Home Blog Page 3641

7 ஆம் திகதி தமிழகத்தில் களமிறங்குகிறார் சசிகலா – ஆட்சியை கைப்பற்றுவோம் எனவும் சூளுரை

பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா எதிர்வரும் 7ஆம் திகதி தமிழகம் வருகிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த மாதம் 27-ம் திகதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே ஜனவரி 20-ஆம் திகதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனால், சசிகலா 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 31-ம் திகதி  சசிகலா மருத்துவ கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனினும், வைத்தியர்களின் ஆலோசனையின் பிரகாரம் பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள தேவனஹல்லி அருகே ஒரு பண்ணை வீட்டில் சசிகலா தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்தநிலையில், விடுதலையான சசிகலா எப்போது தமிழகம் வருவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் அக்கட்சியின் நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொள்ள நேற்று மதுரை வந்தார்.

இன்று காலை அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து பிரச்சார வாகனத்தின் மூலம் மதுரையில் நெல் பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து திருமண மண்டபத்திற்கு சென்றார். திருமண விழா முடிந்த பின்னர், திருமண மேடையில் டிடிவி தினகரன் பேசியதாவது:-

பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா வரும் 7 ஆம் திகதி தமிழகம் வருகிறார். உண்மையான தொண்டர்கள், விஸ்வாசத்தின் பக்கம் உள்ளார்கள் சசிகலா பக்கம் இருக்கிறார்கள். சசிகலா தலைமையில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம். ஜெயலலிதா ஆட்சியை அமைக்க, அதிமுகவை மீட்டெடுக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம். மேலும், சசிகலா தமிழக வருவதால் பலரும் அச்சத்தில் உள்ளனர். சசிகலா விடுதலையான நிலையில் ஜெயலலிதா நினைவிடம் பணி நிறைவு பெறாமல் அவசர அவசரமாக திறக்கப்பட்டுள்ளது என்றார்.

சம்பள உயர்வுக்கான போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியும் ஆதரவு!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நன்மை கருதி நாளை மறுதினம் (05.02.2021) முன்னெடுக்கப்படவுள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு கட்சி தொழிற்சங்க பேதங்களை மறந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது என்று முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை நுவரெலியாவில் அமைந்துள்ள மலையக மக்கள் முன்னணி காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன், தேசிய அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம் உப தலைவர் ஏ.லோரன்ஸ் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

” வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக அதனை ஏற்பாடு செய்தவர்கள் தரப்பில் எங்களுடன் கலந்துரையாடவில்லை என்றாலும் தொழிலாளர் நலன்சார்ந்து இந்த போராட்டம் நடைபெறுவதாலும் தொழிலார்களின் ஒற்றுமையையும் அவர்களுக்கு இடையே பிரிவினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவுமே மலையக மக்கள் முன்னணி என்ற வகையில் நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தீர்மானித்திருக்கின்றோம்.

மலையக மக்கள் முன்னணிக்கு போராட்டம் என்பது புதியவிடயமல்ல.நாம் பல போராட்டங்களை களத்தில் இருந்து முன்னெடுத்தவர்கள்.அந்த வகையில் எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை. இதனை நாங்கள் நன்கு உணர்ந்தவர்கள்.” – என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

‘இலங்கையில் தமிழ் மொழிக்கு இம்முறையும் சுதந்திரம் மறுப்பு’

உலகில் 19 ஆம் நூற்றாண்டிலேயே தேசிய கீதத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டு – அது தொடர்பான கருத்தாடலும் மேலோங்கியது.

ஆரம்பத்தில் ஐரோப்பியாவிலும் – அதன்பிறகு ஏனைய நாடுகளிலும் தேசிய கீதம் இயற்றப்பட்டு, தேசிய நிகழ்வுகளின்போது இசைக்கப்படும் நடைமுறை அமுலுக்கு வந்தது என வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு முன்னர், இலங்கையில் நடைபெறும் அரச நிகழ்வுகளில் ‘God Save the Queen’ என தொடங்கும் பிரிட்டனின்; தேசிய கீதமே பாடப்பட்டுவந்தது.

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரே –இலங்கையின் அடையாளத்தை பிரதிபலிக்கும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பிரபல பாடலாசிரியரும், இசையமைப்பாளருமான ஆனந்த சமரகோனால் 1940 இல் எழுதப்பட்ட ‘நமோ, நமோ மாதா’ என்ற பாடலை தேசிய கீதமாக ஏற்பதற்கு முன்மொழியப்பட்டது.

இறுதியில் “நமோ, நமோ”என்பது மாற்றப்பட்டு “சிறிலங்கா தாயே”என்ற பதத்துடன் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பான யோசனை 1951 ஆம் ஆண்டு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் ஒப்புதலும் பெறப்பட்டது.1951 நவம்பர் 22 ஆம் திகதி சட்டப்பூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

1949ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 2ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளதுஎன அரச ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இலங்கையின் அரசியலமைப்பில் “ இலங்கைகுடியரசின் தேசிய கீதம்“சிறிலங்கா மாதா” என்பதாக இருத்தல் வேண்டும் என சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மொழியிலான அரசியலமைப்பில் “இலங்கை குடியரசின் தேசிய கீதம் சிறிலங்காதாயே” என்பதால் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொழி மற்றும் அர்த்தப்படுத்தல்கள் தொடர்பில் சர்ச்சை எழுகின்றபோது சிங்களத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டுவருகின்றது.

இதனை தூக்கிப்பிடித்துதான் – மொழி உரிமையை மறந்து கடும்போக்குடைய சிங்கள தேசிய வாத அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழிழ் தேசிய கீதம் இசைக்கப்படுவது அரசியலமைப்பை மீறும் செயல் என சுட்டிக்காட்டிவருகின்றனர்.

எனினும் மொழி உரிமை 16 ஆவது திருத்தத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதுஎன்பதும் அவர்களுக்கு தெரியாது. மொழி உரிமைகள் தொடர்பான அத்தியாயத்தை அவர்கள் வாசித்தது கிடையாது.

இந்தத் திருத்தத்துக்கு முன்னதாக 1978ஆம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டபோது,அது சிங்களத்திலும் தமிழிலும் உருவாக்கப்பட்டது என்பதும் தெரியாது.

“இரு மொழிகளிலும் அரசமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் எது மேலோங்கும் என்பதும் கிடையாது. இரண்டுக்கும் சம அந்தஸ்து இருக்கின்றது” – என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மொழிக்கு தடை

2015 இல் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் ஆட்சி உதயமானதும், 2016 பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில், நிகழ்வின் இறுதியில் தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டது.அதன்பின்னர் வருடாந்தம் அந்த நடைமுறை பின்பற்றப்பட்டுவந்தது.

2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர், அவர் தலைமையில் புதிய அரசாங்கம் பதவியேற்றது.

இந்நிலையிலேயே தேசிய கீதம் இசைக்கப்படும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு,சிங்கள மொழிக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கும் வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டது. 2020 இல் பாடப்படவில்லை. இம்முறை 73 ஆவது சுதந்திர தினத்திலும் பாடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசியகீதத்தை தமிழ்ப் புலவர் மு.நல்லதம்பியே தமிழிழ் மொழிபெயர்த்தார். தமிழ் பாடல் வரிகளின் பொருளானது, சிங்கள பாடல் வரிகளின் அதே பொருளைக் கொண்டுள்ளது.

எனவே, 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் இரண்டு தேசிய கீதங்கள், வெவ்வேறான அர்த்தங்களில் இசைக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துகள் அறியாமையின் வெளிப்பாடாகவே இருக்கின்றன.

தேசிய கீதம் என்பது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும்.அதை இசைக்கும்போது தாய்நாடு மீதான பற்றால் நெஞ்சம் நிமிர்ந்து நிற்கும். அத்துடன்,தேசியகீதம் இசைக்கப்படும்போது அதன் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும்.

பொருள் தெரியாமல், அர்த்தம் புரியாமல் ஒரு பாடலை இசைப்பதால் எந்த வகையில் தேசம்மீதான பற்று உருவாகும்? அது கூடஅடக்குமுறை –புறக்கணிப்பின் ஓரங்கமாகவே பார்க்கப்படும். இலங்கையில் இம்முறை அதுவே நடந்துள்ளது.

இலங்கையில் தமிழ்ப் பாடசாலைகள், வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடைபெறும் தேசிய நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழ் மொழியிலேயே பாடப்பட்டுவந்தாலும்-பிரதான நிகழ்வில் தமிழுக்கு இருந்த அங்கீகாரம் நீக்கப்பட்டுள்ளமையானது தமிழர்களை சினம்கொள்ள வைத்துள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பு 20 தடவைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்16ஆவது திருத்தத்தின் ஊடாக இலங்கையில் தமிழ் மொழியும் அரச கருமமொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, தமிழை மென்மேலும் புறக்கணிக்க எத்தனிப்பதானது 56 யுகத்தையே மீண்டும் உருவாக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாடுகளில் பங்கேற்கும்போது அங்கு இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியிலேயே இசைக்கப்படுகின்றது.இதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் எதிர்ப்பை வெளியிடவில்லை.

எனினும், அற்ப அரசியலுக்காகவும், தமிழர்களை பழிவாங்குவதற்காகவும், அடுத்த பொதுத்தேர்தலில் சிங்கள, பௌத்த வாக்குகளை முழுமையாக வேட்டையாடுவதற்கும் தேசிய கீதத்தையே அரசியல் மயப்படுத்தி தவறான முன்னுதாரணத்தை கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளது என சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஆளுங்கட்சியில் உள்ள தமிழ் அரசியல் பிரமுகர்கள் என்ன செய்யபோகின்றார்கள், குறைந்தபட்ச எதிர்ப்பையாவது வெளியிடுவார்களா?

எஸ்.பிரதா
வட்டகொடை

‘காற்றில் பறந்த அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா உறுதிமொழி’

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் வழங்கியிருந்தன. ஆளும் மற்றும் பிரதான எதிர்க்கட்சிகளும் தேர்தல் காலங்களில் இந்த உறுதிமொழிக்கு வலுசேர்க்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டிருந்தன.

2014 ஆம் ஆண்டு முதலே அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என்ற கோஷம் தொடர்ச்சியாக எழுப்பட்டுவருகின்றது.  மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் முன்னிலையிலும் அடிப்படை ஆயிரம் பற்றி சூளுரைக்கும் அரசியல், தொழிற்சங்க பிரமுகர்கள், பேச்சுவார்த்தைக்கு சென்ற பின்னர் அதனை மறந்து, அனைத்தையும் உள்ளடக்கிய வகையில் ஆயிரம் ரூபாவை பெறுவதற்கே முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.

இம்முறையாவது அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கும் என தொழிலாளர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பும் தவிடுபொடியாகியுள்ளது. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய வகையில் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கே தொழிற்சங்கங்கள் போராடுகின்றன.

ஊதிய உரிமைக்கான போராட்டத்துக்கு வேலாயுதத்தின் மகன் தீபா ஆதரவு!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தியும், சம்பள நிர்ணய சபை ஊடாக உரிய தீர்வை எட்டுவதற்கு ஆதரவு தெரிவித்தும் பெப்ரவரி 5 ஆம் திகதி நடைபெறவுள்ள அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு வேலாயுதம் ருத்திரதீபனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக பதவி வகித்த அமரர். வேலாயுதத்தின் புதல்வரே ருத்திரதீபனாவார்.
அத்தொழிற்சங்கத்தில் தற்போது இவர் உயர் பதவி வகிப்பதுடன், தெற்காசிய பிராந்திய தொழிற்சபையின் பிரதி பொதுச் செயலாளராகவும், தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் உபதலைவருமாக செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமானுக்கும், தெற்காசிய பிராந்திய தொழிற்சபையின் பிரதி பொதுச் செயலாளரும், தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் உபத் தலைவருமான வேலாயுதம் ருத்திரதீபனுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

அதன்பின்னரே போராட்டத்தை ஆதரிக்கும் முடிவை தீபா அறிவித்துள்ளார்.

இதல்கஸ்ஹின்ன தோட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள்

பதுளை, இதல்கஸ்ஹின்ன தோட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களுக்கு தலா 12 லட்சம் செலவில் வீடுகளை கட்ட பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கான அடிக்கல் நாடும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

அடிக்கல் நாடும் நிகழ்வில் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான், ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஷாமில், மேஜர் தெனிபிட்டிய, பேரிடர் அமைச்சின் செயலாளர் மேஜர் சுதந்த ரணசிங்க, பதுளை G.A, ஹல்தமுல்லை பிரதேச சபை தலைவர் அசோக் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

– ஊடகப் பிரிவு

‘மெகா’ கூட்டணியில் முதல் பங்காளியாக இணைகிறது முற்போக்கு கூட்டணி

“ஐக்கிய மக்கள் சக்தியை சுற்றி அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியல் கூட்டமைப்பின் யாப்பு இம்மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு, அதிகாரபூர்வமாக இந்த புதிய தேசிய கூட்டணி ஸ்தாபிக்கப்படும்.” என   எதிர்கட்சி தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இடையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டமைப்பில் முதல் பங்காளி கட்சியாக, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் கரங்கோர்க்க வேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டது.

இன்று முற்பகல் கொழும்பு எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் உத்தேச யாப்பு, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களை ஐக்கிய மக்கள் கூட்டணி கைப்பற்றுவது தொடர்பான வியூகம், மாகாணசபை தேர்தல்கள் தொடர்பான வியூகம், நாட்டின் இன்றைய அரசியல் நிலவரம் ஆகியவை தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடினர்.

இலங்கைக்கு 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ள WHO!

உலக சுகாதார ஸ்தாபனத்தினால், கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், AstraZeneca Covishield தடுப்பு மருந்துகள் இலவசமாக கிடைக்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகத்தின் தென்கிழக்காசிய வலயத்திற்கான பிரதிநிதி, விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.

முதல் தொகுதி தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதல் கட்டத்தில் 30 வீத தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன.

எஞ்சிய கொரோனா தடுப்பூசிகள், பல்வேறு கட்டங்களின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நாட்டிற்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.

விமலின் செயற்பாடுகள் குறித்து மொட்டு கட்சி அதிருப்தி!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் அமைச்சர் விமல்வீரவன்ஸ நடந்துகொண்டவிதம் கவலையளிப்பதாக ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இணையவழி ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நடைபெற்றது.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது விருப்பு வாக்குக்காக அரசியல் நடத்தும் கட்சி அல்ல. விமல்வீரவன்ஸ அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றார். ஆளுங்கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்கின்றார். எனவே, ஏதாவது பிரச்சினையெனில் அமைச்சரவையில் அல்லது ஆளுங்கட்சி கூட்டத்தில் கருத்து வெளியிட்டிருக்கலாம். அதற்கான கூட்டு பொறுப்பு இருக்கின்றது. அதனைவிடுத்து அவர் செயற்பட்ட விதம் குறித்து கவலையடைகின்றோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டார். நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை எடுக்கமாட்டார். நாட்டுக்கு தேவையானவற்றையே அரசாங்கம் செய்யும். நாட்டை நாம் பாதுகாப்போம்.” – என்றார்.

நேற்று மாத்திரம் 715 பேருக்கு கொரோனா – 7 பேர் உயிரிழப்பு!

2021 இல் கடந்துள்ள 33 நாட்களில் மாத்திரம் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், கொரோனாவால் கடந்த மாதத்தில் மாத்திரம் 117 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்துள்ள இரு மூன்று நாட்களில் மாத்திரம் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

கொரோனாவால் நேற்று எழுவர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 715 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

 

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

விசாகப்பட்டினத்தில் 65 அடி உயர திரிசூலம்

0
ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் சுற்றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் 65 அடி உயரத்​தில் உடுக்​கை​யுடன் கூடிய திரிசூலம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. விசாகப்​பட்​டினத்​தில் உள்ள கைலாசகிரி மலைப்​பகுதி பிரபல சுற்றுலா தலமாகும். இங்​குள்ள சிவன், பார்​வதி சிலைகள்...

சாரதிகளே அவதானம்!

0
சாரதிகளே அவதானம்! சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. நுவரெலியா பிரதான நகர், ஹாவாஎலிய, கந்தப்பளை, நானுஓயா, ரதல்ல மற்றும் தலவாக்கலை போன்ற பகுதிகளில் பனிமூட்டம்...

கடும் எதிர்ப்பால் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரச பதவி ரத்து!

0
ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் , தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. “ ரிக்கி ராதன் பண்டிட்...