Home Blog Page 3629

கடந்துள்ள 10 நாட்களில் 8 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா!

நாட்டில் கடந்த 10 நாட்களில் மாத்திரம்  8  ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 2,269 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 1,521 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் ஆயிரத்து 576 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 773 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் 73 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 713 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

‘புற்றுக்குள் ஒளிந்திருந்த பாம்புகள் படையெடுக்கின்றன’ – அஷாத் சாலி சீற்றம்

ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்ற பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பை அடுத்து, 20 இற்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள், இப்போது துள்ளிக் குதிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஒரேயொரு சொல்லை பிடித்துக்கொண்டு, அதற்கு கை, கால், முகம் வைத்து, உருவம் அமைத்து, அறிக்கை விட்டு, தம்பட்டம் அடிக்கின்றார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், 20 இற்கு கை உயர்த்திய இந்த சமூகத் துரோகிகள் இவ்வளவு காலமும் ‘மழை காலத்தில் புற்றுக்குள் ஒளித்த பாம்பு’ போல் இருந்துவிட்டு, இன்று தொடக்கம் படமெடுத்து ஆடத் தொடங்குகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“தேர்தல் மேடைகளில் ராஜபக்ஷக்களை மோசமாக விமர்சித்து, மக்கள் மத்தியில் வாக்குகளை சூறையாடி வெற்றி பெற்றார்கள். பின்னர் சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாமல், அவர்களின் தலைமைகளுக்கும் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டிவிட்டு, கையை உயர்த்தினார்கள்.

தமது சொந்த நலன்களுக்காகவும் பட்ட கடன்களை அடைப்பதற்காகவுமே, இவர்கள் பெரமுன அரசுக்கு ஆதரவளித்து, கோட்டாவை சர்வ வல்லமை பொருந்தியவராக மாற்றினார்கள். இவர்கள் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த கேவலம் கேட்டவர்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் எம்.பியாவதற்கு முன்னரேயே, ‘வென்ற பின்னர் அரசுக்கு ஆதரவளிப்போம்’ என்று பகிரங்கமாக சொன்னவர். கட்சியின் கொள்கைக்கு மாறாக இவர் கருத்து தெரிவித்தவர்.

புத்தளத்தில் ‘மரத்தில் ஒரு காலையும், மயிலில் மற்றொரு காலையும் வைத்துக்கொண்டு” பொதுச் சின்னத்தின் மூலம் மந்திரிப் பதவிக்கு வந்த அலி சப்ரி எம்.பி, அடாத்தாகப் பிடித்து பறிபோகவிருந்த தனது கள்ளக் காணிகளை காப்பற்றுவதற்காக, தனது கட்சித் தலைமைக்கும் மாறுபாடு செய்து 20 க்கு ஆதரவளித்தார். ஏனைய எம்.பிக்கள் அனைவரும் பக்கா டீலர்கள்.

எனவே, சமூகத்துக்கு இவர்கள் எதையாவது செய்ய வேண்டுமென்று உளமார விரும்பினால், அறிக்கைகள் விடுவதை அவசரமாக நிறுத்த வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கொரோனாவால் கடந்த 10 நாட்களில் 52 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸால் நாட்டில் கடந்துள்ள 10 நாட்களில் மாத்திரம் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 362 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா முதலாவது அலையின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர்.இதன்படி கொரோனாவால் இதுவரை மொத்தமாக 375 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை , நேற்று மாத்திரம் 955 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

சம்பளத்தை கூட்டச் சொன்னால் குறைக்க முயற்சி செய்கின்றனர் – சபையில் உதயா எம்பி

ஒரு பக்கம் சம்பள உயர்வுக்கு தீர்மானம் நிறைவேற்றி மறுபக்கம் வேலை நாட்களை குறைத்து தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றிய அவர் 25 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாப பெற்றுக் கொடுக்க முடியாத சம்பள உயர்வு சம்பள நிர்ணய சபையால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் எனவும் ஆனால் சிலர் சம்பள உயர்வு வழங்கப்பட்டதற்கு நாம் எதிர்ப்பு என தவறாக கருத்து கூறி வருவதாகவும் உண்மையில் தொழிலாளர்களின் வேலை நாட்கள் 13 ஆக குறைப்பதற்கு நாம் முழுமையான எதிர்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாதாந்தம் 25,000 ரூபா சம்பளம் பெற நாம் போராட வேண்டியுள்ளது எனக்கூறிய பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் மேலும் கூறுகையில்,

இவ்வளவு காலமும் இழுபறியாக இருந்து வந்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடையம் நேற்றையதினம் சம்பள நிர்ணய சபையின் ஊடாக முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் யதார்த்தத்தை எடுத்துப் பார்த்தால் மேலும் இந்த பிரச்சினை இழுத்தடிப்பு செய்யப்படும் என்று தெரிகிறது.

சம்பள உயர்வு என்ற ஒன்றை மாத்திரம் இறுதித் தீர்வாக ஏற்றுக்கொள்ளமுடியாது அதனையும் தாண்டி தொழிலாளர்களுக்கு கிடைக்கப் பெறவேண்டிய தொழில் உரிமைகள் தொழில்ரீதியான சலுகைகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே.,,

நேற்று நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமான சம்பள நிர்ணய சபை பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓரளவ சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டாலும்
அது தொழிலாளர்களுக்கு சாதகமான சம்பளம் அல்ல.

சம்பள நிர்ணய சபைக்கு இவ்விடயம் எடுத்துச் செல்லப்பட்டு 900 ரூபா அடிப்படை சம்பளத்துடன் மொத்தம் 1040 ரூபா என்ற சம்பள உயர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் 13 நாட்களே தொழில் வழங்க முடியும் என கம்பனிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளமை தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

காரணம் ஒரு பக்கம் சம்பளத்தை உயர்த்தி மறுபக்கம் வேலை நாட்களை குறைத்துள்ளமை எந்த வகையிலும் தொழிலாளர்களின் மாதாந்த வருமானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை.

எனவே இந்த சம்பள நிர்ணய சபையின் 1040 ரூபா நாளாந்த சம்பளத்தில் 13 நாட்கள் வேலை செய்தால் 13520 ரூபா சம்பளமே கிடைக்கும்.

1000 ஆயிரம் அடிப்படை நாள் சம்பளம் என்ற ரீதியில் மாதாந்தம் 25000 ரூபா கிடைக்கவேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது ஆனால் தற்போது அதிகரிப்புக்கு பதிலாக சம்பள குறைப்பே எற்ப்பட்டுள்ளது.

அத்தோடு நாள் ஒன்றுக்கு எத்தனை கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்று தெரியவில்லை. எத்தனை மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும் என்று குறிப்பிடபடவில்லை.

ஆகவே புதிய முறையில் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. தொழிலாளர்கள் தொடர்ந்து நசுக்கப்படுகின்றனர்.

அரசாங்கம் ஆயிரம் ரூபா எப்படியாவது வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களின் தொழில் உரிமை, சலுகை, அவர்களின் இருப்பு என்பவற்றை கருத்தில் கொள்ளவில்லை.

கூட்டு ஒப்பந்தம் என்று கூறிக் கொண்டு சுமார் 20 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி அவர்களால் 700 ரூபா அடிப்படை சம்பளத்தை ஒரு ரூபாவிற்கு கூட அதிகரிக்க முடியவில்லை. ஆனால் தொழில் அமைச்சர் தலையிட்டு 25 ரூபா சம்பள உயர்வுடன் கம்பனிகள் 725 ரூபா அடிப்படை நாள் சம்பளம் மட்டுமே வழங்க முன்வந்தனர்.

கூட்டு ஒப்பந்தத்திற்கு வெளியில் சம்பள உயர்வு வழங்க வாய்ப்பு உள்ளது என்ற ஒரு உண்மை இங்கு உணர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் தொழிலாளர்களின் தொழில் உரிமை இதுவரை காலமும் அவர்கள் பெற்றுவந்த தொழில்சார் சலுகைகள் என்பவற்றை உறுதி செய்ய புதிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நாம் பூரண ஆதரவை வழங்க தயார்.

தொழிற்சங்கங்களுக்கான சந்தாக்கட்டணம் 300 ரூபாவாக அதிகரிக்கும் சாத்தியம்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சந்தாக்கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி தற்போது தோட்டத்தொழிலாளி ஒருவரிடமிருந்து மாதாந்தம் 233 ரூபாவை சந்தாவாக பெறும் தொழிற்சங்கங்கள், இனி மாதாந்தம் 300 ரூபாவை பெறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

அடிப்படை நாட் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை தொழிலாளர்கள் மாதாந்த சந்தாவாக செலுத்த வேண்டும். இதன்படி அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது சந்தாவும் அதிகரித்துவிடும்.

கடந்த முறை அடிப்படை சம்பளமாக 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டபோது தொழிற்சங்கங்கள் 233 ரூபாவை சந்தாவாக பெற்றன, இம்முறை அடிப்படை நாட் சம்பளமாக 900 ரூபா வழங்கப்படும்பட்சத்தில் 300 ரூபாவை சந்தாவாக பெறக்கூடும்.

அதேவேளை , சந்தாக்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தொழிற்சங்கங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவித்தலையும் விடுக்கவில்லை. எனினும், கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு சம்பள அதிகரிப்பு இடம்பெறும்வேளை, சந்தாக்கட்டணமும் கடந்தகாலங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 539 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் 539 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாவிலிருந்து 65 ஆயிரத்து 644 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 736 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 370பேர் உயிரிழந்துள்ளனர்.

2ஆவது அலைமூலம் இதுவரை 67 ஆயிரத்து 739 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுக்க விசேட குழு!

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட செயல் திட்டம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கும், ஏனைய பகுதிகளுக்கும் இதனை பெற்றுக்கொடுப்பது சம்பந்தமாகவும் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

9 நாட்களில் பதுளை மாவட்டத்தில் 712 பேருக்கு கொரோனா தொற்று

பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. கடந்துள்ள 9 நாட்களில் மாத்திரம்  712 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் பதுளை மாவட்டத்தில் இதுவரை 879 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

‘கொரோனா’ பிடிக்குள் இருந்து 65,644 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 591 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 197  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

‘இந்திய முதலீடுகள் மலையகத்துக்கும் அவசியம்’

இந்திய அரசாங்கத்தின ஊடாக சிறிய முதலீடுகளை மலையகத்திற்கு கொண்டு வருவதற்கான யோசனை ஒன்றை தான் முன்வைத்துள்ளதாக  மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகத்துக்கும், கண்டி இந்திய உதவி தூதுவர் ராகேஸ் நடராஜன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று அண்மையில் கண்டி உதவி இந்திய தூதுவராலயத்தில் இடம்பெற்றது.இந்த சந்திப்பில் உதவி தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் கிருஸ்ண பிரசாத்தும் கலந்து கொண்டார்.

இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கின்ற பொழுதே பேராசிரியரும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான சங்கரன் விஜயசந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

கண்டி இந்திய துனைத் தூதுவராலயத்திற்கு புதிதாக கடமைகளை பொறுப்பேற்றுள்ள கண்டி இந்திய உதவி தூதுவர் ராகேஸ் நடராஜனை மரியாதை நிமித்தமான சந்தித்து கலந்துரையாடினேன்.

இதன்போதுமலையக இளைஞர் யுவதிகள் தற்பொழுது எதிர்நோக்கி வருகின்ற வேலையில்லா பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர்களுடைய உயர் கல்வி தொடர்பாகவும் தொழிலுக்கு ஏற்ற பயிற்சிகளை வழங்குவது தொடர்பாகவும் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகின்ற தொழில் பயிற்சி நிலையங்களில் மலையக பகுதிகளுக்கு ஏற்ற பயிற்சிகளை முன்னெடுக்க வேண்டும் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மலையக இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டுமாக இருந்தால் மலையக பகுதிகளில் சிறிய அளவிலான இந்திய முதலீட்டாளர்களை வரவழைத்து மலையகத்தின் பரந்த அளவில் தொழில் பேட்டைகளை உருவாக்க வேண்டும்.

இன்று இந்திய முதலீடுகள் அனைத்தும் கொழும்பை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளது.இதன் காரணமாக அந்த தொழிலை பெற்றுக் கொள்வதில் எமது மலையக இளைஞர்கள் பெறும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.தற்போதைய கொரோனா தொற்றும் பெரிய தாக்கத்தை செலுத்துகின்றது.

எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாக இருந்தால் மலையக பகுதிகளில் தொழில் பேட்டைகளை அமைக்க வேண்டும்.அப்படி அமைத்தால் நிச்சயமாக அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் முழமையாக பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் மலையக மாணவர்களின் உயர் கல்வியிலும் தற்பொழுது இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றதை நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன் எதிர்காலத்தில் இன்னும் அதிகமான அக்கரை செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன்.

இன்று பல தொழில் பயிற்சி நிலையங்களில் முன்னெடுக்கப்படுகின்ற பயிற்சிகள் மலையக பகுதிகளில் தொழில் வாய்;ப்பிற்கு ஏற்றதாக இல்லை எனவே அவற்றை மலையக இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்பையும் அதற்கு ஏற்ற வகையிலும் பயிற்சிகள் அமைய வேண்டும் மேலும் எங்களுடைய கலை கலாச்சாரம் மற்றும் சமய விடயங்கள் தொடர்பாகவும் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தேன்.

இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் தான் மிகுந்த கவனம் செலுத்துவதாக கண்டி இந்திய உதவி தூதுவர் ராகேஸ் நடராஜன் தெரிவித்ததுடன் இது தொடர்பாக முழுமையான அறிக்கை ஒன்றையும் பெற்றுத் தருமாறும் கேட்டுக் கொண்டார்.இது தொடர்பான அறிக்கை ஒன்றை தான் மிக விரைவில் கையளிக்கவுள்ளதாகவும் பேராசிரியரும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான சங்கரன் விஜயசந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

25 மில்லியன் ரூபா செலவில் நன்னீர் இறால் அபிவிருத்தி!

0
இலங்கையின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக லாபகரமான வணிகத் துறையாக மாற்றியமைக்க, ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் புதிய புரட்சிகரமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு வரவு - செலவுத்...

தோட்டத் தொழிலாளியின் மகன் மீது தாக்குதல்: முகாமையாளர்களை இடமாற்றக்கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

0
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு   தோட்டத் தொழிலாளியின் மகன் மீது தோட்ட முகாமையாளர் உள்ளிட்ட குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து, உடபுஸ்ஸல்லாவ - பெயாலமன்ட் (Blairlomond) தோட்டத்தைச் சேர்ந்த சென்மார்கிரட் பிரிவின் தொழிலாளர்கள் இன்று...

” இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்தல் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு”

0
டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்துவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இன்று (16) முற்பகல்...