Home Blog Page 3631

பிரதித் தலைவராகிறார் சம்பிக்க? மார்ச் 6 ஐ.ம.சக்தியின் மாநாடு!

ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பின் பிரகாரம் முதலாவது வருடாந்த மாநாடு (சம்மேளனம்) மார்ச் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னர் கட்சியின் அனைத்து கட்டமைப்புகளும் கட்டியெழுப்படும் எனவும், கூட்டணிகூட உருவாக்கப்பட்டிருக்கும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மேளனத்தின்போதே சம்பிக்க ரணவக்க உட்பட ஹெல உறுமய உறுப்பினர்கள் 21 பேர் அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  சம்பிக்கவுக்கு பிரதித் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது.

சம்பிக்க ரணவக்கவுக்கான பதவி குறித்து ஐக்கிய மக்கள் சக்திக்குள் தற்போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சி மாநாட்டுக்கு முன்னர் அப்பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கூட்டு ஒப்பந்தம் என்பதுஅடிமை சாசனமே – ஸ்ரீதரன்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடய கூட்டொப்பந்தத்ததை கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் சிலவும் அடிமை சாசனமாக கருத தொடங்கியுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் கருத்துத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :

கூட்டொப்பந்தத்தை அடிமை சாசனமாக விமர்சித்தவர்கள் இன்று அதனை புகழ்வதாக தொழிற்சங்கவாதி ஒருவர் வக்காலத்து வாங்கியுள்ளார். இதனை மலையகம் எள்ளி நகையாடுகிறது. கூட்டு ஒப்பந்தத்தைச்சேர்ந்த மூன்று தொழிற்சங்கங்களில் இரண்டு தொழிற்சங்கங்கள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.

அதில் ஒரு தொழிற்சங்கம் கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடவில்லை.
மேலும் ஒரு தொழிற்சங்கம் இம் முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு தயக்கம் காட்டி வருவது மலையகம் அறிந்த விடயம். இந்த விடயம் அறிந்தும் கடந்த பொதுத்தேர்தலில் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்ட ஒருவர் கட்சியில் தனது பெயர் அடிபட வேண்டும் என்பதற்காக மலையக மக்களை பிழையாக வழி நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.” – என்றார்.

‘கொரோனா’வால் பதுளை மாவட்டத்தில் இதுவரை நால்வர் பலி!

பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் நால்வர் இதுவரை பலியாகியுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு ஆடைத்தொழிற்சாலைகளும் மறுஅறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளன.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆம் திகதி முதல் இதுவரையில் பதுளை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மொத்தமாக 584 பேர் கொரோனா தொற்றாளர்களாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட கோவிட் 19தடுப்பு செயலணியினர் தெரிவித்தனர்.

வெலிமடையில் ஒரு மரணமும், தியத்தலாவையில் இரு மரணங்கள், மகியங்கனையில் ஒருமரணம் உள்ளிட்டு நான்கு பேர், கொரோனா தொற்றினால் மரண மாகியுள்ளனர்.

மகியங்கனைப் பகுதியில் இரு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

எம். செல்வராஜா

நானுஓயாவில் பாரிய கஞ்சா சேனை முற்றுகை – 269 செடிகள் அழிப்பு!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நானுஓயா வனப்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனையொன்றை நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (07) மாலை சுற்றிவளைத்துள்ளனர்.

குறித்த கஞ்சா சேனையில் 3 மற்றும் 5 அடி உயரமான 272 கஞ்சா செடிகள் இருந்ததாகவும், சுற்றிவளைப்பின்போது கஞ்சா செய்கையில் ஈடுபட்ட நபர் தப்பியோடிவிட்டார் எனவும் விசேட அதிரடிப்படை
அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் ஆற்றுப்படுத்துவதற்காக 3 செடிகளை மட்டும் வைத்துக்கொண்டு ஏனைய கஞ்சா செடிகளைதீயிட்டு அழிப்பதற்கு விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்தனர். அத்துடன், இதன் பின்னணியில்உள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் விசேட அதிரடிப்படையினர்ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் நுவரெலியாவில் கஞ்சாவுடன் நபர்கள் கைதாகியிருந்தாலும், வனப்பகுதியில் பாரியளவில் கஞ்சா செய்கை செய்யப்பட்ட தோட்டமொன்று சுற்றிவளைக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாக கருதப்படுகின்றது.

க.கிசாந்தன்

‘நலமாக இருக்கிறேன்’ – கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யா தெரிவிப்பு

நடிகர் சூர்யா, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘’கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.

அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.’’ எனத் தெரிவித்துள்ளார்.

‘சுமந்திரனுக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு மீளப்பெறப்பட்டது’

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது.

“நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளது. காரணம் அறிவிக்கப்படவில்லை” என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இவ்வாறு மீளப்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பிரமுகர் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பாதுகாப்பு கடமையில் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஆவது அலைமூலம் மத்திய மாகாணத்தில் 5,226 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் 5 ஆயிரத்து 226 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் இரண்டு பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் இதுவரை 667  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 3,839 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் 720 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

27 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை இன்று முதல் குறைப்பு

அரசாங்கம் தீர்மானத்தின்படி 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் நாட்டு மக்களின் நலன் கருதி சுப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பாரிய அத்தியாவசியப் பொருள் விற்பனை நிலையங்கள் இந்த விலைக் குறைப்பை பின்பற்ற முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் வகையில் மேற்படி விற்பனை நிறுவனங்கள் மக்களுக்கு சலுகை வழங்குமானால் அதனை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

27 பொருட்கள் மூன்று மாதங்களுக்கு விலைக் குறைப்பு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதுள்ள நிலையில் அவற்றை சதொச, கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் கியூசொப் ஆகியவற்றில் கொள்வனவு செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்;

அதற்கிணங்க 106 ரூபாவாக இருந்த சிவப்பு பச்சை அரிசி 93 ரூபாவுக்கும் 105 ரூபாவாக இருந்த வெள்ளைப் பச்சை அரிசி 93 ரூபாவாகவும் 109 ரூபாவாக இருந்த நாட்டரிசி 96 ரூபாவாகவும் 120 ரூபாவாக இருந்த சம்பா அரிசி 99 ரூபாவாகவும் நாளை முதல் விலைக்குறைப்பு செய்யப்பட்டு விற்கப்படும் ” என்றார்.
அதற்கிணங்க விலைக் குறைப்பு செய்யப்படும் பொருட்கள் பின்வருமாறு;

கீரி சம்பா 1kg : புதிய விலை 125 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா,

கோதுமை மா 1kg : புதிய விலை 84 ரூபா – தற்போதைய விலை 105 ரூபா,வௌ்ளை சீனி 1kg : புதிய விலை 99 ரூபா – தற்போதைய விலை 110 ரூபா ,

சிகப்பு சீனி 1kg : புதிய விலை 125 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா ,

தேயிலை 100g : புதிய விலை 95 ரூபா – தற்போதைய விலை 130 ரூபா ,

பருப்பு அவுஸ்திரேலியா 1kg : புதிய விலை 165 ரூபா – தற்போதைய விலை

188 ரூபா, பெரிய வெங்காயம் இந்தியா 1kg : புதிய விலை 120 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா,

உருளைக்கிழங்கு உள்நாடு 1kg : புதிய விலை 180 ரூபா – தற்போதைய விலை (216 – 220) ரூபா,

உருளைக்கிழங்கு பாகிஸ்தான் 1kg : புதிய விலை 140 ரூபா தற்போதைய விலை 190 ரூபா,

கடலை 1kg : புதிய விலை 175 ரூபா – தற்போதைய விலை 225 ரூபா,

காய்ந்த மிளகாய் 1kg : புதிய விலை 495 ரூபா – தற்போதைய விலை 550 ரூபா,

ரின் மீன் உள்நாடு 425g : புதிய விலை 220 ரூபா – தற்போதைய விலை 240 ரூபா,

ரின் மீன் இறக்குமதி 425g : புதிய விலை 265 ரூபா – தற்போதைய விலை 280 ரூபா,

நெத்தலி தாய்லாந்து 1kg : புதிய விலை 545 ரூபா – தற்போதைய விலை 700 ரூபா,

தோலுடன் கூடிய கோழி 1kg : புதிய விலை 400 ரூபா – தற்போதைய விலை 430 ரூபா,

கட்டி உப்பு 1kg : புதிய விலை 43 ரூபா – தற்போதைய விலை 55 ரூபா, பால்மா 400g : புதிய விலை 355 ரூபா – தற்போதைய விலை 380 ரூபா, ​

சோயா எண்ணை 500ml : புதிய விலை 310 ரூபா – தற்போதைய விலை 470 ரூபா, சவர்க்காரம் (BCC) 115g : புதிய விலை 43 ரூபா – தற்போதைய விலை 53 ரூபா,

சவர்க்காரம் 650g : புதிய விலை 260 ரூபா – தற்போதைய விலை 325 ரூபா, வாசனை சவர்க்காரம் 100g : புதிய விலை 56 ரூபா – தற்போதைய விலை 63 ரூபா,

கை சுத்தீகரிப்பு (Hand sanitizer) 100ml : புதிய விலை 250 ரூபா – தற்போதைய விலை 350 ரூபா, முகக்கவசம் (SLS தரச் சான்றிதழுடன் கூடிய) : புதிய விலை 14 ரூபா – தற்போதைய விலை 25 ரூபா எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். 

ஆயிரம் ரூபா கிடைக்குமா? இன்று வெளியாகும் விசேட அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பான முக்கிய பேச்சு வார்த்தையொன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்தவித இறுதித் தீர்மானமும் இன்றி முடிவுற்றுள்ள நிலையில் இன்றைய பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் பெறுவதாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவின் தலைமையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியன கலந்துகொள்ளவுள்ளன.

அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா என தொழிற்சங்கங்களினால் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் முதலாளிமார் சம்மேளனம்  அதனை நிராகரித்து வருகின்றது.

அந்த நிலையில் சம்பள நிர்ணய சபையின் ஊடாக அதற்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் வகையில் தொழில் அமைச்சர் மற்றும் தொழில் ஆணையாளர் ஆகியோரின் தலையீட்டோடு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கிணங்க இன்றைய தினம் நடைபெறும் பேச்சுவார்த்தை மூலம் இறுதி தீர்வொன்றுக்கு வரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அது தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மற்றுமொரு தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவிக்கையில்;

கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாகவோ சம்பள நிர்ணய சபை ஊடாகவோ அல்லது அரசாங்கத்தின் நேரடி தலையீட்டுடனோ எந்த வழியானாலும் சரி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். வேறு ஏதாவது கொடுப்பனவுகள் அதனோடு இணைக்கப்பட்டு ஆயிரம் ரூபா வழங்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா என்பதே தோட்டத் தொழிலாளர்களதும் தொழிற்சங்கங்களினதும் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பெரும் இழுபறி நிலையில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் இன்றைய பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

இன்றைய பேச்சு வார்த்தையில் சாதகமான தீர்வு எட்டப்படாவிட்டால் மலையகம் தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தொழிலாளர்கள் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

நாவலப்பிட்டியவில் 15 மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட நாவலப்பிட்டிய வெஸ்ட்ஹோல் தமிழ் வித்தியாலயத்தில் 15 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலரும், ஆசிரியர்களும் கடந்த 2 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின.

இதன்படி 15 மாணவர்களுக்கும், ஆசிரியர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

” பதுளை மாவட்டத்தில் அதிக ஆபத்துள்ள வீடுகளாக 1,376 தோட்ட வீடுகளும் 1,474 கிராமிய வீடுகளும் அடையாளம்”

0
'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்...

யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞர்!

0
யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞர்! - உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில்...

மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!

0
மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு! - உடப்பு பகுதியில் பெருஞ்சோகம் புத்தளம் மாவட்டம், உடப்பு - பூனபிட்டிய களப்பிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை...