“கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யமுடியும் என பிரதமர் குறிப்பிடவில்லை. சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்றே அவர் கூறினார்.” – என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன இன்று தெரிவித்தார்.
நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனாவிலிருந்து 66 ஆயிரத்து 211 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 124 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 375 பேர் உயிரிழந்துள்ளனர்.
2ஆவது அலைமூலம் இதுவரை 68 ஆயிரத்து 691 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
‘பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் அதிரடி தீர்மானம்’
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, எவ்வித நிபந்தனைகளும் இன்றி அவர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றது. இதன்போது சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சனால் மேற்படி பிரேரணை முன்வைக்கப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும், தொழில் அமைச்சுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் வருமாறு,
தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000/= வழங்கப்பட வேண்டும் என்கின்ற தீர்மானம் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்ட கோரிக்கையாகும் இதன் இன்றைய நாணயமாற்றுப் பெறுமதி 1430/= ஆகும்
குறிப்பாக தமது நாளாந்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நாளாந்தம் செய்து வருகின்ற தேயிலை கொழுந்து பிடுங்கும் தொழிலில் பாரிய பிரச்சினைகள் மற்றும் ஆபத்துக்கள் காணப்படுகின்றன குறிப்பாக குளவி கொட்டுதல், சிறுத்தை போன்ற விலங்குகளின் தாக்குதல் சம்பவங்கள்,அட்டை கடிகள், மற்றும் மலை ஏறுதல் போன்ற அச்சுறுத்தல்கள் இவ் வேலையில் காணப்படும் மிகப்பெரிய சவால்கழாகும்
அத்துடன் தேயிலை கம்பெனிகளின் முகாமை தொழிலாளர்களை மரியாதையுடன் நடாத்துவதில்லை. 1950ம் ஆண்டுகளில் இருந்ததைப் போன்று அடிமைத்துவ முகாமையும் தொழிலாளர்களது உரிமைகள் பேனப்படாததுமான கலாச்சரமே நிலவி வருகிறது.
ஆகவே எனது பிரேரணையிற்கான தீர்மானமாக
1) அடிப்படை சம்பளம்1000 ரூபா வழங்க வேண்டும்
2) மாதாந்த வேலை நாட்கள் குறைந்தது 24ஆவது இருக்கவேண்டும்
3)நாளாந்த சம்பளத்திற்கான தேயிலையின் நிறை அநியாயமாக அதிகரிக்கப்படக்கூடாது.
4) தொழிலாளர்கள் மரியாதையுடன் முகாமை செய்யப்பட வேண்டும்.
5) தொழிலாளர்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்களுக்கான இழப்பீடுகள் கொடுப்பனவுகள் மற்றும் போதியளவான விடுமுறைகளும் வழங்கப்பட வேண்டும்.
இவை போன்ற தொழிலாளர்களது உரிமைகளும் 1000/= நாளாந்த சம்பளமும் என்கின்ற விடையங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டு நீதியான ஒரு கூட்டு ஒப்பந்தம் இம்முறை நிறைவேற்றப்பட வேண்டும்.
‘ஜெனிவா சமரை எவ்வாறு எதிர்கொள்வது’ – மஹாசங்கத்தினருடன் பிரதமர் ஆலோசனை!
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்திப்பொன்று மஹாசங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே நேற்று (2021.02.10) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை மற்றும் அது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மதிப்புமிக்க மஹாசங்கத்தினரின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.
கொவிட்-19 தொற்று நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய உலக நாடுகளுக்கிடையே இலங்கை முன்னணியில் காணப்படுகின்ற நிலையில், எமது நாட்டை இழிவுபடுத்தும் நோக்கில் மிகவும் தவறான கருத்துக்களை உள்ளடக்கி மிக மோசடியான முறையில் இந்த மனித உரிமைகள் திணைக்கள அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாட்டின் வெற்றிக்கும், இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான 16 விடயங்களை உள்ளடக்கி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், இதுபோன்ற தீர்மானமிக்கதொரு தருணத்தில் மரியாதைக்குரிய மஹாசங்கத்தினரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்தை பெறுவதற்கு தீர்மானித்தமை குறித்து நான் முதலில் பிரதமர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற சூழ்நிலையில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிரான தீர்மானமொன்றை சமர்ப்பிப்பது பொருத்தமற்றது என்றும், அதற்கு பதிலாக எமது தரப்பு நீதியை எடுத்துரைக்கும் பிரதிவாத அறிக்கையொன்றை மாத்திரம் முன்வைக்க வேண்டும் என வணக்கத்திற்குரிய தேரர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நோக்கம் நாட்டை பிரிப்பதே என சுட்டிக்காட்டிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், மனிதாபிமான முறையின் கீழ் பயங்கரவாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது போர்க்குற்றம் என்று கூறுவது பாரிய குற்றமாகும் எனத் தெரிவித்தார்.
இத்தீர்மானத்திற்கு அமைவான நல்லிணக்கம் மிகவும் ஆபத்தானது என்றும், அத்தகைய உடன்பாடு இல்லாமல் பாராளுமன்றத்தில் தேசபற்று சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நேரம் ஒதுக்குவது பொருத்தமானது என்றும் அவர்கள் கூறினர்.
இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள பௌத்த நாடுகளுக்கு நமது தேரர்களின் ஊடாக சில தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், அதனூடாக நேர்மறையான பதிலை நாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர், மனிதாபிமான செயற்பாட்டின் மூலம் பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கைகளை கவனத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மங்கள சமரவீர அவர்கள் ஒப்புக் கொண்ட 30 (1) தீர்மானம் நாட்டில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தீர்மானத்தின் விளைவாக பொருளாதாரத் தடைகள், பயணத் தடை மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமை போன்ற பல விடயங்கள் தொடர்பில் சிக்கல் நிலை உருவாக்கக்கூடும் என்று தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள், அத்தீர்மானத்திற்கு எதிராக எமக்கு சார்பாக விளங்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும் எனவும் தெரிவித்தார்.
வழக்கு விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவது சாதாரண நடைமுறை என்ற போதிலும் இத்தீர்மானத்திற்கமைய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஒரு தீர்மானங்களை மேற்கொள்வது நியாயமில்லை எனவும், ஆனால் இந்த தீர்மானத்துடன் நீதி, சட்டம் மற்றும் நேர்மை ஆகின நெருங்கக்கூடவில்லை என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இதன்போது வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் கருத்து தெரிவிக்கையில், இந்த ஆபத்துக்கு குறிப்பிடத்தக்க அரு காரணிகள் பங்களிப்பு செலுத்துகின்றன. இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்காலை, இறுதியில் அமெரிக்காவின் தேவைகள் நிறைவேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இவ்விடயம் தொடர்பாக நமது நாடு சார்பாக கால அவகாசத்தை கோர வேண்டும் என அவர் தெரிவித்தார்.கால அவகாசத்திற்கு உடன்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள், எவ்வளவு விளக்கமளித்தாலும் மாறாத நிலைப்பாட்டிலுள்ள நாடுகளினாலேயே இலங்கைக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்தார்.
சில நாடுகளின் கொள்கைகள் மாறாது என்றும், எங்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை நாம் வெற்றி கொள்ள வேண்டும என்று அவர் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய நெதகமுவே விஜய மைத்திரி தேரர் கூறுகையில், இலங்கைக்கு வெளிநாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதுடன், தமிழ் புலம்பெயர்ந்தோரின் கருத்திற்கு செயல்படாத தூதரக சேவையை பலப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முடியும் என்றார்.
மதிப்பிற்குரிய மஹாசங்கத்தினரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்திற்கு நன்றி தெரிவித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், எவ்வாறான சவால்களுக்கு நாடு முகங்கொடுத்தாலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மஹாசங்கத்தினரின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதற்கேற்பவே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
குறித்த கலந்துரையாடலின் போது, வணக்கத்திற்குரிய திவியாகத யசஸ்ஸி தேரர், வணக்கத்திற்குரிய பலாங்கொட சோபித தேரர், வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், வணக்கத்திற்குரிய பேராசிரியர் கொள்ளுபிடியே மஹிந்த சங்கரக்கித தேரர், வணக்கத்திற்குரிய பேராசிரியர் இத்தா தெமளியே இந்தசார தேரர், வணக்கத்திற்குரி
’21/4 தாக்குதல் குறித்து விசாரணை அறிக்கையின் பிரதி வேண்டும்’ – ஜனாதிபதியிடம் பேராயர் கோரிக்கை
“21/4 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள இறுதி விசாரணை அறிக்கையின் பிரதியொன்றை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.”
இவ்வாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், குறித்த தாக்குதல்களில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கடைக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, குறித்த விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு எதிரணிகள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தேசிய சக்திகளை பிளவுபடுத்த சர்வதேச உளவு பிரிவுகள் சதி!
சர்வதேச உளவுப்பிரிவுகள் நாட்டுக்குள் செயற்படுகின்றன என்றும், தேசிய சக்திகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன என்றும் தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தேசிய சக்திகள் இணைந்துதான் இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவந்தன. எனவே, மக்கள், அரசு மற்றும் தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்காக மேற்படி சக்திகள் தொடர்ந்தும் செயற்படும். எனவே, தேசிய அமைப்புகளுக்குள்ளும் பல பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
அதேபோல் அரசியல் கட்சிகளுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கும் சூழ்ச்சி நடக்கின்றது. எனவே, விழிப்புடன் இருந்து மதிநுட்பத்துடன் அனைவரும் செயற்படவேண்டும்.
சர்வதேச உளவு அமைப்புகள் நாட்டுக்குள் தீவிரமாக செயற்படுகின்றன. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர், தேசிய வளங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டே இவை செயற்படுகின்றன.
அதேவேளை, ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். எரிகின்ற நெருப்பில் எண்ணைய் ஊற்றாமல், நாட்டுக்காக இணைந்து செயற்பட முன்வரவேண்டும். கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.
மஹிந்த ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் முயற்சி எடுக்கப்படுகின்றது. நாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்சவை நேசிக்கின்றனர். அவருக்கு துளியளவுகூட பிரச்சினை ஏற்படுத்துவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். பிரச்சினைகளை உருவாக்குவதற்கு மஹிந்தவை பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.
ஆஸ்கார் இறுதி பட்டியலில் பிட்டூ குறும்படம்
குறும்பட பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட பிட்டூ படம் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சிறந்த சர்வதேச படத்துக்கான பிரிவுக்கு இது பரிந்துரைக்கப்பட்டது. இந்த போட்டி பிரிவில் பங்கேற்கும் 15 படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதில் ஜல்லிக்கட்டு இடம் பெறவில்லை. வெளிநாட்டினர் பலர் ஜல்லிகட்டு படத்தை பார்த்து பாராட்டி இருந்தனர். இதனால் படத்துக்கு விருது கிடைக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில் இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெறாமல் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜல்லிக்கட்டு படம் 2019-ல் திரைக்கு வந்தது கறி கடைக்கு கொண்டு வரப்படும் மாடு தப்பி ஓடி கிராமத்தினரை கதி கலங்க வைப்பதே படத்தின் கதை. லிஜோ ஜோஸ் இயக்கிய இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.
இந்த நிலையில் குறும்பட பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட பிட்டூ படம் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இரு பள்ளி தோழிகள் பற்றிய கதையே இந்த படம். கரிஷ்மா தேவ் துபே இயக்கி உள்ளார். பிட்டூ குறும்பட குழுவினருக்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறுகின்றது.
ஐ.சி.சி. தரவரிசை – ஜோ ரூட் முன்னேற்றம் – 16 ஆம் இடத்தில் மெத்யூஸ்!
டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணிதத் தலைவர் ஜோ ரூட் 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இரட்டை சதம் விளாசி வெற்றிக்கு வித்திட்ட இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 5-ல் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அபார பேட்டிங்கால் 60 புள்ளிகளை கூடுதலாக சேகரித்த அவர் மொத்தம் 883 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறார். இதனால் 4-வது இடத்தில் இருந்த இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி மேலும் ஒரு இடம் இறங்கி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜோ ரூட் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு முதல் முறையாக கோஹ்லியை முந்தியிருக்கிறார்.
முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் தலைவரும், 2 ஆவது இடத்தில் ஆஸி வீரரும் இருக்கின்றனர்.
அதேவேளை, இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்யூஸ் 16 ஆவது இடத்திலும்,திமுத் 19 ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியல்

சம்பிக்கவுக்கு பிரதித் தலைவர் பதவி? ஐக்கிய மக்கள் சக்திக்குள் எதிர்ப்பு!
சம்பிக்க ரணவக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உயர்பதவியொன்றை வழங்குவதற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜாதிக ஹெல உறுமய ஊடாக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துவந்த சம்பிக்க ரணவக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்காக ஹெல உறுமயவிலிருந்து விலகினார். பொதுச்செயலாளர் பதவியையும் துறந்தார்.
ஐக்கிய மக்கள் சகத்தியின் முதலாவது மத்திய செயற்குழுவில் பங்கேற்றிருந்தாலும் அக்கட்சியின் உறுப்புரிமையை சம்பிக்க ரணவக்க இன்னும் பெறவில்லை. அவருக்கு வழங்கப்படவுள்ள பதவி தொடர்பான அறிவிப்பு உறுதியாக வெளியான பின்னரே இணைவார் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பிக்கவுக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்குவது தொடர்பில் சஜித் அணி பரீசிலித்துவருகின்றது. இதற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் தற்போது இழுபறி நிலை தொடர்கின்றது.
அதேவேளை, சம்பிக்க ரணவக்கவால் ‘43’ என்ற அரசியல் இயக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் சஜித் தரப்பை கிலிகொள்ள வைத்துள்ளது.
‘பாடசாலை அபிவிருத்தியில் அரசியல் வேண்டாம்’ – ராதாகிருஷ்ணன் கோரிக்கை
நல்லாட்சி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன.உடனடியாக அவற்றை மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நல்லாட்சி அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களின் நன்மை கருத்தில் கொண்டு அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டது.
அப்படி அபிவிருத்தி செய்யப்பட்ட பாடசாலைகள் வேலைகள் நிறைவடைந்த பாடசாலைகள் திறக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டு அதன் பயன்களை மாணவர்கள் அனுபவித்து வருகின்றார்கள்.
ஆனால் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட பல பாடசாலைகள் இன்னும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு அவற்றை பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படாமல் அந்த கட்டிடங்கள் தற்பொழுது பாலடைந்த நிலையில் இருக்கின்றது.ஒரு சில பாடசாலைகளில் வேலைத்திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றது.
இதன் மூலம் அரசாங்கம் செலவு செய்த கோடிக் கணக்கான ரூபாய்கள் வீனடிக்கப்படுகின்றது.எனவே உடனடியாக அரசாங்கம் இது தொடர்பாக கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
கடந்த அரசாங்கம் ஆரம்பித்த வேலைகளை நாங்கள் முன்னெடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இல்லாமல் யார் அபிவிருத்தி செய்தாலும் அது எங்களுடைய மாணவர்களையே சென்றடையும் என்ற நோக்கத்தில் செயற்பட முன்வரவேண்டும்.
அது மாத்திரம் அல்ல இந்திய அரசாங்கம் 9 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 300 மில்லியன் ரூபா வழங்கியது.அதற்கான பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.அந்த வேலைத் திட்டமும் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.அதனை நிறைவு செய்தால் இன்னும் சில பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் மூலமாக நிதியை கோர முடியும்.
எனவே பாடசாலை அபிவிருத்தியில் அரசியலை பயன்படுத்தாமல் அதனை மாணவர்களின் நன்மை கருதி முன்னெடுக்கின்ற ஒரு திட்டமாக அதனை செயற்படுத்த முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





