Home Blog Page 3716

‘வானில் நாளை ஒன்றுசேரவுள்ள விசேட கிரகங்கள்’

நாளை இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்று சேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.

வியாழன் மற்றும் சனி கிரகங்கள் இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன. இது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும்.

800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன. இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும். அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மேலும் 376 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 376 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 32 ஆயிரத்து 96 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

நகுலேஷ் கைதாகவில்லை-வாக்குமூலமளிக்கவே சென்றிருந்தார்! உறுதிப்படுத்தியது மலையக குருவி!!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர் நகுலேஷ்வரன் கைதாகவில்லை என்று அவரது கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

வழக்கு விசாரணையொன்றுக்காக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று நீதிமன்றம் சென்றிருந்தார் எனவும், வாக்குமூலம் வழங்கிவிட்டு அவர் வெளியேறினார் எனவும் அவர்கள் கூறினர்.

இந்த தகவலை தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசனும் ‘மலையககுருவி’யிடம் உறுதிப்படுத்தினார்.

ஆவண மோசடி குற்றத்துக்காக நகுலேஷ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார் என முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேலால்  ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டே நகுலேஷ் கைதானார் எனவும் கூறப்பட்டது.

நகுலேசுக்கு எதிராக தான் வழக்கு தொடுத்ததாகவும்,  அதற்காக அவர் இன்று கைது செய்யப்பட்டதாகவும் நோர்வூட் பிரதேச சபை தலைவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மேற்படி செய்தி மலையக குருவிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

எனினும், நகுலேஸ்வரன் கைதாகவில்லை என்பதனை தற்போது மலையக குருவி உறுதிப்படுத்திக்கொண்டது.

குறிப்பு – உறுதிப்படுத்தப்பட்ட தகவலை ஊடகநெறிமுறை தவறாது வாசகர்களுக்கு வழங்கவேண்டும் என்பதே ஊடக கோட்பாடு – தர்மமாகும். அதனை மலையக குருவி தொடர்ந்தும் பின்பற்றிவருகின்றது. இனியும் பின்பற்றும்.  அதேபோல் ஏதேனும் ஒரு இடத்தில் தவறு இடம்பெற்றிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்பதும் ஊடக மரபாகும். அந்தவகையில் நகுலேஷ் கைது செய்யப்பட்டுள்ளார் என வெளியிட்ட தகவலுக்காக வருந்துகின்றோம்.

(ஆ-ர்.)

ஜனவரியில் இலங்கை வருகிறார் ஐ.நா. அரசியல் பிரிவு தலைவர்!

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட பிரதிநிதியொருவரை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், இலங்கைக்கு அனுப்பவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐ.நாவின் அரசியல் பிரிவு தலைவர் ரோஸ்மேரி டிகார்லோவே (Rosemary A. DiCarlo) 2021 ஜனவரி ஆரம்பத்தில் கொழும்பு வரவுள்ளார் என தெரியவருகின்றது.

ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் மட்டுபடுத்தப்பட்ட சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் அவர் சந்திப்புகளை நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடர் 2021 பெப்ரவரியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேலேயே அதற்கு முன்னதாக ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரியொருவர் இலங்கை வருகிறார். எனவே, அவரின் பயணம் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.

‘தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்’ – சாணக்கியன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,

” இன்றைய தினம் மலையகத்திற்கு சென்றவேளை, சில விசேட கோரிக்கைகளுக்கு அமைவாக பலரை சந்தித்தேன். இதன்படி பல பிரச்சனைகள் எனது கவனத்துக்கு மக்கள் கொண்டுவந்தனர். அதில் மிகவும் பிரதான பிரச்சனையானது, எமது நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளான தேயிலை உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனை ஆகும்.

தற்போதைய அரசாங்கமானது மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உத்திரவாதம் அளித்திருந்தார்கள். ஆனால் அவர்களின் தற்போதைய கூற்றுப்படி மாதத்திற்கு 10,000 தொடக்கம் 12,000 கிடைப்பதாக சொல்கின்றனர். அதுவும் 26 வேலைநாட்களுக்குரிய தொகையாக இதனை வழங்குகின்றனர்.

இதனடிப்படையில் ஒருவரின் நாள் வருமானமானது 500 ரூபாய்க்கு குறைவாகவே காணப்படுகின்றது அதிலும் சில கழிவுகளை கழித்துவிட்டுத்தான் கொடுக்கின்றார்கள். இவ்வாறான பிரச்சினைகளை அரசாங்கம் முக்கியமாக கவனித்து அவர்களுக்கு உரிய சரியான சம்பளத்தை உறுதி அளித்தது போன்று மிக விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது நாட்டின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று எமது தேயிலை ஆகும். அத்துடன் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்குரிய மதிப்பு மிக அதிகமாகும். இவற்றுக்கு பெரும் பல தலைமுறைகளாக பங்காற்றும் இவ் தேயிலை தொழிலாளர்களில் வாழ்க்கைத்தரம் கட்டாயம் உயர்த்தப்பட வேண்டும்.” – என்றார்.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 27,061 பேர் மீண்டனர்’

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 708 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 27  ஆயிரத்து 61  ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 8 ஆயிரத்து 166 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் நகுலேஷ் கைது!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர் நகுலேஷ்வரன் இன்று (18.12.2020) கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ரவி குழந்தைவேலுவினால் 2019 ஜுலை மாதம் ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகார துஷ்பிரயோகம், மோசடியான முறையில் ஆவணம் வழங்கியமை உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தியே தான் முறைப்பாட்டை முன்வைத்ததாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார்.

அதேவேளை, நகுலேஷ்வரனை பிணையில் எடுப்பதற்கான நடவடிக்கையை அவரின் ஆதரவாளர்கள், சட்டத்தணி ஊடாக முன்னெடுத்துள்ளனர்.

மாகாண தேர்தலில் களமிறங்கும் ராஜரட்னத்தின் மகன் ஜனா!

2021 முற்பகுதியில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில், மத்திய மாகாணத்தில் ராஜரட்னம் ஜனார்த் (ஜனா) போட்டியிடவுள்ளார் என தெரியவருகின்றது.

இதற்காகவே ஐக்கிய தேசியக்கட்சியை கைவிட்டு அண்மையில் அவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் கடந்தவாரம் இணைந்தார் எனவும் அறியமுடிகின்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜரட்னத்தின் மகனான ஜனார்த் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி பட்டியலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையிலேயே மாகாணசபைத் தேர்தலை அவர் குறிவைத்து, அரசியல் ‘பல்டி’ அடித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘கொரோனா’ – உலகளவில் 16 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 69 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 7 கோடியே 53 லட்சத்து 43 ஆயிரத்து 404  பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 5 கோடியே 29 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

25 ஆம் திகதி திரைக்கு வருகிறது ஷகிலாவின் வலி சுமந்த வாழ்க்கை பயணம்!

இந்தியில் எடுக்கப்பட்ட நடிகை “ஷகிலா”வின் வாழ்க்கை திரைப்படம், தமிழில் மொழிமாற்றம் செய்து கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியிடப்படவுள்ளது.

மலையாளத்தில் ‘ப்ளே கேர்ள்ஸ்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷகிலா மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 110 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1990 களில் வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென ரசிகர் வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் ஷகிலா.

இந்நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி இருக்கிறார், இந்திரஜித் லங்கேஷ். நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையை, வயது வந்தோருக்கான படங்களில் நடித்ததற்காக, அவரது குடும்தினராலேயே புறக்கணிக்கப்பட்டதை, சினிமா உலகத்தினரே அவரது படங்கள் தடை செய்யப்படவேண்டுமென போராடியதை என அவரது வாழ்வின் அனைத்து பக்கங்களையும் கூறவுள்ளது.

நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது. மலையாள பதிப்பு மட்டும் கேரள மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தில், ஷகிலாவாக ரிச்சா சத்தா நடிக்கிறார். ஷம்மி நன்வானி, சரவண பிரசாத் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். ஷகிலா மலையாள படங்களில்தான் அதிகம் நடித்துள்ளார் என்பதால் கேரளா பகுதிகள் போன்று இருக்கவேண்டுமென கர்நாடகாவின் தீர்த்தஹல்லி பகுதிகளில், இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு சென்சாரில் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஈரானின் பதில் குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

0
மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்துக்கு ஈரான் வழங்கிய பதிலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்துப்...

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் இன்று!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு இன்று 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

மரக்கறி விலைப்பட்டியல் (11.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...