Home Blog Page 3717

சட்டமா அதிபருக்கு கொரோனா தொற்றில்லை!

வவுனியாவில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான உத்தியோகபூர்வ விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்ட சட்டமா அதிபர் உட்பட அனைத்து அதிகாரிகளும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

வவுனியாவில் அரச சட்டவாதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான உத்தியோகபூர்வ விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்ட பல்வேறு உயர் அதிகாரிகளிடமும் நேற்று முன்தினம் (16) பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘நத்தார் பண்டிகையன்று சிறைக்கைதிகளை பார்வையிடமுடியாது’

நத்தார் பண்டிகை தினத்தில் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு இம்முறை அனுமதி வழங்கப்படமாட்டாது என சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.

” வழமையாக நத்தார் பண்டிகை தினத்தன்று சிறைகளில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்கள் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இம்முறை அதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது.

சிறைச்சாலை கொத்தணிமூலம் இதுவரை 3 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கில் 2 ஆயிரத்து 268 பேர் குணமடைந்துள்ளனர்.” – என்று சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

‘எந்தவடிவில் வந்தாலும் MCC உடன்படிக்கைக்கு இடமில்லை’

” அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச்சாத்திடாது. நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் செய்யும்.” – என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

“உஸ்ம தெனதுரு” 20 இலட்சம் மர நடுகை வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் காசல்ரீ நீர்தேக்கப்பகுதிக்கு அண்மித்த லெதண்டி தோட்டத்தில் மர கன்றுகள் 18.12.2020 அன்று நாட்டப்பட்டது.

இப்பகுதியில் உள்ள நீர் வளம், வன வளம் ஆகியனவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடன், பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனியின் உதவியுடன், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் சபையின் மேற்பார்வையின் கீழ் இந்த மர நடுகை வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனியின் அதிகாரிகள், இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள், சுற்றாடல் துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், தோட்ட தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு

” எம்.சி.சி. உடன்படிக்கை இனி கைச்சாத்திடப்படாது. அதிலிருந்து அமெரிக்காவும் விலகிவிட்டது. எம்.சி.சி. உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது எனக்கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அந்த கொள்கை தொடர்ந்தும் பின்பற்றப்படும். வேறு வடிவில், வேறு பெயரில் வந்தால் கூட ஏற்பதற்கு தயாரில்லை.

எதுஎப்படியிருந்தாலும் அமெரிக்காவுடனான எமது இராஜதந்திர உறவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அது அவ்வாறே தொடரும். அமெரிக்காவும் இதனை அறிவித்துள்ளது.

நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மாத்திரமே இந்த அரசாங்கம் செய்யும். தீங்கு விளைவிக்ககூடிய எதனையும் செய்யாது.

அதேவேளை, கொரோனா வைரஸ் முழு உலகுக்கும் சவாலாக அமைந்துள்ளது. நாம் முதலாவது அலையை கட்டுப்படுத்தினோம். 2ஆவது அலையையும் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கினால் 2ஆவது அலையையும் இலகுவில் கட்டுப்படுத்தலாம். எந்தவொரு முயற்சியையும் நாம் கைவிடவில்லை.

அமைச்சர்களுக்கு எதிராக எதிர்ப்பை வெளியிடும் ஜனநாயக உரிமை மக்களுக்கு இருக்கின்றது. அமைச்சர்கள் என்பவர்கள் சர்வ பலம் படைத்தவர்கள் அல்ல.

சுதந்திரக்கட்சிக்கு கிடைக்கவேண்டிய உரிமைகள் கிடைக்கப்பெறவேண்டும். அதனை நாம் பெறுவோம். மோதுவதைவிட பேச்சுவார்த்தைமூலம் பயணிப்பதே சிறப்பு. பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

அத்துடன், தேர்தல் முறையில் மாற்றம் அவசியம். விருப்பு வாக்கு போட்டி இல்லாத தேர்தலையே மக்கள் விரும்புகின்றனர்.” – என்றார்.

‘ பதவி விலகுமாறு லொஹான் ரத்வத்தேவுக்கு அழுத்தம்’

” மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகவேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் மேற்படி நிலைப்பாட்டை அறிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மஹர சிறைச்சாலை மோதலில் கொல்லப்பட்ட கைதிகளில் நால்வர், துப்பாக்கிச்சூட்டில்தான் உயிரிழந்தனர் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை மேற்கோள்காட்டி ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் துப்பாக்கிச்சூட்டில் எவரும் பலியாகவில்லை, கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நாடாளுமன்றத்தில் அண்மையில் அறிவித்திருந்தார்.

விசாரணை முடிவடைவதற்கு முன்னரே, தவறாக தகவலை வெளியிட்டு நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துவதற்கு இராஜாங்க அமைச்சர் முற்பட்டுள்ளார். அமைச்சுக்கான உத்தியோகப்பூர்வ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மக்களுக்கும் போலியான தகவலை வழங்கியுள்ளார். எந்த அடிப்படையில் தான் தகவல் வெளியிட்டுள்ளார் என்பதனை லொஹான் ரத்வத்த தெளிவுபடுத்த வேண்டும்.  அதேபோல அவர் பதவி விலகவும் வேண்டும்.

தவறிழைத்துவிட்டு அதனை மறைப்பதற்காக பொய்யுரைக்கும் அரசாங்கம்தான் இது என்பது மஹர சிறைச்சாலை சம்பவத்தின் ஊடாக மீண்டும் உறுதியானது.” – என்றார்.

மாகாணசபைத் தேர்தல் அவசியம் – முன்னாள் முதல்வர் வலியுறுத்து!

” மாகாணசபைமுறைமைமூலம் நாடு ஒருபோதும் பிளவுபடாது. எனவே, உடனடியாக தேர்தல் நடத்தப்படவேண்டும்.” – என்று வடமத்திய மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் வலியுறுத்தினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நல்லாட்சி அரசாங்கத்தின்போதுதான் சூழ்ச்சிமூலம் மாகாணசபைகளுக்கான தேர்தல் பிற்போடப்பட்டது. மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டது. இதற்கான முழு பொறுப்பையும் கடந்த ஆட்சியாளர்கள்தான் ஏற்கவேண்டும்.

அதேபோல் மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவதற்காக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதுதான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடாகும். தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், எமது கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்சவும் அறிவித்துள்ளனர்.

மாகாணசபைத் தேர்தல் பற்றி கதைக்கும்போது பதவி ஆசையால்தான் அறிவிப்புகள் விடுக்கப்படுகின்றன என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மை அதுவல்ல. மாகாணசபைகள்மூலம் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கலாம். கொள்கை அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கலாம். பலம்பொருந்திய சக்திகளை கட்டியெழுப்பலாம் என்பதனை புரிந்துகொள்ளவேண்டும். முதல்வர் பதவியை தியாகம்செய்துவிட்டே நான் அன்று மஹிந்த ராஜபக்ச பக்கம் நின்றேன்.

தனவந்தர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் மாகாணசபைகள் தேவைப்பாடாது. ஆனால் சாதாரண மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கும், நிவாரணத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் மாகாணசபைகள் முறைமை அவசியம். 80வீத நிர்வாகம் மாகாணசபைகளின்கீழ்தான் நடக்கின்றன. மாகாண சபைகளின்கீழ் எத்தனை பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளன என்பது தெரியுமா? மாகாணசபையில் காலடி வைக்காதவர்கள்தான் இன்று அது பற்றி விமர்சிக்கின்றனர்.

இனவாத கோணத்திலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. மாகாணசபை முறையால் நாடு பிளவுபடவில்லை. இனி பிளவும்படாது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் மறுசீரமைக்கப்பட்டால் மாற்றுவழி என்னவென்பது பற்றி எவரும் அறிவிக்கவில்லை.

மாகாணசபை முறைமையை மக்கள் அனுமதித்துள்ளனர். எனவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் வெற்றியளிக்க மாகாணசபை கட்டமைப்பு அவசியம். ” – என்றார்.

முகக்கவசம் அணியாத, சமூகஇடைவெளியை மறந்த 1,562 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம்  37 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதிபொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்கள் எவராயினும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோன்று அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கமைய 1562 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்டு போதைப்பொருள் கடத்தல் காரர்களை கைது செய்த பொலிஸார் (Video)

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட பொலிஸார் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை அதிரடியாக கைது செய்தனர்.

குற்றவாளிகளை பிடிக்க பொலிஸார் விதவிதமான யுக்திகளை கையாள்வது வழக்கம். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிக்கை நெருங்கி வரும் நிலையில் பிரபலமான கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றாவாளிகளை கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் அரங்கேறிவருவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொலிஸ் உடையில் சென்றால் கடத்தல் கும்பல் உஷார் ஆகிவிடும் என எண்ணிய போலீஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை பயன்படுத்தி கடத்தல் கும்பலை பிடிக்க முடிவு செய்தனர்.

இதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து போதைப்பொருள் கும்பல் பதுங்கி இருந்த வீட்டின் அருகே வாகனத்தில் சென்றனர்.

கடத்தல் கும்பல் அந்த வீட்டில் தான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய அந்த இரண்டு பொலிஸாருக்கும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கிறிஸ்துமஸ் தாத்தா உடையுடன் புறப்பட்டனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்துடனும் கடத்தல் கும்பல் தங்கியுள்ள வீட்டின் கதவை உடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு பொலிஸ் அதிகாரி தனது சுத்தியலை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடிவந்தார்.

கடத்தல் கும்பல் வீட்டை அடைந்த பொலிஸார் தங்கள் கையில் எடுத்து வந்திருந்த சுத்தியலை கொண்டு கடத்தல் கும்பல் பதுங்கி இருந்து வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அங்கு அந்த வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனடியாக அந்த கடத்தல் கும்பலை கைது செய்ய பொலிஸார் அவர்களிடம் இருந்து கிலோ கணக்கில் போதைப்பொருளை கைப்பற்றினர். மேலும், துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து, போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். போலீசார் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த போலீசார் போதைபொருள் கடத்தல் கும்பலை கைது செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு போதைப்பொருள் கடத்தல் காரர்களை கைது செய்த பொலிஸார் (Video)

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட பொலிஸார் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை அதிரடியாக கைது செய்தனர்.

குற்றவாளிகளை பிடிக்க பொலிஸார் விதவிதமான யுக்திகளை கையாள்வது வழக்கம். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிக்கை நெருங்கி வரும் நிலையில் பிரபலமான கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றாவாளிகளை கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் அரங்கேறிவருவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொலிஸ் உடையில் சென்றால் கடத்தல் கும்பல் உஷார் ஆகிவிடும் என எண்ணிய போலீஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை பயன்படுத்தி கடத்தல் கும்பலை பிடிக்க முடிவு செய்தனர்.

இதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து போதைப்பொருள் கும்பல் பதுங்கி இருந்த வீட்டின் அருகே வாகனத்தில் சென்றனர்.

கடத்தல் கும்பல் அந்த வீட்டில் தான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய அந்த இரண்டு பொலிஸாருக்கும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கிறிஸ்துமஸ் தாத்தா உடையுடன் புறப்பட்டனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்துடனும் கடத்தல் கும்பல் தங்கியுள்ள வீட்டின் கதவை உடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு பொலிஸ் அதிகாரி தனது சுத்தியலை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடிவந்தார்.

கடத்தல் கும்பல் வீட்டை அடைந்த பொலிஸார் தங்கள் கையில் எடுத்து வந்திருந்த சுத்தியலை கொண்டு கடத்தல் கும்பல் பதுங்கி இருந்து வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அங்கு அந்த வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனடியாக அந்த கடத்தல் கும்பலை கைது செய்ய பொலிஸார் அவர்களிடம் இருந்து கிலோ கணக்கில் போதைப்பொருளை கைப்பற்றினர். மேலும், துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து, போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். போலீசார் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த போலீசார் போதைபொருள் கடத்தல் கும்பலை கைது செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

2ஆவது அலைமூலம் 31,716 பேருக்கு கொரோனா – 147 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (11) 31 ஆயிரத்து 716 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 147  பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)

மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 28 ஆயிரத்து 657 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 945 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 762 பேருக்கு வைரஸ் தொற்றியது.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 35 ஆயிரத்து 386 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 352 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 874 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

மாஸ்டர் படத்துக்கு யூ சான்றிதல் வழங்க மறுப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்துக்கு தணிக்கை குழு ‘யூ’ சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வர தயாரான நிலையில் கொரோனாவால் நின்று போனது. மாஸ்டர் படத்தை நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இருப்பினும் தியேட்டர் அதிபர்கள் வற்புறுத்தலால் ஓ.டி.டி. முடிவை கைவிட்டு பொங்கலுக்கு தியேட்டர்களில் திரையிட தயாராவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்துக்கு தணிக்கையில் ‘யூ’ சான்றிதழ் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் சண்டை காட்சிகள் அதிகமாக இருப்பதை காரணம் காட்டி ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் இன்று!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு இன்று 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

மரக்கறி விலைப்பட்டியல் (11.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசனை

0
பு​திய முதல்​வ​ராக பொறுப்​பேற்ற பின்​னர் ஜோசப் விஜய் தலை​மைச் செயல​கத்​துக்கு சென்​று, முதல் நாளில் சட்​டம் ஒழுங்கு விவ​காரம் குறித்து அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்தினார். தமிழகத்​தில் புதிய முதல்​வ​ராக ஜோசப் விஜய் நேற்று பதவி​யேற்றுக்...