Home Blog Page 3696

வேகமாக பரவும் புதிய கொரோனா – லண்டனின் நிலைமை கவலைக்கிடம்!

இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. புள்ளிவிவரங்கள் படி கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 135 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இங்கிலாந்தில் 71 ஆயிரத்து 567 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் லண்டனில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு மொத்தமாக முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் எஞ்சிய நோயாளிகளை யார்க்சயர் பகுதி மருத்துவமனைகளுக்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வீரியமிக்க கொரோனா பாதிப்பு நாடு தழுவிய மூன்றாவது ஊரடங்கிற்கு காரணமாக அமையும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும், லண்டன் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனைகளுக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து நோயாளிகளை பராமரிக்க வேண்டிய மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுவாக போர் காலகட்டத்தில் இதுபோன்ற கூடாரங்கள் அமைத்தே நோயாளிகளை பரமாரிக்கும் நிலை உருவாகும். தற்போது லண்டனிலும் அதே நிலை உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, சில லண்டன் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் தரப்பு பல பிரதான யார்க்சயர் மருத்துவமனைகளிடம் கொரோனா நோயாளிகளைப் பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். லண்டன் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகள் தற்போது 114 சதவீத திறனில் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி எப்போது வரும்? பெப்ரவரியில் இறுதி முடிவு!

இலங்கையில் பயன்படுத்தப்படும் கொவிட் – 19 தடுப்பூசி தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு அது தொடர்பில் அறிவிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” உலகில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கொவிட் – 19 தடுப்பூசிகள் தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் நிபுணர்கள் குழுவொன்று தீவிரமாக ஆராய்ந்துவருகின்றது. இவற்றில் எந்த தடுப்பூசி இலங்கைக்கு பொருத்தமானது – பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பது தொடர்பில் அக்குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுவருகின்றது.

அத்துடன் தடுப்பூசி விவகாரத்தைக் கையாள்வதற்கென ஜனாதிபதி செயலணியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர மட்டத்திலான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

எனவே, எந்த தடுப்பூசியை இலங்கைக்கு தருவிப்பது, எவ்வளவு கொண்டுவருவது, எந்த வயது கட்டமைப்பினருக்கு முதலில் பயன்படுத்துவது என்பன தொடர்பான தகவல்களை எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரிக்கும் நாட்டு மக்களுக்கு அறிவிக்ககூடிதாக இருக்கும்.” – என்றார்.

ஜீவனுக்கு கொரோனா தொற்று இல்லை – பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதியானது!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்பது பிசிஆர் பரிசோதனைமூலம் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பங்கேற்றிருந்த நிகழ்வில் அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரும் பங்கேற்றிருந்தார்.

அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து ஜீவன் தொண்டமானும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் அமைச்சு மற்றும் தொழிற்சங்க பணிகளை ஜீவன் தொண்டமான் விரைவில் ஆரம்பிக்கவுள்ளார் என காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 195 ஆக உயர்வு!

கொரோனா’ வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 182 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக தேரர்கள் போர்க்கொடி!

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரியை நீக்குமாறு பௌத்த தேரர்கள் சிலர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டுக்குள் சரிஆ சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அலி சப்ரி முயற்சிக்கிறார் எனவும், நீதி அமைச்சர் பதவியை வகிப்பதற்கு அவர் தகுதியற்றவர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தி கொழும்பில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகளும், தேரர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தின்போதும் நீதி அமைச்சரை பதவி நீக்குமாறு பலராலும் கருத்து வெளியிடப்பட்டது.

அதேவேளை, இவ்வாறானதொரு பின்புலத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு முடிவெடுத்துள்ளார் என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘என் ரஜினியின் நலமே முக்கியம் ‘ – கமல்

” என் ரஜினி நலமாக இருக்க வேண்டும்.” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் இன்று பொதுமக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர், ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

” ரஜினி எடுத்த முடிவில் சற்றே ஏமாற்றம் இருந்தாலும் அவரது ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம். என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும்”. ரசிகர்களின் மனநிலைதான் எனக்கும் உள்ளது. நண்பர் ரஜினி ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. பிரசாரம் முடிந்து சென்னை திரும்பியதும் ரஜினியை கண்டிப்பாக சந்திப்பேன்.” – என்றார்.

நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 800 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 33 ஆயிரத்து 925 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 38 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

வெளி இடங்களிலிருந்து நுவரெலியா வந்த 85 பேருக்கு கொரோனா!

வெளி பிரதேசங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்துக்குள் பிரவேசித்த 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவின் ஊடாக உட்பிரவேசிக்கும் பிரதான வீதியான ஹட்டன் – கொழும்பு மார்க்கத்தின் கலுகல பகுதியில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனையோர் மேல் மாகாணத்திலிருந்து நுவரெலியா மாவட்டத்திற்குள் வருகைத் தந்தவர்கள் என அந்த அலுவலகம் கூறுகின்றது.

அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்பகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.

க.கிசாந்தன்

‘கொரோனா’விலிருந்து 33,925 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 704 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 925 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 484 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஜினியின் முடிவால் தப்பியது தமிழகம் – மனோ சுட்டிக்காட்டு

” ரஜினி நேரடி அரசியலை கைவிட்ட நிகழ்வு, தமிழகம் தப்பி பிழைத்த, மிக நல்ல ஒரு சம்பவம்.” -என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,

” ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாடு, பல வட இந்திய மாநிலங்களை விட முன்னேறிய ஒரு மாநிலம்.

வட இந்தியாவில், டெல்லி, மும்பாய், கொல்கத்தா, சண்டிகர், அஹமதாபாத் ஆகிய மாநகரங்களை சுற்றிய பகுதிகளில் மட்டுமே “முன்னேற்றம்” தெரியும்.
வட இந்தியாவில், உள்ளூரில், கிராமிய நாட்டு புறங்களில், “பின்னேற்றம்” கண்கூடாக தெரியும்.

தமிழ்நாட்டின் இந்த “ஒப்பீட்டளவிலான முன்னேறிய” நிலைமைக்கு காரணம் இம்மாநிலத்தையும், புதுச்சேரியையும் தேசிய கட்சிகள் அல்லாமல், “திராவிட” கட்சிகள் பல பத்தாண்டுகளாக ஆண்டு வருவதே காரணம்.

திராவிட இயக்க அணியின் மூலக்கொள்கை “சமூக நீதி” என்பதாகும். இது நீதிக்கட்சியிலிருந்து ஆரம்பமாகி பெரியார், அண்ணா ஆகிய பெருந்தலைவர்களால் செதுக்கப்பட்டதாகும். இதுதான் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிநாதமாக விளங்குகிறது.

இந்த உண்மையை ஆய்வுரீதியாக ஆராய்ந்து பார்த்தால்தான் விளங்கும்.
திமுக, அஇஅதிமுக ஆகிய கட்சிகளின், அரசியல்வாதிகளின் அலங்கோலங்கள் உண்மை. ஆனால், இந்த அலங்கோலங்களுக்கு அப்பால் இன்னொரு உண்மையும் இருக்கிறது.

வட இந்திய கட்சிகளின், அரசியலர்களின் “படா” அலங்கோலங்கள் பற்றி தெரியாதவர்களும், வட இந்திய மாநிலங்களை நேரடியாக கண்டிராதவர்களும் தான், திராவிட கட்சிகளை குறை கூறுவார்கள்.

திராவிட கட்சிகளில் தவறு, பிழை, குற்றம் கணிசமாக இருக்கின்றன. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் வட இந்திய மாநிலங்களை ஆளும் கட்சிகளின் கட்சிகளுடன் ஒப்பிடும் போது இவை மேல். இதுதான் உண்மை.

கல்வி, சுகாதாரம், ஜாதீயம்-பெண்ணடிமை ஒழிப்பு, பின்தங்கியோருக்கான கல்வி, அறிவியல், ஆங்கில மொழியறிவு, தொழில், அரசியல் துறை ஒதுக்கீடுகள், கைத்தொழில், வர்த்தகம், கலை, விளையாட்டு, போக்குவரத்து, தகவல் தொடர்பு… என்ற பல்வேறு துறைகளில் தமிழகம் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது.

திராவிட கட்சிகளின் தவறுகள் இன்னமும் திருத்தப்பட்டு அவற்றுக்கு உள்ளேயே இருந்து உருவாகும் புதிய அமைப்புகள்தான் தமிழகத்தை இன்னமும் சிறந்த இலக்கை நோக்கி கொண்டு செல்ல முடியுமே தவிர, “திராவிட” கட்சிகளுக்கு மாற்று “தேசிய” கட்சிகள் அல்ல.

இந்த பின்னணியில் பார்த்தால் குறுக்கு வழியில் தேசிய கட்சிகளை “ஆன்மீகம்” என்ற பெயர் சூட்டி குறுக்கு வழியில் சிம்மாசனத்தில் உட்கார வைக்க முயன்ற, நடிகர் ரஜினி காந்த் நேரடி அரசியலை கைவிட்டமை, தமிழகத்தில் இன்று நிகழ்ந்த மிக நல்ல ஒரு சம்பவம்..!” – என்றுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...