Home Blog Page 3621

சுகாதார அமைச்சர் உட்பட 1,018 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் ஆயிரத்து 18 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 429  ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 596 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சுகாதார அமைச்சர், பூரணமாக குணமடைந்து இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.

பொத்துவில்-பொலிகண்டி பேரணி குறித்து மனோ வழங்கிய வாக்குமூலம் இதோ!

“என்னிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸ் அதிகாரிகளிடம், “சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்தாசையுடன், நீங்கள் நீதிமன்றகளுக்கு தவறான தகவல்களை தந்து, மரியாதைக்குரிய நீதிமன்றங்களை தவறாக வழி நடத்தி, அரசாங்கத்துக்கு தேவையான தடையுத்தரவுகளை, அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைய வாங்குகிறீர்கள் என்று பொலிஸ் மீது குற்றம்சாட்டி வாக்குமூலம் அளித்தேன்.”

இவ்வாறு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

மாங்குளம் பொலிஸ், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் AR154/21 என்ற இலக்கத்தின் கீழ் பெற்றதாக கூறப்படும் தடையுத்தரவை நான் பெப்.6 ஆம் திகதி மீறினேன் என்பதே குற்றச்சாட்டு.

மாங்குளம் பொலிஸ் அறிவித்து, கொகுவளை நிலைய அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து வீட்டுக்கு வந்து வாக்குமூலத்தை பெறும்படி நான் கூறியிருந்தேன்.

எட்டு (08) விஷயங்களை உள்ளடக்கி, எழுத்து மூலமாக ஆங்கில மொழியில், இலங்கை பொலிசை சேர்ந்த பிரதம ஆய்வாளர் பரணகம, கான்ஸ்டபிள் நிஷங்க ஆகியோருக்கு நான் வழங்கிய வாக்குமூலத்தின் விபரங்கள் பின்வருமாறு:

(1) எனக்கு ஒருபோதும் எந்தவித தடை உத்தரவும் நேரடியாக ஒருபோதும் வழங்கப்படவில்லை.

(2) அப்படியான ஒரு உத்தரவு ஒலிபரப்ப பட்டிருந்தாலும், பேரணியின் போது இரைச்சல் காரணமாக, நான் அதை செவிமடுத்திருக்கவில்லை.

(3) எவ்வாறாயினும் நான் கோவிட்19 சுகாதார வழிமுறைகளை எனக்காகவும், பிறருக்காகவும் எப்போதும் கடைபிடித்து வருகிறேன்.

(4) இத்தகைய ஆர்ப்பாட்டங்களை, பேரணிகளை, ஊர்வலங்களை, கூட்டங்களை நான், கொழும்பு மாநகரின் பொது இடங்களில், சாலைகளில், நாட்டின் ஏனைய இடங்களில் தினசரி காண்கிறேன். அன்றும், அதற்கு முன்னும், பின்னும் இன்றும், இப்போதும் இவை நடைபெறுகின்றன. ஆகவே ஒரே மாதிரியான சம்பவங்களுக்கு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு சட்டங்கள் இந்நாட்டில் இருக்கின்றன என நம்புவதற்கு எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை.

(5) நான் ஒரு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். கட்சி தலைவர். கூட்டணி தலைவர். சமீபத்தைய முன்னாள் அமைச்சரவை அமைச்சர். நான் சட்டம், ஒழுங்கை மதிப்பவன். நீதிமன்றங்களை மதிப்பவன். ஆனாலும், இப்போது சட்டமாஅதிபர் திணைக்களத்தின் ஒத்தாசையுடன், மரியாதைக்குரிய நீதிமன்றகளுக்கு தவறான தகவல்களை தந்து, அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைய தடையுத்தரவுகளை இலங்கை பொலிஸ் வாங்குகின்றது என நான் கவலை, சந்தேகம் கொள்கிறேன்.

(6) மேற்கண்ட எதிர்ப்பு பேரணி, அரசாங்கத்தை எதிர்த்து நடத்தபட்டதே தவிர, அது நாட்டை எதிர்த்து நடைபெறவில்லை. அரசாங்கம் என்பதற்கும், நாடு என்பதற்கு இடைப்பட்ட வேறுபாடு பற்றிய அரசியல் அறிவு எனக்கு தெளிவாக இருக்கின்றது. ஆகவே இந்த அரசாங்க எதிர்ப்பு பேரணியிலிருந்து பின்வாங்க எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை.

(7) மேற்கண்ட எதிர்ப்பு பேரணி, எமது நாட்டின் அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டதால், இந்த அரசாங்க எதிர்ப்பு பேரணியிலிருந்து பின்வாங்க எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை.

(8) மேற்கண்ட எதிர்ப்பு பேரணி, பல்லின, பன்மத, பன்மொழி நாடான இலங்கை மக்களின் பொதுவான, தமிழ் பேசும் மக்களின் குறிப்பான ஜனநாயக எதிர்பார்ப்புகளான, நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணாமல் போனோர் பிரச்சினை, ஜனாசா நல்லடக்க பிரச்சினை, தோட்ட தொழிலாளர்களின் வேதன பிரச்சினை, தமிழ் பெளத்த, இந்து புராதன சின்னங்கள் தொடர்பிலான அகழ்வாராய்ச்சி திணைக்கள பிரச்சினை ஆகியவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்ததால், இந்த அரசாங்க எதிர்ப்பு பேரணியிலிருந்து பின்வாங்க எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை

ஹட்டனில் ஆசிரியைக்கு கொரோனா – மூடப்பட்டது பாடசாலை!

ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பாடசாலை இன்று முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாடசாலை முழுவதும் தொற்றுநீக்கி தெளித்து, தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காகவே பாடசாலை இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியைக்கும் அவரின் காதலருக்கும் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். இங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர் அண்மையில் பாடசாலைக்கும் சென்றுள்ளார். தரம் 6 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.இப்பாடசாலையில் சுமார் ஆயிரம் மாணவர்கள்வரை கல்வி கற்கின்றனர். அதிபர் உட்பட 40 ஆசிரியர்களும் இருக்கின்றனர்.

க.கிசாந்தன்

திகாவின் அதிரடியால் ஓட்டமெடுக்கும் திலகரின் சகாக்கள்!

தொழிலாளர் தேசிய முன்னணியிலிருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகரை நீக்குவதற்கு திகாம்பரம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், தொழிலார் தேசிய சங்கத்திலுள்ள திலகர் அணி உறுப்பினர்கள் தாமாகவே வெளியேறி வருகின்றனர்.
 
திலகர் அணி உறுப்பினர்களை திகாம்பரம் களையெடுத்துவிடுவார் என்ற அச்சத்தாலேயே அவர்களாகவே வெளியேறிவருகின்றனர். இதன்படி தொழிலாளர் தேசிய முன்னணியில் இருந்து விலகும் அறிவிப்பை மஸ்கெலிய பிரதேச சபை உறுப்பினர் சுரேஷ் குமார் விடுத்துள்ளார்.
 
அத்துடன், திகாவை கடுமையாக விமர்சித்தும், திலகரை தனது அரசியல் ஆசான் என விளித்தும் அவர் விரிவானதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஏனைய சில உறுப்பினர்களும் வெளியேறும் முடிவை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
 
 

2,150 கிலோ கழிவு தேயிலை தூளுடன் கம்பளையில் ஒருவர் கைது!

2 ஆயிரத்து 150 கிலோ கழிவு தேயிலை தூளை ஏற்றிச்சென்ற லொறியை சுற்றிவளைத்த கம்பளை, வெலம்பொட பொலிஸார், சாரதியை கைது செய்ததுடன், லொறியையும் கைப்பற்றினர்.

தவுலகலயில் இருந்து வெலம்பொட பகுதிக்கு கழிவு தேயிலை தூள்களை ஏற்றிச்சென்ற லொறியே பிலப்பிட்டிய பகுதியிலை வைத்து இவ்வாறு மடக்கிப்பிடிக்கப்பட்டது.

வெலம்பொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த சுதசிங்கவின் வழிகாட்டலுடன் உப பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள சேனாரத்தின, பொலிஸ் உத்தியோகத்தர்களான பண்டார ( 47242 ), திலங்காவல (60415 ) ஆகியோரே, கழிவு தேயிலைத் தூள் கடத்தலை முறியடித்துள்ளனர்.

லொறியின் சாரதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவால் கம்பளையில் ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கம்பளை, கீரப்பனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஆணொருவர் நேற்று (15) உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக அவர் கடந்த 8 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

‘பாரதிய ஜனதாக்கட்சி இலங்கையில் காலூன்றுமா’ – இலங்கை வழங்கியுள்ள பதில்

” இந்தியாவின் பாரதிய ஜனதாக்கட்சி, இலங்கையிலும் நிறுவப்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அமித்ஷா கூறினார் என்றே தகவல் வெளியிடப்பட்டுள்ளது.அவர் கூறினார் என்பதற்கான உரிய ஆதாரம் இல்லை. எனவே, கட்டுக்கதைகளுக்கு பதிலளிக்கவேண்டிய தேவை இல்லை. உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானால் அதற்கு உரியவகையில் பதில் வழங்கப்படும்.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான உதயகம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” அமித்ஷா கூறினார் என்றே மாநில முதல்வர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அமித்ஷா அவ்வாறு கூறினாரா என்பதற்கான உரிய ஆதாரம் இல்லை. இல்லாத ஒரு விடயத்துக்கு அரசின் பதிலை வழங்கமுடியாது.   அத்துடன், வெளிநாட்டு கட்சிகளின் கிளையை எமது நாட்டில் நிறுவமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாவலப்பிட்டியவில் ஆட்டோ விபத்து – ஒருவர் பலி! மற்றுமொருவர் படுகாயம்!!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நாவலப்பிட்டிய ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த ஆட்டோ நேற்று மாலை ஹரங்கல – கொத்மலை நீர்தேக்க பிரதான வீதியில் ரத்மிலபிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆட்டோ ஓட்டுநருக்கு ஆட்டோவின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹரங்கல பகுதியை சேர்ந்த ஆர்.எம்.புத்திக்க (வயது – 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுங்காயமடைந்த மற்றவர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

P2P பேரணியில் பங்கேற்ற மனோவை குறிவைத்தது பொலிஸ்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டு, சட்டத்தை மீறியுள்ள குற்றச்சாட்டின்பேரில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம், பொலிஸார் வாக்குமூலம் பெற தயாராகிவருகின்றனர்.

இது தொடர்பில் மனோக கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு,

“#P2P – பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டு “சட்டத்தை மீறினேன்” என்ற குற்றச்சாட்டின் பேரில் எனது வாக்குமூலத்தை பெறவேண்டும் என ஸ்ரீலங்கா பொலிஸ் (எனது காவலர் மூலமாக) எனக்கு அறிவித்துள்ளது.

“வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெறுங்கள். நேரம் தருகிறேன்.” என்று கூறியுள்ளேன்.” – என்றுள்ளது.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

மலையக மக்கள்மீதான வன்முறை குறித்து 19 ஆம் திகதி முத்தரப்பு சந்திப்பு!

0
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள்மீது, நிர்வாக தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்

0
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது. இது, இந்தப் பணியின் இரண்டாவது கட்டத்தில், அதன் ஏழாவது துறைமுகப் பயணமாகும். இது கடலில் மேற்கொள்ளப்படும் ஒரு தனித்துவமான அனைத்துலக...

நில உரிமைக்காக ஒன்றிணையும் தமிழ் பேசும் சமூகங்கள்: கொட்டக்கலையில் முக்கிய தீர்மானம்!

0
கிழக்கு மாகாண காணி வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொட்டக்கலை சுயசக்தி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்,...