Home Blog Page 3634

‘கொரோனா’விலிருந்து 62,594 பேர் மீண்டனர் – 4,913 பேர் சிகிச்சையில்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் ஆயிரத்து 133 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 4 ஆயிரத்து 913 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 343  பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரம் ரூபா கை கூடுமா? நாளை மறுதினம் கூடுகிறது சம்பள நிர்ணய சபை!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுப்பதற்காக சம்பள நிர்ணய நாளை மறுதினம் 8  ஆம் திகதி கூடவுள்ளது.

முன்னதாக இன்று 6 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சில ஆவணங்களை தயாரிப்பதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் அவகாசம் கோரியுள்ளதாலேயே, கலந்துரையாடல் 8 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டது.

கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் நடைபெற்ற கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்படாததால், சம்பளத்தை கையாளும் பொறுப்பு சம்பள நிர்ணய சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் அரச தரப்பிலிருந்து 19 பேர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதேவேளை, தமக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நேற்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் கடையடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் அரசுக்கு சார்பானது’

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் நிறைவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

கடந்தகால போராட்டங்கள் ஏமாற்றத்தையும்,அழிவுகளையும் கொடுத்ததால் தற்போத போராட்டங்களில் தங்களுக்கு தயக்கம் இருக்கு என ஒருவர் கூறியிருதார். இந்த போராட்டம் ஒரு சுயலாபம் கொண்டது இதனால் எதுவும் நடக்கப்போவது இல்லை.

உங்களுக்கு தெரியும் மாகாண சபையை எதிர்த்தவர்களுக்கு ஒரு நீண்ட தூர பார்வை இருக்கவில்லை, ஆனால் அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருந்தது ஆனால் மாகாண சபையை ஏற்று நடத்தியவர்களுக்கு தூரப்பார்வை இருந்தது அவர்களிடம் கட்டுப்பாடு இல்லை இதனால் அது விடுபட்டு போனது.

நீங்கள் கூறுகின்ற இந்த விடையங்கள் எல்லாம் அவர்களுடைய சுயலாப அரசியலோடு சம்பந்தப்பட்டதே தவிர அதில் ஒன்றும் நடக்கப்போவதில்லை அவர்கள் ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிக்கப்பார்க்கின்றார்கள்.

ஒரு வகையில் இந்த அரசாங்கத்திற்கு தென்னிலங்கையில் வலு சேர்க்கின்றார்கள், சர்வதேச சமுகத்திற்கு காட்டுகின்றார்கள் இந்த அரசாங்கத்தில் தாங்கள் போராட்டங்களை செய்யலாம் எனவும், மறு பக்கம் மக்களிடம் வாக்குகளை அபகரிப்பதற்கு பயன்படுத்துகின்றார்கள் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அவர்களால் எங்களுடைய மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவது இல்லை.

இது அரசாங்கத்திற்கு சார்பான போராட்டமே தவிர எங்களுடைய மக்களுடைய விடையங்களை வலுப்படுத்த வேண்டும் என்றோ அல்லது எங்களது மக்களுக்கான போராட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஆயுதப் போராட்ட இலக்கை ஜெனிவா மூலம் அடைய முயற்சி – பதறுகிறது விமலின் கட்சி

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டம் மூலம் அடைய முயற்சித்த இலக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பிரேரணைகள் ஊடாக புலம்பெயர் அமைப்புக்கள் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இம்மாதம் இடம்பெறவுள்ள 46ஆவது கூட்டத்தொடர் தீர்மானமிக்கதாக அமையும். முன்னைய காலங்களில் மனித உரிமைகள் ஆணையாளர், இராணுவத்தினருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார்.

ஆனால் தற்போது அரசாங்கத்துக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இலங்கை தொடர்பில் அவர் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

30 வருட கால யுத்தம் முழு நாட்டுக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. பெரும் போராட்டத்துக்கு மத்தியில் யுத்தம் 2009 மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

கடந்த அரசாங்கம் புலம் பெயர் அமைப்புக்களுக்கும், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களுக்கும் முன்னுரிமை வழங்கியது. இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட 30-1 பிரேரணைக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர்களுக்கும் பாராளுமன்றுக்கும் அறிவிக்காமல் இணை அனுசரணை வழங்க இணக்கம் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் சர்வதேச அமைப்புக்களின் நோக்கங்கள் நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டன. அரசியல் நோக்கங்களை கொண்டு பாதுகாப்பு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் சிறைப்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டதால்தான் கடந்த அரசாங்கத்தை மக்கள் புறக்கணித்தனர்.இதேவேளை நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சர்வதேச அமைப்புக்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட 30-1 பிரேரணையிலிருந்து அரசாங்கம் விலகிக்கொண்டமை முதற்கட்ட செயல்பாடாகும்.

ஆகவே இம்மாதம் இடம்பெறவுள்ள 46 ஆவது கூட்டத்தொடர் தீர்மானமிக்கமாகக் காணப்படும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஆயுமேந்தி போராடியதன், இலக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் பிரேரணைகள் மூலம் புலம்பெயர் அமைப்புக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றார்.

யுத்தக்குற்றங்கள் இடம்பெறவில்லை என சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் கவனம் செலுத்தவில்லை. ஆகவே குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை இம்முறை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் எனத் தெரிவித்தார்.

கொழும்பில் கடந்த 5 நாட்களில் 1,144 பேருக்கு கொரோனா!

இம்மாதத்தில் கடந்துள்ள 5 நாட்களில் மாத்திரம் (பெப்ரவரி 1 முதல் 2 வரை) 3 ஆயிரத்து 693 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 144 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 516 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் ஆயிரத்து 261 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

மத்திய மாகாணத்தில் கடந்துள்ள 5 நாட்களில் கண்டி மாவட்டத்தில் 429 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 48 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 67 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

‘சத்தமின்றி சாதித்தார் திகா! இ.தொ.காவால் ஏன் முடியவில்லை? சிவநேசன் கேள்வி

தொழிலாளர்களின் உரிமைக்காக கம்பனிகளிடம் பேரம்பேச முடியாத பிரதிநிதிகள், மக்களை வீதிக்கு இறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,

” கம்பனிக்காரர்களிடமிருந்து, தொழிலாளர்களின் தொழில்சார் உரிமைகளை வென்றெடுப்பதற்கு உருவாக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் கை சாத்திடும் பிரதிநிதிகள் திறனற்றவர்களாகவே இருக்கின்றனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஏழு பேர்ச்சஸ் காணியும், 10 லட்சம் ரூபா பெறுமதியான வீடுகளையும் கட்டி கொடுக்க தலைவர் திகாம்பரம், மக்களை வீதிக்கு இறங்க வைக்கவில்லை, போராட்டமும் செய் வில்லை.

மலையக அதிகார சபையை உருவாக்க மக்களை வீதிக்கு இறக்கவில்லை. பிரதே சபைகளை அதிகரிக்க கடையடைப்பு போராட்டமும் செய்யவில்லை.

தோட்டங்களில் காபட் பாதையை போடுவதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களை வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லவும் இல்லை.

மக்கள் உங்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் பிரதி நிதியாக இருக்கின்றீர்கள் ! இதை விட வேறு என்ன வேண்டும்?

1000/=ரூபாய் சம்பளத்தை பெற்று கொடுக்க,
திகாம்பரம் எவ்வாறு மக்களை வீதிக்கு இறங்காமல் உரிமைகளை பெற்று கொடுத்தாரோ
அதே போன்று உங்களுக்கு பெற்று கொடுக்க தைரியம் இல்லையா அல்லது சாணக்கியம் தெரியவில்லையா?

முடியவில்லை என்றால் உடனே கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறவும்.அதை விடுத்து விட்டு உங்களின் பெருமையையும் அருமையையும் வெளிகாட்ட மலையக மக்களை பகடைக்காயாக பயன் படுத்தாதீர்கள்.” – என்றார்.

பாடலாசிரியரை மகிழ்வித்த நடிகர் விஷால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், சக்ரா படத்தின் பாடலாசிரியரை நெகிழ வைத்து இருக்கிறார்.

தமிழில் வெளியான பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் பாடலாசிரியர் கருணாகரன். இவர் விஷால் நடித்து முடித்துள்ள சக்ரா என்ற திரைப்படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் பாடலாசிரியர் கருணாகரன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். சக்ரா படக்குழுவினர் அவர் தனது பிறந்த நாளை கொண்டாடியதோடு அவர்கள் முன் பிறந்தநாள் கேக்கையும் வெட்டினார்.

இதனையடுத்து அடுத்து இயக்குனர் எம்.எஸ். ஆனந்தன் மற்றும் நடிகர் விஷால் ஆகிய இருவரும் கருணாகரனுக்கு கேக் ஊட்டினர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மியான்மரில் பிரதான இணைய சேவைகள் முடக்கம் – வலுக்கிறது கண்டனம்

மியான்மரில் தொடரும் இணைய சேவைகள் முடக்கத்திற்கு டுவிட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் இராணுவத்திற்கும் அந்த நாட்டு அரசிற்கும் மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது. அங்கு போராட்டங்கள் பரவுவதை தடுக்கும் வகையில்   7  ஆம் திகதி வரை பேஸ்புக் பயன்பாட்டுக்கு மியான்மர் இராணுவம் தடை விதித்தது.

இதன்படி அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு இணையதள சேவை வழங்குனர்களால், பேஸ்புக் சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன

இந்த சூழலில் டுவிட்டர் சேவையும் மியான்மரில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. முன்னதாக மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி லட்சக்கணக்கான பதிவுகள் டுவிட்டரில் வெளியாகி வந்தன.

இதுதொடர்பாக அந்நாட்டு தகவல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட ஆவணங்களில், “போலியான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முக்கிய கருவியாக டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நாட்டின் பொது நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு மறு அறிவுப்பு வரும் வரை டுவிட்டர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது” என்று தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மியான்மரில் ஆங் சான் சூகி மற்றும் தலைவர்களை கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு பிறகு, மியான்மரில் தொடரும் இணைய சேவைகள் முடக்கத்திற்கு டுவிட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

போர்காலத்தில் நடந்தவற்றை ‘மறப்போம் – மன்னிப்போம்’ – சம்பிக்க அழைப்பு

” பிரிவினைவாத போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதற்கு எதிர்ப்பை வெளியிடுவோம்.” -என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அத்துடன், போர்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கதைத்துக்கொண்டிருக்காமல் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கிவிட்டு முன்நோக்கி பயணிக்க வேண்டும்.

ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையில் பிரிவினைவாத போர் ஏற்பட்டிருந்தது. சுதந்திரமாக செயற்படக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. தெற்கிலும், வடக்கிலும் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் இலக்கு வைக்கப்பட்டனர். வடக்கிலிருந்து சிங்கள, முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்த பிரிவினைவாத குழுவை ஒடுக்கவேண்டிய தேவை பாதுகாப்பு படையினருக்கு ஏற்பட்டது. எனவே, தீவிரவாதிகளை ஒழித்ததற்காக எமது நாட்டு படையினருக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கோ, தண்டனை வழங்குவதற்கோ நாம் எதிர்ப்பு.

எவராவது தனிப்பட்ட ரீதியில் தவறிழைத்திருந்தால் தராதரம்பாராது, உள்நாட்டு சட்ட கட்டமைப்பின் பிரகாரம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அதேவேளை, பிரபாகரனுக்கு பிறகு புலிகள் அமைப்பை பொறுப்பேற்ற தலைவர் சுதந்திரமாக வெளியில் இருக்கின்றார். கிழக்கு மாகாண தளபதியாக செயற்பட்ட கருணாவும் அரசியல் செய்கின்றார். இந்நிலையில் சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்களை தடுத்துவைத்திருப்பது நியாயமா? இது குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும்.

போர்காலம் பற்றி தற்போது கதைப்பது பயன் இல்லை. எல்லாவற்றையும் மறந்து, அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி முன்னோக்கி பயணிக்கவே முயற்சிக்கவேண்டும்.” – என்றார்.

கொரோனாவால் இலங்கையில் 60 வயதைக் கடந்த 231 பேர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 330 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 235 பேர் 60வயதைக்கடந்தவர்களென சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 – 30 வயதுக்கிடைப்பட்ட ஆறு பேரும் , 31- 40 வயதுக்கிடைப்பட்ட ஒன்பது பேரும், 41-50 வயதுக்கிடைப்பட்ட30 பேரும், 51 -60 வயதுக்கிடைப்பட்ட 49 பேரும், 61-70 வயதுக்கிடைப்பட்ட  84 பேரும், 71 வயதுக்கு மேற்பட்ட 151  பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது அலையின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

” பதுளை மாவட்டத்தில் அதிக ஆபத்துள்ள வீடுகளாக 1,376 தோட்ட வீடுகளும் 1,474 கிராமிய வீடுகளும் அடையாளம்”

0
'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்...

யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞர்!

0
யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞர்! - உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில்...

மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!

0
மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு! - உடப்பு பகுதியில் பெருஞ்சோகம் புத்தளம் மாவட்டம், உடப்பு - பூனபிட்டிய களப்பிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை...