இலங்கையில் கடந்த 29 ஆம் திகதி முதல் இன்றுவரை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 773 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவால் இலங்கைக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இவற்றை 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு செலுத்த முடியும்.
அந்தவகையில் முதற்கட்டமாக கொரோனா ஒழிப்பு சமரில் முன்கள பணியாளர்களாக செயற்படும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு கொவிட் – 19 தடுப்பூசி கடந்த 29 ஆம் திகதி முதல் ஏற்றப்பட்டுவருகின்றது.
இதன்படி 29 ஆம் திகதி 5 ஆயிரத்து 286 முன்கள பணியாளர்களுக்கும், 30 ஆம் திகதி 32 ஆயிரத்து 539 பேருக்கும், 31 ஆம் திகதி 21 ஆயிரத்து 329 பேருக்கும், பெப்ரவரி முதலாம் திகதி 36 ஆயிரத்து 396 பேருக்கும், 2 ஆம் திகதி 23 ஆயிரத்து 217 பேருக்கும், 3 ஆம் திகதி 21 ஆயிரத்து 147 பேருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.
அத்துடன், 4 ஆம் திகதி 6 ஆயிரத்து 413 பேருக்கும், 5 ஆம் திகதி 9 ஆயிரத்து 983 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 6 ஆம் திகதி 3 ஆயிரத்து 838 பேருக்கும், இன்று ஆயிரத்து 625 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளில் மேலும் 10 பிரதேசங்கள் நாளை (08) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள பகுதிகள் வருமாறு,
வத்தளை பிரதேசத்தின் பல பகுதிகளில் நாளை (08) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் (09) பிற்பகல் 4 மணி வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஹேகித்தை, பள்ளியாவத்தை, வெலிஅமுன வீதி, பலகல, கலகஹதுவ மருதானை வீதி, எலகந்த மற்றும் ஹெந்தலை வீதி ஆகிய பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஹேகித்தை வீதியில் நீர் விநியோகக் கட்டமைப்பின் திருத்தப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனி உருகி நீராக பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது. உடனடியாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உத்தரகாண்டின் தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் அமைந்துள்ள தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால், தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் தெரிவித்துள்ளார்.
நந்திதேவி பனிக்குன்று உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதென கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணியில் மாநில அரசுக்கு உதவுவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் வரை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்திய விமான படையின் இரண்டு மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர் ஒன்று என மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் டேராடூன் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தேவைக்கேற்றாற்போல் கூடுதல் ஹெலிகாப்டர்கள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மீட்பு பணிகளுக்கான ஆலோசனை மேற்கொள்ள அமைச்சரவை கூட்டம் ஒன்றும் நடந்து வருகிறது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் ரேனி கிராமத்தில் ராணுவ வீரர்கள், 2 மருத்துவ குழுக்கள் மற்றும் பொறியியல் அதிரடி படை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ராணுவ ஹெலிகாப்டர்களும் சென்றுள்ளன.
தபோவன் அணையில் சிக்கியிருந்த 16 பேரை போலீசார் மீட்டு பாதுகாப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் ரேனி கிராமம் அருகே சென்று நிலைமையை கண்காணித்து வருகிறார்.
இதேபோன்று இந்தோ-திபெத் எல்லை போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை 9 உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன என இந்தோ-திபெத் எல்லை போலீசின் இயக்குனர் ஜெனரல் எஸ்.எஸ். தேஸ்வால் கூறியுள்ளார்.
அந்த பகுதியில் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் மலாரி பகுதியருகே பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்டு விட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முதல் மந்திரி ராவத்திடம் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அவரிடம், மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்து உள்ளார்.
இலங்கையில் சமகாலத்தில் தேவையாக இருக்கும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க குழுவிற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய, நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்த விசேட குழுவை நியமித்துள்ளார்.
இந்த அதிஉயர் குழுவில் தமிழ் மக்களைப் பிரதிநிதியாக உள்வாங்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமானுக்கான நியமனத்தை நீதியமைச்சர் அலி சப்ரி வழங்கினார்.
அபிவிருத்தியடைந்துவரும் இலங்கைப் போன்ற நாடுகளில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்பது மிக முக்கிய இடத்தை வகித்துள்ள நிலையில் மேற்கத்தேய நாடுகளும் இந்த விவகாரத்தை வலியுறுத்தி வருகிறது.
பல்லினச் சமூகங்களைக் கொண்ட சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தேசிய நல்லிணக்கமும், தேசிய ஒருமைப்பாடுமே அந்த நாடுகளை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றுள்ளன. இந்த நிலையில், தேசிய ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் இலங்கையில் கட்டியெழுப்புவதற்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெறுகிறது.
இதற்கமையவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தக் குழுவை நியமிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அத்துடன், இந்தக் குழுவின் அங்கத்தவர்கள் பொறுப்புவாய்ந்து. உயர்நிலை பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு, உள்வாங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மொழி பேசும் அங்கத்தவர்களில், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் மனோ சேகரம் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பெப்ரவரி 22ஆம் திகதி இலங்கை வருகை தரவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருடன் அவர் பேச்சுகளை நடத்தவுள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு எதிராக ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 23ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரத்தை மேற்கோள் காண்பித்து சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
” ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ள விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆராய்ந்து, அவ்வறிக்கையில் முக்கிய பரிந்துரைகள் இருக்குமானால் அவை ஏற்றுக்கொள்ளப்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவானது காலத்தை கடந்தும் பொறிமுறை அல்ல என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மனித உரிமை விவகாரம் தொடர்பில் கடந்தகாலங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. ஆராய்வதற்கென குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளை எடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஆராயும். பரிந்துரைகளும் கவனத்தில் கோள்ளப்படும்.
இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் நிறைவேற்றப்பட்ட விடயங்கள் எவை, நிறைவேற்றப்படாத விடயங்கள் எவை, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் எவை என்பது தொடர்பில் ஆராயப்பட்டு பரிந்துரை அறிக்கை முன்வைக்கப்படும்.
அதுமட்டுமல்ல ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் விமர்சனங்கள் இருந்தாலும், அவ்வறிக்கையிலுள்ள விடயங்களும் ஆராயப்பட்டு, முக்கியமான விடயங்கள் இருப்பின் அவற்றை நாம் ஏற்கவேண்டும். ஏனெனில் சர்வதேச சமூகம் இதனையே எதிர்ப்பார்க்கின்றது.
காலத்தை கடந்தும் நோக்கில் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை. காலம் கடந்தேனும் உண்மையான நோக்கிலேயே அக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.” – என்றார்.
பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. நேற்று முன்தினம் 105 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்று 197 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் பதுளை மாவட்டத்தில் இதுவரை 584 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது.
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...
'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்...
யாழில் பொலிஸாரைக் கண்டதும்
ஹெரோயினை விழுங்கிய இளைஞர்!
- உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில்...
மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!
- உடப்பு பகுதியில் பெருஞ்சோகம்
புத்தளம் மாவட்டம், உடப்பு - பூனபிட்டிய களப்பிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை...