Home Blog Page 3759

LPL முதல் போட்டியிலேயே உச்சகட்ட பரபரப்பு! நடந்தது என்ன?

லங்கை பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர்பில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கண்டி டஸ்கர்ஸ் அணியை, கொழும்பு கிங்ஸ் அணி சுப்பர் ஓவரில் தோற்கடித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கிங்ஸ் அணியின் தலைவர் மெத்யூஸ் முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தார்.

இதன்படி, துடுப்பெடுத்தாட களமிறங்கிய கண்டி டஸ்கர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள், சிறப்பான துவக்கத்தை வழங்கினார்கள். இருவரும் 75 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். மென்டிஸ், குணவர்தன ஆகியோரும் தலா 30,30 ஓட்டங்களைப் பெற்றனர்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் கண்டி அணி 3 விக்கட்டுக்களை
இழந்து 219 ஓட்டங்களை குவித்தது.

பின்னர் 220 என்ற வெற்றியிலக்கை நோக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணிக்கு சந்திமால் சிறப்பான ஆரம்பத்தை வழங்கினார். அவர் 46 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பெற்றார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரஷல் 24 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனால் கொழும்பு அணி தோற்றுவிடும் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆனால் இறுதி நேரத்தல் இசுரு உதான விஸ்பருபமெடுத்தார். 12 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து கொழும்பு அணியும் 219 ஓட்டங்களை பெற்றதால்போட்டி சமநிலையானது .

இதனால் சுப்பர் ஓவர்மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி 1 விக்கட்டை இழந்து 16 ஓட்டங்களை பெற்றது.

பிறகு 17 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணியால் 12 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. ஆட்டநாயகனாக தினேஷ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டார்.

‘கொரோனா’ -மேலும் மூவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 99 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மூவரும் 70 வயதை தாண்டியவர்கள்.

கொழும்பு 8, பம்பலப்பிட்டிய மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகைளச் சேர்ந்தவர்களே வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இன்று மாத்திரம் 553 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று இதுவரை 553 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 96 பேர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்து 816 பேர் குணமடைந்துள்ளனர்.

2ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 18 ஆயிரத்து 491 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சுவீடனின் இளவரசர், இளவரசிக்கு கொரோனா தொற்று!

சுவீடன் இளவரசர், இளவரசி ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சுவீடன் மன்னர் , ராணியின் மகன், மருமகளுக்கு கொரோனா உறுதியானதாக அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா உறுதியாகியுள்ள இளவரசர் கார்ல் பிலிப்(41) மற்றும் இளவரசி சோபியா(35) ஆகியோருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர், ராணி மற்றும் பட்டத்து இளவரசி விக்டோரியா உட்பட அரச குடும்பத்தினர் அனைவரும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராணியின் சகோதரர் இறுதிச்சடங்களில் அரச குடும்பத்தினர் அனைவரும் கலந்துக்கொண்டதால் அவர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இறுதி சடங்கில் கலந்துக்கொண்ட மற்றவர்கள் அனைவருக்கும் நடத்தப்பட்டசோதனையில் கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.

தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இளவரசர் கார்ல் பிலிப், இளவரசி சோபியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உலகளவில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து 4 கோடியே 22 லட்சம் பேர் மீண்டனர்’

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 6 கோடியே 9 லட்சத்து 30 ஆயிரத்து 143 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 4 கோடியே 22 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியைப் பின்பற்றாத 660 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 660 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இன்று (26) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமுலில் இல்லை. சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் நடமாடியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக இன்றுவரை 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.சிலருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கு எதிராக எதிர்காலத்தில் நிச்சயம் வழக்கு தாக்கல் செய்யப்படும்.

அதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிலர் அறிவிப்பு விடுத்தும் பிசிஆர் பரிசோதனைக்கு வராமல் உள்ளனர். அத்தகையவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

LPL கிரிக்கெட் திருவிழா ஆரம்பம் (Live)

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது அங்குரார்ப்பண தொடர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று ஆரம்பமானது.

முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் இன்றிரவு  ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளன.

ஜனாதிபதி வசமானது பாதுகாப்பு அமைச்சு!

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வகித்துள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் எந்தவொரு அமைச்சையும் ஜனாதிபதி தனக்குகீழ் கொண்டுவரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், 19 இல் இந்த ஏற்பாடு நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நாட்டில் மேலும் 342 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 96 பேர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்து 816 பேர் குணமடைந்துள்ளனர்.

உயர்தர மாணவர்களுக்கான ஒன்லைன் கருத்தரங்கு

கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களின் நலன் கருதி ‘D2D Online Shopping’ வழங்கும் இலவச ஒரு நாள் இணையவழி வகுப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி (28.11.2020) நடைபெறும்.

கலாநிதி க. பிரபாகரன் ‘இலங்கை காலனித்து ஆட்சி’ தொடர்பில் விரிவுரை நிகழ்த்தவுள்ளார்.

அனைத்து மாணவர்களுக்கு அனுமதி இலவசம் . மாணவர்கள், தங்கள் நண்பர்களும் பயனடைய இந்த செய்தியை பகிருங்கள்.

Zoom app ஊடாக வகுப்புக்கள் 28.11.2020 அன்று மாலை 6 மணி முதல் ஆரம்பமாகும். வகுப்பிற்கான லிங்க் 28.11.2020 அன்று மாலை 5.30 மணிக்கு எங்களது கீழே குறிப்பிடப்பட்டுள்ள D2D ஃபேஸ்புக் பக்கம் மற்றும் D2D வாட்சப் குழு ஊடாக பகிரப்படும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள பக்கத்தை லைக் செய்துக் கொள்ளுங்கள்.

*D2D ஃபேஸ்புக் பக்கம்* – https://www.facebook.com/groups/2023062761249031/?ref=share

D2D வாட்சப் குழு (மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி மாத்திரம்) – https://chat.whatsapp.com/HXqeo8NCRzX5egXhBkpqoO

D2D ஆன்லைன் ஷாப்பிங் செயலி – https://play.google.com/store/apps/details?id=com.doordelivery.karma

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...