Home Blog Page 3718

‘உலகளவில் 7 கோடியே 47 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா’

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 59 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 7 கோடியே 47 லட்சத்து 46 ஆயிரத்து 810 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 5 கோடியே 25 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

‘நத்தார் பண்டிகையை முன்னிட்டு பேராயர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு’

” நத்தார் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமான களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், விருந்துபசாரகளை இம்முறை நடத்தவேண்டாம். அதற்காக செலவிடும் பணத்தை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மக்களிடம் இன்று விசேட கோரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நத்தார் பண்டிகையின்போது ஏனைய மக்களைப் போன்று நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது உகந்ததென நினைக்கின்றேன். நத்தார் பண்டிகையின் போது உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும் பழக்கம் உள்ளது. இம்முறை அதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். வர்த்தக நிலையங்களுக்கு செல்வதை மட்டுப்படுத்துங்கள். ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்கள் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இம்முறை நத்தார் பண்டிகையை முன்னிட்டு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள பிரம்மாண்டமான களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், விருந்துபசார நிகழ்வுகளை இரத்து செய்து, அந்த நிகழ்வுகளுக்காக செலவிடப்படவிருந்த நிதியை COVID தொற்றினால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு வழங்குமாறு நான் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அரச வைபவங்களில் நாம் கலந்துகொள்ளவும் போவதில்லை. தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் ஐம்பதுக்கு மேற்படாத மக்களை ஒன்றுகூட்டி நத்தார் ஆராதனையை நடத்துவதற்கு அருட்தந்தையருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தவாறு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நத்தார் பண்டிகையை கொண்டாடுங்கள்.” – என்றார்.

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 312 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணிமூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 31 ஆயிரத்து 382 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

ம.ம.முவின் முக்கிய புள்ளி அனுசாவுடன் சங்கமம்!

மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கமான மலையக தொழிலாளர் முன்னணியின் பிரதி செயலாளர் தங்கராஜா பிரசாத், இன்று உத்தியோகபூர்வமாக அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் உப தலைவராக பதவியேற்றார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் வெளியிட்டிருந்தார்.

இதன்போது ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அனுஷா

” பிரதி தலைவராக தங்கராஜ் பிரசாத் எமது அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியுடன் இணைந்து பணியாற்றுவது தொழிற்சங்கம் மேலும் நேர்த்தியாக பணியாற்ற வழிவகுக்கிறது.

இவர் மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க அமைப்பான மலையக தொழிலாளர் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளராக செயற்பட்டவர். எனது தந்தை அமரர் சந்திரசேகரனின் அமைச்சில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் கடந்த மாகாண சபை தேர்தலில் மண்வெட்டி சின்னத்தில் 9000 அதிகமான வாக்குகளை பெற்றவரும் ஆவார் . இவரின் 20 வருட தொழிற்சங்க அனுபவம் எம் தொழிற்சங்கத்தை மேலும் வலுப்படுத்தவும் வினைத்திறனாக செயற்படுத்தவும் உதவும்.

இன்னும் பல முக்கியஸ்தவர்கள் மலையக மக்கள் முன்னணியிலிருந்து எம்முடன் இணைய தயாராக உள்ளனர். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை எமது அமைப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடும் எனவும் தெரிவித்தார்.

‘கொழும்பிலிருந்து காபெக்ஸ் தோட்டம் வந்தவருக்கு கொரோனா’

மஸ்கெலியா பொது சுகாதார அலுவலக பிரிவுக்குட்பட்ட டிக்கோயா, காபெக்ஸ் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு, கிருலபனை பகுதியிலிருந்து கடந்த 11 ஆம் திகதி ஊருக்குவந்த 44 வயதுடைய குறித்த நபரிடம் கலுகல்ல பகுதியில் வைத்து பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பிரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவருடன் தொடர்பில் இருந்த சுமார் 22 பேர் அவர்களின் வீடுகளிலேயே சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் நாளை பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளன.

தொற்றுக்குள்ளானவர் அம்பாந்தோட்டடையிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனிற்கு (வயது – 42) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மேலும் 701 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 701 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26  ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 8 ஆயிரத்து 925 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 160  பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் அனைத்து பொதுச்சந்தைகளுக்கும் பூட்டு

கொவிட் -19 நோய்த் தொற்று நிலமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொவிட் -19 நிலமையை அடுத்து பொதுச் சந்தைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களின் ஆபத்தினைக் கருத்திற் கொண்டு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய மாகாணத்தில் உள்ள அனைத்து சந்தைகளை மூடுமாறு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், சந்தை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் வீதியோரம் அல்லது நடமாடும் விற்பனையை மேற்கொள்ள அனமதிக்குமாறும் அறிவுறுத்தபட்டுள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வழங்கியுள்ள பரிந்துரைகள்;

கோவிட் -19 நிலமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை வடமாகாணத்தில் அனைத்து பொதுச் சந்தைகளையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை மூடப்படவேண்டும்.

மடுல்சீமை பகுதியில் 7 வயது சிறுமிக்கு கொரோனா!

லுனுகலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மடூல்சீமை, வெரலபத்தனை தோட்ட மேற் பிரிவில் ஏழரை வயது நிரம்பிய சிறுமி ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக லுனுகலை பொது சுகாதார காரியாலயத்தின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

குறித்த சிறுமியின் குடும்பத்தினர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் சிறுமிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் பெற்றோரும், அவர்களுடன் தொடர்பை பேணிய அயலவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிறுமியை தனிமைப்படுத்தல் சிகிச்சை முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • பசறை நிருபர்கள் –

‘மாகாணசபை முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும்’

புதிய அரசியலமைப்பு ஊடாக மாகாணசபை முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும். அதனைவிடுத்து இனவாதிகளின் கொக்கரிப்புகளுக்கு அடிபணிந்து மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கக்கூடாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (17.12.2020) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” இந்நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் உண்பதற்காக மட்டுமே வாய்திறக்கவேண்டும், அவர்களுக்கு ஒருபோதும் உரிமைகள் வழங்கப்படக்கூடாது என்ற மமதையில் செயற்படும் பேரினவாத அரசியல்வாதிகள், அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளைக்கூட பறிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அதற்கான சதித்திட்டங்களை தீட்டிவருகின்றனர். இதன்ஓர் அங்கமாகவே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது, அம்முறைமை நீக்கப்படவேண்டும் என மீண்டும் கோஷமெழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

புதியதொரு அரசியலமைப்பு இயற்றப்படவுள்ள சூழ்நிலையில், மாகாணசபை முறைமைக்கு எதிராக அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கும் இனவாதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளமை பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாணசபை முறைமையை புதிய அரசியலமைப்பின் ஊடாக பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற அச்சமும் மேலோங்கியுள்ளது.

மத்தியிலிருந்து மாகாணங்களுக்கு மேலும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும், மாகாணசபைகள் முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும் என தமிழ் பேசும் மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அவர்களின் உரிமைக்குரலை நசுக்குவதற்காக – ஒடுக்குவதற்காக அரசாங்கம், திட்டமிட்ட அடிப்படையில் இனவாதிகளை களமிறங்கியுள்ளதா என்ற வினாவும் எழுகின்றது.

அதேவேளை, தம்வசம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. பெரும்பான்மையின மக்களை இயக்கக்கூடிய இனவாத சக்திகள் உள்ளன என்ற நம்பிக்கையில் அரசாங்கம், மாகாணசபை முறைமையில் கைவைக்கும் பட்சத்தில் அது பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இராஜதந்திர மட்டத்திலான நெருக்கடிகளையும் சந்திக்கவேண்டிவரும்.

எனவே, மாகாணசபை முறைமையில் கூடிய விரைவில் அரசாங்கம் நடத்தவேண்டும். அதன்பின்னர் புதிய அரசியலமைப்பு ஊடாக மாகாணசபை முறைமையை பலப்படுத்தவேண்டும்.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மரக்கறி விலைப்பட்டியல் (11.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசனை

0
பு​திய முதல்​வ​ராக பொறுப்​பேற்ற பின்​னர் ஜோசப் விஜய் தலை​மைச் செயல​கத்​துக்கு சென்​று, முதல் நாளில் சட்​டம் ஒழுங்கு விவ​காரம் குறித்து அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்தினார். தமிழகத்​தில் புதிய முதல்​வ​ராக ஜோசப் விஜய் நேற்று பதவி​யேற்றுக்...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...