Home Blog Page 3624

முதல்நாள் பாடசாலை சென்ற மாணவனின் உயிரை பறித்த லொறி – பதுளையில் சோகம்!

பாடசாலையில் தரம் ஒன்றில் அனுமதிக்கப்படுவதற்கு தனது பாட்டியுடன் சென்ற ஆறு வயது நிரம்பிய மாணவன், அவ்வழியில்வந்த லொறியில் மோதி, பலியான பெருந்துயர் சம்பவமொன்று, (இன்று) 15-02-2021 காலை 8.00 மணியளவில் பதுளையில் இடம்பெற்றுள்ளது.

இச்சிறுவன் பதுளை அரசின் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றதும், சிறுவன் உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பதுளை – சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயத்திற்கு செல்லும் பதுளை தேவாலய வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளை அசேல புரையைச்சேர்ந்த சிவனேசன் வருண் பிரதீஸ் என்ற ஆறு வயது நிரம்பிய சிறுவனே, விபத்தில் பலியானவராவார்.

பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயத்தில் ஆண்டுஒன்றில் அனுமதிப்பதற்கு, அச்சிறுவனின் பாட்டி, தனது பேரனை கூட்டிச்சென்றுள்ளார். மேற்படி வித்தியாலயத்தை அண்மித்தவேளையில் எதிர்த்திசையில் வேகமாகவந்த லொரிபாட்டியையும், சிறுவனையும் மோதித்தள்ளிச்சென்றது.

இவ்விபத்தில் சிறுவன்ஸ்தலத்திலேயே பலியானதுடன், பாட்டி படு காயமுற்ற நிலையில், பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து குறித்து, பதுளை பொலிசார் ஸ்தலவிசாரணைகளை மேற்கொண்டதுடன், லொறி சாரதியை கைதுசெய்து, பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்தபோது, நீதிபதி அவரை விளக்கமறியலில்வைக்க உத்தரவிட்டார்.

எம். செல்வராஜா, பதுளை

நுவரெலியாவில் நேற்று மாத்திரம் 38 பேருக்கு கொரோனா தொற்று!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 38 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கினிகத்தேனை பகுதியில் 10 பேருக்கும், ஹங்குராங்கெத்த பகுதியில் இருவருக்கும், ஹட்டன் பகுதியில் 18 பேருக்கும், ரொசல்ல பகுதியில் இருவருக்கும், பிடவல பகுதியில் நால்வருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கடந்துள்ள 14 நாட்களில் நுவரெலியா மாவட்டத்தல் 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

‘கொரோனா’வால் 14 நாட்களில் 74 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸால் நாட்டில் கடந்துள்ள 14 நாட்களில் மாத்திரம் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 384 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா முதலாவது அலையின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர்.இதன்படி கொரோனாவால் இதுவரை மொத்தமாக 397 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘அரசியிலிருந்து வெளியேறு’ – விமல்மீது நிமல் லான்சா மீண்டும் தாக்குதல்

அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு எதிரணியின் வேலையை செய்ய முடியாது. எனவே, அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிரணியில் அமர்ந்து அதற்கான பணியை முன்னெடுக்கலாம் – என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விமல்வீரவன்சவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தை எதிர்ப்பதற்கு அமைச்சரவை , ஆளுங்கட்சி கூட்டங்கள் இருக்கின்றன. அவற்றைவிடுத்து வெளியில் வந்து விமர்சிப்பதை ஏற்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு செய்வதானால் அரசாங்கத்திலிருந்து வெளியேறி, எதிரணியில் அமர்ந்து செயற்படுவதே சிறப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கை இன்று அமைச்சரவையில் முன்வைப்பு

21/4 தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போதே ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்படும் என தெரியவருகின்றது.

இக்குழுவானது தனது இறுதி விசாரணை அறிக்கையை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்தது. அதேவேளை, குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

‘இலங்கைத் தமிழர்களின் நலன்கள் குறித்து இந்தியா தொடர்ந்தும் அக்கறை’

இலங்கைத் தமிழர்கள் சம உரிமை, மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சென்னையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்போம் என உறுதி அளிக்கிறேன். இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இலங்கை சிறைகளில் இப்போது ஒரு இந்திய மீனவர்கூடஇல்லை. மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் இதுவரை 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தியாவின் கடலோர பகுதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

இலங்கை தமிழர்களின் நலனை மத்திய அரசு உறுதி செய்துவருகிறது. இலங்கை தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சனையை இலங்கை அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம்.  இலங்கைத் தமிழர்கள் சம உரிமை, மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.

நாட்டை முடக்குவது குறித்து இன்னும் முடிவு இல்லை!

நாட்டை முடக்குவதாக வதந்திகள் பரவுகின்றதாகவும் இதுவரை அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய தகுந்த நடவடிக்கைகள், சுகாதார தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

‘கொரோனா’வால் முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் முன்னாள் சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார இன்று உயிரிழந்தார். (வயது -81)
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளார்.

‘இலங்கையின் 2ஆவது உயரமான நீர்வீழ்ச்சியின் சூழலை பாதுகாப்போம்’

இலங்கையில் சுற்றாடலை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இலங்கை அரசினால் கடந்த காலம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்தும் நமது நாட்டுக்கு வருகின்ற உல்லாச பயணிகள் விரும்ப கூடிய சுற்றுலா மையங்கள் பல நமது நாட்டில் காணப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கையில் காணப்படுகின்ற நீர்வீழ்ச்சிகளுக்கு தனி ஒரு பெருமை உள்ளது. அனைவரும் விரும்பக்கூடிய பல நீர்வீழ்ச்சிகள் இலங்கையில் ஈரவலப் பிரதேசங்களான மலையக பிரதேசத்தை உள்ளடக்கியே இவைகள் காணப்படுகின்றன.

இதன் அடிப்படையில் ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் காணப்படுகின்ற நீர்வீழ்ச்சிகள் உலக வரைபடத்திலும் கூட சிறந்து விளங்குகின்றது. அதி உயரமான நீர்வீழச்சிகளை இலங்கையில் பார்ப்போமேயென்றால் அதிக முக்கிய பங்கை ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டமும் கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.

பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை கொஸ்லந்தை பிரதேச சபைக்குட்பட்ட கொஸ்லந்தை வெல்லவாய பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள தியலும நீர்வீழ்ச்சி இலங்கையின் இரண்டாவது அதி உயரம் கொண்ட நீர்வீழ்ச்சி என யாவரும் அறிந்த விடயம்.

இந்த நீர்வீழ்ச்சியானது 722 அடி உயரமான நீர்வீழ்ச்சியாகும். இந்த நீர்வீழ்ச்சியினை பார்வையிடுவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச பயணிகள் அதிகமாக வந்து செல்வது ஒரு சிறப்பம்சமான விடயமாகும்.

பண்டாரவளை பூனாகலை பிரதேசத்திலிருந்து பெருக்கெடுத்து வரும் ஆற்றின் நீர் தியலும நீர்வீழ்ச்சியின் ஊடாக வழிந்தோடுகின்றது. வற்றாத நீர்வீழ்ச்சியாக பெருமைக்கொண்டுள்ளது இந்த தியலும நீர்வீழ்ச்சி.

ஈரவலப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியை பலரும் பிரதான வீதியிலிருந்தே கண்டு இரசிக்கின்றனர். ஆனால் இந்த நீர்வீழ்ச்சியின் உயர பகுதியில் சிறப்பு மிக்க அம்சங்களை காணமுடியும் என்பது பலரால் உணரப்பட்டுள்ளது.

ஆகையால் இந்த நீர்வீழ்ச்சியின் உயரப்பகுதிக்கு உள்நாட்டவர்களும், வெளிநாட்டவர்களும் செல்வது இன்றைய காலக்கட்டத்தில் அதிகமாக காணப்படுகின்றது. அங்கே உயரத்திலிருந்து வேறு பிரதேசங்களை அவதானிக்க கூடிய இரம்மியமான காட்சிகளை காணக்கூடிய பல சந்தர்ப்பங்கள் உண்டு.

கொஸ்லந்தை பிரதேச சபையின் ஊடாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த தியலும நீர்வீழச்சியின் உச்சபகுதி அசுத்தமான சூழ்நிலை கொண்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு பிரதான காரணம் அங்கே நீர்வீழ்ச்சியின் உச்சத்திற்கு செல்வோர் சூழலை மாசடையும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் காணப்படுவதாக கண்டறியப்படுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் சூழலுக்கு பங்கம் விளைவிக்காது பராமரிப்பதாகவும், உள்நாட்டு பயணிகள் சூழலை மாசுப்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இந்த நீர்வீழ்ச்சியின் உச்சப்பகுதியில் சமைத்து உணவு உண்கின்றார்கள், ஆனால் சமைக்கும் பொருட்களையும் அங்கு இடப்படுகின்ற கற்களலான அடுப்புகளையும் அகற்றுவதில்லை. அடிவாரத்திலிருந்து கொண்டு செல்லும் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்கின்றனர்

எஞ்சிய உணவுகளை வீசிவிடுகின்றனர். அதனால் துர்நாற்றங்கள் ஏற்படுகின்றது. அங்கு வளர்ந்துள்ள கற்றாளை செடிகளில் பெயர்களை பதித்து அச்செடிகளை நாசமாக்குகின்றனர்.

மது பாவித்து போத்தல்களை உடைத்து மாசப்படுத்துகின்றனர். அங்கு மரங்கள் வெட்டப்படுகின்றது. அதனூடாக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படுகின்றது. அக்கூடாரங்களில் சமூக விரோத செயற்பாடுகளை முன்னெடுகின்றனர். குறிப்பாக பெண்களை அழைத்து செல்வோர் அங்கு தேவையற்ற செயல்களில் ஈடுப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

ஆங்காங்கே அமைக்கப்படுகின்ற கூடாரங்கள் அகற்றப்படுவதில்லை. இதுபோன்ற விடயங்களால் அந்த நீர்வீழ்ச்சியின் உச்சபகுதி மாசுப்படும் அளவிற்கு மோசமான நிலையை கொண்டுள்ளது.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு இந்த விடயம் கொண்டு செல்லப்படும் நிலையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழும்பியுள்ளது. எனவே கொஸ்லந்தை பிரதேச சபை இது குறித்து கவனத்திற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபா பிரச்சினை மேலும் இழுபடும் அபாயம் – இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் எச்சரிக்கை

சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை தொழில் அமைச்சர் முன்னெடுக்க வேண்டும். அதனைவிடுத்து கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருப்பது சம்பள பிரச்சினையை மேலும் இழுத்தடிக்கும் செயலாகவே அமையும் – என்று அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

பண்டாரவளையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான முதலாவது கூட்டு ஒப்பந்தம் 1999 ஆம் ஆண்டிலேயே கைச்சாத்திடப்பட்டது. அப்போது அடிப்படை சம்பளமாக 101 ரூபா வழங்கப்பட்டது. அதன்பின்னர் அடுத்த உடன்படிக்கை 2002 இல் கைச்சாத்திடப்பட்டது. அதன்போது நாட் சம்பளமாக 121 ரூபா வழங்கப்பட்டது. ஆக இரு வருடங்களில் 20 ரூபா சம்பள உயர்வே பெற்றுக்கொடுக்கப்பட்டது. தூரநோக்கற்ற சிந்தனையே இதற்கு காரணம். கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள இவ்வாறான விடயங்கள்தான் இல்லாது செய்வேண்டும்.

கூட்டு ஒப்பந்தம் இன்னும் அமுலில் உள்ளது. அதனை தொழிலாளர்களுக்கு சாதகமான வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் தவறியுள்ளன.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கவேண்டும் என சம்பள நிர்ணயசபை தீர்மானம் எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தொழில் அமைச்சர் விடுக்கவேண்டும். அத்துடன், பாராளுமன்றத்தில் தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும்.

அதனைவிடுத்து கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பது சிக்கலாகவே அமையும். ஏனெனில் அரச இணக்கப்பாட்டுடனேயே பெருந்தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன . அவற்றை திடீரென கையகப்படுத்தினால் கம்பனிகள் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடக்கூடும். அது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெறுகின்றது. அவ்வாறு நடைபெற்றால் அது சம்பள பிரச்சினையை மேலும் இழுத்தடிக்கும் அபாயம் உள்ளது.” – என்றார்

க.கிசாந்தன்

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

நில உரிமைக்காக ஒன்றிணையும் தமிழ் பேசும் சமூகங்கள்: கொட்டக்கலையில் முக்கிய தீர்மானம்!

0
கிழக்கு மாகாண காணி வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொட்டக்கலை சுயசக்தி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்,...

மட்டுக்கலையில் விபத்து!

0
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், லிந்துலை மட்டுக்கலை சந்திக்கு அருகில் இன்று பிற்பகல் காரொன்று விபத்துக்குள்ளானது. தலவாக்கலையில் இருந்து நுவரெலியா நோக்கிசென்ற கார் ஒன்றின் குறுக்கே திடீரென ஒரு நாய் பாய்ந்தபோது, அதனைப்...

25 மில்லியன் ரூபா செலவில் நன்னீர் இறால் அபிவிருத்தி!

0
இலங்கையின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக லாபகரமான வணிகத் துறையாக மாற்றியமைக்க, ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் புதிய புரட்சிகரமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு வரவு - செலவுத்...