Home Blog Page 3694

‘கொரோனா’வால் இலங்கையில் இதுவரை 199 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 60 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 186 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

‘அரசியலுக்கு வா தலைவா!’ – ரஜினியின் வீட்டுக்கு முன்னால் ரசிகர்கள் போராட்டம்!

‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்’ என்று இன்றும் அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டன் இல்லம் அருகில் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

‘உடல்நிலையை கருத்தில்கொண்டு கட்சியை ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை’, என நடிகர் ரஜினிகாந்த் நேற்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். இது அவரது அரசியல் வருகையை எதிர்நோக்கியிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் இருப்பதை அறிந்துகொண்டு ரசிகர்கள் நேற்று மாலை அவரது வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது ‘அரசியலுக்கு வாங்க தலைவா’, என்று தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ‘கட்சி தொடங்கவில்லை’ என்று நடிகர் ரஜினியின் அறிவிப்பைத் தொடர்ந்து அவர் ‘கட்சி தொடங்கவேண்டும்; அரசியலுக்கு வரவேண்டும்’ என்று இன்றும் அவரது ரசிகர்கள் 2ஆவது நாளாக சென்னை போயஸ் கார்டன் இல்லம் அருகில் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்கள் வருகை அதிகரித்திருப்பதால் போயஸ்கார்டன் இல்லத்தில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். போயஸ்கார்டன் சாலையின் நுழைவு வாயிலிலேயே ரசிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பேசும்போது,

‘எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. வீட்டில் இருந்துகொண்டே பிரச்சாரம் செய்யலாம். தலைவரின் ஒரு இரண்டு நிமிட வீடியோ இருந்தாலே போதும். 234 தொகுதிகளையும் அடித்துத் தூக்கும் தில்லு எங்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உண்டு. அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்’. என்கிறார்.

மற்றொரு மன்ற நிர்வாகி கூறுகையில், ‘பூத் கமிட்டி மெம்பர்ஸ் ஒரு வீட்டிற்கு சென்றால் 25 போட்டோக்கள் கொடுக்கிறார்கள். தெருவே போட்டோ எடுத்து வந்து கொடுக்கிறார்கள். அதனால், தலைவர் கண்டிப்பாக மனதை மாற்றிக்கொண்டு அரசியலுக்கு வரவேண்டும். அவர், வந்தால் எல்லா வேலைகளையும் பார்க்க மக்கள் மன்றம் உறுதுணையாக இருக்கும் என்றார்.

மற்றொரு ரசிகர் கூறுகையில்,

‘தலைவர் நிச்சயம் வருவார். எம்.ஜி.ஆர் படுத்துக்கொண்டே ஜெயித்தார். என் தலைவர் வீட்டில் இருந்து பிரச்சாரம் செய்தே ஜெயிப்பார். ரசிகர்களுக்காக கேட்கவில்லை. மக்களுக்காகத்தான் கேட்கிறோம்’ என்றார்.

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – இலங்கை 7ஆம் இடத்தில்!

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி 7 ஆம் இடத்தில் உள்ளது.
இன்று வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது.
மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியா 2 வது இடத்தை பிடித்து உள்ளது. இதை தொடர்ந்து  அடுத்த ஆண்டு ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாட தக்க வைத்துக் கொண்டது.
கடந்த புதன்கிழமை நடந்த முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நியூசிலாந்து மூன்றாவது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளது. நியூசிலாந்து 360 புள்ளிகளை பெற்று உள்ளது.

தொடர்ந்து இங்கிலாந்து 292 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும், 166 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 5 ஆவது இடத்திலும் உள்ளது. தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் , பங்களாதேஷ் ஆகிய அணிகள் உள்ளன.

மஹர சிறைச்சாலை கலவரம் – இறுதி விசாரணை அறிக்கை கையளிப்பு!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு ,அதன் இறுதி அறிக்கையை நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் கையளித்துள்ளது.

குழுவின் தலைவரான முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி குஸலா சரோஜினி வீரவர்தன தலைமையில்   இறுதி அறிக்கை இன்று (30) கையளிக்கப்பட்டது.

நீதி அமைச்சர் அலி சப்ரியால் குறித்த நிபுணர்கள்குழுகடந்த மாதம் 29ஆம் திகதி (2020.11.29) நியமிக்கப்பட்டது.

குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 7ஆம் திகதி (2020.12.07) கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்குள் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இந்தக் குழுவிற்கு பணிப்புரை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘முதியோர் கொடுப்பனவை வீடுகளுக்கே சென்று வழங்கவும்’ – செந்தில் தொண்டமான் பணிப்பு

பசறை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க மற்றும் இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

காவல்துறை, வனத்துறை, வீதி , சுரங்கம், விவசாய சேவைகள், போக்குவரத்து சபை, சுகாதாரம், மின்சாரம், கல்வி, விளையாட்டு, மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் பிரதேச செயலாளர் இக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.

முதியோர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை, தூர இடங்களுக்கு சென்று சிரமத்தின் மத்தியில் முதியோர்கள் பெற்றுக்கொள்வதால், அவர்களுக்கான கொடுப்பனவை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குமாறு பசறை பிரதேச செயலாளருக்கு செந்தில் தொண்டமான் இக்கூட்டத்தின்போது பணிப்புரை விடுத்தார் .

நாட்டில் இன்று மாத்திரம் 636 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 282 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 636 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 34 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 38 ஆயிரத்து 979 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘கொரோனா’ பிடியிலிருந்து மீண்டார் அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர்!

‘கொரோனா’ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர் கதிர்ச்செல்வன், சிகிச்சையின் பின்னர் முழுமையாக குணமடைந்து இன்று (30) வீடு திரும்பினார்.

அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் அம்பாந்தோட்டையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பட்டார்.

அவர் பங்கேற்ற அரச நிகழ்வுகளில் கலந்துகொண்ட வி.ஐ.பிக்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பிசிஆர் பரிசோதனை முடிவு வெளிவருவதற்கு முன்னர் பொதுவெளியில் நடமாடியதால் கதிர்ச்செல்வனை இடைநிறுத்தியுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கவுள்ளதாக அறிவித்தது.

இந்நிலையில் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ள கதிர்ச்செல்வன், தனது செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 300 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 34 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 38 ஆயிரத்து 697 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘கொரோனா’விலிருந்து மேலும் 698 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 698 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 245 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 195 பேர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்குளிலிருந்து ஹப்புத்தளை சென்ற மூவருக்கு கொரோனா

கொழும்பு மட்டக்குளிய பகுதியில் இருந்து மரண சடங்கில் பங்கேற்பதற்காக ஹப்புத்தளை சென்றிருந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹப்புத்தளையில் கஹகொல்ல, பங்கட்டி, தங்கமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் தொழில் நிமித்தம் கொழும்பு, மட்டக்குளிய பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மரண சடங்கில் பங்கேற்பதற்காக ஹப்புத்தளை சென்றுள்ளனர். கொழும்பில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மூவருக்கும் இன்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மூவரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...