Home Blog Page 3633

சம்பளப் பேச்சுவார்த்தையில் முள்ளுத் தேங்காய் பயிரிடுதலை நுழைக்கப் பார்க்கும் கம்பனி தரப்பு

சம்பள நிர்ணயத்துக்கான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஏறக்குறைய முறிவடைந்துள்ளன. மீண்டும் கூடிப் பேச திகதி குறிப்பிடப்படாமலே இழுத்தடிப்பு நடக்கிறது. அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா என்பதை ஏற்றுக் கொள்ள கம்பனி தரப்பு தயாரில்லை. கொடுப்பனவுகளுடன் கூடிய 1005 ரூபாய் வழங்க அது முன்வந்துள்ளது.

ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இதற்கு உடன்படுவதாகத் தெரியவில்லை. ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்தபடி கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற நிலைப்பாட்டிலேயே இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பும் இன்னும் இருக்கின்றன.

இ.தொ.கா. தமது தீர்மானத்தை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதால் தொழிலாளர்கள் பெற்றுவரும் வரப்பிரசாதங்கள் இல்லாமல் போகுமென அது யோசிப்பதாக தெரிகின்றது. இ.தொ.கா. இப்படியோசிப்பதில் புதுமையொன்றும் கிடையாது. ஏனெனில் கூட்டு ஒப்பந்தம் இ.தொ.காவின் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு ஒரு துரும்பாக பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மலையக புத்திஜீவிகளைப் பொறுத்தவரை கூட்டு ஒப்பந்தம் ஒரு சாபக்கேடு, ஏமாற்று. ஆனால் கூட்டு ஒப்பந்தத்தை இல்லாதொழிப்பதே சிறந்தது என்று அவர்கள் கருதுகின்றார்கள்.
இதற்கிடையே சிங்கள வாரப்பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தி நமது கவனத்தை ஈர்க்கின்றது. பெருந்தோட்டக் கம்பனிகள் 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்க வேண்டுமெனில் தேயிலைச் செடிகளுக்கு ஊடே முள்ளுத்தேங்காய் பயிரிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளதாம். கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்று வரும் அமைச்சர்களிடமே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டதாம். அதுவும் மலையக தொழிற்சங்கங்கள் எதுவும் பக்கத்தில் இல்லாதபோதே இவ்விவகாரம் தொடர்பாக பேசப்பட்டதாக அச்சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

முள்ளுத்தேங்காய் உற்பத்திக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச  முற்றாக த டைவிதித்துள்ளார். இத்தடை மலையகத்துக்கும் பொருந்தும். அதனால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கோரிக்கையை கைகழுவி விட்டதாக தெரிகிறது.

முன்பு வெளிவாரி உற்பத்தியை விதந்துரைத்துவந்த பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஓரங்கமான தோட்டத் துரைமார் சங்கம் தற்போது அதனை அடக்கி வாசிக்க தலைப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இலங்கை தோட்ட துரைமார் சங்கத்தின் புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல இதனை உறுதி செய்திருக்கின்றார்.

பெருந்தோட்டத்துறை காணிகளை சிறுதோட்டங்களாக பிரித்து தொழிலாளர்களுக்கு வழங்குவதால் தேயிலை உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்படும். கண்டிப் பகுதியில் கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னர் பரீட்சார்த்தமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட சில தோட்டங்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டிருப்பது சரியான சான்று என்கிறார் அவர்.

எனினும் மேலதிக தேயிலைக்கான விலைக் கொடுப்பனவு, உற்பத்தித் திறன் சலுகை, வருகை அடிப்படையிலான ஊக்குவிப்பு என்ற அடிப்படையிலேயே தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை வரையறை செய்வதே தோட்டத் துரைமார் சங்கத்தின் முனைப்பாக இருக்கின்றது.

இதற்கு இணக்கம் காணாவிட்டால் வேறு இரு முன்மொழிவுகளை அது சமர்ப்பித்திருக்கின்றது. தேயிலைச் செடிகளுக்கிடையே (மாற்றுப் பயிர்ச்செய்கை) முள்ளுத் தேங்காய் உற்பத்திக்கு அனுமதி அல்லது உழைப்புக்கேற்ற ஊதியம் என்னும் அடிப்படையில் வெளிவாரி உற்பத்தி முறைமையை கைக்கொள்ளல் என்பனவே அந்த யோசனைகள். பெருந்தோட்டத் துறையில் மாற்றுப் பயிர்செய்கை என்பது புதிய விடயமல்ல. 1823ஆம் ஆண்டு ஜோர்ஜ் போர்ட் என்பவர் கம்பளையில் 400 ஏக்கர் காணியில் ஒரு தோட்டத்தை உருவாக்கினார்.

இதுவே பெருந்தோட்டப் பரவலுக்கு அடித்தளமாக அமைந்தது. அதில் கறுவா உற்பத்தியே முதன்மை பெற்றிருந்தது. இதில் வீழ்ச்சி ஏற்பட மாற்றுப் பயிர்ச்செய்கையாக கோப்பிப் பயிர்ச் செய்கையே அந்த இடத்தை பிடித்தது 1824 எட்வர்ட் பான்ஸ் கன்னொருவையில் கோப்பி த் தோட்டம் ஒன்றை உருவாக்கினார். இதன் பின்னர் கோப்பிப் பயிர்ச்செய்கை பணப்பயிராக பரிமாற்றம் கண்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டன. குறுகிய காலத்தில் கூடிய இலாபத்தை தந்தது கோப்பி உற்பத்தி. இதற்காகவே 1820 / 1840 காலப்பகுதிகளில் இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால் 1870களில் ஹெமிலியா வெஸ்ட்ராறிக் என்ற பூச்சி இனம் நாசப்படுத்த ஆரம்பித்தது.

இதனால் பருவக்கால பயிராய் இருந்து அமோக வருமானத்தை தந்து கொண்டிருந்த கோப்பி உற்பத்தி கேள்விக் குறியானது.

எனவே இதற்கு மாற்றுப் பயிர்ச் செய்கை அவசியமானது. இப்படி அறிமுகமானதுதான் தேயிலை. 1851ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லரால் கண்டி ஹெவாஹெட்ட லூல்கந்துர தோட்டத்தில் பரீட்சார்த்த பயிரிடல் நடந்தது. காலவரையில் இத்தேயிலைப் பயிரீடு வியாபித்து. கோப்பிக்கு பதிலீடானது. பெருந்தோட்ட விவசாயத்தில் தேயிலையுடன் கொக்கோ, தென்னை என்பனவும் பயிரிடப்பட்டன. இந்த மாற்றுப் பயிர்ச்செய்கை எந்தவொரு வகையிலும் தேயிலைப் பயிர்ச்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தேயிலைச் செடிகளை அழித்துவிட்டு மாற்றுப் பயிர்ச்செய்கை இடம்பெறவில்லை. சில தனியார் நிறு வனங்கள் மட்டும் தேயிலைச் செடிகளுக்கிடையில் தென்னை வளர்ப்பை மேற்கொண்டன.

இதேநேரம் இறப்பரும் மிக முக்கியமான பெருந்தோட்டப் பயிரானது. இதற்காக புதிய காணிகளே பயன்படுத்தப்பட்டன. எனவே தேயிலைப் பயிரின் நிலைமை முதன்மையாகவே இருந்து வந்தது. தேயிலை நீண்டகால முதலீட்டுப் பயிர். ஆகவே இதில் ஆங்கிலேய கம்பனிகள் பெரிதும் நாட்டம் கொண்டிருந்தன. எனினும் பெருந்தோட்டங்களில் பயிரான கொக்கோ, தென்னை என்பன போதிய பராமரிப்பின்றி அழிவடைந்து வரும் நிலைமையே இன்று காணப்படுகிறது. தேயிலையும் இறப்பரும் கூட இன்று சவால்களை எதிர்நோக்கியுள்ளன.

402 பெருந்தோட்டங்களை 22 தனியார் கம்பனிகள் குத்தகைக்கு பெற்றது முதல் தேயிலை, இறப்பர் பயிர்ச்செய்கை கேள்விக் குறியாகி வருகின்றது. இன்று தேயிலை, இறப்பர் விளைந்த காணிகளின் அளவு குறைவடைந்துள்ளது. பெரும்பாலானவை கைவிடப்பட்டு காடுகளாகிக் கொண்டிருக்கின்றன. அரசியல் ரீதியான அனுகுமுறைகளால் பெருந்தோட்டக் காணிகள் துண்டாடப்பட்டன. மாற்றுப் பயிரிடல் என்ற பெயரில் பைனஸ் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உள்நுழைந்ததுதான் முள்ளுத்தேங்காய் பயிர்ச்செய்கை.

நிலவளம் நீர்வளம் மாசடையவும் இயற்கையின் கொடைகளை இல்லாமலாக்கவும் முள்ளுத்தேங்காய் வழிவகுக்கும் என்பதை இன்று அரசாங்கமே ஏற்றுக்கொண்டு முள்ளுத்தேங்காய் உற்பத்திக்கு முழுமையாக தடை விதித்துள்ளது.

தேசிய ரீதியிலான செயற்திட்டங்களில் இருந்து பெருந்தோட்டத்துறை தனிமைப்படுத்தப்பட்டு வந்துள்ளமையால் முள்ளுத்தேங்காய் பயிரிடல் தடையும் எங்களைப் பாதிக்காது என்ற மனோபாவத்துடன் கம்பனி தரப்பு இன்னும் இருப்பதாகவே தெரிகின்றது. இல்லாவிட்டால் தேயிலைச் செடிகளுக்கிடையே முள்ளுத்தேங்காயைப் பயிரிடும் யோசனையை முன்வைக்குமா?.

பெருந்தோட்டங்களில் மீள் பயிர்ச்செய்கைக்கான முதவீடு நீண்டகாலம் கழித்தே பிரதிபலனைத் தரும் என்பதால் அதுகுறித்து தோட்டக் கம்பனிகள் அக்கறை காட்டுவதில்லை. எனவே அவை பயிர்ச் செய்கையை பன்முகப்படுத்தி மாற்றுப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதை நியாயப்படுத்துகின்றது. தவிர பெருந்தோட்டங்களை கையேற்கும் தருணத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி காலத்துக்குக் காலம் பயிர்ச்செய்கைகளை மாற்றும் உரிமை அதற்கு இருக்கவே செய்கின்றது. இதனடிப்படையிலேயே தொழிற்சங்கங்களின் எதிர்ப்பினையும் பொருட்படுத்தாது முள்ளுத்தேங்காய் உற்பத்தியில் நாட்டம் காட்டியது. இன்னும் காட்டுகின்றது.

இவ்வேளையில் தொலைநோக்குடன் பிரச்சினையை கையாளவேண்டிய கடப்பாடு தொழிற் சங்கங்களையே சார்ந்துள்ளது. தேயிலையை அடியோடு துவம்சம் செய்யும் போக்கிலான மாற்றுப் பயிர்ச்செய்கையை ஏற்றுக்கொள்ளவே கூடாது. எனவே கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி மலையகத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றுகூடி பேசி சரியான தீர்மானம் ஒன்றுக்கு வருவதன் மூலம் மட்டுமே கம்பனி தரப்பின் கைவரிசையை கட்டுப்படுத்த முடியுமாயிருக்கும்.

பிந்திய தகவலாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் அரச சம்பள நிர்ணய சபையின் அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாவது மாற்றம் ஏதாவது ஏற்படுமாயின் பெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் பிரகாசமானதாக அமையுமென நம்பலாம்.

பன். பாலா

நாளை தீர்வு இல்லையேல் போராட்டம் உச்சம் பெறும் – இ.தொ.கா. எச்சரிக்கை!

அடையாள வேலை நிறுத்த போராட்டம் அமோக வெற்றிபெற்றுள்ளது. இந்த முதல் முடக்கம் முதலாளிமார் சம்மேளனத்தை முடக்கியுள்ளது. விடாப்பிடியாக இருந்த கம்பனிகளுக்கு தொழிலாளர்களின் ஒன்றுமை எச்சரிக்கையாகும்.நாளைய பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு தொடர்பில் சாதகமான முடிவு கிடைக்கவில்லையென்றால் போராட்டம் மேலும் மூர்க்கமடையும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.கா உபதலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர்தெரிவித்தனர்.

மக்கள் மத்தியில் ஒற்றுமையில்லையென்ற நினைப்பிலேயே கம்பனிகள் செயற்பட்டு வந்தன. இன்று தொழிலாளர்களின் ஒற்றுமை, பலம் என்பன காண்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொதுவான விடயம், நியாயமாக இருந்தால் இணைந்து போராடுவதற்கு தயார் என்ற தகவலையும் மக்கள் வழங்கியுள்ளனர்.

அதே நேரம் கூட்டு ஒப்பந்தம் அடிமை சாசனம் என்று பலர் கூறுகிறார்கள் உலகளவில் கூட்டு ஒப்பந்தம் மூன்று வருடத்திற்கு ஒரு முறைதான் நடைபெற்றது. ஆனால் இங்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்றது. அப்படி இருக்கும் போது இது அடிமை சாசனம் என்று கூறுவது எவ்வாறு. அதே நேரம் இன்றுள்ள பல தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் இருப்பதனையே விரும்புகின்றனர், ஏன் என்றால் அதில் சம்பளம் மாத்திரமன்று நலன்புரிவிடயங்களும் அடங்கியிருக்கிறது.

நாளை பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. தொழிலாளர்களின் பலத்தைக்கண்டு கம்பனிகளும் நடுங்கியுள்ளன. சாதகமான தீர்வு கிடைக்குமென நம்புகின்றோம். சம்பள உயர்வு எப்போது கிடைக்கும் என்பது தொடர்பான அறிவித்தல் நாளை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இது இ.தொ.காவின் பலத்தைக்காட்டுவதற்காக நடத்தப்பட்ட போராட்டமல்ல. கம்பனிகளுக்கு எதிரானது. மக்கள் தமது பலத்தைக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்த்த முடிவு நாளை திங்கட்கிழமை சம்பள நிர்ணய சபையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும்.

மக்களின் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. ஒட்டுமொத்த தொழிலாளர்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்து தமது பலத்தை கம்பனிகளுக்கு நிரூபித்துள்ளனர். இ.தொ.கா. எப்போதும் மக்கள் பக்கம் நின்றே அனைத்து முடிவுகளை எடுக்கும் இவ்வாறு எடுக்கப்பட்ட முடிவுகளால் தொழிலாளர்கள் பல நன்மைகளை அடைந்துள்ளனர்.

நாளைய தினம் சம்பள நிர்ணய சபையில் மக்கள் எதிர்பார்த்த முடிவு வருமென்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.

நன்றி – தினகரன்

வத்தளை முருகன் ஆலயத்தை உடன் நிர்மாணிக்க பணிப்புரை

தீ விபத்தினால் சேதமடைந்த வத்தளை ஶ்ரீசிவசுப்ரமணியம் ஆலயத்தை புனரமைப்புச் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.

வத்தளை முருகன் ஆலயத்தில் இன்று காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், மாலை ஐந்து மணிக்கு சேத விபரங்களை செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் பாபு சர்மா ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

அத்துடன், விபத்து குறித்த அறிக்கையொன்றை பிரதமருக்கு நாளைமறுத்தினம் திங்கட் கிழமை சார்பிக்கவுள்ளனர்.

அத்துடன் ஆலயத்தை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான பணிப்புரையையும் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கினார்.

இலங்கையில் இன்று 3,838 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது

இலங்கையில் இன்று 3 ஆயிரத்து 838 கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் பணி கடந்த 29 ஆம் கொழும்பில் ஆரம்பமானது. முதல் நாளில் 5 ஆயிரத்து 286 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கே இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று 9 ஆயிரத்து 983 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 9 நாட்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 148  பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

‘சிவநேசனுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்’ – ராஜமணி பிரசாந்த் சீற்றம்

” கடந்த அரசாங்கத்தில் போராடாமல் அதிகார சபை,பிரதேச சபைகளை பெற்றவர்களுக்கு ஏன் ஐம்பது ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசனிடம்,  கேள்வி எழுப்பியுள்ளார் இ.தொ.காவின் இளைஞர் அணித் தலைவரான  ராஜமணி பிரசாந்த்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல சாதகமாக கருத்துகளை வெளியிட்டு வருகின்ற நிலையில் மலையகத்தை பிரதிநித்துவம் செய்கின்ற அரசியல் கட்சியாகவும் தொழிற்சங்கமாகவும் செயற்படும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் அரசியல் இலாபத்திற்கு அறிக்கை வெளியிட்டு வருகின்றார். அவரின் அறிக்கையில் கூறப்பட்ட கருத்துக்கள் நகைச்சுவையாக உள்ளது.

கடந்த காலங்களிள் கூட்டு ஒப்பந்த பேச்சிவார்த்கைகளின்போது பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக தமது அழுத்தத்தை தெரிவிக்க பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றே வந்துள்ளன. இவ்வாறான நிலையில் தற்போது தெரிவிக்கபட்ட அழுத்தம் ஒன்றும் புதிதல்ல. அத்தோடு இதனை அரசியலாக்கி,இந்த வேலைநிறுத்த போராட்டத்தை மழுங்கடிக்க செய்ய தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த போதும் வேலைநிறுத்த போராட்டம் 100% வெற்றி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாத இவர் தற்போதும் சுயநலமாக அறிக்கை வெளியிடுவது அவரின் பிற்போக்கான அரசியலை வெளிபடுத்துகின்றது.

கடந்த அரசாங்கத்தில் போராடாமல் அதிகார சபை, பிரேதச சபைகளை அமைத்தவர்களுக்கு ஏன் தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக கூறிய ஐம்பது ரூபாய் கொடுப்பனவை பெற்றுகொடுக்க முடியாமல் போனது இது அவர்களின் கையாலாகத தனம் காரணம்.

கடந்த அரசாங்கத்தில் பிரதேச சபைகளை அமைக்கவோ, மலையக அதிகார சபையை அமைக்கவோ போராட வேண்டிய தேவை இருக்கவில்லை. அந்த நல்லாட்சி அரசை உருவாக்க முழு காரணம் மலையக மக்கள் இருந்துள்ளனர். எனவே அதற்கான நன்றிகடன் செய்ய வேண்டிய தேவை அப்போதைய அரசுக்கும் அரசின் பங்காளிகளுக்கும் இருந்தது.

அதிகார சபையும் பிரதேச சபையும் அரசாங்கம் சார்ந்தவை.எனவே இலகுவாக கிடைத்து. ஆனால் பெருந்தோட்ட துறை என்பது தனியார் துறையோடு சம்பந்தபட்டது. எனவே அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தே சிலவற்றை பெறமுடியும். எனவே அழுத்தங்களை பிரயோகித்தும் போராடியும் தான் தனியார் துறையான பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திடம் இருந்து எமக்கான தேவைகளை பெற வேண்டும்.

கடந்த கூட்டு ஒப்பந்த பேச்சிவார்த்தையின் போது தலவாக்கலையில் மக்களை வீதிக்கு இறக்கி போராடியது நினைவு இல்லையா? கடந்த மாதம் கூட ஹட்டன் மல்லியப்பு சந்தியில் மக்களை வீதியில் இறக்கி போராடியது சிவநேசனுக்கு நினைவு இல்லையா? எனவே இது அரசியல் இலாபத்திற்கா செய்யபட்ட போராட்டங்களா என சந்தேகம் எழுகின்றது. ஆனால் இம்முறை இ.தொ.கா யாரையும் வீதியில் இறங்கி போராடவேண்டும் என கோரவில்லை. மாறாக வீடுகளிள் இருந்தே தமது அழுத்தத்தை கம்பனிகளுக்கு எதிராகவே தெரிவிக்குமாறு கோரியது இ.தொ.கா. எனவே இப்போராட்டம் வெற்றி பெற்றுள்ளது,அதை போன்றே அடுத்த பேச்சிவார்த்தையிலும் சாதகமான முடிவு வரும் என எதிர்பார்க்கின்றோம்.

தற்போதைய நிலையில் அரசியல், தொழிற்சங்க பேதமின்றி பெருந்தோட்ட மக்கள் தமது வேதன உயர்விற்காக ஓர் அணியாக தமது ஒற்றுமையை வெளிபடுத்துகின்ற நிலையில் தொழிலாளர் தேசிய சங்கம் மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கின்றதா என அதன் தலைவர் திகாம்பரம் தெளிவுபடுத்த வேண்டும். தலைமையின் அனுமதியை பெற்றா இளைஞன் அணி தலைவர் சிவநேசன் இவ்வாறான அரசியல் காழ்ப்புணரச்சியில் அறிக்கை வெளியிடுகின்றார். மலையக பெருந்தோட்ட மக்களையும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களை காட்டிகொடுக்கும் வகையில் சிவநேசன் விடும் அறிக்கைக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என இ.தொ. கா இளைஞர் அணி தலைவர் ராஜமணி பிரசாந்த் தெவித்துள்ளார்.

ஆயிரம் ரூபாவை வழங்கவே முடியாது – தோட்டக் கம்பனிகள் திட்டவட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்கவே முடியாது என்று  இலங்கை பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அத்துடன், சம்பள நிர்ணய சபைக்கு சென்றால் அங்கு குறைந்தபட்ச சம்பளமே நிர்ணயிக்கப்படும் என்று மேற்படி சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

” அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்கமுடியாது. ஆனாலும் ஆயிரம் ரூபாவரை சம்பளம் பெறக்கூடிய மூன்று திட்டங்களை நாம் வழங்கினோம். அதன்மூலம் இலகுவில் ஆயிரம் ரூபாவை பெறலாம். எனினும், அதனை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நியூஸ்பெஸ்ட்டுக்கு ரொஷான் ராஜதுரை வழங்கிய நேர்காணல்….

இரட்டை சதமடித்து ஜோ ரூட் சாதனை – வலுவான நிலையில் இங்கிலாந்து

இங்கிலாந்து அணி 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 180 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று ஆரம்பமானது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில 89.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 263 ஓட்டங்களை சேர்த்தது. கேப்டன் ஜோ ரூட் 128 ஓட்டங்களுடன் (197 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சில் மட்டுமின்றி களத்தடுப்பிலும் ஏமாற்றமளித்தனர்.

இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். சேப்பாக்கம் ஆடுகளம் இன்றும் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருந்ததால் இங்கிலாந்து அணியினர் ஓட்டங்களை வேகமாக குவித்தனர்.

ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் கூட்டணி அதிரடியாக விளையாடியது. இதில் ஸ்டோக்ஸ் 74 பந்துகளில் 50 ஓட்டங்கள் அடித்தார். கேப்டன் ஜோ ரூட்டும் தன் பங்குக்கு 150 ஓட்டங்களை கடந்தார். பின்னர் 2 ஆம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 119 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 355 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 156 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 63 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்கு பிறகும் விரைவாக ஓட்டங்கள் எடுத்த ஸ்டோக்ஸ், நதீம் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து 82 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வழக்கம்போல தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட், 195 ரன்களில் இருந்தபோது அஸ்வின் பந்தில் சிக்ஸர் அடித்து இரட்டை சதம் எடுத்தார்.

341 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசினார். இது ஜோ ரூட்டின் 5-வது டெஸ்ட் இரட்டை சதமாகும். கேப்டனாக 3-வது இரட்டை சதம். 100-வது டெஸ்டில் இரட்டை சதம் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றார்.

எனினும் நதீம் வீசிய பந்தில் ரூட் 377 பந்துகள் (218 ரன்கள் 19 பவுண்டரி, 2 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார். ஸ்டோக்ஸ் (82), போப் (34), ஜோஸ் பட்லர் (30) மற்றும் ஆர்ச்சர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பெஸ் (28) மற்றும் லீச் (6) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்திய அணி தரப்பில் இஷாந்த், பும்ரா, அஸ்வின் மற்றும் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர்.2வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 180 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ரன்கள் குவித்துள்ளது.

68 ஆயிரத்தை தாண்டியது ‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 62 ஆயிரத்து 594 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 64 ஆயிரத்து 192  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை 15 ஆம் திகதி

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்குரிய நேர்முக பரீட்சை எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளிலும் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.

தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கான நேர்முக பரீட்சைக்குரிய கடிதங்கள் உரிய கல்வியியல் கல்லூரிகளினூடாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தம் அடிமை சாசனம் அல்ல! பாதுகாப்பு கவசம் என்கிறார் கணபதி கனகராஜ்

கூட்டு ஒப்பந்தமானது தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்ட அடிமை சாசனம் என விமர்சித்தவர்கள், தற்போது அது தோட்டத்தொழிலாளர்களை காக்கும் கவசம் எனவும் அதன் சரத்துக்களை நீக்கக் கூடாது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கூட்டு ஒப்பந்தம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தையும் தாண்டி அவர்களின் தொழில் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, மற்றும் அவர்களின் நலன்புரி விடயங்கள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாகும். இதை நாம் தொடர்ச்சியாக தெளிவுபடுத்தியும், வலியுறுத்தியும் வந்திருக்கிறோம்.

எதிரணி தொழிற்சங்கங்கள் இதன் உண்மைத்தன்மையை அறிந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட அரசியல் தொழிற்சங்க நிகழ்ச்சி நிழலுக்காக கூட்டு ஒப்பந்தத்தை அடிமை சாசனம் என விமர்சனம் செய்து வந்தார்கள். ஆனால் இன்று அதன் சரத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கடந்த காலங்களில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவேகூட்டு ஒப்பந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1000 ரூபா சம்பள உயர்வினை கூட்டு ஒப்பந்த முறையின் மூலம் பெற்றுக் கொடுக்க பெருந்தோட்ட கம்பனிகள் முன்வராவிட்டால் சம்பள நிர்ணய சபை முறைக்கு செல்லவும் தயங்கமாட்டோம் என்று கூறிய பிறகு சில மலையக அரசியல்வாதிகளின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

தற்போதைய நிலையில் ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்தநிலையில் சம்பள நிர்ணய சபைக்கு சென்றாலும் அரசாங்கத்தின் ஆதரவோடு ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சாதுரியமாக பயன்படுத்திக் கொள்ளும். அதே நேரத்தில் கூட்டு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஒரு போதும் உதாசீனம் செய்துவிட முடியாது என்பதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட உள்ளோம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரையில் அரசியல் தொழிற்சங்க லாபங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்படுகின்ற அமைப்பாகும். இதனால்தான்கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த விமர்சனங்கள், அவமானங்கள், பொய் பிரச்சாரங்கள்என்பனவற்றை மிகுந்த வேதனையோடு தாங்கிக்கொண்டு சரியானதும் நிலையானதுமான பாதையில் பயணம் செய்து வந்திருக்கிறோம்.

இந்த நிலையிலாவது கூட்டு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து எதிரணி தொழிற்சங்கங்களின் கருத்து வெளிவந்திருப்பது சற்று ஆறுதலை தருகிறது. எதிர்வரும் காலங்களில் இவர்கள் அரசியல் லாபங்களுக்காக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினை பிழையான திசைக்கி திசைதிருப்ப கூடாது என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம். ” எனவும் கணபதி கணகராஜ் கூறினார்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

” பதுளை மாவட்டத்தில் அதிக ஆபத்துள்ள வீடுகளாக 1,376 தோட்ட வீடுகளும் 1,474 கிராமிய வீடுகளும் அடையாளம்”

0
'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்...

யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞர்!

0
யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞர்! - உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில்...

மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!

0
மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு! - உடப்பு பகுதியில் பெருஞ்சோகம் புத்தளம் மாவட்டம், உடப்பு - பூனபிட்டிய களப்பிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை...