Home Blog Page 3623

க.பொ.த சாதாரண தர பரீட்சை மாணவர்கள் குறித்த முக்கிய அறிவித்தல்

இம்முறை (மார்ச் 01) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பெப்ரவரி 17 முதல் கற்கை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெப்ரவரி 23 நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய கொவிட் 19 நெருக்கடியினால் பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளையும் இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

#GCEOL #LKA #SL

கொரோனாவால் அக்கரப்பத்தனையில் ஒருவர் உயிரிழப்பு – வைத்தியசாலையும் மூடப்பட்டது!

கொரோனா வைரஸ் தொற்றால் நுவரெலியா மாவட்டத்திலுள்ள, அக்கரப்பத்தனை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கடும் காய்ச்சல் காரணமாக அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் இவர் கடந்த ஏழு நாட்களாக சிகிச்சைபெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் நேற்று நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன்படி நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அக்கரப்பத்தனை வைத்தியசாலையும் மூடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் இருந்தவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தி – நீலமேகம் பிரசாந்த்

2,500 கிலோ கழிவு தேயிலை தூளுடன் கொட்டகலையில் இருவர் கைது!

சுமார் 2,500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பொலிஸ் விசேட அதரடிபடையினரால் இவர்கள் 15.02.2021 இன்று மதியம் 12 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கழிவு தேயிலை தூளை அனுமதி பத்திரம் இல்லாமல் கொட்டகலை பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு கொண்டு செல்லும் போது விசேட அதரடிபடையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்பின் கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், வாகனத்தையும், சந்தேக நபர்களையும் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக விசேட அதிரடிபடையினர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

‘பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும்’

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை  முதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது என்று பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை காலை 8.30 மணி முதல் 12 மணிவரை இராணுவ வைத்தியசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ட்ரா செனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்படுவுள்ளன.

17,18,19 ஆம் திகதிகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளன.

‘கூட்டு ஒப்பந்தத்திலிருந்து சம்பள விடயத்தை பிரிக்க இடமளிக்ககூடாது’ – செங்கொடிச் சங்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் என்ற விடயத்தை கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து பிரித்து எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்று இலங்கை தொழிலாளர் செங்கொடிச் சங்கம் தெரிவித்தது.

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் ​போதே சங்கத்தின் ஆலோசகர் மேனகா கந்தசாமி இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இன்று கூட்டு ஒப்பத்தில் ​தொழிலாளர்களின் சம்பளம் என்ற விடயத்தை பிரித்து எடுத்து சம்பள நிர்ணய சபைக்கு மாற்றும் முயற்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. சம்பள நிர்ணய சபைக்கூடாக 1000 ரூபா சம்பளத்தை தீர்மானித்து வழங்கினாலும் கூட்டு ஒப்பந்தமும் தற்போது தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உள்ளடக்கியதாக கைச்சாத்திடப்பட வேண்டும்.

ஏனெனில் சம்பளம் தவிர்ந்த ஏனைய பல விடயங்கள் கூட்டு உப்பந்த்தில் உள்ளன என்பதை நாம் மறக்கக் கூடாது. எனவே தொழிலாளர்களின் உரிமையை கட்சி அரசியல் மயப்படுத்தாது விடயத்தை தொழில் உரிமை என்ற ரீதியில் நாம் பார்க்க வேண்டும்.

இந்த நாட்டின் அபிவிருத்திக்கு முதுகெழும்பாக இருக்கின்ற தோட்டத்தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்துவதை நிறுத்த வேண்டும். அதேநேரம் தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் போதெல்லாம் ஒருயுத்தமே நடக்கின்றது.

இது ஒரு வருடமோ இரண்டு வருடமோ அல்ல பல வருடங்களாக இடம்பெறும் ஒன்றாகும். இன்றைய வாழ்க்கைச் செலவு அடிப்படையில் பார்க்கும் போது 1000 ரூபா என்பது மிகச் சொற்பமான ஒரு தொகையாகும். ஒவ்வொறு முறையும் கம்பணிகள் இழுத்தடிப்பது ஏன்? தொழில் வழங்குர்கள் திட்மிட்ட அடிப்படையில் தொழிலாளர்கள் உரிமைகளை மீறுகின்றனர் என்பதையே இது காட்டுகின்றது.

மறு புறமாக தொழிலாளர் உரிமைகளை கட்சி அரசியலில் தவிக்கவிட முயற்சிக்கிறது. தொழிலாளர்களது உரிமைகள் மீறப்படுவதை தடுக்க கம்பனிகள் முயற்சிப்பதில்லை. உரிமை மீறல்களுக்கு அரசு துணைபோகாது அதனை தடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

மேலே சொன்ன பல்வேறு விடயங்களை கவனத்திற்கொண்டு இரண்டு பிரதான கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறோம். முதலாவதாக தொழிலாளர் அடிப்படை சம்பளம் 1000 ஆக இருப்பதுடன் அது உடனடியாகவும் முறையானவும் வழங்க வேண்டும்.

அடுத்ததாக தோட்டங்களை காடாக்கி கைவிடும் நிலையை உருவாக்குதல், தோட்டங்களை துண்டாடி விற்றல் போன்றவற்றைக் கைவிடுவதுடன் வேலைத்தளங்களில் தொழிலாளர்களுக்கான அடிப்படைத் தேவைகளான நீர் வசதியுடனான கழிவறை வசதிகள் போன்றன செய்துகொடுத்தல், உணவு சாப்பிட பிரத்தியேக இடம் அமைத்தல், முதலியவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் இன்று அறிமுகப்படுத்தப்பட்டு வரும் முறைசாரா முறைகளுக்கான தீர்வு என்பன கூட்டு ஒப்பந்த்தில் உள்ளடக்கப்பட வேண்டும். என்றார்.

சினிமாப்பாணியில் அடிதடி! அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்!!

உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கோஷ்டி மோதலாகி, வீடொன்றும், வாகனங்கள் மூன்றும், மோட்டார்சைக்கிள் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் 14-02-2021ல் (இரவு12மணி) நடுநிசியில்  இடம்பெற்றுள்ளது.

ஹாலி-எலைப்பகுதியின் அட்டாம்பிட்டிய பெருந்தோட்டத்தின் இரண்டாம் பிரிவில், மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படுமோசமாக இத்தாக்குதல்கள் இடம்பெற்றமையினால், மேற்படி பெருந்தோட்ட மக்கள் பலரும், தேயிலை மலையில் ஆங்காங்கே மறைந்திருந்தனர்.
மேற்படி இருதரப்பினரில் ஒருதரப்பினர் அரசதுறையிலும் இருவர் தொழில் செய்தும், மறுதரப்பில் அரசியல்வாதியாக ஒருவரும் இருந்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அட்டாம்பிட்டிய பொலிசார் மேற்படி சம்பவம் குறித்து தீவிரபுலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறிப்பிட்ட இருதரப்பினருக்கும், ஏற்பட்ட இழப்பீடுகளை சீர்செய்துகொள்ளவும், சமாதானமாக போவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.செல்வராஜா பதுளை

காலியில் வீடமைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் காலி வலஹன்தூவ தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு கருத்திட்டத்தின் கீழ் தனி வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை இடம்பெற்றது.
 
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரண, இந்திய தூதரக அதிகாரிகள், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரன், காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பத் அத்துக்கொரால, இசுரு தொடாங்கொட மற்றும் அமைச்சின் செயலாளர் டி.பி.ஜி. குமாரசிரி ஆகியோருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சத்திவேல் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
அதேவேளை, மறைந்த அமைச்சர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் கடைசியாக அமைச்சு பதவி வகித்த காலத்தில் 50 வீடுகளை அமைப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

‘திகா – திலகர் அரசியல் போர் உக்கிரம்’ – கட்சியை கலைக்குமாறு கோரிக்கை முன்வைப்பு!

பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி என்ற அரசியல் கட்சியை கலைக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் நீக்குவதற்கு அந்த முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் முன்னணியில் உள்ள முன்னாள் எம்.பி. திலகராஜிற்கு அறிவித்துள்ளதாகவும், இதனை அறிந்துகொண்ட அவர், அரசியல் கட்சியைக் கலைப்பதற்கான கோரிக்கையை தேர்தல் ஆணைக்குழுவில் முன்வைத்துள்ளதாகவும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், முன்னணியின் பொதுச் செயலாளரின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையாளரிடமிருந்தும் இதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

முன்னணியின் செயற்குழுவைக்கூட்டி, பொதுச் செயலாளரை பதவி விலக்குவதற்கான கட்சித் தலைவர் திகாம்பரத்தின் திட்டத்தை, திகராஜின் உள்ளே உள்ள சகாக்கள் அம்பலப்படுத்திய நிலையில், இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அந்த உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு திகராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அவர் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வந்தார். தேசியப் பட்டியலில் திலகரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் வழங்கப்படவில்லை.

இதனால் கடும் அதிருப்தியில் இருந்துவந்த திலகர், தொழிலாளர் முன்னணியின் உறுப்பினர்கள் பலரையும் இணைத்துக் கொண்டு, புதிய கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், தேர்தல் ஆணையாளரிடம்  தொழிலாளர் தேசிய முன்னணியைக் கலைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அறிந்துகொள்வதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும், அந்த முயற்சி இந்த செய்தியைப் பிரசுரிக்கும் வரை வெற்றியளிக்கவில்லை.

‘கொரோனா’ அபாய வலயத்தில் வசிப்பவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி!

மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியேற்றும் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.
 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த செயற்பாடுகள் இன்று  திங்கட்கிழமை  முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
 
பாதிக்கப்படக்கூடியவர்கள், அதிக ஆபத்துள்ள குழுக்கள் மற்றும் பொதுமக்களுடன் நெருக்கமாக பழகும் நபர்களை குறிவைத்து 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

‘இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வேண்டாம்’ – கம்மன்பிலவின் கட்சி யோசனை முன்வைப்பு!

ஒற்றையாட்சியை பலவீனப்படுத்தக்கூடிய எந்தவொரு சரத்தும் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படக்கூடாது என்று அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய யோசனை முன்வைத்துள்ளது.

புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமையவேண்டும் என குறிப்பிட்டு நிபுணர் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தமது கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்து அமைச்சர் உதய கம்மன்பில விளக்கமளித்தார். இதன்போது அவர் கூறியவை வருமாறு,

“ நாட்டின் தற்போதைய பெயர் ‘இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு’ என்றுள்ளது . ஜனநாயகம், சோசலிசம் என்பன சொல்லளவில் அல்லாமல் செயலில் இருக்கவேண்டும். எனவே, நாட்டின் பெயர் ‘இலங்கை குடியரசு’ என இருக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பூகோல ரீதியில் இலங்கையின் அமைவிடம் முக்கியம். நாட்டை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் 500 ஆண்டுகளுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே, ஒற்றையாட்சியை பலவீனப்படுத்தும் எந்தவொரு சரத்தும் உள்ளடக்கப்படக்கூடாது.

குறிப்பாக சிங்களத்தில் ஏக்கிய ராஜ்ய என்பது தமிழில் ‘ஒற்றையாட்சி’  எனவும், ஆங்கிலத்தில் ‘யுனிட்டரி’ எனவும் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சொல்லை தூக்கிப்பிடித்து சமஷ்டி முறைமையை வலியுறுத்துவதற்கு சிலர் முயற்சிக்ககூடும்.

பௌத்த மதம் இலங்கை அரச மதமாக வேண்டும்.

அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீடிக்கப்படவேண்டும்.  ஆனால் நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறவேண்டியவராக ஜனாதிபதி இருக்கவேண்டும். அரச பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைதவிர, ஜனாதிபதியால் எடுக்கப்படும் சர்ச்சைக்குரிய தீர்மானங்களை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் அவசியமில்லை. நாடாளுமன்றத் தேர்தலின்போதே கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவேண்டும். வெற்றிபெறும் கட்சியில் இருந்து ஜனாதிபதி பதவி வகிப்பார். அத்துடன், ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கான காலவரையறை நீக்கப்படவேண்டும்.

6  மாதங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும். அவ்விவாதத்தில் ஜனாதிபதி பதிலளித்து உரையாற்ற வேண்டும். அதேபோல ஜனாதிபதி நடவடிக்கை தொடர்பில் பிரதியமைச்சு பதவியொன்றும் உருவாக்கப்படவேண்டும்.

நாட்டில் நடைமுறையில் உள்ள தனியார் மற்றும் பிரதேச சட்டங்கள் நீக்கப்பட்டு, ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற முறை அமுலுக்கு வரவேண்டும். இரட்டை பிரஜை உரிமை கொண்டுள்ளவர்கள் அரசு மற்றும்  அரச நிறுவனங்களில் உயர்பதவிகள் வகிப்பது தடைசெய்யப்படவேண்டும்.” – என்றார்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்

0
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது. இது, இந்தப் பணியின் இரண்டாவது கட்டத்தில், அதன் ஏழாவது துறைமுகப் பயணமாகும். இது கடலில் மேற்கொள்ளப்படும் ஒரு தனித்துவமான அனைத்துலக...

நில உரிமைக்காக ஒன்றிணையும் தமிழ் பேசும் சமூகங்கள்: கொட்டக்கலையில் முக்கிய தீர்மானம்!

0
கிழக்கு மாகாண காணி வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொட்டக்கலை சுயசக்தி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்,...

மட்டுக்கலையில் விபத்து!

0
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், லிந்துலை மட்டுக்கலை சந்திக்கு அருகில் இன்று பிற்பகல் காரொன்று விபத்துக்குள்ளானது. தலவாக்கலையில் இருந்து நுவரெலியா நோக்கிசென்ற கார் ஒன்றின் குறுக்கே திடீரென ஒரு நாய் பாய்ந்தபோது, அதனைப்...