Home Blog Page 3695

‘மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் சஜித் அணியுடன் சங்கமம்’

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் விரைவில் தமது அணியுடன் இணையவுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” ஐக்கிய மக்கள் சக்தியானது பாரிய அரசியல் கூட்டணியாக செயற்படவுள்ளது. எமது கூட்டணியில் கட்சிகள், அமைப்புகள் இணையலாம். அதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. ஆனால் எமது கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலரும் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளனர்.” – எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

கம்பளையில் 200 இற்கும் மேற்பட்டோருக்கு பிசிஆர் பரிசோதனை

கம்பளை நகரில் 200 இற்கும் மேற்பட்டோரிடம் இன்று (30) பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள், சுகாதார தரப்பினரால் பெறப்பட்டன.

கம்பளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு வியாபார நிமித்தம் வந்துசென்ற பிஸ்கட் கம்பனியொன்றின் விற்பனை முகவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கம்பளை நகரிலுள்ள 100 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும், அங்கு தொழில் புரிந்தவர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேற்படி பிஸ்கடர் நிறுவனத்தின் முகவருடன் நெருக்கமாக பழகியவர்களே இன்று இவ்வாறு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கம்பளை நிருபர் – லாவண்யா

உக்ரைனிலிருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா

இலங்கைக்கு சுற்றுலாவந்த உக்ரைன் பிரஜைகளில் மூவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மூவருக்கும் நேற்றிரவு (29) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளை மருத்துவ சிகிச்சைகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஊக்ரைனிலிருந்து 180 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த விமானம் மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கியது.

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துவரும் செயற்றிட்டத்தின் கீழ் இவர்கள் வரவழைக்கப்பட்டனர். நாட்டை வந்தடைந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பெந்தோட்டை மற்றும் கொக்கல பகுதிகளிலுள்ள ஹோட்டல்களுக்கு அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார நடைமுறைகளைமீறிய 50 பஸ்களின் அனுமதி ரத்து!

சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்காத 50 பஸ்களின் வீதி போக்குவரத்து அனுமதி பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன என்று போக்குவரத்துத் துறை ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

 ” இலங்கை போக்குவரத்து சபை சுகாதார நடைமுறை –  விதிமுறைகளை உரியமுறையில் கடைபிடிக்கின்றது. எனினும் தனியார் துறையினர் 90 சதவீதமானோர் மாத்திரமே இந்த நடைமுறையை பின்பற்றுகின்றனர்.

இந்தநிலையில், விதிமுறைகளை பின்பற்றாத 50 க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களின் அனுமதிப்பத்திரங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளோம். என்றோ ஒருநாள் கொவிட் தொற்று இந்த உலகை விட்டு நீங்கிய பின்னர்தான் அவர்களின் அனுமதிப் பத்திரங்கள் மீண்டும் வழங்கப்படும்.” – என்றார்.

10 நாட்களில் 573 விபத்துகள் – 47 பேர் பலி! 127 பேர் படுகாயம்!!

நாட்டில் கடந்த 10 நாட்களில் 573 விபத்துகள் இடம்பெற்றுள்ளன என்றும் இதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி முதல் இன்று காலைவரையான காலப்பகுதியிலேயே மேற்படி விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

இவ்விபத்துகளில் 127 பேர் படுகாயமடைந்துள்ளனர். 394 பேருக்கு சிறு அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளன. 132 வாகனங்களும் சேதமடைந்துள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி கமலாவுக்கு கொரோனா தடுப்பூசி!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.வாஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில் முதல் டோசை போட்டுக் கொண்டார் . அது போல் கமலாவின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார்.

அனைத்து அமெரிக்க மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க இன்னும் சில மாதங்களாகலாம் என்ற போதும் மக்களுக்குத் தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட ஏற்கனவே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். மாநகரசபையின் புதிய மேயராக மணிவண்ணன் தெரிவு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவுசெய்யும் விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

முதல்வர் வேட்பாளர்களாக,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட்டும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் முன்மொழியப்பட்டனர்.

தொடர்ந்து வாக்கெடுப்பு பகிரங்கமைக நடைபெறுவதா அல்லது இரகசியமாக நடைபெறுவதா என உறுப்பினர்களிடத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதால், முதல்வர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் இ.ஆனல்ட்டுக்கு 20 வாக்குகளும், வி.மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 20 உறுப்பினர்கள் இ.ஆனல்ட்டுக்கு ஆதரவாக வாக்களியுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் என 21 உறுப்பிர்கள் வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் என 4 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

இதனால் யாழ் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவயாகவும் சமர்பிக்கப்பட்டு
தோற்கடிக்கப்பட்டதால் மாநக முதல்வர் இ.அஆனல்ட் தனது பதவியை இழந்திருந்தார்.

இதனால் புதிய முதல்வரை தேர்வு செய்யும் விசேட அமர்பு இன்று இடம்பெற்ற போதே வி.மணிவண்ணன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசமைப்பு வரும்வரை மாகாணத் தேர்தல் வேண்டாம்!

புதிய அரசியலமைப்பு இயற்றப்படும்வரை மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் இருப்பதே சிறந்த முடிவாக அமையும் – என்று இராஜங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த ஆட்சியின்போது மாகாணசபைகள் மற்றும் உள்ளாட்சிமன்ற தேர்தல்கள் பிற்போடப்பட்டன. இதற்கு எதிராக எமது அணியினர் விமர்சனங்களை முன்வைத்தனர் என்பதுடன் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் பிற்போடப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டினர்.

அப்படியானால் தற்போது தேர்தலை நடத்தும் பொறுப்பு எமது அரசாங்கத்துக்கு இருக்கின்றது. இது பற்றியே அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டிருக்கலாம்.

அத்துடன் மாகாணசபை முறைமை தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.குறிப்பாக  எமது அணிக்கு ஆதரவு வழங்கியவர்களில் சிலர், மாகாணசபைகள் வெள்ளை யானை எனவும், அவை இந்தியாவால் பலவந்தமாக திணிக்கப்பட்டவை எனவும் வாதிட்டுவருகின்றனர்.

தற்போது புதியதொரு அரசியலமைப்பை இயற்றும் பணி இடம்பெற்றுவருகின்றது. தேர்தல் முறைமை குறித்து அதில் முடிவு எடுக்கப்படும். நிர்வாக முறைமையும் தீர்மானிக்கப்படும். எனவே, புதிய அரசியலமைப்பு இயற்றப்படும்வரை தேர்தலை நடத்தாமல் இருப்பதே சிறப்பு.” – என்றார்.

இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த பெண் காலமானார்!

இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த பெண், நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

117 வயதுடைய   வேலு பாப்பானி அம்மா என்ற மூதாட்டியே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மரணமடைந்துள்ளார்.

இரு பிள்ளைகளின் தாயாரான இவர், 1903 ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார்.

அவரது விபரங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முதியவரின் அடையாள அட்டை மூலமாகவும் சரிபார்க்கப்பட்டுள்ளன.

இதேநேரம், உலக முதியோர் தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு ஒக்டோபர் முதாலம் திகதி இலங்கையின் மிகவும் வயதான பெண் எனத் தெரிவிக்கும் சான்றிதழை முதியயோருக்கான தேசிய சபை குறித்த பெண்மணிக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

‘அமைச்சு பதவியை துறக்கவில்லை’ – அலிசப்ரி விளக்கம்

தான் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

நீதியமைச்சர் அலி சப்ரி அமைச்சுப் பதவியில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்யவுள்ளார் எனவும், இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் வினவியபோதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...