Home Blog Page 3640

‘நிபந்தனைகள் எதுவுமின்றியே ஆயிரம் ரூபா அவசியம்’ – திகா வலியுறுத்து

” எவ்வித தொழில் நிபந்தனைகளும் இன்றியே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். அத்துடன், தொழிலாளர்களுக்கான சலுகைகளும் நிறுத்தப்படக்கூடாது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சம்பள நிர்ணய சபை ஊடாக, சம்பள உயர்வு சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெறுவது வரவேற்கத்தக்கது. அதற்கு நாம் எதிர்ப்பை வெளியிடவில்லை. ஆனால் ஆயிரம் ரூபா என்ற தொகையைக் காண்பித்துவிட்டு, தொழிலாளர்கள்மீது தொழில் சுமைகள் திணிக்கப்படக்கூடாது. அவர்களுக்கான சலுகைகள் தொடரவேண்டும்.

வேலை நாட்கள் குறைக்கப்படக்கூடாது என்பதுடன், எடுக்கப்படவேண்டிய கொழுந்தின் அளவும் அதிகரிக்கப்படக்கூடாது.” – என்றார்.

காணொளி

https://www.facebook.com/sjbsrilanka/videos/202495434912137 

தோட்டத் தொழிலாளர்களுக்காக 9 மாகாணங்களிலும் போராட்டம் வெடிக்கும்

” பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களின் அதிக ஆதரவைப்பெற்ற கட்சி தமிழ் முற்போக்கு கூட்டணியாகும். எமக்கே மக்கள் அதிகளவு வாக்களித்துள்ளனர். எனவே, எமது அனுமதியின்றி எவரும் தோட்டத் தொழிலாளர்களின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது என்பதனை உரிமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

கூட்டு ஒப்பந்த பேச்சு மற்றும் சம்பள நிர்ணய சபை ஊடான கலந்துரையாடல் தோல்வியில் முடியும் பட்சத்தில், கம்பனிகள் மற்றும் அரசு சம்பள உயர்வை வழங்க மறுக்கும்பட்சத்தில் முற்போக்கு சக்திகளை அணிதிரட்டி நாடு தழுவிய ரீதியில் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு நாம் தயார். 9 மாகாணங்களிலும் கடையடைப்பு போராட்டம் செய்வோம்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்தார்.

சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது மனோ கணேசன் வெளியிட்ட கருத்துகள் வருமாறு,

காணொளி

https://www.facebook.com/sjbsrilanka/videos/202495434912137

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தேசிய ஒருங்கிணைப்பு துணை குழு

“கிராமத்துடன் கலந்துரையாடல்” – எனும் கிராமத்துக்கான செயல்திட்டம் மற்றும் 2021 வரவு செலவுத் திட்டம் யதார்த்தமாகும் தேசிய ஒருங்கிணைப்பு துணை குழு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (2021.02.03) அலரி மாளிகையில் நிறுவப்பட்டது.

பொருளாதார புத்தெழுச்சி  மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்சவின் எண்ணக்கருவிற்கு அமைய செயற்படும் இந்த தேசிய ஒருங்கிணைப்பு துணை குழுவில் அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறைக்கு, வேளாண் துணைக்குழு, வாழ்வாதார துணைக்குழு, உட்கட்டமைப்பு துணைக்குழு, சமூக உட்கட்டமைப்பு துணைக்குழு மற்றும் சமூக பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு துணைக்குழு என ஐந்து தேசிய ஒருங்கிணைப்பு துணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த ஒவ்வொரு குழுவிற்கும் துறை சார்ந்த ரீதியில் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஒருங்கிணைப்புக் குழு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, பிரதேச அபிவிருத்தி குழு மற்றும் கிராமியக் குழு ஆகியவை மேல் நிலையிலிருந்து கீழ் நிலைக்கு முடிவுகளை பாய்ச்சுவதற்கும், கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு யோசனைகள் மற்றும் திட்டங்களை பாய்ச்சுவதற்குமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக பஸில் ராஜபக்ச, நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு சுட்டிக்காட்டினார்.

கிராமத்துடன் கலந்துரையாடல் செயல்திட்டத்தை நாம் எதிர்க்கட்சியில் இருந்த காலப்பகுதியிலிருந்து செயற்படுத்தினோம். அக்காலப்பகுதியில் நாம் கிராமத்தின் குறைபாடுகளை கண்டறிந்த போதிலும் இது தொடர்பில் அரச அதிகாரிகளை பங்குபெறச் செய்ய முடியாது போனது. எனினும், தற்போது   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் 14000 கிராம அலுவலர் பிரிவுகள் காணப்படுகின்றன. 36000 கிராமங்கள் காணப்படுகின்றன. அந்த வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் மூலம் நாம் பணியாற்ற வேண்டும். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், இது பெரும்பாலும் பிரதேச செயலாளர்கள் அல்லது அதிகாரிகளால் செய்யப்பட்டது.

அதனால் பின்வரிசை உறுப்பினர்கள் போலவே, உங்களுக்கும் கிராமம் மற்றும் வாக்காளர்களின் விவகாரங்களில் ஈடுபடுவதற்கான ஒரு முறை காணப்படவில்லை. இதன் விளைவாக, பிரதேச அபிவிருத்தி திட்டங்களுக்கு சில நேரங்களில் அரசியல் தலைமை கிடைக்காமல் போனது.

வடக்கு மற்றும் கிழக்கு தவிர நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சி முடிவின்படி, அவற்றின் தலைவர் பதவிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

அதனால் எதிர்காலத்தில் அமைச்சுக்களின் ஊடாக பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளை செயற்படுத்தும் போது பிரதேச ஒருங்கிணைப்பு குழு ஊடாக அவற்றை செயற்படுத்துவது அவசியமாகும். அதற்காக இன்று நிறுவப்படும் இந்த தேசிய ஒருங்கிணைப்பு துணை குழுக்களின் தலைமை மற்றும் ஆலோசளை செயற்படுத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் அமைச்சு மட்டத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அல்லது சுற்றறிக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு நேரடியாக வழங்குவதற்கு பஸில் ராஜபக்ச இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

அதிகரித்து செல்லும் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டது. அதற்கமைய பருப்பு, மாவு, சீனி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட 28 வகையான பொருட்களுக்கு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கு உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடி இறக்குமதியாளர்களுடன் எதிர்கால விலை தொடர்பில் உடன்பாடொன்றுக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன , எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் முதல் இன்று காணப்படும் விலையைவிட குறைந்த விலைக்கு சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்களின் ஊடாக அப்பொருட்களை நாடு முழுவதும் விநியோகிப்பதாக தெரிவித்தார்.

வறுமை காரணமாக வீடுகளின் அருகே மின்சாரம் இருந்தும், நீர் இருந்தும் அதனை நுகர முடியாது நிலையில் சிலர் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் சுட்டிக்காட்டினார்.ஆரம்பத்தில் மின்சாரம் அற்ற வீடுகளாக 35000 வீடுகள் அடையாளம் காணப்பட்ட போதிலும், தற்போது அந்த எண்ணிக்கை 125000 ஆகக் காணப்படுவதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய இதுவரை மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகள் அற்ற வீடுகளுக்கு எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டிற்கு முன்னதாக அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை முன்னெடுப்போம் என்ற திரு.பசில் ராஜபக்ஷ அவர்களின் முன்மொழிவிற்கு அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உடன்பாடு தெரிவித்தனர்.

மின்சாரம் மற்றும் நீர் வசதியற்ற வீடுகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டிற்கு முன்னதாக தீர்வை பெற்றுக் கொடுப்பது பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரது கடமை என திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இந்த நோக்கத்திற்காக சமுர்தி நிதி உள்ளிட்ட அரசு ஒதுக்கீடுகளை பயன்படுத்தலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட் -19 தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு அரச துறை போன்றே தனியார் துறை சுகாதார பிரிவினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக உள்ளதாக அமைச்சர்கள் கௌரவ பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியளவில் சாதாரண மக்களுக்கும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள கூடியதாகவிருக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.

கொவிட்-19 தடுப்பூசியை வழங்குவதை தீவிரப்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி முடித்த முதலாவது நாடாக இலங்கையை அடையாளப்படுத்தும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளதாக திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பல வருடங்களாக ஊவா மாகாணத்தை மிரட்டிய கொள்ளைக் கும்பல் கைது!

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பல வருடங்களாக கொள்ளை மற்றும் நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித்த செனவிரத்ன தலைமையிலான குழுவினர் பசறை நகர் பகுதியில் வைத்து நேற்று (02. 02_2021) கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கடந்த மாதம் பசறை வீதி, பெல்ஹாதென்ன பகுதியில் அரச நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் பெண்ணொருவரின் கழுத்து மாலையை கொள்ளையிட்டுள்ளனர்.

குறித்த பெண் பசறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெல்லவாய, அட்டாம்பிட்டிய உட்பட பல பகுதிகளில் வங்கி திருட்டு நகைத் திருட்டு ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்கள் கொள்ளையிட்ட நகைகளை பதுளையிலுள்ள பல அடகு நிலையங்களில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் ஹாலிஎல, மஹியாங்கன பகுதிகளைச் சேர்ந்த 24,29 வயதுடையவர்களாவர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செய்தி ராமு தனராஜா

யாழ்ப்பாணத்தில் 4 நாட்களுக்கு போராட்டம், பேரணி நடத்த தடை

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அஹிம்சை வழிப் போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வேலன் சுவாமிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கே இந்தத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.

ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் எடுத்துரைத்தனர்.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடத்தப்படும் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த பேரணி, பொத்துவிலில் ஆரம்பமாகி பொலிஸாரின் தடையை மீறி நடைபெற்று வருவதுடன் எதிர்வரும் ஆறாம் திகதி சனிக்கிழமை பொலிகண்டியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் ‘மாநாடு’ பட டீசர் வெளியானது ( வீடியோ இணைப்பு)

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள மாநாடு படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார்.

இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை, தெலுங்கு, கன்னட, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளான இன்று மாநாடு படத்தின் டீசரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். பஞ்ச் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றாலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த டீசராக இது அமைந்துள்ளது.

மாநாடு படத்தின் தெலுங்கு டீசரை ரவி தேஜாவும், கன்னட டீசரை சுதீப்பும், மலையாள டீசரை பிரித்விராஜும், இந்தி டீசரை அனுராக் கஷ்யப்பும் வெளியிட்டனர்.

‘கொரோனா’விலிருந்து மேலும் 840 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 840 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 485 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 330 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் 2020 மார்ச் முதல் இன்றுவரை 65 ஆயிரத்து 698 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்க்க விசேட பொறிமுறை அவசியம்!

வீராப்புபேசி உலக நாடுகளை பகைத்துக்கொள்ளாமல், மதிநுட்பத்துடன் செயற்படும் பொறிமுறையை அரசாங்கம் கையாள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சர்வதேச சமூகத்துடன் இரு தரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள் பலப்படுத்த வேண்டும். அதன்மூலம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இராஜதந்திர நடவடிக்கை அமையவேண்டும்.

அதேவேளை, எமது நாட்டுக்குரிய தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதை   கடுமையாக எதிர்க்கின்றோம். எனினும், நாட்டுக்குள் அபிவிருத்தி இடம்பெறுவதற்கு நேரடி வெளிநாட்டு முதலீடு அவசியம். எனவே, உள்நாட்டு வழங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கான  உபாயமார்க்க பொறிமுறையை உருவாக்க முடியும்.

நாட்டின் தனித்துவம், இறையாண்மை ஆகியவற்றை பாதுகாத்துக்கொண்டு இதனை செய்யமுடியும்.மாறாக இனவாதம், வீராப்புபேசி உலக நாடுகளை பகைத்துக்கொள்வதில் பயன் இல்லை. எமது நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய வகையில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடமுடியும். அதற்கு மதிநுட்பம் அவசியம். அதற்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது.” – என்றார்.

மார்ச் 26 ஆம் திகதி திரைக்கு வருகிறது ‘டாக்டர்’!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டாக்டர் படத்தின் ரிலீஸ் திகதியை நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். அதன்படி வருகிற மார்ச் மாதம் 26 ஆம் திகதி டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பனிகள் பக்கமே அரசாங்கம் – அம்பலப்படுத்துகிறார் இராமநாதன்!

கூட்டு ஒப்பந்தமுறைமை இல்லாதுசெய்யப்பட்டால் அதன்மூலம் தொழிலாளர்களுக்கே பாதிப்பு ஏற்படக்கூடும் – என்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுள் ஒன்றான பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ். இராமநாதன் தெரிவித்தார்.

சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அடிப்படை சம்பளத்தை அதிகரிக்காமல் ஏனைய கொடுப்பனவுகளை மட்டும் வழங்குவது ஏற்புடையதாக, தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாது.  தேயிலைக்கும் நல்ல விலை இருக்கின்றது. 2020 இல் 630 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பள நிர்ணயசபைக்கு செல்லவேண்டும் எனக்கூறி கூட்டு ஒப்பந்தத்திலிருந்து நாம் வெளியேறவில்லை. ஏனெனில் கூட்டு ஒப்பந்தமுறை இல்லாமல்போனால் தொழிலாளர்களுக்கே அது பாதிப்பாக அமையும்.

தற்போதைய நிலையில் ஆயிரம் ரூபா போதாது. அதற்கு மேல்தான் சம்பள உயர்வு கிடைக்கவேண்டும்.

ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் பல தடவைகள் வழங்கியுள்ளன. எனவே, சம்பள உயர்வு விவகாரத்தில் அரசாங்கத்தின் அழுத்தம் இருக்கவேண்டும். எனினும், அரசு அதைனை செய்யவில்லை.  தோட்டக்கம்பனிகள் பக்கம் நிற்பதால்கூட அழுத்தங்களை பிரயோகிக்காமல் இருக்கலாம்.” – என்றார்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

விசாகப்பட்டினத்தில் 65 அடி உயர திரிசூலம்

0
ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் சுற்றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் 65 அடி உயரத்​தில் உடுக்​கை​யுடன் கூடிய திரிசூலம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. விசாகப்​பட்​டினத்​தில் உள்ள கைலாசகிரி மலைப்​பகுதி பிரபல சுற்றுலா தலமாகும். இங்​குள்ள சிவன், பார்​வதி சிலைகள்...

சாரதிகளே அவதானம்!

0
சாரதிகளே அவதானம்! சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. நுவரெலியா பிரதான நகர், ஹாவாஎலிய, கந்தப்பளை, நானுஓயா, ரதல்ல மற்றும் தலவாக்கலை போன்ற பகுதிகளில் பனிமூட்டம்...

கடும் எதிர்ப்பால் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரச பதவி ரத்து!

0
ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் , தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. “ ரிக்கி ராதன் பண்டிட்...