Home Blog Page 3760

‘கொரோனா’ பிடிக்குள் இருந்து 15,816 பேர் மீண்டனர்! 5,557 பேருக்கு சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 369 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 557 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக அதிகரித்துள்ளது.

தேயிலை உற்பத்தித் திறனுக்கான திறவுகோலை சிறு தோட்ட உரிமையாளர்களே வைத்துள்ளனர்

சீர் திருத்தத்திற்கான செயன்முறை: இலங்கையின் தேயிலைத் தொழிலில் உற்பத்தித் திறனுக்கான திறவுகோலை சிறு தோட்ட உரிமையாளர்களே வைத்திருக்கின்றனர்

கே.எல். குணரத்னதலைவர், இலங்கை தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்கள் கூட்டமைப்பு

சுமார் 5,00,000 தோட்டத் தொழிலாளர்களைக் கொண்ட சிறுதோட்டத் துறையின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் இலங்கையின் தேயிலைக்கும் உற்பத்தி நடவடிக்கைகளும் இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் தமது குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கின்றனர். இந்த நல்ல காரணத்தினால் தான் நாங்கள் பெரும்பாலும் எமது தேயிலைத் தொழிலாளியை ‘முதுகெலும்பு’ என்று அழைக்கின்றோம்.

இலங்கையின் விளைச்சல் நிறைந்த நிலங்களில் 16% தேயிலைத் துறைக்கு சொந்தமானவை. இதில், தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்கள் மொத்தமாக 60மூ தேயிலை நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் என்பதுடன் ஒட்டுமொத்தமாக 70% தேயிலை உற்பத்தியை மேற்கொள்ளுகின்றன. தேயிலைக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி, நாடு முழுவதிலும் 20 பெர்ச்சிற்கும் 10 ஏக்கருக்கும் இடையிலான தேயிலை நிலங்கள் ‘சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்’ என்று கருதப்படுகிறது.

நான் ஒரு சிறுதோட்ட உரிமையாளர், எனது பயணம் 1977ஆம் ஆண்டில் 2 ஏக்கர் தேயிலை நிலத்துடன் எனது பயணத்தை ஆரம்பித்தேன். தற்போது இலங்கை சிறுதோட்ட தேயிலை உரிமையாளர் சம்மேளத்தின் தலைவராக தற்போது நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது மூன்று சிறுதோட்டங்களையும் நடத்திச் செல்கிறேன். கடந்த மூன்று தசாப்தங்களாக (அல்லது அதற்கு மேற்பட்ட) ஒரு சிறுதோட்டம் இயங்குவது எளிதான விடயமாக இருக்கவில்லை. உங்கள் தேயிலை தோட்டத்தின் நிலப்பரப்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி சிறிதாக இருந்தாலும் சரி நிலம் நன்கு நிர்வகிக்கப்படுவதையும், தேயிலை சரியாக அறுவடை செய்யப்படுவதையும், இலங்கையின் தேயிலையின் தரம் உறுதிப்படுத்தப்படுத்தி நிச்சயப்படுத்திக் கொள்வது ஒவ்வொரு நாளும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய முக்கியமான சவாலான விடயமாகும்.

தற்போது, தேயிலைத் தொழில் மற்றும் தேயிலை நிறுவனங்கள், தொழிலாளர் சம்பளம், உற்பத்தித் திறன், உற்பத்தி மற்றும்; தரம் குறித்த கவலைகள் தொடர்பாக தற்போது மிக அதிகமாக பேசப்படுகிறது. ஆகவே, சிறந்த நன்மைகளை செம்மைப்படுத்துவதற்கும், ஒரு நிலையான வழியைக் கண்டுபிடிப்பதற்கும் உதவும் ஒரு தேயிலை சிறுதோட்ட உரிமையாளர் கண்ணோட்டத்திலிருந்து படிப்பினைகளை பகிர்ந்து கொள்வது முக்கியம் என நாங்கள் உணர்ந்தோம். இந்தத் துறையை நாங்கள் நிர்வகித்து வரும் விதத்தில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை தொழிற்சாலை ஒரு கூட்டாக உறுதி செய்வது மிக முக்கியமாகும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சம்பள பேச்சுவார்த்தைகள் நெருங்கி வருவதால், சபையில் உள்ள தொழிற்துறை சார்ந்தோர் சிறந்த வழிகளை சபையின் ஊடாக முன்னெடுக்கின்றனர். சீர்திருத்தப்பட்ட ஒரு உடன்படிக்கைக்கான அவசர தேவை இருப்பதாக தெரிகிறது. இது ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை ஏற்படும் பெரும் போராட்டத்துடன் கூடிய சண்டையாக இருப்பது மிக துரதிர்ஷ்டமான விடயம் என்பதுடன் இதில் வெற்றிபெற்றவர்கள் யாருமில்லை. தோல்வியடைந்தவர்கள் மாத்திரமே மிகுதியாகின்றனர்.

சிறுதோட்ட உரிமையாளர்களிடமிருந்து பாடம்

நாங்கள் இங்கே எவ்வாறு செயற்படுகிறோம்: நாள் ஒன்றுக்கு தோட்டத் தொழிலாளியினால் பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ தேயிலைக் கொழுந்துக்கும் 30 ரூபா வீதம் வழங்கப்படுகிறது. சில கொழுந்து பறிக்கும் தொழிலாளி செழிப்பான நாளில் சராசரியாக 30 கிலோ வரை பறிக்கிறார். வானிலை மண் மற்றும் கொழுந்து பறிக்கும் முறைகள் அனைத்தும் நமக்கு சாதகமாக இருக்கும் போது அது அவருக்கு சிறந்த நாளாக அமைகின்றது. ஒவ்வொரு தேயிலைப் புதரிலும் உள்ள இலைகள் ஒவ்வொரு 7-10 நாட்களுக்கும் சுழற்சி முறையில் பறிக்கப்படுகின்றது. அதாவது ஒவ்வொரு புதரிலிருந்தும் இலைகள் மாதத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது பறிக்கப்படுகின்றன. ஒரு தேயிலை நிலப்பரப்பு சிறந்த பலனை வழங்க தேயிலை பறிப்பவர்களின் நிபுணத்துவத்தைவிட அதிகம் தேவைப்படுகிறது. தேயிலை கொழுந்து பறிப்பவர்களைத் தவிர, களையெடுத்தல், உரமிடுதல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பை பராமரித்தல் போன்ற கைமுறை உழைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடும் பிற களப்பணியாளர்களும் எங்களிடம் உள்ளனர். அவர்களுக்கு தினசரி 1000 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த களப் பணியாளர்கள் நாள் ஒன்றுக்கு 8 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒரு தோட்டத் தொழிலாளிக்கு சம்பளம் செலுத்தும் முறையானது நிலையான தினசரி சம்பள மாதிரியிலிருந்து வெகுதூரம் கொண்டு செல்லக்கூடியதாகும். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு தோட்;டத் தொழிலாளியும் அவர்கள் பறிக்கும்; கொழுந்தில் கிலோ அளவிற்கே சம்பளம்; வழங்கப்படுகிறது. அதாவது உற்பத்தி திறன் உள்ளடக்கப்பட்ட சம்பள மாதிரியில் அவர்களுக்கு நாள் சம்பளம் வழங்கப்படுகிறது.

நேரடி தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகையில், தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வெளிப்படையான அடிப்படையைக் கொண்டு சம்பளம் வழங்கும் திறன் இருந்தால் அவர்களுக்கும் எமக்கும் இடையில் மனக் கசப்புக்களை தீர்ப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும். இதன்மூலம் எனக்கு என்னுடைய தேயிலை செய்கை நிலங்களை சிறப்பாக நிர்வகிக்கவும், அதிக விளைச்சலைக் கொடுக்கவும் உதவியுள்ளதுடன் இருந்தாலும், நான் ஆர்வமாக இருக்கவும் மற்ற வேலைகளில் ஈடுபடுவதற்கும்; இது சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, தேசிய முன்பள்ளி மேம்பாபட்டு அறக்கட்டளையை அமைப்பதற்கான எனது ஆர்வத்தை தொடரவும் முடிந்ததுளூ இந்த அறக்கட்டளை தோட்ட சமூகங்களுக்குள் ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், சிறு தோட்டங்களில் பணிபுரியும் தேயிலைக் கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தொழில்முனைவோர்களாக உருவாகியுள்ளனர். செயல்திறன் மற்றும் திறமைகளை மேம்படுத்த வேண்டும் என்ற அவசியத்தால் உந்தப்பட்;டு கொழுந்து பறிப்பாளர்கள் ‘மாற்றத்தின் முகவர்கள்’ ஆக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக, சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்கள் காலத்திற்கு ஏற்றவாறு உருவாகியிருந்தாலும், உற்பத்தி திறனுக்கும் முன்னுரிமை அளிக்காத அல்லது போதுமான வெகுமதி அளிக்காத ஒரு அடிப்படை ஊதிய முறையைத் தொடருமாறு கட்டாயப்படுத்துவதன் மூலம் நமது தொழில்துறையில் எஞ்சியுள்ள பகுதிகள் முன்னேற்றத்திலிருந்து பின்தங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

எனவே RPCக்கள் ஒரு நிலையான முறைமையின் கீழ் நடவடிக்கைகளைத் தொடர முடியும் என்பதும் அவசியமாகும். RPC துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி முழுத் தொழிற்துறையினதும் மிக உயர்ந்த தரத்திற்கும், புத்தாக்கத்திற்கான அதன் திறனுக்கும் பெரும் ஆபத்துக்களை உருவாக்கும். இந்த இக்கட்டான நிலைக்கு முதல் மற்றும் மிக முக்கியமான தீர்வு குறித்து அனைத்து தரப்பினருக்கும் தெளிவாகத் தெரிகிறது. சம்பள மாதிரி திருத்தப்பட வேண்டும். தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்களாகிய எங்கள் அனுபவம் இந்த உண்மைக்கு தெளிவான சான்றாகும், மேலும் அதை சாதாரணமாக புறக்கணிக்கக் கூடாது. நாம் அனைவரும் எமது தேயிலையை ஆதரிப்பவர்கள், எமது தொழிற்துறையின் ஒரு துறையை காயப்படுத்துவது இறுதியில் நம் அனைவரையும் பாதிக்கும். ஒரு முன்னுதாரண மாற்றம் அவசியம், மேலும் இது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் விதத்தில் நீண்டகால தாமதமான புதுப்பித்தலுடன் மாத்திரமே ஆரம்பிக்க முடியும்.

மஸ்கெலியாவில் குளிக்கச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பிரவுன்சிவிக், எமலினா தோட்டத்தில் நேற்று (25)  பிற்பகல் குளிக்கச்சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

32  வயதுடைய கோவிந்தன் கமல் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குளிக்கச்சென்ற இளைஞர் நீண்டநேரம் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேட ஆரம்பித்தனர். இதன்போதே ஆற்றில் சடலம் கிடந்துள்ளது. இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சடலம் கிளங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டது.

மரண பரிசோதனை முடிவு இன்று வெளிவரவுள்ளது.

மஸ்கெலியா நிருபர் பெருமாள், சாமிமலை நிருபர் – ஞானராஜ்

‘கொழும்பில் இருந்து வந்தவரால் கினிகத்தேனயில் ஐவருக்கு கொரோனா’

ஹட்டன், கினிகத்தேன ஹிட்டிகேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று வயது குழந்தை, மூன்று ஆண்கள் மற்றும் பெண்ணொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியா மாவட்டத்துக்கு வருபவர்கள் கினிகத்தேனை, கலுகல்ல பகுதியில் உள்ள சோதனைச்சாவடிக்கு அருகாமையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கடந்த சனிக்கிழமை முதல் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மூன்று வயது குழந்தையின் தாயிடமும் கொழும்பில் இருந்து வந்தவர் என்ற அடிப்படையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே ஐவருக்கு வைரஸ் தொற்று இன்று (26) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களை சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட்டவளையில் உயர்தர வகுப்பு மாணவனுக்கு கொரோனா!

வட்டவளை, குயில்வத்தை பகுதியில் தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு ஊர்கொடவத்தையில் தனது தந்தை மற்றும் தாய் வசிக்கும் இருப்பிடத்துக்கு பாட்டி சகிதம் குறித்த மாணவன் அண்மையில் சென்றுள்ளார்.

மீண்டும் ஊர் திரும்பும் வழியில் அவரிடம் எழுமாறாக பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து நுவரெலியா மாவட்டத்துக்கு வருபவர்கள் கினிகத்தேனை, கலுகல்ல பகுதியில் உள்ள சோதனைச்சாவடிக்கு அருகாமையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கடந்த சனிக்கிழமை முதல் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிசிஆர் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் குறித்த மாணவன் நேற்று பாடசாலைக்கு சென்றுள்ளார். எனினும், பாடசாலை நிர்வாகத்தினரால் அவர் திருப்பி அனுப்பட்டுள்ளார். இன்று அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பாடசாலை வளாகம் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

வெரலப்பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சிறப்பு சித்தி

பசறை கல்வி வலயத்தில் மடுல்சீமை வெரலப்பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை நான்கு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு அதிகமான புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

ஆர்.யதுர்சிகா – 176 புள்ளிகளையும், சி.தில்ருக்சன் – 171 புள்ளிகளையும், சீ. மதுநிசா – 169 புள்ளிகளையும்,  யூ நிகிசா – 165 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு கற்பித்த வகுப்பாசிரியர்களான கே. சரவணபவன், ஆர். ரவிச்சந்திரன் மற்றும் அதிபர் ஏ. ரமேஸ் ஆகியோருக்கு மாணவர்களின் பெற்றோர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர பதவியேற்பு!

இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ச பதவியேற்றுள்ளார். சமல் ராஜபக்ச அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகவும் செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக தேர்வான ஜல்லிக்கட்டு

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக ஜல்லிக்கட்டு என்ற மலையாள திரைப்படம் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு திரைப்படத்தை, லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.

2019-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் வெளியான ‘கல்லி பாய்’ என்ற இந்திப் படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இறுதிப்பட்டியல் வரை இந்தப் படம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

LPL திருவிழா இன்று ஆரம்பம்! கொழும்பு, கண்டி அணிகள் பலப்ரீட்சை!

லங்கா ப்ரீமியர் லீக்கின் முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் இன்று 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பலப்ரீட்சை நடத்தவுள்ளன.

கொழும்பு கிங்ஸ் அணிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் தலைமைவகிக்கின்றார். கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு குசல் பெரேரா தலைமை வகிக்கின்றார். இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.

இறுதிப்போட்டிகள் டிசம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மரடோனாவுக்காக அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்க தினம்!

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவையொட்டி அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் தலைவரும், ஜாம்பவானுமான மரடோனா 1977முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச கால்பந்து அரங்கில் கலக்கியவர்.

தனது வேகம் மற்றும் விவேகம் நிறைந்த நளினமான ஆட்டத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட கால்பந்து கதாநாயகனாக ஜொலித்தார்.

1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் தலைவராக இருந்த மரடோனா உலக கால்பந்து அரங்கில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு நிகராக பார்க்கப்பட்டவர்.

4 உலக கோப்பை போட்டியில் (1982, 1986, 1990, 1994) பங்கேற்றவரான அவர் அர்ஜென்டினா அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா, நபோலி, செவில்லா உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக களம் கண்டு இருக்கும் அவர் மொத்தம் 491 கிளப் போட்டிகளில் ஆடி 259 கோல்கள் அடித்து இருக்கிறார்.

10-ம் நம்பர் சீருடைக்கு தனி மரியாதை சேர்த்த அவர் ஓய்வுக்கு பிறகு அர்ஜென்டினா உள்பட பல்வேறு அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றினார். அத்துடன் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் பெற்றார்.

இந்த நிலையில் 60 வயதான மரடோனா கடந்த 2ஆம் திகதி உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவசரமாக ஆபரேஷன் செய்யப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது. ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் மரடோனாவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது திடீர் மறைவு கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவையொட்டி அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் உள்பட பலரும் மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...