Home Blog Page 3635

இ.தொ.கா. போராட்டத்தின் பின்னணியில் அதானி நிறுவனம் – ஜே.வி.பி. பகீர் தகவல்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் அதானி நிறுவனம் இருக்கக்கூடும் என்று ஜே.வி.பியின் பெருந்தோட்ட தொழிற்சங்க அமைப்பான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட குறித்த தொழிற்சங்கத்தின் தலைவர் கிட்டினன் செல்வராஜா கூறியவை வருமாறு,

” இலங்கையால் இந்தியாவுக்கு தாரைவார்க்கப்படவிருந்த கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், மக்களின் கடும் எதிர்ப்பால் அந்நாட்டுக்கு வழங்கப்படவில்லை. இதனால் கவலையில் இருக்கும் இந்தியா, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்ஓர் அங்கமாக தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

அந்தவகையில் அரச பங்காளிக்கட்சியாக இருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தப்போராட்டம் இந்தியாவுக்கு சார்பானதா என்ற சந்தேகம் எழுகின்றது. ஏனெனில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பெருந்தோட்டங்களில் பெரும்பாலானவற்றை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு விற்பதற்கான இரகசிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. போராட்டத்தின் நோக்கம் அதுவாகக்கூட இருக்கலாம்.  ” – என்றார்.

இலங்கையில் 156,310 பேருக்கு கொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

இலங்கையில் இன்று 9 ஆயிரத்து 983 கொரோனா வைரஸ் ஒழிப்பு முன்கள பணியாளர்களுக்குகொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் பணி கடந்த 29 ஆம் கொழும்பில் ஆரம்பமானது. முதல் நாளில் 5 ஆயிரத்து 286 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கே இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று 9 ஆயிரத்து 983 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதன்படி 8 நாட்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 310 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

‘கொரோனா’ – மேலும் நால்வர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 343 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது.

2021 ஐபிஎல் ஏலம் – 31 இலங்கை வீரர்கள் பதிவு!

சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள  ஆயிரத்து 97 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்ற நிலையில், 14ஆவது சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இந்நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் ஏலத்திற்கு 1,097 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் மேற்கிந்தி தீவுகளைச் சேர்ந்த வீரர்கள் ஆவார்கள்.இதில் 814 இந்திய வீரர்களும் 283 வெளிநாட்டு வீரர்களும் பதிவுசெய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .

வீரர்கள் பதிவு காலக்கெடு நேற்றுடன் முடிவுற்றது . பதிவு செய்துள்ள 283 வெளிநாட்டு வீரர்கள் விவரம் பின்வருமாறு:

மேற்கிந்திய தீவுகள்- 56 வீரர்கள்.
ஆப்கானிஸ்தான் -30 வீரர்கள்.
ஆஸ்திரேலியா – -42 வீரர்கள்.
வங்காள தேசம் – 5 வீரர்கள்.
இங்கிலாந்து – 21 வீரர்கள்.

அயர்லாந்து – 2 வீரர்கள்.
நேபாளம் – 8 வீரர்கள்.
நியூசிலாந்து- 29 வீரர்கள்.
ஸ்காட்லாந்து- 7 வீரர்கள்.

தென்னாப்பிரிக்கா- 38 வீரர்கள்.
இலங்கை -31 வீரர்கள்.
ஐக்கிய அரபு அமீரகம் -9 வீரர்கள்.

அமெரிக்கா- 2 வீரர்கள்.
ஜிம்பாப்வே- 2 வீரர்கள்.
நெதர்லாந்து – 1 வீரர்.

ஒற்றுமையின் பலத்தை வெளிப்படுத்தியது ஹர்த்தால் – ரமேஷ் மகிழ்ச்சி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உரிமைக்கான போராட்டத்தில் முழு மலையகமும் ஓரணியில் அணி திரண்டு ஈடுப்பட்டமை மலையக மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியிருக்கின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

” தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் மலையக மக்களால் நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலை தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் மலையகத்திலுள்ள அனைத்து கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், நகர வர்த்தகர்கள்,ஆசிரியர்கள்,முச்சக்கரவண்டி சாரதிகள், தனியார் பேருந்து சாரதிகள்,நடத்துனர்கள், அதன் உரிமையாளர்கள், இளைஞர்கள்,யுவதிகள் என பலர் ஆதரவு வழங்கினர். பெருந்தோட்டங்கள் இன்றைய தினம் முழுமையாக முடக்கப்பட்டமை பெருந்தோட்ட மக்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டியுள்ளது. அனைவருக்கும் நன்றி” – என்றும் அவர் கூறினார்.

சம்பளப் பேச்சுக்கான அழுத்தமாக போராட்டம் மாறும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயத்தில், பெருந்தோட்டக் கம்பனிகள் கொண்டுள்ள சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக இன்று (05) முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றி கண்டுள்ளது.

இதன்மூலம், பெருந்தோட்டக் கம்பனிகள் மீது தொழிலாளர்கள் கொண்டுள்ள அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க முன்வந்த, அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கும், இதொகா சார்பில் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

பொதுமக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களை, அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் போது, அது பாரிய வெற்றிகாண்பதோடு, வரலாற்றிலும் இடம்பிடிக்கின்றன.

இவ்வாறானதொரு நிலையில், பெருந்தோட்ட மக்களின் நலன் சார்ந்து, மலையகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தகர்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும், மாற்றுத் தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், அனைத்துத் தரப்பினருக்கும், மீண்டும் ஒருமுறை, இதொகா சார்பில் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயம் தொடர்பில், சம்பள நிர்ணய சபையில் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது, தொழிலாளர்கள். பெற்றுக்கொடுக்கப்படும். அதற்கு, இன்றைய இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம், பெரும் அழுத்தமாக அமையும் என்பது நிச்சயம்.

மீண்டுமொருமுறை, இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஒத்தழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும், இதொகா சார்பில் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செந்தில் தொண்டமான்
உப தலைவர் – இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவிதி மே 20 இல் நிர்ணயம்

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போதைய ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவுக்கு வரவுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், பிரதித்தலைவர்கள் இருவர், செயலாளர், பிரதி செயலாளர், பொருளாளர் மற்றும் பிரதி பொருளாளர் இந்த தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மொனறாகலையில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது’

மொனறாகல மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று பதிவாகியது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான பிபிலை – ரிதிமாலிய பகுதியைச் சேர்ந்த 92 வயதுடைய முதியவரே, பிபிலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
நடராஜா மலர்வேந்தன்

67,451 பேருக்கு கொரோனா – 61,461 பேர் குணமடைவு!

நாட்டில் மேலும் 336 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 61  ஆயிரத்து 461 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 63 ஆயிரத்து 456  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக நாய் எடுத்து வந்த கைக் குண்டு – வீடியோ

நாய் ஒன்று கைக் குண்டொன்றை எடுத்துக் கொண்டு எரிபொருள் நிலையமொன்றுக்கு முன்பாக போட்டுச் சென்றுள்ளது.

மாத்தறை, கெகணதுர பிரதேசத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

கைக்குண்டு வெடிக்காத நிலையில் இருந்ததுடன், இராணுவத்தினர் அழைக்கப்பட்டு, கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

 

 

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞர்!

0
யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞர்! - உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில்...

மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!

0
மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு! - உடப்பு பகுதியில் பெருஞ்சோகம் புத்தளம் மாவட்டம், உடப்பு - பூனபிட்டிய களப்பிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை...

“தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கவும்!”

0
தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கவும்! ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தல் டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த நுவரெலியா மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம்...