Home Blog Page 3761

2ஆவது அலைமூலம் 1,123 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை ஆயிரத்து 123 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று 42 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் எனவும் அவர் கூறினார். எனினும், ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று என வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிராமப்புற விவசாயத்தைப் பலப்படுத்தும் கிரிஸ்புரோ

கந்தளாய் சூரியபுர தண்ணீர் பிரச்சினையை தீர்த்து கிராமப்புற விவசாய பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை பலப்படுத்துகிறது கிரிஸ்புரோ

 

இலங்கையில் முன்னணி மற்றும் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பாளர்களான கிரிஸ்புரோ நிறுவனம், கந்தளாய் சூரியபுர விவசாய கிராமத்தில் குடிநீர் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதன் மூலம் இரு போகங்களுக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு தேவையான அடித்தளமொன்றை உருவாக்க முடிந்துள்ளது. நீண்டகால யுத்தத்தில் மற்றும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள கந்தளாய் சூரியபுர மற்றும் ஹெலஓயா போன்ற கிராமங்களில் வாழும் மக்களின் விவசாயத்திற்கான தண்ணீர் தேவையானது நீண்டகாலமாக கிராம மக்களால் எதிர்கொள்ளப்பட்டு வந்த பிரச்சினையாக இருந்ததுடன் கிரிஸ்புரோ நிறுவனம் கிராம மக்களின் தேவையை புரிந்து கொண்டு விவசாய சங்கங்கள், மகாவலி வேலைத்திட்டம் மற்றும் நீர்பாசன திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து நிரந்தரமான கால்வாய் ஒன்றை சூரியபுர மற்றும் ஹெலஓயா போன்ற பிரதேசங்களுக்கு பெற்றுக் கொடுத்ததுடன் அதன்படி இரு போகங்களிலும்; விவசாயம் செய்வதற்கு இங்குள்ள விவசாயிகளுக்கு முடிந்துள்ளது.

மகாவலி கங்கை இந்த கிராமங்கள் வழியாக சென்றாலும் அது பிரதான கங்கையிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரத்தில் கால்வாய் ஒன்றை அமைத்து அதனூடாக தண்ணீரைப் பெற்றுக் கொள்ள விவசாய சங்கங்களினால் முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் பல தடவைகள் அரசியல் அதிகாரிகளிடம் முறைப்பாடுகளை செய்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிரிஸ்புரோ நிறுவனம் கந்தளாய் சூரிய புர பகுதியை அண்மித்த பகுதிகளில் பெரிய அளவில் விவசாயத்தை மேற்கொண்டு செல்வதுடன் அங்கு முழுமையாக விதை நெல் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றது. ஹெலஓயா விவசாய சங்கத்தினால் கிரிஸ்புரோ நிறுவனத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய கிரிஸ்புரோவினால் இந்த கால்வாய் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தொழிற்நுட்ப அனுமதியைப் பெற்றுக் கொடுக்க மகாவலி திட்டம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. கிரிஸ்புரோ நிறுவனத்திடமுள்ள அகழ்வு இயந்திரங்கள் மற்றும் நில செயற்பாட்டு உபகரணங்கள் (Earth Moving Equipment) ஆகியவற்றை இலவசமாக இந்த வேலைத்திட்டத்திற்காக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கந்தளாய் ஹெலஓயா விவசாய சங்கத்தின் தலைவர் ஜீ.ஜீ. பந்துல, ‘யுத்தத்தின் பின்னர் சிறு மற்றும் பெரும் போக விவசாயம் செய்வதற்கு விவசாயிகள் தொடர்ச்சியாக முயற்சி எடுத்தாலும் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான தண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையொன்று எமக்கு இருக்கவில்லை. மழை நீரூம் நிச்சயமற்ற மட்டத்தில் இருப்பதனால் வருடத்தின் பெரும்பாலான காலப்பகுதி வரட்சியால் பாதிக்கப்படுகிறது. இந்த நிலைமையை இல்லாமல செய்வதற்கு வருடம் முழுவதிலும் மகாவலி கங்கை நீரை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையாக பிரதான கங்கையிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரம் வரை கால்வாய் அமைப்பது முக்கியமாக இருந்தது. இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இறுதியாக கிரிஸ்புரோ நிறுவனம் இதற்கு தலையிட்டு தமது ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொடுத்ததால் நீண்டகாலமாக கனவாக இருந்த எமது நோக்கத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு இப்போது எங்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.’ என தெரிவித்தார்.

கோழிப் பண்ணை மற்றும் பெரிய அளவிலான நெல் மற்றும் சோளச் செய்கை நிலங்களை நடத்திச் செல்வதனால் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் மற்றும் அதனூடாக கிராமிய வறுமையை குறைப்பதற்கும் கிரிஸ்புரோ தமது பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோரேஷ் செலர், ‘கிரிஸ்புரோ பெறுமதி மிக்க நிறுவனங்கள் மத்தியில் முன்னிலையிலுள்ள கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் முற்றிலும் முக்கியமான கவனம் செலுத்தும் நிறுவனமாகும். விசேடமாக புதிய தொழில்முனைவோரை உருவாக்குவது மட்டுமன்றி விவசாயத்திற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக தோல்கொடுப்பதன் மூலம் கிராமிய வறுமையை குறைப்பதற்கும் கிரிஸ்புரோ தேசிய நிறுவனமாக பாரிய பங்களிப்பினையும் வழங்குகிறது. கந்தளாய் சூரியபுர மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புதற்காகவும் புதிய தொழில்களை ஆரம்;பிப்பதற்கு கைகொடுப்பதற்கும், புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் விவசாய அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற வழிகளின் ஊடாக அந்த நோக்கங்களை அடைவதற்கும் கிரிஸ்புரோ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.’ என தெரிவித்தார்.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.

ஒன்லைனில் நடந்த HNB Financeஇன் வருடாந்த குழுக் கூட்டம்

HNB Financeஇன் வருடாந்தர பொதுக் குழுக் கூட்டம் இம்முறை ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செப்டெம்பர் 29ஆம் திகதி நிறுவனத்தின் அரங்கத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது. பத்தாவது வருடமாக இடம்பெற்ற HNB Financeஇன் வருடாந்த பொதுக்குழுக் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயணம் மற்றும் கூட்டங்களை மட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இணையத்தளம் மூலம் முதல் தடவையாக இடம்பெற்றது. அனைத்து பங்குதாரர்களுக்கும் இணையத்தளம் ஊடாக வருடாந்தர பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன் இந்த வருடாந்தர பொதுக்குழுக் கூட்டம் இணையத்தளம் ஊடாக ஒளிபரப்பும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. HNB Finance நிறுவனம் பங்குச் சந்தைக்கு பிரவேசித்த வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமாக இடம்பிடித்த பின்னர் இடம்பெற்ற முதலாவது வருடாந்த பொதுக் குழுக் கூட்டம் இதுவாகும்.

ஆரம்பத்தில் இருந்தே புத்தாக்கங்களுக்கு தயங்காமல் பிரவேசிக்கும் HNB Finance நிறுவனம் அண்மையில் நடைபெற்ற தமது பொதுக் குழுக் கூட்டத்தின் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு பிரவேசிப்பதற்கான தமது அபிப்பிராயத்தை நிறைவேற்ற கிடைத்ததுடன் உலகளாவிய தொற்றுநோய் நிலைமை காரணமாக தமது சேவைகளையும் தொடர்ச்சியாக டிஜிட்டல் தளத்தின் கீழ் நடத்திச் செல்வதற்கும் அதன் மூலம் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தும் நிதி நிறுவனம் என்ற வகையில் வாடிக்கையாளர்களுடன் மிகவும் சிறந்த தொடர்பினையும் பேண முடிந்துள்ளமை இதனூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தமது அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கியுள்ளதனால் சேவையை வழங்கும் செயல்திறன், திறன் மற்றும் செலவுகளைக் கட்டுப்படுத்தி வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ள HNB Finance நிறுவனத்திற்கு முடிந்துள்ளது.

கொவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகளினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய பாதுகாப்பாக மற்றும் சமூக இடைவெளியை பேணி HNB Financeஇன் தலைமை அலுவலகத்திலுள்ள அரங்கத்தில் இடம்பெற்ற வருடாந்தர பொதுக் குழுக் கூட்டத்திற்கு பங்குதாரர்கள் சிலரையே அழைத்ததுடன் சிறு பங்குதாரர்களை இணையத்தளத்தின் ஊடாக தொடர்புபடுத்துவதற்கு நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பங்குதாரர்களின் ஏகமனதாக தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ளவிருந்த விடயங்களுக்காக வாக்கெடுப்பதற்கு இணையத்தளம் ஊடாக நேரடி ஒளிபரப்பாக இடம்பெற்றது. இணையத்தளம் ஊடாக இணைந்து கொண்டவர்களுக்கு கூட்ட நடவடிக்கைகள் குறித்து தமது பங்களிப்பு செய்வதற்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டதுடன் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் யார் யார் கலந்து கொண்டார்கள் என்ற விபரத்தையும் காணமுடிந்தது. வருடாந்தர பொதுக் குழுக் கூட்டம் மைக்ரோசொஃப்ட் டீம் தொழில்நுட்ப கட்டமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டதுடன் வாக்கெடுப்பு முடிவுகள் பகிரங்க திறையில் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

HNB Finance வருடாந்தர பொதுக் குழுக் கூட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் இங்கு வருகை தந்தவர்கள் மற்றும் இணையத்தளத்தில் இணைந்து கொண்ட பங்குதாரர்களுக்கு முகாமைத்துவத்திடம் கேள்விகளை கேட்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது HNB Financeஇன் தலைவர் ஜொனதன் அலஸ், முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் மற்றும் நிறுவனத்தின் செயலாளர் ரஜீவ் திஸாநாயக்க ஆகியோர் பதில்களை வழங்கினர்.

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB Finance Limited இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB Finance தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB Finance சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.

Vega டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வில் HNB Financeக்கு மதிப்பளிப்பு

இலங்கையின் முன்னணி நிதி சேவை வழங்குபவரான HNB Finance தமது சமூக ஊடகத் தகவல் மற்றும் விற்பனை சேவைகளுக்காக 2020ஆம் ஆண்டு ‘ஏநபய’ டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வில் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது. டிஜிட்டல் ஊடகத் துறையில் புத்தாக்கம் மற்றும் விற்பனை சேவைகளுக்காக வருடம் தோறும் மதிப்பளிக்கப்படும் ‘Vega’ டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வில் இந்த துறையில் சிறந்த வரவேற்பு பெற்ற விருது வழங்கும் நிகழ்வாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது. இந்த வருடத்தில் தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டத்திற்காக HNB Financeஇனால் நிர்மாணிக்ப்பட்ட அபே கெதர அவுருது எனும் டிஜிட்டல் புதுவருட மேம்பாட்டு நிகழ்ச்சி ‘Vega’ டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வின் போது சிறந்த வரவேற்புடன் ‘Aructurus Award’ என்ற விருதினைப் பெற்றது.

HNB Finance இனால் பெற்றுக் கொள்ளப்பட்ட இந்த பாராட்டுக்கள் குறித்து கருத்து தெரிவித்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு பிரதானி உதார குணசிங்க, ‘கொவிட் தொற்றுநோய் பரவுவதனால் நாடு முழுவதும் Lockdown செய்யப்பட்டதனால் எமது அன்றாட டிஜிட்டல் சேவைகள் ஊடாக பொதுமக்களிடம் சிறந்த தொடர்பினை மேற்கொள்வதற்காக கடந்த தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டத்திற்காக இந்த அபே கெதர அவுருது டிஜிட்டல் மேம்பாட்டு நிகழ்ச்சியை நாம் நடைமுறைப்படுத்தினோம். அதனை மக்கள் மிகவும் நெருக்கமாக பற்றிக் கொண்டதுடன் இந்த எண்ணக் கருவானது சர்வதேச மட்டத்திலும் மிகவும் பாராட்டப்பட்டமை எமக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

அண்மையில் புத்தாக்கங்களை நோக்கி செல்லுதல் மற்றும் எமது சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளித்துள்ளமை இந்த விருதின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வருடத்தின் இறுதிக்குள் எமது சேவைகள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியும். டிஜிட்டல் மயமாதல் எமது எதிர்கால சேவைகளின் தீர்மானம் மிக்க கருவியாக அமைவதுடன் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க் கும் சேவை மட்டத்தில் வெற்றிகரமாக செல்வதற்கு எம்மால் முடியும் என நான் நம்புகிறேன். சேவைகளை டிஜிட்டல்மயப்படுத்துவதன் மூலம் சேவைகளை துரிதமாக வழங்குதல், திறன்களை அதிகரித்தல் மற்றும் செலவுகளை கட்டுப்பாட்டை சமாளிக்க முடிவதனால் மிகவும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு எமக்கு உதவியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இன்றி கூற முடியும்.’ என தெரிவித்தார்.

கொவிட் தொற்றுநோய் காரணமாக நாடு Lockdown செய்யப்பட்ட காலப்பகுதியில் தமது வீடுகளில் முடங்கிய மக்களின் மன ரீதியான சந்தோஷம் மற்றும் புதுவருடத்திற்காக புதிய அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்க முன்கூட்டியே HNB Finance அபே கெதர அவுருது டிஜிட்டல் மேம்பாட்டு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது. HNB Finance தமது வர்த்தக நடவடிக்கைகளை உகந்த மற்றும் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பலவற்றை பின்பற்றியதுடன் சந்தைக்கு அறிமுகம் செய்த புதிய சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தலை பலப்படுத்துவதற்காகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது தடவையாகவும் இடம்பெற்ற ‘Vega’ டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வு IAA நிறுவனத்தினால் வருடம் தோறும் ஏற்பாடு செய்யப்படுவதுடன் தொழிற்துறை மற்றும் பயிற்சி பெறுவோர் என 560 பிரிவுகளின் கீழ் விருதுகளுக்காக 1182 விண்ணப்பங்கள் இந்த வருடம் கிடைக்கப்பெற்றுள்ளன. 29 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களினால் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதுடன் நிர்வகிப்பு நடவடிக்கைகளின் கீழ் சர்வதேச நடுவர் குழுவினால் இந்த விருதுகளுக்காக தகுதியுள்ளவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். HNB Financeஇனால் இந்த ஆண்டு பெற்று இந்த விருதினை கடந்த வருடம் Hypergiant Industries, Cinétévé Experience Philip Morris , Sony Pictures Entertainment, BMW, Dittoe PR, Mirrored Media போன்ற மதிப்பு மிக்க முன்னணி சர்வதேச வர்த்தக இலச்சினைகளைக் கொண்ட நிறுவனங்கள் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.

‘இலங்கையில் 42 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி’

” கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கிய பின்னர் இலங்கையில் 4.2 மில்லியன் பேருக்கு தடுப்பூசி கிடைக்கப்பெறும். இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கென தேசிய ஒருங்கிணைப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.” – என்று  சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்   27/2 இன்கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் எழுப்பட்ட  கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரச வைத்தியசாலைகளில் 34 பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களும், ஆயிரத்து 20 மூச்சியக்கி இயந்திரங்களும் உள்ளன. அவசர சிகிச்சைப்பிரிவில் 704 கட்டில்களும் உள்ளன.  கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து 25 பிசிஆர் இயந்திரங்களும், 220 மூச்சியக்கி (நடமாடும்) இயந்திரங்களும், 61 அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டில்கள் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்பட்டன. இவை தற்போதைய நிலையில் போதுமானவையாக உள்ளன.எதிர்காலத்தில் தேவையேற்படின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.  உலக வங்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தற்போது நாளொன்றுக்கு 11ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பரிசோதனையை துரிதப்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகள் ஆரம்பமான நாள் முதலே அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகின்றோம். தடுப்பூசிக்கு உரிய அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் இலங்கையில் 20 வீதமானோருக்கு அது வழங்கப்படும். அதாவது 4.2 மில்லியன் பேருக்கு வழங்கப்படும்.

கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகள் இன்னும் மூன்றாம் கட்டத்தில்தான் உள்ளன. அதற்கான அனுமதி எப்போது வழங்கப்படும் என்பது எவருக்கும் தெரியாது. ஆனாலும் தடுப்பூசி தயாரானதும், அதனைப் பெற்று உரிய வகையில் பராமரிப்பதற்கு, வழங்கப்படவேண்டிய தரப்பினரை அடையாளம் காண்பதற்கு முன்னாயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய ஒருங்கிணைப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் கீழ் மூன்று தொழில்நுட்ப குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.” – என்றார்.

2ஆவது அலைமூலம் 17,938 பேருக்கு கொரோனா! 83 பேர் உயிரிழப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (26) 17ஆயிரத்து 938 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 83 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)

மினுவாங்கொட கொத்தணிமூலம்  3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 14 ஆயிரத்து 373க்கு மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கில் 15 ஆயிரம் பேர்வரை குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 502 பேருக்கு வைரஸ் தொற்றியது.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 21 ஆயிரத்து 469 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 447 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில்  கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றும் இருவர் உயிரிழந்தார்.

இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.

கால்பந்து ஜாம்பவான் மரடோனா உயிரிழந்தார்

ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.  (வயது – 60)

அணியின் சிறந்த வீரர், தலைவர், பயிற்றுவிப்பாளர் என கால்பந்து உலகில் தனது திறமைகளை டீகோ மரடோனா வெளிப்படுத்தியிருந்தார்.

டீகோ மரடோனாவிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து இந்த மாத முற்பகுதியில் ஆர்ஜன்டீன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வெளியேறியிருந்தார்.

1986ஆம் ஆண்டு ஆர்ஜன்டீன அணி உலகக் கால்பந்து கிண்ணத்தைக் கைப்பற்றுவதில் மரடோனா அணிக்குத் தலைமைதாங்கி, பெரும் பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரடோனாவின் மரணம் உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் அர்ஜென்டினா கால்பந்துச் சங்கம் தங்கள் வரலாற்று நாயகன் காலமானதற்கு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

மரடோனாவின் கால்பந்து சாகசங்கள்


இறுதி காலத்தில் மரடோனா

இன்று மாத்திரம் 502 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 208 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று இதுவரை 502 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்து 447 பேர் குணமடைந்துள்ளனர்.

‘கொட்டகலையில் தனியார் கல்வி நிறுவனங்களில் திடீர் சோதனை’

கொட்டகலை பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கொட்டகலை பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளே இவ்வாறு 5 தனியார் கல்வி நிறுவனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் 14 மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் நடத்தப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து ஆசிரியருக்கும், நிர்வாகத்தினருக்கும் சுகாதார பரிசோதகர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

பாடசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதிலும், பிரத்தியேக வகுப்புகளை நடத்துவது தொடர்பான சுகாதார அறிவித்தல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 மற்றும் நீரிழிவு நோய்: இவை இரண்டும் ஆபத்தானது?

கொவிட்-19 மற்றும் நீரிழிவு நோய்: இவை இரண்டும் ஆபத்தானது?

இதை நாம் எவ்வாறு சமாளிப்பsது?

கொவிட்-19 தொற்று இலங்கை முழுவதும் தீவிரமாக பரவி வருவதால், இந்த நோய் கட்டுப்பாடற்ற விதத்தில் தாக்கக் கூடிய நபர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதுடன் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்துமென கருதப்படுகிறது. இது சுகாதார பிரிவினர் மற்றும் நோயாளர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மற்றுமொரு கவலையான விடயமாகவுள்ளது. அதாவது நீரிழிவு நோய் அல்லது நாட்பட்ட பிற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் அல்லது அவர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதிலும் சிரமப்படுகிறார்கள. அத்துடன் இந்த நிலைமை காரணமாக தங்களுக்கு இந்த வைரஸ் பாதிக்கும் என்ற அச்சமும் அவர்கள் மத்தியில் காணப்படுகிறது.

உலகம் முழுவதும் 463 மில்லியன் வயது வந்தோர் நீரிழிவு நோயாளர்களாக இருப்பதால், உலக நீரிழிவு தினமான நவம்பர் மாதம் 14ஆம் திகதியில் நீரிழிவு ஆதரவு சமூகங்கள் மற்றும் சுகாதார ஆலோசகர்கள் இந்த நோய் தொடர்பிலான தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதனை மென்மேலும் முன்னேற்றம் செய்வதற்கு ஒன்றிணைவதற்கான ஒரு முக்கியமான தருணமாக இதனைக் கருதினர். ஒரு தொற்றுநோயின் போது கவனிப்பின் தரம் மற்றும் நீரிழிவு நோயாளியை நிர்வகித்தல் போன்றவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் மாத்திரம் 10 பேரில் ஒருவர் இந்த நோயாள் பாதிக்கப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. ‘Lockdown’ வாழ்க்கை முறையானது பெரும்பாலும்; ஒருவரை சுறுசுறுப்பாக இயங்க வைக்க வாய்ப்பில்லை, இதனால் ஆரோக்கியம் குறையும் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் நீரிழிவு நோய் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.

Diabetes & Endocrinology சமீபத்தில் நடத்திய ஆய்வில், இங்கிலாந்தில் 61 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், கொவிட்-19ஆல் இறப்பவர்களில் 30% வீதமானோர் நீரிழிவு நோய் காரணமாகவே இறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் தொகை மற்றும் நாட்பட்ட மருத்துவ நிலைமைகள் போன்ற காரணிகளை கணக்கிட்ட பிறகு, வைரஸ் நோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து வகை 1 நீரிழிவு நோயாளிகளுக்கு மூன்று மடங்கு அதிகமாகவும், வகை 2க்கு கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகமாகவும் காட்டப்பட்டது.

இரண்டு முக்கியமான காரணங்களால் மோசமான குளுகோஸ் கட்டுப்பாட்டால் எமது உடல் அமைப்பில் பரவலான விளைவுகளை ஏற்படுத்துகிறது, இதனால் பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, கண் தொடர்பான நோய்கள் மற்றும் மூட்டு நோயால் உடல் ஊனமாவதற்கு வழிவகுக்கும். உடல் முழுவதும் உள்ள இரத்த நாளங்கள் வழியாக தேவையான ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு கொண்டுசெல்ல முடியாத அளவுக்கு பலவீனமடைகிறது. வீக்கம் என்பது நீரிழிவு கட்டுப்பாட்டின் மற்றுமொரு மோசமான விளைவாகும். இது வைரஸ் நோயின் தாக்குதலால் உடலை மோசமாக பாதிப்படையச் செய்யும். நீரிழிவு நோயுள்ள நோயாளர்களில் உயர்ந்த இரத்த குளுகோஸின் அளவு அதிகரித்தல், வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு அதிகப்படியான பக்டீரியா சிக்கல்களும் ஏற்படும். உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற இணை நோய்கள் போன்றவை வைரஸ் தொற்று நோய்களின் போது சிக்கல்களை அதிகரிக்கச் செய்யும் காரணிகளாகும்.

இரத்தத்திலுள்ள குளுகோஸின் ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க அவற்றின் குளுகோஸ் அளவை தவறாமல் கண்காணிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட நீரிழிவு மருந்துகள் மற்றும் ஆரோக்கியமான உணவை சரியான உட்கொள்ளும் தினசரி பழக்கம், உங்கள் வீட்டின் எல்லைக்குள் உடற்பயிற்சித் திட்டத்தை பராமரித்தல், அதிகப்படியான வேலையைக் குறைத்தல் மற்றும் சிறந்த தூக்கம் ஆகிய காரணங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பல நாடுகளிலுள்ள சுகாதார அமைச்சுக்களுக்கிடையே WHOஆல் நடத்தப்பட்ட துரிதமான மதிப்பீட்டு ஆய்வுகளின்படி, கொவிட்-19 தொற்றுநோய்களின் போது Nஊனுகளுக்கான சேவை வழங்குவதில் கவனம் செலுத்துகிறார்கள், கொவிட்-19 தொற்றுநோய்களின் போது NCD களுடன் வாழும் பலர் சரியான சிகிச்சை அல்லது மருந்துகளை எடுப்பதில்லை என்ற ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார வழங்குநர்களாக நாம், தேவையற்ற விதத்தில் மருத்துவமனைக்கு எமது நோயாளர்களை வரவழைத்து குழப்பத்தில் ஆழ்த்தாது, எம்மிடம் சிகிச்சை பெறும் அனைத்து நோயாளர்களும் அவர்களது சுகாதார தேவைகளுக்காக எமது குழுவினருடன் தொடர்பினை ஏற்படுத்தி மருந்து மற்றும் குளுக்கோ மீற்றர் மற்றும் இன்சூலின் போன்ற நீரிழிவு பராமரிப்பு தயாரிப்புக்களைப் பெற்றுக் கொள்ள வழியமைக்கப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக, நோய்க்கான அறிகுறிகள் காணப்படும் போது அவர்கள் சிகிச்சை பெறும் வைத்தியரை அல்லது சுகாதார வழங்குநரை பார்வையிடுவதில் தாமதம் ஏற்படுவதால், பலர் மாரடைப்பு அல்லது தொற்றுநோய்களுடன் மருத்துவமனைக்கு தாமதமாக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த தாமதமானது நோயாளியை மேலும் பலவீனமடையச் செய்யும்.

இலங்கையில், சுகாதார அமைச்சு தற்போது பல டெலிமெடிசின் சேவைகளை வழங்கி வருகிறது, மேலும் நீரிழிவு நோயாளர்கள் சன நெரிசலான இடங்களுக்கு பிரவேசிக்காமல் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் முறைகளை அறிமுகம் செய்துள்ளது.

Healthy Life Clinicஇல், தொற்றுநோயியல் பிரிவானது சுகாதார அமைச்சின் (MOH) விதிமுறைகளுக்கு அமைய அமைக்கப்பட்ட கொவிட்-19 பாதுகாப்பு செயற்பாட்டு சுகாதார நெறிமுறைகளை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகின்றோம். சிகிச்சைகளுக்காக வரும் அனைத்து நோயாளர்களும் தொலைபேசியில் முன்பதிவு செய்யப்பட்டவுடன் அவர்களின் நோயின் தன்மையைப் புரிந்து கொள்ள எமது தாதியர்களால் பரிசோதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நோயாளியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதனால் எங்களது கண்காணிப்பிலிருந்து யாரும் விலகிச் செல்ல முடியாது.

எங்களது அனுபவம் வாய்ந்த, மிகவும் மதிக்கப்படும் ஆலோசகர் குழு, தொற்றுநோய் முழுவதையும் கண்காணித்து தொடர்ச்சியாக பராமரிக்க நிறுவப்பட்ட நம்பகமான டெலிமெடிசின் பங்குதாரர்களான oDoc மற்றும் Mydoctor.lk ஊடாக டெலி ஹெல்த் ஆலோசனைகளை வழங்குகின்றது. எங்களது நீண்டகால நீரிழிவு பராமரிப்பு மற்றும் எடை நிர்வகிப்பு நடவடிக்கைகளை ஒன்லைனிற்கு மாற்றியுள்ளோம். அவை நேரடியான சந்திப்பு மற்றும் பரிசோதனைகள் இல்லாத போதிலும் கூட பயனுள்ளதாக இருக்குமென நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...