Home Blog Page 3637

‘கொரோனா’வால் 4 நாட்களில் 23 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்துள்ள 4 நாட்களில் மாத்திரம் 23 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக நேற்று 7 பேர் பலியாகினர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதேவேளை, நாட்டில் கடந்த மாதத்தில் மாத்திரம் 20 ஆயிரத்து 696 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. கடந்துள்ள நான்கு நாட்களிலும் நாளொன்றுக்கு 700 இற்கு மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியது. நேற்று மாத்திரம் 704 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மலையகத்தில் இன்று ஹர்த்தால்! ஓரணியில் திரண்டன தொழிற்சங்கங்கள்!!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை முதல் மலையகத்தில் அடையாள வேலைநிறுத்தப்போராட்டமும், கடையடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் விடுக்கப்பட்ட குறித்த போராட்டத்துக்கு இதர தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லாமல், ஊதிய உயர்வுக்கான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

அத்துடன், மலையகத்திலுள்ள பிரதான நகரங்களும் மூடப்பட்டுள்ளன.

கலஹாவில் கொத்து கொத்தாக இளநீர் காய்க்கும் அதிசய தென்னை!

கலஹா 18 ஆம் கட்டை பகுதியிலுள்ள தென்னை மரமொன்றில் அதிகளவு இளநீர் காய்ப்பதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
 
குறிப்பாக அண்மையில் ஒரு இளநீர் கொப்பில் 50 காய்கள் காய்ந்துள்ளன. அதுமட்டுமல்ல தொடர்ச்சியாக அதிகளவு பயன் கிடைப்பதாக அதன் உரிமையாளர் ராஜலிங்கம் தம்பிராஜா தெரிவித்தார்.
 
தான் 50 ரூபாவுக்கே இக்கன்றை வாங்கி நற்றதாகவும், அதன்மூலம் 6 வருடங்களுக்கு மேல் உச்ச பயன் கிடைத்துவருவதாகவும் அவர் கூறினார்.
 
கலஹா நிருபர் ரம்யா 

குவைத்தில் கைவிடப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்கள்

இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் பணிப் பெண்கள் இலங்கை திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாரும் கவனிப்பாரற்ற நிலையில் கொரோனவினால் தொழில் வாய்ப்பை இழந்து ( இலங்கைக்கு) சொந்த நாட்டிற்கு செல்லமுடியாமல் பல நாட்களாக அகதியை போல் வெளிநாட்டு தூதரகங்களுக்கு முன்னால் காத்துக் கிடப்பதாக அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனினும், குவைத்திற்கான இலங்கை தூதரகம் இவர்களை கண்டுகொள்ளாது, கைவிட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய பங்காளிகளான வெளிநாட்டு வீட்டுப் பணிப் பெண்களின் இந்த நிலை கவலையளிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் படங்கள் பேர்னாட் கிரிஸ்ரி

கொரோனாவால் நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

6 ஆண்டுகளும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதில் நுவரெலியாவை சேர்ந்த 62 வயதுடைய ஆணொருவரும் உள்ளடங்குகின்றார்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது.

தொழிலாளர்களுக்காக தலவாக்கலை மற்றும் கொட்டகலையில் நாளை கடையடைப்பு

தலவாக்கலை நகரிலுள்ள அனைத்து கடைகளையும் நாளை தினம் (5.2.2021) மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை வர்த்தகர்கள் சங்கத் தலைவர் கமல் சமரவீர தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை ரூபா 1000 ஆக உயர்த்துவதற்காக தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நாளைய தினம் (5.2.2021) நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரிடமும் அழைப்புவிடுத்திருக்கின்றது.

அந்தவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், இ.தொ.கா தோட்டத் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபைத் தலைவர் லெட்சுமன் பாரதிதாசனின் எழுத்துப்பூர்வ வேண்டுகோளின்படி மருந்தகம் தவிர நகரிலுள்ள அனைத்து கடைகளையும் மூடி பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளோம் என்றார்.

அதேவேளை, கொட்டகலை நகர வர்த்தக சங்கமும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வுக்கான போராட்டத்துக்கு திகா அணியும் ஆதரவு

” அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை ஐந்தாம் திகதி மலையகம் தழுவி முன்னெடுக்கின்ற போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது.  கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இதுவரை வெற்றியடையவில்லை. 2018 ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின் போது அடிப்படைச் சம்பளம் 500 ரூபா இருந்தபோது அந்த அடிப்படை சம்பளத்தில் 40 வித அதிகரிப்பு ( 200/-) மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்பு தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

ஆனால் இவ்வருடம் ஜனவரி 28ஆம் தேதி கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. எனினும் ஏழு நூறு ரூபாய் அடிப்படைச் சம்பளத்தில் கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படை சம்பளத்தில் மேற்கொள்ளப்பட்ட 40 வீத சம்பள (280) அதிகரிப்பை இம்முறையும் மேற்கொண்டால் 980 ரூபாய் அடிப்படை சம்பளம் கிடைத்திருக்கும்.
ஆகவே இவ்வாறான விடயங்களில் எவரும் கவனம் செலுத்தவில்லை,

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறபப்பட்ட 1000 ரூபாய் சம்பளம் தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை. பிரதம மந்திரியின் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்டசம்பளம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை, கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்ட வாக்குறுதியும் வழங்கப்படவில்லை.

இந்த மூன்று தரப்பும் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி விட்டனர். இந்த மாற்றங்களின் காரணமாகத்தான் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஏமாற்றியவர்கள் ஏமாந்தவர்கள் ஒன்று சேர்ந்து . தற்போது தோட்டத்தொழிலாளர்களை களத்தில் இறங்கி ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்துக்காக முயற்சி செய்யுங்கள் என்ற அடிப்படையில் மலையகம் முழுவதும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகிறது.

இந்த அடிப்படையில் இந்த போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிகள் சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்

‘முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்’ – ஹக்கீம் ,இந்திய துணை தூதுவர் அவசர சந்திப்பு!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும், இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்புக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.

இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கியமைக்காக இந்தியாவின் நல்லெண்ணத்தை   ரவூப் ஹக்கீம்  இதன்போது பாராட்டியுள்ளது. அத்துடன் பொருளாதாரம், நிதி மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு வாய்ப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அண்மைய காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த தனது மதிப்பீட்டினை ரவூப் ஹக்கீம் , பிரதி உயர் ஸ்தானிகரிடம் பகிர்ந்துகொன்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கவனம் செலுத்தப்படவுள்ள விடயங்கள் தொடர்பாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

2019 நவம்பர் முதல் இந்திய மற்றும் இலங்கை தலைவர்கள் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தொடர்பாடல்கள் குறித்தும் பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் ஜேக்கப் இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இடையில் 2020 செப்டம்பர் நடைபெற்றிருந்த மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின்போது சகல இனக்குழுக்களின் எதிர்பார்ப்புக்களை புரிந்துணரும் நோக்குடன் இலங்கை செயற்படுமென இரு தலைவர்களும் நம்பிக்கை வெளிப்படுத்தியிருந்தனர்.

அத்துடன் மாகாண சபைகள் மற்றும் 13ஆவது திருத்தம் ஆகியவற்றினை முழுமையாக அமுல்படுத்துவதன் ஊடான அர்த்தப்புஷ்டியான பரவலாக்கம் என்பதே இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியிலான நிலைப்பாடு என பிரதி உயர் ஸ்தானிகர் இச்சந்திப்பில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் வைத்தியர் நெவில் பெர்னாண்டோ உயிரிழப்பு

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் ஸ்தாபகரான வைத்தியர் நெவில் பெர்னாண்டோ கொரோனாவால் உயிரிழந்துள்ளார். வயது 89
ஐ.டி.எச். வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

‘தொழிலாளர்களைக் காட்டிக்கொடுக்காமல் போராடுவோம்’

தொழிலாளர்களைக் காட்டிக்கொடுக்காமல் அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான நியாயமான போராட்டமாக நாளைய அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் அமைய வேண்டும் – என்று பெருந்தோட்டத் தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் அறிவித்துள்ளது.

அட்டனில் இன்று (04.01.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மலையகம் தழுவிய ரீதியில் நாளை நடைபெறவுள்ள  ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி இயக்கத்தின் ஏற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம் இவ்வாறு அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெறுவதற்கு நாளை நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை நாம் ஏற்கின்றோம். போராட்டமானது ஒற்றுமையாக முன்னெடுக்கப்பட்டு, தொழிலாளர்களின் உரிமை வென்றெடுக்கப்படவேண்டும்.

கடந்தகாலங்களிலும் இப்படியான போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்துவிட்டு, கடைசியில் தொழிலாளர்களைக்காட்டிக்கொடுக்கும் நடவடிக்கைகளே இடம்பெற்றன. இம்முறை அவ்வாறு நடைபெறக்கூடாது. தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான நியாயமான போராட்டமாக அமையவேண்டும்.  அதற்கான எமது அழுத்தங்கள் தொடரும்.” – என்றார்.

க.கிசாந்தன்

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!

0
மீன்பிடிக்கச் சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு! - உடப்பு பகுதியில் பெருஞ்சோகம் புத்தளம் மாவட்டம், உடப்பு - பூனபிட்டிய களப்பிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை...

“தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கவும்!”

0
தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கவும்! ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தல் டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த நுவரெலியா மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம்...

விசாகப்பட்டினத்தில் 65 அடி உயர திரிசூலம்

0
ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் சுற்றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் 65 அடி உயரத்​தில் உடுக்​கை​யுடன் கூடிய திரிசூலம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. விசாகப்​பட்​டினத்​தில் உள்ள கைலாசகிரி மலைப்​பகுதி பிரபல சுற்றுலா தலமாகும். இங்​குள்ள சிவன், பார்​வதி சிலைகள்...