ரஜினி நடிக்க உள்ள புதிய படங்கள் பற்றிய அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலையக கட்சிகளை இந்தியாவே இயக்குகிறது – பாஹியங்கல ஆனந்த தேரர் பரபரப்பு தகவல்

மலையக அரசியல் கட்சிகளை இந்தியாவே இயக்குகின்றது என்று பாஹியங்கல ஆனந்த தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கையிலும் பாரதிய ஜனதாக்கட்சி மலரும், அக்கட்சி தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின்  தலைவர்கள் அறிவித்துள்ளனர். இது வைரஸைவிடவும் மோசமானதாகும். நாட்டுக்குள் விட்டால் நிலைமை சிக்கலாகிவிடும்.
பெருந்தோட்டப் பகுதி அரசியலை இந்தியாவே தீர்மானிக்கின்றது. அங்குள்ள கட்சிகளை இயக்குகின்றது. அதுமட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்படுகின்றது.
இந்நிலையில் இந்தியாவின் பாரதிய ஜனதாக்கட்சி இங்கு வந்து வடக்கு, மலையகம் வாக்குகளைப்பெற்று அரசியல் நடத்தினால் இலங்கை, இந்தியாவின் காலனித்துவ பகுதியாக மாறும் அபாயமும் இருக்கின்றது.” – என்றார்.

‘மலையக மக்களை சுயகௌரவத்துடன் வாழ வைப்பதே எமது இலக்கு’ – ஜீவன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு அப்பால், அம்மக்களைச் சுயகௌரவத்துடன் வாழ வைப்பதே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நோக்கம் என தெரிவித்த இதொகாவின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான், யாருக்கும் பயந்து வாழும் சூழ்நிலை எம்மக்களுக்கு இனி வராது எனவும் அனைவரும் ஒன்றுசேர்ந்தால், நம்மை அசைக்கவோ அல்லது சீண்டிப் பார்க்கவோ யாராலும் முடியாது எனவும் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய தனி வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, காலி – வலஹன்தூவ தோட்டத்தில், இன்று இடம்பெற்றது. 50 தனி வீடுகளை நிர்மாணிக்கும் இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய இராஜாங்க அமைச்சர், நுவரெலியா மாவட்டத்துக்கு அப்பால் காணப்படும் வெளி மாவட்ட மலையகப் பெருந்தோட்டப் பகுதிகள் பல, அபிவிருத்தியில் ஒதுங்கியே உள்ளன. இதற்கு, வெளிமாவட்ட மக்களுக்கிடையிலான தொடர்புகள் விடுபட்டுள்ளமையே காரணமாகும்” என்றார்.

“சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா காலத்தில் இருந்த தோட்டத் தலைவர்கள், தலைவிகள், இன்றும் இத்தோட்டத்தில் உள்ளனர். அன்றைய கால தொடர்புகள், காலம்போக மாறிவிட்டது. ஆகையால், மக்கள் இன்று பயந்து வாழும் சூழ்நிலைக்கு வந்துள்ளனர்.

“இன்றைய நிலையில், நாம் யாருக்கும் பயந்து வாழும் அவசியம் இல்லை. ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில், மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பயப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

“உங்களில் சிலர் பேசிய விடயம், எனது அதிகாரிகள் ஊடாக எனது காதுக்கு எட்டியது. “ இவருடைய மாவட்டம் நுவரெலியா. இவர் ஏன் இங்கு அபிவிருத்தி செய்ய வேண்டும்” என்று நீங்கள் தெரிவித்ததாகக் கூறியிருந்தீர்கள். மறுபுறத்தில், நுவரெலியா மாவட்டத்தில் தமிழர்களுக்குச் செய்யும் அபிவிருத்தி, வெளி மாவட்ட மலையகத் தமிழ் மக்களுக்கும் செய்யலாம் தானே என்றும் பேசுகின்றனர்.

“குறை சொல்ல நிறைய பேர் இருப்பார்கள். கடைசியில், நாம் இந்தப் பதவிக்கு வந்துள்ளமை உங்களுக்குச் சேவை செய்யவே. இச்சேவையை, நாம் உங்களுக்கு உண்மையாகச் செய்யமுடியும் என்பதை மறந்துவிடக் கூடாது” என, நம்பிக்கை தெரிவித்தார்.

“இன்று, மலையக மக்களின் நாள் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தீர்வு கிட்டியுள்ளது. ஆயிரம் ரூபாயை வழங்குவதற்கு, கம்பனிகளுக்கு கஸ்டம் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது, ஆயிரத்தைத் தந்துதான் ஆகவேண்டும் எனச் சொல்லியுள்ளனர். இத்தொகையை வழங்கச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை, வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர், சம்பளம் வழங்கியாக வேண்டும். நாம் என்ன செய்தாலும், கடைசியில் குறைகூறும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது” எனத் தெரிவித்த ஜீவன், ஆயிரம் ரூபாய் சம்பளம் தொழிலாளர்களின் கரம் கிடைத்ததும், இன்றுள்ள விலைவாசிக்கு ஆயிரம் போதுமா என்றும் குறை கூறுவார்கள்” என்றார்.

“காலி மாவட்டத்தில், 21 ஆயிரம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 6 ஆயிரம் பேர், இந்திய வம்சாவளிக் குடும்பத்தினர். நாம் இந்த மாவட்டத்துக்கு, 500 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளோம். அதேநேரத்தில், கடந்த 200 வருடங்களாக, மலையக மண்ணில் உழைத்த எம் மக்களில் அதிகமானோர், காணி உரிமையின்றி வாழ்கின்றனர். அவர்களுக்குக் காணி உரிமை அவசியம். முதலில் இதை இவர்களுக்குப் பெற்றுத்தந்தாக வேண்டும் .

“இன்று, தோட்ட லயன் குடியிருப்பில் வாழும் ஒருவர், சுயமாகத் தனது பணத்தில் மலசலகூடம் ஒன்றை அமைத்தால், அதைப் பொலிஸாரைக் கொண்டு இடிக்கின்றனர். இதற்கு, அந்தக் காணி அவரின் உரிமையில்லை என்றே கூறப்படுகின்றது. இவ்வாண்டு ஏப்ரலில், 1,400 காணி உறுதிப் பத்திரங்கள், மலையக மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. அடுத்தவர்கள் உதவி செய்துதான் வீடொன்று அமைக்கப்பட வேண்டும் என்பதில்லை. நாம் சுயமாகச் சம்பாதித்து அமைத்துக் கொள்ளவும் முடியும். ஆனால், வீடு அமைக்க இடங்கொடுக்க மறுக்கிறார்கள். வெள்ளையர்கள் சென்றுவிட்டாலும், கம்பனிக்காரர்கள் வந்துவிட்டார்கள்.

“தவறுகள் திருத்தப்பட்டு, இதொகாவிலிருந்து விடுப்பட்ட தொழிலாளர் உறவுகளை இணைத்து, இ.தொ.காவை கட்டியெழுப்பி வருகின்றோம். அனைவரும் ஒன்றுசேர்ந்தால், நம்மை அசைக்கவோ அல்லது சீண்டிப் பார்க்கவோ யாராலும் முடியாது” என, ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் சதமடித்தும் அசத்தல்!

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சதம் விளாசி அசத்தினார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 329 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 161- ஓட்டங்களையும், ரகானே 67- ஓட்டங்களையு; எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மோயின் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலந்து அணி, அஸ்வினின் மாயாஜால சுழலில் சிக்கியது. 59.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 134 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

195 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் எடுத்தது. 3- ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

எனினும் விராட் கோஹ்லி ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ரிஷப் பண்ட், ரகானே என முன்னணி வீரர்கள் வெளியேறியதால், இந்திய அணி 86- ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த அக்சர் படேலும் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதையடுத்து 7-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய அஸ்வின், விராட் கோஹ்லி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக அஸ்வின் துரிதமாக ஓட்டங்களை சேர்த்தார்.

விராட் கோஹ்லி, அஸ்வின் ஆகிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர். கேப்டன் விராட் கோஹ்லி 62 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குல்தீப் யாதவ் 3 ரன்னும், இஷாந்த் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்ததாக அஸ்வினுடன், சிராஜ் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஸ்வின் 134 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இது அவருடைய 5-வது டெஸ்ட் சதமாகும். தொடர்ந்து ஆடிய அஸ்வின் 106 (148 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் முகமது சிராஜ் 16 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் இந்திய அணி 85.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. இதன்படி இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 481 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியின் சார்பில் மொயின் அலி மற்றும் ஜாக் லேஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், ஸ்டோன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்படி இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொறியில் சிக்கிய சிறுத்தை தப்பியோட்டம் – அச்சத்தில் மக்கள்

பொகவந்தலாவ , சீனாகொலை (செப்பல்ட்டன்) தோட்ட எல்லை பகுதியில் இன்று (15.02.2021)  பொறியில் சிக்குண்ட சிறுத்தை ஒன்று கம்பிகளை அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளமையினால் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் பதற்ற நிலை காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்டத்தில் சீனாகொலை எல்லையில் இன்று காலை தேயிலை கொழுந்து பறிப்பதற்காக சென்ற தொழிலாளர்கள் சிறுத்தை சீறும் சத்தத்தினை கேட்டு அப்பகுதியில் பார்த்த போது ஐந்து அடி நீளமான சிறுத்தைப்புலி ஒன்று பொறியில் சிக்குண்டு தவிப்பதனை கண்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து தொழிலாளர்கள் கூச்சலிட்டு ஓடி பொலிஸாருக்கு தெரிவித்ததனையடுத்து பொலிஸார் நல்லதண்ணீர் வன ஜீவராசி திணைக்களத்திற்கு தெரிவித்துள்ளனர்.

எனினும் வனஜீவராசிகள் அதிகாரிகள் வருவதற்கு முன் குறித்த சிறுத்தைப்புலி கம்பியினை அறுத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு ஓடியுள்ளது .

இதனால் இந்த சிறுத்தைப்புலி மீண்டும் வந்து மக்களை தாக்கலாம் என பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக அப்பகுதியில் உள்ள நாய்களை சிறுத்தைப்புலிகள் கொண்டு சென்று தின்றுவிடுவதாகவும் தேயிலை மலைகளில் சிறுத்தைப்புலிகளின் நடமாற்றம் காணப்படுவதாகவும் இது குறித்து உரிய அதிகாரிகளிடம் அறிவித்த போதிலும் இதுவரை பாதுகாப்பான நடவடிக்கைகள் எதுவம் பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தாங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தங்களுடைய தொழில் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது குறித்து உரியவர்கள் உரிய கவனமெடுத்து நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

க.கிசாந்தன்

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

மலையக மக்கள்மீதான வன்முறை குறித்து 19 ஆம் திகதி முத்தரப்பு சந்திப்பு!

0
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள்மீது, நிர்வாக தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்

0
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது. இது, இந்தப் பணியின் இரண்டாவது கட்டத்தில், அதன் ஏழாவது துறைமுகப் பயணமாகும். இது கடலில் மேற்கொள்ளப்படும் ஒரு தனித்துவமான அனைத்துலக...

நில உரிமைக்காக ஒன்றிணையும் தமிழ் பேசும் சமூகங்கள்: கொட்டக்கலையில் முக்கிய தீர்மானம்!

0
கிழக்கு மாகாண காணி வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொட்டக்கலை சுயசக்தி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்,...