Home Blog Page 3636

போராட்டம் வெற்றி – மலையக மக்கள் முன்னணி அறிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை சம்பளம் 1000 ரூபா என்ற கோரிக்கையை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட ஒருநள் அடையாள வேலை நிறுத்தம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 ” பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் தொடர்ச்சியாக பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்ற பொழுதும் அந்த பேச்சுவார்த்தையில் கம்பெனிகள் இணக்கம் தெரிவிக்காத காரணமாக இந்த போராட்டம் கம்பனிகளுக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகத்தில் இருக்கின்ற ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்காத போதிலும் ஏனைய தொழிற் சங்கங்களும் முழுமையான ஆதரவை கொடுத்துள்ளது.

எதிர்காலத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நன்மை கருதி எடுக்கப்படுகின்ற அனைத்து தீர்மானங்களும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து முடிவுகள் எடுக்கப்படும் ஆக இருந்தால் நிச்சயமாக அந்த முடிவுகள் சாத்தியமானதாக அமையும் என்பதே என்னுடைய கருத்தாகும். இன்றைய போராட்டத்தில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மலையக மக்கள் முன்னணி தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.” – என்றும் அவர் கூறினார்.

‘பலத்தை காட்டிவிட்டோம் – நடுக்கத்தில் கம்பனிகள்! திங்கள் நல்ல முடிவு வரும்!!

“முயற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது. அடையாள வேலை நிறுத்த போராட்டம் மூலம் மக்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு தொடர்பில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புகின்றோம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற கடையடைப்பு போராட்டம் ஆகியன தொடர்பில் அட்டனில் இன்று (05.02.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஜீவன் தொண்டமான் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தொழிலாளர்களுக்கான ஊதிய உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். அந்தவகையில் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு சர்வமதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தகர்கள், சிவில் அமைப்புகள், ஆசிரியர்கள், தோட்டத்தொழிலில் அல்லாமல் ஏனைய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என பல தரப்பினரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்பார்த்ததைவிடவும் பேராதரவு கிட்டியது. இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் கூட உணர்வுப்பூர்வமாக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல கொழும்பிலுள்ள வர்த்தகர்களும் ஆதரவை நல்கியுள்ளனர். 8 சர்வதேச நாடுகளும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தன. மக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்ற நினைப்பிலேயே கம்பனிகள் செயற்பட்டுவந்தன. இன்று தொழிலாளர்களின் ஒற்றுமை, பலம் என்பன காண்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொதுவான விடயம், நியாயமாக இருந்தால் இணைந்து போராடுவதற்கு தயார் என்ற தகவலையும் மக்கள் வழங்கியுள்ளனர்.

திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. தொழிலாளர்களின் பலத்தைக்கண்டு கம்பனிகளும் நடுங்கியுள்ளன. சாதகமான தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம். சம்பள உயர்வு எப்போது கிடைக்கும் என்பது தொடர்பான அறிவித்தால் திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

அதேவேளை, இது இ.தொ.காவின் பலத்தைக்காட்டுவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் அல்ல. கம்பனிகளுக்கு எதிரானது. மக்கள் தமது பலத்தைக்காட்டியுள்ளனர். முயற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது. இதன்படி பாரிய போராட்டத்தை நடத்தி மக்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளோம்.” -என்றார்.

க.கிசாந்தன்

கண்டியில் நேற்று 101 பேருக்கும், நுவரெலியாவில் 10 பேருக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 653 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2ஆவது அலைமூலம் கண்டி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 586 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 101  தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

வேகமெடுக்கும் கொரோனா பரவல் – பதுளையில் மூடப்பட்டது ஆடைத்தொழிற்சாலை

பதுளை மாவட்டத்தின் ரிதிமாலியத்தை பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம்  அதிகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால், அப்பகுதியின் கெமுனுபுர ஆடை த் தொழிற்சாலையை உடன்மூடிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதேசத்தின் சுகாதார சேவை பிரதான வைத்திய அதிகாரி அமில கிரிசாவிதான, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இன்று 05-02-2021 முதல் அமுலாகும்படி, இவ்கெமுனுபுர ஆடைத்தொழிற்சாலையை மூடிவிட, விடுக்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கெமுனுபுர ஆடைத் தொழிற்சாலையில், ஆரம்பத்தில் ஓரிருவருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.   அதைத் தொடர்ந்து படிப்படியாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, 05-02-2021இல்176 பேராகியது. இவ் அதிகரிப்பையடுத்தே, இவ்ஆடைத் தொழிற்சாலை உடன் மூடப்பட்டது.

2500 பேர் இவ் ஆடைத்தொழிற்சாலையில் தொழில்செய்து வருகின்றனர். கடந்த03-02-2021இல் 324பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி. ஆர். பரிசோதனையில் 113பேருக்கும், 200 பேருக்கு மேற்கொள்ளப்ப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையில் 63பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது, இன்று 05-02-2021இல் வெளியான பரிசோதனை அறிக்கையில் ஊர்ஜிதமாகியுள்ளது.

எம். செல்வராஜா, பதுளை

ஹர்த்தாலுக்கு மத்தியில் மாணவர்கள் பரிதவிப்பு – நடந்தது என்ன?

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று வருகை தந்திருந்த மாணவர்கள் திரும்பியனுப்பட்டுள்ளனர். சில பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உரிமைக்கான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று மலையகம் தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப்போராட்டமும், கடையடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

போராட்டத்துக்கான அழைப்பு முன்கூட்டியே விடுக்கப்பட்டிருந்தாலும் சில ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இறுதி நேரத்திலேயே தமது ஆதரவை அறிவித்தன. அதேபோல் போராட்டம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்துடனும் உரிய தரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருக்கவில்லை.

இதனால் வழமைபோல் பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி மாணவர்கள் வருகை தந்திருந்தனர். அவ்வாறு வருகை தந்தபின்னர் பலர் திருப்பியனுப்பட்டுள்ளனர்.

உரிய அறிவித்தல்களை முன்கூட்டியே விடுக்காமல், போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என தம்மீது தற்போது குற்றம் சுமத்துவது ஏற்புடையது அல்ல என சில அதிபர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

திட்டமிட்ட அடிப்படையிலான கலந்துரையாடல், உரிய அறிவிப்புகள் இன்மையாலேயே இது விடயத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்கூட்டிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் மாணவர்களுக்கு இன்று காலையிலேயே பரிதவிக்க வேண்டிய நிலை வந்திருக்காது.

ஆங் சான் சூகியை விடுதலை செய்யுமாறு ஐ.நா. வலியுறுத்து

மியான்மர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூகி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், மியான்மர் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

மியான்மரில் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கு உலக அளவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், மியான்மர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூகி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து பேசிய ஐ.நா. தலைவர் அண்டோனியோ குட்டாரெஸ், தற்போது மியான்மரில் நிலவி வரும் சூழ்நிலை கவலையளிப்பதாக தெரிவித்தார். ஜனநாயகம், மனித உரிமை ஆகியவை காக்கப்பட வேண்டும் எனவும் மியான்மர் மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பதுளையில் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ரூபா 1000 வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மலையகமெங்கும் மேற்கொள்ளப்படும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் பதுளை மாவட்டத்தில் பெரு வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் முன்னெடுக்கப்படும் இவ்வேலை நிறுத்தத்திற்கு மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், விவசாயத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட அனைத்து மலையக தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கி வருகின்றன.

பசறை, எல்டெப்,மீதும்பிட்டிய, கோணக்கலை பகுதிகளில் தொழிலாளர்கள் வீடுகளில் இருந்து கொண்டு அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானும் தோட்டங்களுக்கு விஜயம் செய்து தொழிலாளர்களை சந்தித்து வருகின்றார்.

முடங்கியது மலையகம்! தொழிலாளர்களுக்கு பல தரப்புகளும் ஆதரவு!!

தமக்கான நாட் சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று (05.01.2020) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும் என்பதற்காகவும் மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இன்று கடையடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு பெருந்தோட்டக்கம்பனிகள் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை. தொழில் நிபந்தனைகள் அடிப்படையிலேயே சம்பள உயர்வை வழங்குவதற்கு அவர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

இதனால் சம்பள நிர்ணயசபை ஊடாக சம்பளம் தீர்மானிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தினர். இதன்படி 8 ஆம் திகதி சம்பள நிர்ணயசபை கூடவுள்ளது.

இந்நிலையில் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சம்பள நிர்ணயசபை பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவேண்டும் என்பதற்காகவும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கு மலையகத்திலுள்ள கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் என்பன ஆதரவு தெரிவித்திருந்தன. அத்துடன், நகர வர்த்தகர்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு செய்தனர்.

மலையகத்தில் நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் உள்ள நகரங்கள் மூடப்பட்டிருந்தன. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

தொழிலாளர்களும் வீடுகளில் இருந்தவாறே தமக்கான ஊதிய உரிமையை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

க.கிசாந்தன்

‘மாத்தளை மாசிமக திருவிழா இம்முறை ஆலய உள்வீதியில் மட்டுமே’

மாத்தளை அருள்மிகு அன்னைமுத்துமாரி அம்பிகையின் வருடாந்த மாசிமக மகோற்சவம் கொவிட் 19 காரணமாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர்,சுகாதாரஅதிகாரிகளின் ஆலோசனைக்கமைய இம்முறை நடைபெறும்.

வருடாந்த உபயகாரர்கள் பரிபாலன சபை உறுப்பினர்கள் உட்பட வரையறுக்கப்பட்ட பக்தர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவரென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரிபாலன சபையின் தலைவர் விக்னேஸ்வரன் சர்வானந்தன் தெரிவித்துள்ளார்.

வழமையாக நடைபெறும் கொடியேற்ற ஊர்வலம், பரவைக் காவடி, பால்குட பவனி, பஞ்சரத பவனி யாவும் அரச ஆலோசனைப்படி ஆலயத்தினுள்ளேயே நடைபெறும்.

வெளிமாவட்டத்தில் இருந்துவரும் அடியார்கள், சிரேஸ்ட பிரஜைகள், சிறுவர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து அம்பிகையை தரிசிப்பதை தவிர்த்து தங்கள் இல்லங்களில் இருந்தே வழிபடுமாறு பரிபாலன சபையினர் சார்பில் வேண்டுகிறோம்.

அபிசேஷம், ஆராதனை, உள்வீதி திருவிழாயாவும் இணையதளம் வழியாக பார்வையிட்டு அம்பிகையின் அருட்கடாட்சத்தை பெற ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு மார்ச் 03ஆம் திகதிவரைபஞ்சரத பவனியிலே நடுநாயகியாய் வலம் வந்து பக்தர்தம் அஞ்ஞான இருள் அகற்றி மெய்ஞானமெனும் அருள் ஒளி நல்கி, உலகெங்கும் வாழும் இந்துக்களுக்கும் தன் அருள் மாரி பொழிவது என்பது வராற்றுச் சான்றும், சிறப்பும் மிக்கது என்பதை இந்துக்களாகிய நாம் அனைவரும் அறிந்ததே!

அவ்வகையில் இவ்வருடமும் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இருபத்தைந்து நாட்கள் அன்னை முத்துமாரி அபிசேகம், அலங்காரம், ஆராதனை என விழாக்கோலம் பூண்டு கணபதி, சிவன், அம்பாள், முருகன், சண்டேஸ்வரி சகிதமாக பஞ்சரதத்திலே சித்திரத் தேரிலே பவனிவரும் காட்சியை காணாத கண் தான் என்னவோ? என சிந்திக்க வேண்டிய நிலையில், நாம் இலங்கை நாட்டின் இன்றைய சூழ்நிலையிலே ‘கொரொனா 19’ என்ற கொடிய அசுரன் கையில் சிக்கித் தவித்து, ஆலயவழிபாடு, அபிசேகம், ஆராதனை என அகக்காட்சியில் காணவேண்டிய நிலையில் இருக்கின்றோம். எனவே இன்றைய நிலைமைகளை கருத்தில் கொண்டு நாமும் நம் நாடும் ஆரோக்கியமான, ஆன்மீக உணர்வுகொண்டு அன்பே வடிவானவர்களாக வாழ அன்னை மாரியின் தேரோடும் காட்சியையும் நம் அகக்கண்களால் தான் கண்டு களிப்போமோ.

‘மியன்மாருக்கு ஏற்பட்டநிலை இலங்கையில் ஏற்படாது’

மியன்மாரில் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியதுபோல இலங்கையில் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான ஷேயான் சேமசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் முக்கிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுவருகின்றனர்.
எதிர்காலத்தில் பிரதேச செயலாளர் பதவிக்கும் இராணுவத்தினர் நியமிக்கப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே, எதிர்காலத்தில் மியன்மாரில்போன்று இராணுவ ஆட்சியேதும் ஏற்படக்கூடுமா என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மியன்மாரில் இராணுவ ஆட்சி ஏற்பட்டகையோடு, மங்கள சமரவீரதான் இது குறித்து எச்சரிக்கை விடுத்து முதல் அறிக்கையை வெளியிட்டார். மியன்மாரில் ஏற்பட்ட நிலைமை இங்கு ஏற்படாது.

அத்துடன் பிரதேச செயலாளர் பதவிக்கு, சிவில் அதிகாரிகளுக்கு பதிலாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர் எனக்கூறப்படுவது பொய்யாகும். அவ்வாறான நியமனங்கள் வழங்கப்படாது என்பதனை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றோம்.

மியன்மாரில் ஏற்பட்டதுபோல் இலங்கையில் ஏற்படவேண்டும் என எதிரணி உறுப்பினர்கள் சிலர் விரும்புகின்றனர். இராணுவ சதி புரட்சிக்கு இங்கு இடமில்லை. அவ்வாறு நடக்கவும் நடக்காது.
அதேவேளை, மனித உரிமை குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி இலங்கைக்கு விடுக்கப்படும் சவால்களை நாம் நிச்சயம் உரியவகையில் எதிர்கொள்வோம்.” – என்றார்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞர்!

0
யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞர்! - உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில்...

மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!

0
மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு! - உடப்பு பகுதியில் பெருஞ்சோகம் புத்தளம் மாவட்டம், உடப்பு - பூனபிட்டிய களப்பிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை...

“தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கவும்!”

0
தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கவும்! ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தல் டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த நுவரெலியா மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம்...