Home Blog Page 3642

‘மியன்மாரில் இராணுவ ஆட்சியை அனுமதிக்க முடியாது’

மியன்மாரில் இடம்பெற்ற சூழ்ச்சி மிக்க அதிகார மாற்றத்தை,  ஜனநாயகக் கோட்பாடுகளின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக எதிர்க்கின்றது. அத்துடன், சூழ்ச்சி மிக்க இந்நிகழ்வை மானுட வாழ் உலகத்தவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மியன்மார் தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான கட்சி 80 வீத வெற்றியை பெற்றுக்கொண்டது.

இதன் பிரகாரம் இராணுவ ஆட்சி முடிவுற்றதும் ஏற்பட்ட மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பது ஜனநாயகத்தை விரும்பும் சகல தரப்பினதும் பொறுப்பாகும்.

ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் இல்லாமலாக்குவதற்கும் ஜனநாயகத்தை மதிக்கும் உலகில் அதனை ஒன்றித்த ஏற்பாடுகள் இருக்கும் நிலையில், அந்த சகல ஏற்பாடுகளும் மக்கள் ஆணையால் கற்பிக்கப்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மியன்மாரில் ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதும் ,அரசமைப்பு சார் பாராளுமன்ற முறைமைகளுக்கு சவால் விடுக்காமல் இருப்பதற்கும், வரையறையின்றி மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கல்களை உடனே நிறுத்துவதற்கும் முன்னேற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்- என்று குறிப்பிட்டுள்ளார்.

3 அணிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகும் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடர்!

ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதும் அணி எது என்பது இங்கிலாந்து – இங்கிலாந்து தொடரின் முடிவின் அடிப்படையில் அமைய இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் சபை ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதை கடந்த 2019 இல் அறிமுகம்படுத்தியது.

2019 முதல் 2021 மார்ச் மாதம் வரை நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். இறுதி போட்டி ஜுன் மாதம் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

தற்போது முதல் இடத்தில் நியூசிலாந்து அணியும், இந்தியா 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும் உள்ளன.

இந்தியா – இங்கிலாந்து (4 டெஸ்ட்), தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா (3 டெஸ்ட்) இடையிலான டெஸ்ட் தொடரின் முடிவைப் பொறுத்து முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி எவைகள் என்பது முடிவாகும் நிலை இருந்தது.

இன்று தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்து அணி இதிதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து தொடரின் முடிவைப் பொறுத்து இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்று நியூசிலாந்துடன் இறுதிப் போட்டியில் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக 2-0, 2-1, 3-0, 3-1, 4-0 என தொடரை வென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இங்கிலாந்து 3-0, 3-1, 4-0 என தொடரை வென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

1-0 என இந்தியா வெற்றி பெற்றாலும், 1-0, 2-0, 2-1 என இங்கிலாந்து வெற்றி பெற்றாலும், 0-0, 1-1, 2-2 என தொடர் டிரா ஆனாலும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இதனால் இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஒவ்வொரு போட்டியும் முக்கியத்தும் வாய்ந்ததாக இருக்கும்.

சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை 8 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சம்பள விவகாரம் குறித்து கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுப்பதற்காக சம்பள நிர்ணய சபை பெப்ரவரி 6 ஆம் திகதி கூடும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், சில ஆவணங்களை தயாரிப்பதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் அவகாசம் கோரியுள்ளதாலேயே, கலந்துரையாடல் 8 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொழில் அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வா, தமக்கு தெரியப்படுத்தினார் என்று இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் நடைபெற்ற கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்படாததால், சம்பளத்தை கையாளும் பொறுப்பு சம்பள நிர்ணய சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் அரச தரப்பிலிருந்து 19 பேர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

‘ஜெனிவாத்தொடரில் உரிய நேரத்தில் உரிய பதில் வழங்கப்படும்’

மனித உரிமைகளை மீறியதாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு ஆற்றல் இருப்பதாகவும் இதுதொடர்பில் வழங்கப்பட வேண்டிய பதில் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இராணுவம் தொடர்பில் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அப்போது இருந்த எமது அரசாங்கத்தின் நிலைபாடு மிகவும் தெளிவாக முன்வைக்கப்பட்டது.

எமக்கிடையில் பல உடன்பாடுகள் ஏற்பட்டன. இறுதியாக 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் மாற்றமடைந்தது அப்பொழுது இருந்த வெளிநாட்டு அமைச்சரினால் 30ஃ1 என்ற ஆலோசனைக்கு அமைய இணைய அனுசரணையுடன் நாம் தவறு செய்ததாக பிரேரணை சமர்பிக்கப்பட்டது. அதன் பெறுபேரையே நாம் அனுபவிக்கின்றோம் என்று அமைச்சர் கூறினார்.

அப்போதைய நிர்வாகத்தில் இருந்த அமைச்சர் திலக் மாறப்பன தமது உரையில் இந்த ஆலோசனை நாட்டின் அரசியல் அமைப்புக்கு முறன்பட்டது என்றும் அதே போன்று மீண்டும் தெரிவான எமது அரசாங்கத்தின் வெளிநாட்டு அரசாங்கத்தின் அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் உத்தியோக பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இதில் இருந்து விலகுவது சரியானது என்பதை விரிவாக தெரிவிக்க எதிர்பார்ப்பதாகவும் இதுதொடர்பில் விரிவான வகையில் விடயங்களை சமர்பிக்க முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான யோசனையை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்றும், ஒன்றுக்கொன்று முரணானவை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை திருத்தி அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

‘கொரோனா’விலிருந்து 59,043 பேர் மீண்டனர்’

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 968 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 617 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 323 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் 2020 மார்ச் முதல் இன்றுவரை 64 ஆயிரத்து 983 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்தின் திட்டத்துக்கு தொழில் அமைச்சு பச்சைக்கொடி

தமது தரப்பால் முன்வைக்கப்பட்ட உற்பத்தித் திறன் ஊதியத் திட்டத்திற்கு தொழில் அமைச்சு பச்சைக்கொடி காட்டியுள்ளது என்று  பெருந்தோட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு,

“தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) நாள் ஒன்றுக்கு ரூபா. 1,108 வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளமாக வழங்குவதற்கான திருத்தப்பட்ட ஊதிய முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.

திருத்தப்பட்ட முன்மொழிவானது தொழில் அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட தீர்வின் விளைவாகும். எனினும், தொழிற்சங்கங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்மானம் தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான 1000 ரூபாவை விட அதிகமாக வருவாயைப் பெற்றுக் கொள்ளக் கூடியதை உறுதி செய்வதுடன், மேலும் இறுதியாக உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான வெகுமதியையும் அளிக்கும்.

1,108 ரூபா நாள் சம்பளம் பின்வரும் முறைமையின் அடிப்படையாகக் கொண்டது:

அடிப்படை சம்பளம் 725 ரூபா, விலை பங்கு துணை 50 ரூபா, ஊழியர் சேமலாப நிதி / ஊழியர் நம்பிக்கை நிதி (EPF/ETF)) 108 ரூபா மற்றும் வருகை மற்றும் உற்பத்தித் திறன் ஊக்குவிப்புத் தொகை 225 ரூபாவும் இந்த புதிய ஊதிய முன்மொழிவு யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒரு நிலையான தினசரி ஊதிய மாதிரியானது வாரத்தில் 3 நாட்களுக்கு பொருந்தும். மீதமுள்ள நாட்களில் உற்பத்தித் திறனுடன் இணைக்கப்பட்ட இரண்டு வருவாயை அதிகரிக்கும் மாதிரிகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்கள் ஊதியம் பெறுவார்கள் – அதில் ஒன்று பறிக்கப்பட்ட ஒவ்வொரு கிலோ தேயிலைக் கொழுந்துக்கும் ஊழியர்களுக்கு 50 ரூபா வழங்கப்படும். இரண்டாவது வருவாய் பங்குமாதிரி, இதன் மூலம் ஊழியர்கள் தொழில் முனைவோராக முடியும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை பெருந்தோட்ட துரைமார் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம்,  “தொழிற்சங்கங்கள் மணலில் ஒரு கோடு வரைந்து அதில் அவர்கள் கூறுவது, எமது தொழிலாளர்களுக்கு சிறந்தது என்னவென்றால், எந்தவொரு ஊக்கத் தொகையும் இல்லாமல் 1000 ரூபா
அடிப்படை சம்பளம், தவறாமல் வேலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. இந்த செயல்பாட்டில் பல சலுகைகளை அவர்கள் நிராகரித்தனர்.

இவை ஒவ்வொன்றும் ஒரு நிலையான தினசரி ஊதியத்தை 1000 ரூபாவுக்கு மேல் வழங்குகின்றது. இந்த திட்டத்தை அரசியல் நலனுக்கு அப்பாற்பட்ட தோட்டத் தொழிலாளியின் சிறந்த நலனுக்காக பரிசீலிக்கும்படி தொழிற்சங்கங்களை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

“உற்பத்தித் திறன் மாதிரிகள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், தொழிலாளர்களுக்கு நெகிழ்வான நேரங்கள்மற்றும் மேம்பட்ட தொழிலாளர் ஆகியவை பிற குடும்ப உறுப்பினர்கள் சம்பாதிக்கும் செயன்முறையிலும் பங்களிக்க முடியும். எமது தொழிலாளர்கள் எப்போது, எப்படி வேலை செய்கிறார்கள் என்பதைப் பற்றிச்சொல்வார்கள், மேலும் செயற்பாட்டில் அவர்களின் வருவாயை துரிதமாக மேம்படுத்துவார்கள்.” என தெரிவித்தார்.

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ குறித்து வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம், ஒரே நாளில் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக கூறப்படுவது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பு தரப்பின் இந்த முடிவால் தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரசிகர்களும் ஓடிடி வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், படத்தை ஓடிடி-யில் வெளியிடும் தினத்தன்றே தியேட்டர்களிலும் வெளியிடலாமா என தயாரிப்பாளர் யோசித்து வருகிறாராம்.

ஏற்கனவே ஈஸ்வரன் படத்தை இந்தியாவில் தியேட்டரில் வெளியிடும் தினத்தன்று, வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் முயற்சி செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த முடிவு கைவிடப்பட்டது.

அப்படி இருக்கையில், ஜகமே தந்திரம் படத்தை தியேட்டரிலும், ஓடிடியிலும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திரையரங்க உரிமையாளர்கள் சம்மதிப்பார்களா என்பது கேள்விக்குறி தான். விரைவில் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொட்டின குளவிகள் – தொழிலாளர்கள் இருவர் பாதிப்பு!

மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்டத்தில் எமில்டன் பிரிவில் தொழில் புரிந்த தோட்டத் தொழிலாளர்களில் இருவர் இன்று முற்பகல் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

30 வயதுடைய விஸ்வநாதன், 36 வயதுடைய பிரபு ஆகியோரே குளவிக்கொட்டால் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமுதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இருவம் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பபட்டனர் என்று மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி  டிலக்‌ஷி தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை – மஸ்கெலியாவில் சோகம்!

மஸ்கெலியா, சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட அவரவத்தை பிரிவில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சத்திய மூர்த்தி சுபாஸ் என்ற 22 வயதான ஆட்டோ ஓட்டுநரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன்னர் இவர் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளார். அதில் ஆட்டோவுக்கான 3 மாத தவணைக் கட்டணத்தை செலுத்தாததாலேயே தான் இந்த முடிவை எடுத்தார் என குறிப்பிட்டுள்ளார் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சடலம் பிரதே பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

‘எமது மொழியையும், மதத்தையும் மதிக்காத இன்றைய இலங்கையை சுதந்திர நாடாக ஏற்கமுடியாது’ – மனோ அறிவிப்பு

” எமது மொழியையும், மதத்தையும் மதிக்காத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” எங்கள் மொழிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், இலங்கை நாட்டுக்குள்ளே கெளரவமான இடம் தராத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழர்களையும், முஸ்லிம்களையும் மொழி, மத, இன அடிப்படைகளில் தூரத்தள்ளி வைத்து, இரண்டாம், மூன்றாம் தர பிரஜைகளாக நடத்தும் இன்றைய அரசாங்கத்துக்குள்ளே அடைக்கலம் புகுந்து, இந்த இனவாத அரசுக்கு ஒரு ஏற்புடைமை ஏற்படுத்தி, இதை ஒரு சுதந்திர நாடாக காட்ட முயலும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

65 வருடங்களுக்கு பிறகு, கடந்த எமது நல்லாட்சியில், நாம் முன்னின்று போராடி பெற்ற, தமிழ் தேசிய கீதம் பாடும் உரிமையை, இடை நிறுத்தி விட்டு, இவர்கள் கொண்டாடும் சுதந்திர நிகழ்வுக்கு, எமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நாம் ஏற்க மாட்டோம்.

எமது இருப்பிடங்களில், நாம் எமது சுதந்திர உணர்வை கொண்டாடுவோம். தமிழ் மொழிக்கு உரிய மரியாதையை தராத இலங்கை முழுமையான இலங்கை நாடல்ல.

சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதமாம். இறுமாப்பாக சொல்கிறார்கள். தமிழில் பாடினால் மட்டும் அதனால், தமிழ் பேசும் இலங்கையர் வீடுகளில் தேனும், பாலும் ஓட போவதில்லை. இதன்மூலம் குடி எழும்பியும் விடாது. குடி முழுகியும் விடாது.
ஆனால், நாட்டை ஒன்றுப்படுத்த கடவுள் தந்த, “ஒரே மெட்டு, ஒரே அர்த்தம்” கொண்ட இரண்டு தேசிய கீதங்களையும் கூட ஒருசேர பாட முடியாத அளவில் இவர்கள் இனவாதத்தில் ஊறி போய் உள்ளார்கள்.

மேலை நாடுகளிலும் இனவாதம், நிறவாதம் இருந்தாலும், வெள்ளை இனவாதிகளுக்கு எதிராக, கருப்பு அமெரிக்கர்களுக்கு ஆதரவாக, “கருப்பு உயிர் கனதியானது” (Black Lives Matter) என்று சொல்லி போராட, கோடிக்கணக்கான வெள்ளையர்களே அந்நாடுகளில் உள்ளார்கள்.

இந்நாட்டில் எமக்கு ஆதரவாக பேச,போராட, நாமே ஆள் தேட வேண்டியுள்ளது.
அமெரிக்கா உட்பட்ட மேலை நாடுகளில் இனவாதம் தோலின் நிறத்தில் உள்ளது. இலங்கையில் இங்கே அது ஆன்மாவில் ஊறியுள்ளது.

முன்னாள் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் என்ற முறையில், நான், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரிடம் கடைசி நிமிட அழைப்பாக, “இலங்கை தாயை போற்றும், தமிழிலான தேசிய கீதத்தையும் பாடி, தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பி, நாம் முன்னோக்கி செல்வோம். அதன்மூலம், நாமும் இந்நாட்டுக்கு உடைமையாளர்கள் என்ற உணர்வை தமிழ் பேசும் சுமார் ஐந்து மில்லியன் இலங்கையர்களின் மனங்களில் ஏற்படுத்துவோம்” என நேற்று கூறியிருந்தேன்.

ஆனால், இவர்களை திருத்த முடியவில்லை. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எவ்வளவு அடி வாங்கினாலும், திருந்தா ஜன்மங்கள். பல வர்ண பூக்கள் நிறைந்த பூங்கா எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை உணர தெரியாத பிற்போக்குவாதிகள்.

உலகமே அவ்வவ் நாடுகளில், பல்லின, பன்மத, பன்மொழி அடங்கிய பன்மைதன்மைகளை கொண்டாடி மகிழும், இவ்வேளையில், இவர்கள் நாட்டை பின்னோக்கி அழைத்து செல்கிறார்கள்.

எங்கள் மொழிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், இலங்கை நாட்டுக்குள்ளே கெளரவமான இடம் தராத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை என இவர்களுக்கு உணர்த்துவோம்.

65 வருடங்களுக்கு பிறகு, கடந்த எமது நல்லாட்சியில், நாம் முன்னின்று போராடி பெற்ற, தமிழ் தேசிய கீதம் பாடும் உரிமையை, இடை நிறுத்தி விட்டு, இவர்கள் கொண்டாடும் சுதந்திர நிகழ்வுக்கு, எமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நாம் ஏற்க மாட்டோம்.

எமது இருப்பிடங்களில் நாம் எமது சுதந்திர உணர்வை கொண்டாடுவோம். தமிழ் மொழிக்கு உரிய மரியாதையை தராத இலங்கை முழுமையான இலங்கை நாடல்ல.

தமிழர்களையும், முஸ்லிம்களையும் மொழி, மத, இன அடிப்படைகளில் தூரத்தள்ளி வைத்து, இரண்டாம், மூன்றாம் தர பிரஜைகளாக நடத்தும் இன்றைய அரசாங்கத்துக்குள்ளே அடைக்கலம் புகுந்து, இந்த இனவாத அரசுக்கு ஒரு ஏற்புடைமை ஏற்படுத்தி கொடுக்க முயலும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.” – என்றார்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

விசாகப்பட்டினத்தில் 65 அடி உயர திரிசூலம்

0
ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் சுற்றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் 65 அடி உயரத்​தில் உடுக்​கை​யுடன் கூடிய திரிசூலம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. விசாகப்​பட்​டினத்​தில் உள்ள கைலாசகிரி மலைப்​பகுதி பிரபல சுற்றுலா தலமாகும். இங்​குள்ள சிவன், பார்​வதி சிலைகள்...

சாரதிகளே அவதானம்!

0
சாரதிகளே அவதானம்! சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. நுவரெலியா பிரதான நகர், ஹாவாஎலிய, கந்தப்பளை, நானுஓயா, ரதல்ல மற்றும் தலவாக்கலை போன்ற பகுதிகளில் பனிமூட்டம்...

கடும் எதிர்ப்பால் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரச பதவி ரத்து!

0
ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் , தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. “ ரிக்கி ராதன் பண்டிட்...