Home Blog Page 3630

ஹேகித்த முருகன் கோவிலை புனரமைப்ப ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கீடு

தீ விபத்தால் சேதமடைந்த வத்தளை , ஹேகித்த முருகன் கோயிலின் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கு 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆவணத்தை இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், ஆலய நிர்வாக சபையினரிடம் கையளித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பணிப்புரைக்கமைய இந்து கலாசார அமைச்சினால் குறித்த நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மொட்டு – சுதந்திரக்கட்சி மோதல் – பதுளை மாநகரசபையின் ஆட்சி ஆணையாளர் வசமானது!

பதுளை மாநகர சபையின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டு, அச்சபையின் அனைத்து அதிகாரங்களும் விசேட ஆணையாளரின் பொறுப்பில்விட ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முசாம்மில் முடிவுசெய்துள்ளார். இதற்கமைய பதுளை மாநகரசபையின் பொறுப்பு, விசேட ஆணையாளரின்கீழ், (இன்றுமுதல்) 11-02-2021 கொண்டுவரப்பட்டது.

பதுளை மாநக ரமேயருக்கு பெரும்பான்மை பலம் இல்லாமையினால், சபையின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டிருந்தன. அதனாலேயே, இம்முடிவினை மேற்கொண்டதாக ஆளுனர்ஏ.ஜே.எம். முசாம்மில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியின்கீழ், பதுளை மாநகரசபை இயங்கிவந்தது. அதன்படி பதுளை மாநகர மேயர் பதவி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமும், பிரதி மேயர் பதவி ஸ்ரீலங்காசு தந்திரக்கட்சிவசமும் இருந்துவந்தன.

அதனையடுத்து, இவ்விருகட்சிகளிடம் தலா இரண்டு வருடங்கள் என்றடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் பதுளை மாநகரசபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பான ஐந்து உறுப்பினர்களும், ஒப்பந்தத்தைமீறி, மேயருக்கு எதிராக செயற்பட்டதையடுத்தே, சபையின் பெரும்பான்மை பலத்தை மேயர்பிரியந்த அமரசிரி இழந்திருந்தார்.

இதனாலேயே, தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்டவரவு – செலவுத்திட்டநிதி அறிக்கை மூன்று முறைகளிலும் தோல்விகண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எம்.செல்வராஜா, பதுளை

2024 ஜனாதிபதி தேர்தலுக்கு வியூகம் அமைக்கும் சஜித்

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு முக்கிய பங்கு வகித்த தரப்புகளில் ‘வியத்மக’ என்ற சிவில் அமைப்பும் ஒன்றாகும்.

அரசியல் களம் புகுவதற்கு முன்னர் மேற்படி குழுவின் ஊடாகவே கோட்டாபய ராஜபக்ச பரப்புரைகளை முன்னெடுத்தார். பௌத்த தேரர்களும், புத்திஜீவிகளும், துறைசார் நிபுணர்களும் இக்குழுவில் இடம்பெற்றிருந்ததால் சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றிருந்ததுடன், இலகுவில் பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடியதாகவும் இருந்தது.

அமைச்சர் சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர்களான சன்ன ஜயசுமன, பேராசிரியர் நாலக கோட்டேகொட, சீதா  அரம்பேபொல ஆகியோர்கூட வியத்மக அமைப்பின் அங்கத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் வியத்மக குழு செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சஜித் பிரேமதாசவும், வியத்மக பாணியில் புத்திஜீவிகள் குழுவொன்றை அமைத்துள்ளார். முக்கிய பிரமுகர்கள் இதில் இடம்பிடிக்கவுள்ளனர். முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்கவும் இக்குழுவில் அங்கம் வகிக்கவுள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் கூட்டணியொன்றும் அமையவுள்ளது. அதற்கான யாப்பு உருவாக்கப்பட்ட பின்னர் கூட்டணி அமையும். சம்பிக்க ரணவக்க தலைமையில் சிங்கள, பௌத்த வாக்குகளை திரட்டுவதற்கான வியூகமும் வகுக்கப்பட்டுவருகின்றது.

2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கே சஜித் பிரேமதாச தற்போதிருந்தே வியூகம் வகுத்துவருகின்றார் என அரசியல் களத்தில் பேசப்படுகின்றது.

கண்டியில் வேகமெடுக்கும் கொரோனா – நேற்றும் 150 பேருக்கு வைரஸ் தொற்று!

கண்டி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. நேற்றும் 150 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கண்டி  மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 9  பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு விரைவில் புதிய சட்டம்

இலங்கையில் விளையாட்டுத்துறையை நவீனமயப்படுத்தும் – மேம்படுத்தும் நோக்கில் புதிய சட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதனை நடைமுறைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

” நான் அமைச்சராகி ஐந்து மாதங்கள்தான் ஆகின்றன. கிரிக்கெட் விளையாட்டு வீழ்ச்சியடைய ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தக் காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. எவ்வாறாயினும் இறந்தகாலத்தில் நடந்தவை பற்றி பேசி அர்த்தமில்லை. எதிர்காலத்தில் சிறந்த வேலைத்திட்டத்துடன், நாம் பயணிக்க வேண்டும். கிரிக்கெட் கட்டுபாட்டு சபையில் அரசியல்வாதிகளுக்கு கையளிக்க முடியாது. ஐசிசியின் கட்டுப்பாட்டின் கீழ்தான் அது இயங்குகிறது.

கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் சில குழுகள் உள்ளதாகவும் ஏகாதிபத்திய முறைமை காணப்படுவதாகவும் கூறுப்படும் குற்றச்சாட்டுகள் கிரிக்கெட்டுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அனைத்து விளையாட்டுகளிலும் இவ்வாறுதான் காணப்படுகிறது. இதற்கு ஒரே தீர்வுதான் உள்ளது. அதாவது பழைய விளையாட்டு சட்டத்திற்கு பதிலாக புதிய விளையாட்டு சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். எமது அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் துறைசார் நிபுணர்களின் தலைமைத்துவத்தின் கீழ் குழுவொன்றை அமைத்துள்ளேன். குறித்த குழுவின் ஊடாக புதிய சட்டம் தயாரிப்புக்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதுடன், சட்ட மாஅதிபர் திணைக்களத்துடன், கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. இதுதொடர்பில் அனைவருக்கும் கருத்துகளை முன்வைக்க முடியும்.

விளையாட்டு என்பது ஒரு காரணி என்பதுடன், நிர்வாகமென்பது மற்றுமொரு காரணியாகும். இரண்டையும் சிக்கலாக்கிக்கொள்ள கூடாது. முன்னாள் வீரர் அரந்த டி சில்வா குழு தலைமையில் கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக கிரிக்கெட் விளையாட்டு அபிவிருத்தி செய்யப்படும். 17 வயத்திலிருந்து நாம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்க வேண்டும். இன்று நாளை இதற்கான பிரதிபலன் கிடைக்மென நாம் எதிர்பார்க்க வில்லை. ஆகவே, கிரிக்கெட் விளையாட்டை அரசியல் மயப்படுத்த வேண்டாமென எதிர்தரப்பினரிடம் கேட்கிறோம் என்றார்.

மியன்மாருடனான உறவுகளை துண்டித்துக்கொண்டது நியூசிலாந்து!

நியூஸிலாந்து, மியன்மாருடனான அனைத்து அரசாங்க, அதிகாரபூர்வ உறவையும் தற்காலிகமாகத் துண்டித்துக் கொள்வதாக அந்நாட்டுப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் கூறியுள்ளார்.

மியன்மாரின் இராணுவத் தலைவர்கள் மீது பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் அந்நாட்டு இராணுவம் கடந்த வாரம் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தியதை அடுத்து, நியூஸிலாந்து இந்த முடிவுகளை எடுத்துள்ளது.

நியூஸிலாந்தின் உதவித் திட்டங்கள் எதுவும் மியன்மார் இராணுவத்துக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்காதபடி பார்த்துக் கொள்ளப்படும் என ஆர்டன் தெரிவித்தார்.

மியன்மார் நிலை குறித்து ஐ.நா மனித உரிமை பேரவை சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தவும் அவர் அழைப்பு விடுத்தார்.

2018ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், நியூஸிலாந்து மியன்மாருக்கு அளித்த உதவித் திட்டத்தின் மதிப்பு சுமார் 30 மில்லியன் டொலர் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், நியூஸிலாந்து, மியன்மாரின் இராணுவ அரசாங்கத்தை அங்கீகரிக்காது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் நானாயா மஹுடா தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்கும்படியும் அவர் வலியுறுத்தினார்.

நேற்று மாத்திரம் 975 பேருக்கு கொரோனா – ஐவர் உயிரிழப்பு!

நாட்டில் நேற்று மாத்திரம் 975 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 65 ஆயிரத்து 53 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 67 ஆயிரத்து 200 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஐவர் நேற்று உயிரிழந்துள்ளனர். மூன்று ஆண்களும், பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது.

‘தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம்’

தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்புக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட்ட அரசாங்கம் முன் நிற்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பதிரண இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தோட்டத் தொழில் சங்கங்களுக்கும், முதலாளிமார்களுக்கும் இடையில் பல சந்தர்ப்பங்களில் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த யோசனையை வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும், ஒருமித்த கருத்தை எடுக்க முடியவில்லை என்பதனால் சம்பள நிர்ணய சபையினால் தொழில் அமைச்சினூடாக தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் சிரமத்திற்குள்ளாகும் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொண்டால் குறித்த முதலாளிமார்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டினார்.

வரவு செலவு திட்டத்தின்படி தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துவது தொடர்பாக தோட்ட தொழிற்சங்கங்களுக்கும், தோட்ட உரிமையாளர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு உடன்பாட்டிற்கு வரமுடியவில்லை.

எனவே இது தொடர்பாக ஒரு முடிவை எடுக்க அமைச்சரவை, தொழிற் சங்கத்தின் ஊடாக சம்பள நிர்ணய சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் ரமேஷ் பத்திரன அடுத்த வாரத்திற்குள் தொழில் அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட பின்னர் தோட்ட நிறுவனங்கள் ஊதியத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா கொடுப்பனவை செலுத்த சட்டப்படி கடுமைப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இது தொடர்பாக எழுகின்ற பிணக்குகளை கலந்தாலோசித்து தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘கொரோனா’ வைரஸின் தோற்றம் பற்றி ஆராய சீனா சென்ற ஆய்வுக்குழு வெளியிட்ட முதல் தகவல்

2019 டிசம்பருக்கு முன்னர் சீனாவின் உகானில் கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு தொடங்கியது என்பது குறித்த விசாரணை மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பின் சிறப்பு ஆராய்ச்சி குழு, கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் கண்டுபிடித்ததை இன்று வெளியிடவுள்ளதாக அறிவித்து இருந்தனர்.

விசாரணையில் ஈடுபட்டுள்ள சீனத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் உலக சுகாதார நிபுணர்களுடன் இணைந்து இன்று தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தினார்கள்.

இந்த குழு ஜனவரி 14-ஆம் திகதி உகான் நகரத்தை சென்றடைந்தது. இரண்டு வார தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, கொரோனா வைரஸுடன் தொடர்புடையதாக அறியப்பட்ட முக்கிய தளங்களை பார்வையிட்டது. அவர்கள் முதலில் தொற்றுநோயின் தொடக்க இடமான ஹுவானன் கடல் உணவு சந்தையையும், கொரோனா தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தையும் பார்வையிட்டனர்.

உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் ஆழ்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது, அங்கு அவர்கள் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் செலவிட்டனர், மேலும் அவர்கள் கொரோனா வைரஸ்கள் \குறித்த சீனாவின் முன்னணி நிபுணர்களில் ஒருவரும், உகான் ஆய்வகத்தின் துணை இயக்குநருமான ஷி ஜெங்லி உட்பட பல விஞ்ஞானிகளை சந்தித்ததனர்.

கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக பல இடங்களில் விசாரணைகள் மேற்கொண்ட நிலையில், பல முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக குழு தெரிவித்துள்ளது.

இந்த குழு கடல் உணவு சந்தையில் ஒரு மணிநேரம் மட்டுமே செலவழித்தது, அங்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தொற்றுநோய்களின் முதல் கொத்துகள் தோன்றின. ஆய்வுக்குழுவினர் தங்கள் ஓட்டலுக்குள் பல நாட்கள் கழித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆய்வுக்குழு கூறியதாவது:-

2019 டிசம்பருக்கு முன்னர் உகானில் அல்லது வேறு எங்கும் கொரோனா உடன் தொடர்புடைய பெரிய நோய் தொற்று குறித்து குழு எதுவும் கண்டுபிடிக்கவில்லை. கொரோனா நோய் தொற்றிற்கு உரிய விலங்கு குறித்த ஆதாரம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

ஆய்வக கசிவுவினால் கொரோனா பரவியது என்பது மிகவும் சாத்தியமில்லை என கூறி உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பென் எம்பரேக் கூறுகையில், சமீபத்திய உகான் விசாரணையில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன, ஆனால் கொரோனா வெடித்த விஷயத்தை வியத்தகு முறையில் மாற்றவில்லை. உகான் ஹுவானன் சந்தைக்கு வெளியே 2019 டிசம்பரில் பரவலாக கொரோனா புழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரங்களை குழு கண்டறிந்து உள்ளது என கூறினார்.

உலகளவில் 23 லட்சம், மக்களை பலிவாங்கிய இந்த நோய் – வவ்வால்களில் தோன்றியது மற்றும் பாலூட்டி வழியாக மனிதர்களுக்கு பரவி இருக்க கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.ஆனால் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழு கொரோனா நோய் தொற்றிற்கு உரிய விலங்கு குறித்த ஆதாரம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கூறி உள்ளது.

விலங்குகளிடமிருந்து பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இதுவரை அதற்குரிய ஆதாரங்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளன” என்று சீனா அணியின் தலைவர் லியாங் வனியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வேலை நாட்களில் கம்பனிகள் கை வைத்தால் பதிலடி கொடுப்போம் – ஜீவன்

வேலை நாட்களை குறைக்க கம்பனிகள் நடவடிக்கை எடுத்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் எச்சரிக்கை விடுத்தார்.

சௌமியபவனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றைய தினம் சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்றதுடன் இதில் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்கும் யோசனையும் நிறைவேற்றப்பட்டது.

வேலை நாட்கள் குறைக்கப்படும் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறு நடக்காது. நடக்கவும் விடமாட்டோம். கம்பனிகள் வேலை நாட்களை குறைத்தால் விளைவுகள் பாரதூரமாக அமையும். பதிலடி கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது. ” – என்றார்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

” இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்தல் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு”

0
டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்துவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இன்று (16) முற்பகல்...

சீரற்ற காலநிலை: இருவர் பலி: 112 வீடுகள் சேதம்!

0
இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 7 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 600 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 151 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 623 பேர்...

சீன ஜனாதிபதி செப்டம்பரில் அமெரிக்கா பயணம்!

0
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்த்து ரசித்த ஜனாதிபதி ட்ரம்ப், அங்குள்ள இயற்கை அழகையும் மலர்களையும் மிகச் சிறப்பானது என வர்ணித்துள்ளார். அதேபோல சீனாவின் விருந்தோம்பல் மற்றும் வளர்ச்சியால்...