Home Blog Page 3639

சுதந்திர தினத்தில் யாழில் கரிநாள் கடைபிடிப்பு

நாட்டின் 73 ஆவது சுதந்திர தினமான இன்று வடக்கு – கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் கரிநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாநகர் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புப்பட்டி போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இன்று முற்பகல் 10 மணிக்கு போராட்டம் திட்டமிடப்பட்ட நிலையில் போராட்ட இடத்துக்கு வருகை தந்த யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவை வாசித்துக் காண்பித்தனர். எனினும் நீதிமன்றக் கட்டளையில் பெயர் குறிப்பிடப்பட்ட எவரும் ஆர்ப்பாட்டத்தில் இல்லாமையால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பொலிஸாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்தனர்.

அதனால் போராட்டத்தைத் தடுக்க பொலிஸார் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் உறவுகள் தமது போராட்டத்தை தொடர்கின்றனர்.

‘ரணிலே சிறந்த எதிர்க்கட்சித் தலைவர்’ – மஹிந்த புகழாரம்

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்தில் இணைத்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்களின் கருத்து என்னவென எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

” பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த அவரைத்தவிர வேறு எவருமிருக்கின்றனரா என்று நான் நினைக்கவில்லை. எதிர்க்கட்சியை
வழிநடத்த அவர் மிகவும் பொருத்தமானவர். எனது நண்பர் என்பதற்காக அவ்வாறு கூறவில்லை. அரசியல் ரீதியாகப் பார்த்தால் அவரே பொருத்தமான நபர்.

அவரது பிரசன்னம் அரசாங்கத்துக்கு பாதகமானது. ஒரு வலுவான எதிர்ப்பு எப்போதும் தேவை என்று நான் நம்புகின்றேன். தற்போதைய எதிர்ப்பு பயனளிக்கவில்லை.” – என்றும் மஹிந்த கூறினார்.

அரசியல் பிரமுகர்களின் சுதந்திர தின வாழ்த்துகள்

73 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு  பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உட்பட அரசியல் பிரமுகர்கள் தமது வாழ்த்து செய்தியினை வௌியிட்டுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச

அனைத்து இலங்கையர்களும் 73 ஆவது சுதந்திர தினத்தை மிகுந்த பெருமையுடன் கொண்டாடுகின்றனர்.

காலனித்துவ காலத்திலிருந்து சுதந்திரத்திற்கான மக்களின் அர்ப்பணிப்பும் போராட்டமும் உலக வரலாற்றில் நன்கு அறியப்பட்டவை.

அரசியல், மத மற்றும் கலாசார ரீதியாக மூலோபாய போராட்டங்கள் மூலம் சுதந்திரம் பெற்ற நீண்ட வரலாற்றை இலங்கை தேசம் கொண்டுள்ளது.

நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளும் செயல்முறையே இன்று நம் தாய்நாட்டிற்கான தேவையாக உள்ளது. நாடுகளிடையே ஒற்றுமையை வளர்த்தல் மற்றும் மத நல்லிணக்கம் என்பன இதற்கு வலுவான ஆதரவாக அமைந்துள்ளன.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உள்ளூர் உற்பத்திக்கு மதிப்பளிக்கும் பொருளாதார கொள்கை ஊடாக தாய்நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகரும் பாதையில் நாம் நுழைந்துள்ளோம்.

ஒவ்வொரு துறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்களைப் புரிந்துகொண்டு, மக்களிடம் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக சுதந்திரம் மேலும் அர்த்தமுள்ளதாகும் போது வளமான எதிர்காலம் – சுபீட்சமான தாய்நாடு என்பது யதார்த்தமாகும்.

வரலாறு முழுவதும், தாய்நாட்டிற்கு எதிரான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளையும், பயங்கரவாதத்தையும் தோற்கடிக்கும் ஒரு நிலையான கொள்கையில் நாம் செயற்பட்டோம். எத்தனை சவால்கள் வந்தாலும், நாங்கள் ஒருபோதும் நம் தாய்நாட்டை காட்டிக் கொடுத்ததில்லை.

கொவிட் -19 தற்போது உலகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். இந்நெருக்கடியிலிருந்து பொதுமக்களை விடுவிப்பதற்கான போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். எதிரிப் படைகளைத் தோற்கடிப்பதற்கு போன்றே, கொவிட் -19 தொற்றை தோற்கடிப்பதற்கும் இலங்கை தேசமாக நாங்கள் எழுந்து நிற்போம்.

எங்கள் தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த மற்றும் மகத்தான தியாகங்களைச் செய்த அனைவருக்கும் மற்றும் இன்று அந்த சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் நான் மரியாதை செலுத்துகின்றேன்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஒற்றுமையுடன் ஒன்றாக முன்னேறுவதன் மதிப்பு, வரலாற்றின் மிக முக்கியமாக செய்தியாகும்.நாட்டின் இறையாண்மையை உறுதி செய்வதும் உள்ளூர் வளங்களை பாதுகாப்பதும் எமக்கு முன் உள்ள சவாலாகும்.

சபாநாயகர் – மஹிந்த யாப்பா அபேவர்தன

உலகளாவிய ரீதியில் கொவிட்19 நெருக்கடியை எதிர்கொண்டுள்ளபோதும் நாம் இலங்கைத் தேசமாக ஐக்கியத்துடன், ஒன்றுபட்ட மனதுடன் வளமான தேசமாக முன்னேற வேண்டுமென்ற உறுதிப்பாட்டுடன் 73ஆவது தேசிய சுதந்திர தினத்தைப் பெருமையுடன் கொண்டாட மீண்டும் ஒன்றிணைந்துள்ளோம்.

காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்தைப் பெற்றபோது இந்நாட்டிலிருந்த சகல இனத்தவர்களும் ஒன்றிணைந்து, ஐக்கியத்துடன் செயற்பட்டமை அசைக்க முடியாத பலமாக இருந்தது.

இனம், மதம், குலம், நிறம், வகுப்பு மற்றும் கட்சி போன்ற குறுகிய வேறுபாடுகள் கவனத்தில் கொள்ளப்படாமையால் அன்று இலங்கையர்களின் மனங்களிலும், இதயங்களிலும் சுதந்திரம் தொடர்பான எண்ணம் வலுவாக இருந்தது. அன்று சுதந்திரம் பெற்ற இலங்கைத் தாயும் அதன் பிள்ளைகளும் இன்றுவரை வந்துள்ள பயணம் இலகுவானதல்ல. கடந்த காலத்திலிருந்து எதிரிகளின் அச்சுறுத்தல், நோய் பயம் உள்ளிட்ட சகல அச்சுறுத்தல்களின் மத்தியிலும் இந்த நீண்ட பயணத்தில் உயிரைப் பாதுகாப்பதற்கு அன்புக்குரிய பிள்ளைகள் பின்னிற்கவில்லை. எனவே, இந்த வருட சுதந்திர தினத்தைப் பெருமையுடனும், மரியாதையுடனும் கொண்டாடுகின்றோம்.

‘வளமான எதிர்காலம் – சுபீட்சமான தாய்நாடு’ என்ற தொனிப்பொருளில் இவ்வருட சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாகக் கொண்டாட அனைத்து இலங்கையர்களும் குறுகிய வேறுபாடுகளை மறந்து நிலையான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்தாகும். எனவே, இந்த மகத்தான சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்த வளம் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்ப இப்பெருமை மிக்க தருணத்தில் உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் 

அந்நிய ஆதிக்கத்திலுருந்து நாடு விடுதலைப்பெற்று 73 வருடங்களை எட்டிப்பிடித்துள்ளது. சுதந்திர நாடொன்றின் இறையாண்மையைப் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறையை உருவாக்குதல் எண்ணும் இலக்கோடு நாடு பயணிக்கும் இந்த இனிய சூழலில், சுதந்திர இலங்கையில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்ற இந்த நாட்டில் ஒரு நிரந்தர சமாதானத்தை இலங்கைத் தாய் தந்தருள எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.

மலையகத்திலும், இந்த நாட்டின் இதர பகுதிகளிலும் வசித்து வரும் இந்திய வம்சாவளி மக்கள் அவர்களது உரிமைகள் சலுகைகள் எல்லாவற்றிலும் விடுதலை பெற்ற மக்களாக இருக்க வேண்டும் என்பது எமது வாஞ்சை “பாதுகாப்பான தேசம் சுபிட்சமான நாடு” என்பதற்கு அமைவாக எமது கட்டுக்கோப்பை மேலும் பலப்படுத்தி இதன் வாயிலாக எமக்குரிய உரிமைகள் , சலுகைகள் ஆகிவற்றை பெற்றுக்கொள்வதற்கு இதன் 73ஆவது சுதந்திர தினத்தில் நாம் திடசங்கற்பம் எடுத்துக் கொள்வோம்.

இத்தினத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் கிட்டும் என்ற திடமான நம்பிக்கையோடு நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம் சகல இனங்களின் மத்தியிலும் சௌபாக்கியம் , ஐக்கியம் , சமத்துவம் , சுபிட்சம் நிறைந்த எதிர்காலம் அமைய வேண்டுமென பிராத்திக்கின்றேன்.

பிரதமரின் இணைப்பு செயலாளர் – செந்தில் தொண்டமான்

நாட்டின் தேசிய வளர்ச்சிக்காக, அனைவரும் ஒன்றிணைந்துப் பாடுபட்டால் மாத்திரமே, இலங்கை அடைந்த சுதந்திரம் அர்த்தபுஷ்டியானதாக மாறும்.

“நழிவடைந்துள்ள சகல துறைகளும் கட்டியெழுப்பப்பட்டு, பொருளாதார ஸ்திரமிக்க நாடாக எமது நாட்டை உயர்த்த வேண்டியது இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் கடமை என்பதை இந்நாளில் நினைவூட்டிப் பார்ப்பதே சிறந்தது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான கரங்களைப் பலப்படுத்தி, அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி, நாட்டை சுபீட்சமானதும் வளமிக்கதுமான நாடாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் குறிக்கோளாக அமைய வேண்டும்.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபட்டிருந்தாலும், இலங்கையர் என்ற சுய அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது. அந்தச் சுய அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காக, அர்த்தபுஷ்டியுடன் பணியாற்ற முன்வருமாறு நாட்டின் வளர்ச்சி பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

இலங்கையின் 73ஆவது ஆண்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் எனது இனிய மக்களுக்கு, சுதந்திரதின நல்வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

‘நான் சிங்கள பௌத்த தலைவன் – பௌத்தத்தின் அடிப்படையிலேயே நாட்டை ஆள்வேன்’

நான் சிங்கள, பௌத்த தலைவன். பெளத்த சித்தார்ந்தங்களுக்கு அமையவே நாட்டை ஆள்வேன். அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படும்.
இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். சுதந்திர தின உரையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சுதந்திர தின நிகழ்வு மற்றும் ஜனாதிபதியின் உரை

ஆயிரம் ரூபாவில் அரங்கேறும் அரசியல் கூத்துகள்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கோரிவரும் நிலையில்,அதனை பெற்றுக்கொடுப்பதற்கு தலைமைத்துவத்தை வழங்கவேண்டிய தொழிற்சங்கங்களோ, அடிப்படை அல்ல, எப்படியாவது ஆயிரம் ரூபா கிடைத்தால் போதும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.

அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தோட்டக்கம்பனிகள், அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய வகையிலான ‘சூழ்ச்சிகரமான’ சம்பள உயர்வு திட்டத்தை முன்வைத்து அதற்கான சந்தைப்படுத்தலில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளனர்.

நாளொன்றுக்கு ஆயிரத்து 25 ரூபாவை சம்பளமாக பெறலாம் எனக்கூறினாலும் அது அனைத்து தொழிலாளர்களுக்கும் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே. அதுமட்டுமல்ல கூட்டு ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் 2 வருடங்களாக இருக்கும் நிலையில் அதனை நான்கு ஆண்டுகளாக அதிகரிப்பதற்கான திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் 4 ஆண்டுகளுக்கு ஒருதடவையே தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் சூழ்நிலை உருவாகும்.

கம்பனிகள் இவ்வாறு திட்டத்தை முன்வைத்திருந்தாலும், தமது தரப்பு முன்மொழிவு என்னவென்பதனை தொழிற்சங்கங்கள் உரிய வகையில் முன்வைக்கவில்லை. ஆயிரம் ரூபா தா என கத்தி பேசினாலும், அதனை எவ்வாறு வழங்கலாம் என்பதற்கான திட்டத்தை முன்வைக்கவில்லை. கூட்டு ஒப்பந்தத்துக்கு வெளியில் இருந்து கோஷம் எழுப்பும் தொழிற்சங்கங்களும் சம்பள உயர்வுக்கான மாற்று திட்டத்தை முன்வைக்கவில்லை. மாறாக கூட்டத்தோடு கோவிந்தா என்ற தொனியில் ஆயிரம் ரூபா என்ற சத்தம் மட்டுமே வருகின்றது. தொழிற்சங்கங்களின் இந்த நகர்வு கம்பனிகளுக்கே பக்க பலமாக அமைந்துள்ளது.

மறுபுறத்தில் சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும் என அரசு கூறினாலும், அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கப்போவதில்லை. ‘ஆயிரம் ரூபாவரையான சம்பள உயர்வுக்கான சாத்தியப்பாடுகள்’ குறித்தே இச்சபை ஆராய்ந்து முடிவெடுக்கும்.

ஆனால் அமைச்சரவை முடிவை வைத்துக்கொண்டு ஆயிரம் ரூபா கிடைத்துவிடும், வெற்றிபெற்றுவிட்டோம், கூட்டு ஒப்பந்தத்தில் இருந்தகூட வெளியேறுவதற்கு தயார் என்றெல்லாம் தற்போது ஆயிரம் ரூபா விடயத்தில் ஆயிரம் அரசியல் கூத்துகளும் அரங்கேற்றப்பட்டுவருகின்றன.

இலங்கைக்கு கூகுள் வழங்கிய கௌரவம்

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, கூகுள் நிறுவனம் இலங்கையைக் கௌரவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் இலங்கையின் தேசியக் கொடி பறப்பதைப்போல் பதிவு செய்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை வழங்கவும் – அஸ்கிரியபீடம் கோரிக்கை

தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்துக்கான ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு சமய தலைவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.

இது குறித்து அஸ்கிரிய விகாரை பிரதான செயலதிகாரி ஆச்சரிய மெதகம தம்மானந்த தேரர் கருத்து தெரிவிக்கையில்.

இந்த நாட்டின் பொருளாதாரத்திற்காக மிகவும் உணர்வு பூர்வமாக வேலை செய்பவர்கள் தோட்டத்தொழிலாளர்கள். அதனால் இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்க வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கை. ஆகவே இன்றுள்ள பொருளாதார நிலையினை கருத்திற் கொண்டு அவர்களின் வாழ்க்கை நிலையும் அவர்கள் படும் துன்பங்களையும் கருத்திற் கொண்டு கம்பனிகள் எவ்வித போராட்டம் இன்றி அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா வழங்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இது குறித்த கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பர்னாண்டோ பிள்ளை கருத்து தெரிவிக்கையில் இன்று பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து வாழும் தோட்டத்தொழிலாளர்கள் தங்களது சம்பளத்திற்காக மிகவும் அமைதியான முறையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு குரல் கொடுத்துள்ளார்கள் அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது.

இன்று உள்ள பொருளாதார சுமைகளை கருத்திற் கொண்டு கம்பனிகள் நியாயமான சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.ஆகவே அவர்களின் நியாயமான சம்பள குரலுக்கு எனது குரலும் இணையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதபதி, பிரதமர் ஆகியோருடன் அவசர சந்திப்பு

இலங்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரமாக சந்தித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக அறிவித்தது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை அவசர அவசரமாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு முனையத்தை அபிவிருத்திசெய்வது தொடர்பாக 2019ம் ஆண்டு மே மாதம் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை இலங்கை கட்டாயமாக மதித்துச்செயற்படவேண்டும் என்பதே இந்தச்சந்திப்புக்களின் போது இந்தியத்தூதுவர் வலியுறுத்திய செய்தியின் சாராம்சமாகும் என தி ஹிந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை 51% சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் அதேவேளை இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக 49 % சதவீதமான பங்குகளைக் கொண்டிருக்கும். இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனமும் ஜப்பானிய நிறுவனங்களும் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான முதலீட்டை மேற்கொள்வார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை , கிழக்கு முனையம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இதுவரை இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்திருந்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 100 வீதம் துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் முன்னெடுக்கப்படும் என இலங்கை பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சரவைப் பத்திரமும் இதுதொடர்பில் சமர்பிக்கப்பட்டு கிழக்கு முனையத்தை 100 % இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்வதென தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

73ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய வியாழக்கிழமை 4ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு டொரின்டன் வீதி, சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பிரதேசங்களில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.

இதற்கமைய குறித்த நேரத்தில், குறித்த பிரதேசத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், சாரதிகளுக்கு மாறு வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும், காலி, கண்டி, லோலெவல் ஆகிய வீதிகள் மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, கோட்டை, புறக்கோட்டை ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவரத்து வழமைபோல் இடம்பெறுமென பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

தாமரைக் கோபுர சுற்றுவட்டம், தேசிய ஆவணக் காப்பக சுற்றுவட்டம், சுதந்திர சதுக்கம் ஆகிய பிரதேசங்கள் அடங்கிய வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

 

இன்று மாத்திரம் 744 பேருக்கு கொரோ தொற்று

நாட்டில் மேலும் 357 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இன்று மாத்திரம் இதுவரை 744 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59  ஆயிரத்து 883 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 62 ஆயிரத்து 416  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

“தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கவும்!”

0
தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கவும்! ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தல் டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த நுவரெலியா மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம்...

விசாகப்பட்டினத்தில் 65 அடி உயர திரிசூலம்

0
ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் சுற்றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் 65 அடி உயரத்​தில் உடுக்​கை​யுடன் கூடிய திரிசூலம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. விசாகப்​பட்​டினத்​தில் உள்ள கைலாசகிரி மலைப்​பகுதி பிரபல சுற்றுலா தலமாகும். இங்​குள்ள சிவன், பார்​வதி சிலைகள்...

சாரதிகளே அவதானம்!

0
சாரதிகளே அவதானம்! சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. நுவரெலியா பிரதான நகர், ஹாவாஎலிய, கந்தப்பளை, நானுஓயா, ரதல்ல மற்றும் தலவாக்கலை போன்ற பகுதிகளில் பனிமூட்டம்...