Home Blog Page 3714

எந்த வடிவில் வந்தாலும் MCC ஒப்பந்தத்துக்கு இடமில்லை!

MCC ஒப்பந்தம் எந்த வடிவில் வந்தாலும் அதில் கைத்சாத்திட போவதில்லை என அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கினிகத்தேன பகுதியில் இன்று (19) இடம்பெற்ற அபிவிருத்தி நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கும் தீர்மானத்திற்கு அமையவே மாகாண சபை முறையை ஒழிப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

‘5 வருடங்களில் அபிவிருத்தியின் பலன்களை அனுபவிக்க முடியும். ஒப்பந்தம் எந்த வடிவத்தில் கொண்டு வரப்பட்டாலும் அதில் அரசாங்கம் கைச்சாத்திடாது. போறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் நாட்டுக்கு தீங்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட நாம் தயார் இல்லை. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள கூடியது.

அதாவது தேசிய பொருளாதார ஊக்குவிப்பை பிரதானமாக கொண்ட வரவு செலவுத் திட்டத்தையே நாம் முன்வைத்துள்ளோம். தற்போது கொரோனாவுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்ப்பட்டுள்ளன.

கேகாலை பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள பாணியையும் கொரோனா ஒழிப்புக்ககவே பயன்படுத்தவுள்ளோம். மலையகத்திற்குள் நுழையும் ஐந்து இடங்களில் கொரோனா பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. அதில் எவருக்கேனும் தொற்று இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.’ என்றார்.

க.கிசாந்தன்

‘விமர்சித்தவர்கள் தற்போது வாய்மூடி மௌனம்’ – ஜீவன் சீற்றம்

மலையக பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடமும் அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழகம் வரவில்லை என விமர்சித்தவர்கள் தற்போது வாய் மூடி மொளனம் காக்கின்றனர் – என்று இராஜாங்க அமைச்சார் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை பகுதியில் இன்று நடைபெற்ற அபிவிருத்தி நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொட்டகலை கடந்த 4 வருடங்களாக மறக்கப்பட்டிருந்தது. அபிவிருத்திகளை மேற்கொண்டால் அதன் பெயர் தொண்டமானுக்கு சென்று விடும் என்ற அச்சமே இதற்கு காரணம். மலையக பல்கலைக்கழகத்திற்கான இடமும் அதற்கு தேவையான பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் வரவில்லை என விமர்சித்தவர்கள் ஏன் இப்போது வாழ்த்த மறுக்கின்றனர்.

தற்போது மலையகத்தில் வீட்டுத் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் அமைச்சை பொறுப்பேற்கும் போது கொவிட் நிலைமை இலங்கையிலும், உலகத்திலும் பாரிய அச்சுறுத்தலாக காணப்பட்டது. இவ்வாறான நிலைமையில் மக்கள் மிகுந்த பொறுமையுடன் உள்ளனர். இவ்வாறான நிலையிலும் அரச இயந்திரம் இயங்குகின்றது. கொரோனாவின் அச்சுறுத்தல் மலையகத்தை பாதித்துள்ளது. ஆயிரம் தொடர்பிலேயே பேசுகின்றனர்.

தொழிலாளர்களின் ஏனைய பிரச்சினைகள் காணாமல் போயுள்ளது. தோட்ட தொழில் கௌவமற்றது என நினைப்பது தவறு. மாறாக அதை செய்விக்கின்ற முறைமையே தவறானது. தோட்ட தொழில்துறையை நவீனமயப்படுத்தி கௌவித்தால் அந்த துறையை பாதுகாக்க முடியும். மலையக கல்வித் தரம் வீழ்ச்சிக்கு வழங்கல் இல்லாமையே பிரதான பிரச்சினை. சுகாதார வழிமுறைகளை முறையாக கைக்கொள்வதன் மூலமே கொவிட் தொற்றை மலையகத்திலிருந்து ஒழிக்க முடியும்.’ என்றார்.

க.கிசாந்தன்

‘கொரோனா’விலிருந்து 27,552 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 491 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 27  ஆயிரத்து 552  ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 8 ஆயிரத்து 332 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 165 பேர் உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியாவை சுற்றுலா வலயமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

‘சுபீட்சத்தின் நோக்கு’ எண்ணக்கருவின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தினை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் நாலக்க கொடஹேவாவின்  தலைவமையில் இன்று (19) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இத்திட்டதின் மூலம் கினிகத்தேன, ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை ஆகிய நகரங்கள் புதுப்பொழிவு பெறவுள்ளன.

இத்திட்டத்திற்கு அமைய நுவரெலியா மாவட்டத்தில் கித்துகல தொடக்கம் நுவரெலியா வரையிலும் நுவரெலியா தொடக்கம் கண்டி வரையிலும், நுவரெலியா தொடக்கம் பதுளை வரையிலும் சுற்றுலாத்துறையினரை மனங்கவரக்கூடிய இடங்களையும் நகரங்களையும் தெரிவு செய்து அபிவிருத்தி செய்யப்படும்.

விசேடமாக நகர அலங்காரம், பூங்காக்கல் நடை பாதைகள் அமைத்தல்,பார்வை கூடங்கள் அமைத்தல்,கவர்ச்சிகரமான வர்த்தக நிலையங்கள்,அமைத்தல்,புதிதாக உணவகங்கள் தங்குமிட விடுதிகள் அமைத்தல்,போன்ற பல சுற்றுலாத்துறைதிட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதில் முதல் கட்ட பணியாக கினிகத்தேனை நகரினை அழகுபடுத்தி வாகன தரிப்பிடம் கொண்ட ஒரு நகரமாக விருத்தி செய்யப்படவுள்ளன.அட்டன் நகரிலும் குறித்த செயத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன.

இரண்டாவது திட்டமாக கொட்டகலையில் காணப்படும் ஈரவலயமான பகுதியினை பூங்கா மற்று சுற்றலா பயணிகளின் நடை பாதைகள் ,வர்த்தக நிலையங்கள்,ஆகியன இதன் போது அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

அதனை தொடர்ந்து தலவாக்கலை நகரினை அழகுபடுத்தி சுற்றுலா பிரயாணிகளை கவரக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்படவுள்ளன.

அமைச்சர் சி.பி.ரத்நாயக்க , இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆரம்பகட்ட நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்,ரமேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், நகர பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

க.கிசாந்தன்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘அசுரன்’

இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தெரிவாகியுள்ளது.

இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கடந்த 1952ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா பரவல் காரணமாக சர்வதேச கோவா திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த திரைப்பட விழாவில் தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தெரிவாகியுள்ளது. அதுபோல் தேன் என்ற தமிழ் படமும் தெரிவாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

ஆஸ்திரேலிய அணி 72.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. அதிகபட்சமாக டிம் பெய்ன் 73 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ், பும்ரா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 53 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. அகர்வால் (5), பும்ரா (0) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 3ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி 36 ஓட்டங்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது. முகமது சமிக்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் வெளியேறினார். இதையடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 90 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசில்வுட் 5 விக்கெட்டும் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

‘5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேர் வாழும் இடமாக கைலாசா நாடு மாறும்’ – நித்யானந்தா

ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற இடமாக அடுத்த 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் கைலாசா கட்டமைக்கப்படும் என புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் நித்யானந்தா கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமங்கள் நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா மீது கடத்தல், பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து அவர் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். கடவுச்சீட்டு காலாவதியான நிலையில் அவர் கடல் மார்க்கமாக நேபாளம் வழியாக தப்பி சென்றதாக தகவல்கள் வெளியானது.

இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவரை பிடிக்க சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போல்) உதவியுடன் ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உலகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதற்கிடையே நித்யானந்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டார். அதில் கைலாசா என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்கி உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அவர் அந்நாட்டில் குடியேற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்தார்.

தொடர்ந்து வெளியிட்ட வீடியோக்களில் தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி, பொலிஸாரை கிண்டல் செய்தார். பெண் சீடர்களுடன் தலைமறைவான அவர் தென்அமெரிக்கா கண்டத்தில் ஒரு தீவை விலைக்கு வாங்கி குடியேறியதும், சர்வதேச பொலிஸாரிடம் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக சொகுசு கப்பல்களில் சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் கைலாசா நாட்டுக்கு வர விரும்புபவர்கள் ஆஸ்திரேலியா நாட்டுக்கு வரவேண்டும். அங்கிருந்து கைலாசா நாட்டுக்கு சொந்தமான தனி விமானங்கள் மூலம் கைலாசா தீவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

3 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுவர். இந்த விமான பயணம் முற்றிலும் இலவசம் என கூறியிருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில் நித்யானந்தா புதிதாக வெளியிட்ட வீடியோவில் கைலாசா நாடு குறித்து மேலும் பல புதிய தகவல்களை கூறி இருக்கிறார். அதில் நித்யானந்தா கூறியிருப்பதாவது:-

முதல் மனிதனின் பூர்வீகம் ஆதி குமரி கண்டமே. குமரி கண்டம் இருந்தது உண்மை. அந்த குமரி கண்டத்தின் உச்சம் தான் தற்போதைய ஆஸ்திரேலியாவும், ஆப்பிரிக்காவும், மடகாஸ்கரும், இந்தியாவும், இலங்கையும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

பரமசிவ பரம்பொருள் தானே நேரடியாக பூமிக்கு இறையனாராக சுந்தரேசபெருமாள் சொக்கநாதனாக வந்திருந்து ஆதிபாண்டிய மன்னாய் இருந்து மனித சமூகத்தை நிறுவினார் என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளோம்.

பெரும்பேறுபெற்ற இந்த ஞானபரம்பரை கைலாயமாக மலர்ந்தாக வேண்டிய, மறுமலர்ச்சி செய்யப்பட்டு, உலகத்திற்கு அளிக்கப்பட வேண்டிய காலம் வந்து விட்டது. இதனால் இந்த கைலாயம் மலர்ந்திருக்கிறது.

ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற இடமாக அடுத்த 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் கட்டமைக்கப்படும். பரமசிவ பரம்பொருள் குமரி கண்டம் செய்தபோது என்னவெல்லாம் இறை இயல் விஞ்ஞானங்கள், மொழியியல் ஞானங்கள், அரசியல், அறிவியில், புவியியல், வரலாறு, வரலாறு சார்ந்த அறிவியல் என எல்லாதுறைகளிலும் அவர் அளித்த வாழ்க்கை முறைகளை புனரமைப்பு செய்து அவைகள் மூலமாக மனித இனத்திற்கு எல்லா சாத்தியமான சேவைகளை செய்துவதுதான் கைலாயத்தின் நோக்கம்.

ஏன் கைலாயம் தேவை என்பதற்கு 1008 காரணங்களை அடுத்தடுத்த சத்சங்கங்களில் விளக்குகிறேன். முதல் காரணம் ஒன்றை உங்களோடு பகிர்கிறேன்.

குமரி கண்டத்தின் மறுமலர்ச்சியே கைலாசம், மகா கைலாசம். பரமசிவ பரம்பொருள் நேரில் வந்து பூமியில் மலர செய்ததுதான் குமரி கண்ட வாழ்க்கை முறை. அதை மீண்டும் மலர செய்வதுதான் கைலாயத்தின் நோக்கம்.

இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

களுத்துறை மாவட்டத்தில் 55 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலைமூலம் களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 55 கர்ப்பிணி பெண்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இந்த தகவலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் களுத்துறை மாவட்டத்தில் வேமாக பரவிவருவதால் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என வலியுறுத்தும் மேற்படி சங்கம், மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு இல்லாவிட்டால் மாவட்டத்துக்குள்ளேயே உப கொத்தணிகள் உருவாகக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 448 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 164 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா! ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

தற்போதைய நிலைவரப்படி ஒரு கோடியே 4 ஆயிரத்து 825 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இதில் 95 லட்சத்து 50 ஆயிரத்து 712 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 171 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்து 8 ஆயிரத்து 942 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்து 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அதேவேளை, உலகளவில் 7 கோடியே 60 லட்சத்து 37 ஆயிரத்து 327 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 5 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 16 லட்சத்து 81 ஆயிரத்து 629 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘என்னைபோல எந்த பெண்ணும் ஏமாந்துவிடக்கூடாது’ – ஷகிலா உருக்கம்!

” நான் ஏமாந்தது போல் எந்த பெண்ணும் ஏமாந்து விடவேண்டாம்.”  என நடிகை ஷகிலா உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு பட உலகில் 1980 மற்றும் 90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா.

கேரளாவில் இவரது படங்கள் வசூலில் முன்னணி நடிகர்கள் படங்களை முறியடித்த சம்பவங்களும் உண்டு. கவர்ச்சி உடையில் ஷகிலா தோன்றும் சுவரொட்டிகள் வீதியெங்கும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகி உள்ளது.

ஷகிலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்திரஜித் லங்கேஷ் இயக்கி உள்ளார்.

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘ஷகிலா’ இந்த திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று சென்னையில் ஷகிலா படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இதில் நடிகை ஷகிலா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

” என்னைப் பற்றி யாராவது தவறாக கூறினால் நான் அதனை பெரிதாக நினைத்து கவலைப்படுவதில்லை. ஏனென்றால் என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இருந்தது இல்லை. அதனால் தான் நான் அதை பற்றி கவலைப்படவில்லை

நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். நான் என்னுடைய வாழ்க்கையில் செய்த தவறுகளை இனி வரும் நடிகைகளும், படித்துவிட்டு வேலைக்கு செல்லும் பெண்களும் செய்யக்கூடாது என்ற ஒரு மெசேஜை இந்த படத்தின் மூலம் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன். நான் என்னுடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்திலும் அதைத்தான் கூறியுள்ளேன். இந்த மெசேஜ் பெண்களுக்கு போய் சேர்ந்தாலே எனக்கு திருப்திதான்

இந்த படத்தில் சுவாரஸ்யத்திற்காக சில காட்சிகளை இணைத்து உள்ளார்கள். ஆனால் சொல்ல வரும் விஷயம் இதுதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ஷகிலா கூறியுள்ளார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஓராண்டு கடந்தும் ஆறாத வடு: கெரண்டியெல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி!

0
காலங்கள் உருண்டோடி ஒரு வருடம் கடந்தாலும், அந்த கறுப்பு தினத்தின் வடுக்கள் இன்னும் கெரண்டியெல்ல மக்களின் மனங்களிலிருந்து மறையவில்லை. கடந்த ஆண்டு மே மாதம் 11-ஆம் திகதி கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட கெரண்டியெல்ல பகுதியில்...

ஈரானின் பதில் குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

0
மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்துக்கு ஈரான் வழங்கிய பதிலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்துப்...

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் இன்று!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு இன்று 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...