Home Blog Page 3758

‘தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க சபையில் மனோ முன்வைத்துள்ள திட்டம்’

பெருந்தோட்டங்களின் நிர்வாகத்தின்கீழுள்ள நிலங்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போது தேயிலை ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

” 75 வீத நிலப்பரப்பு பெருந்தோட்ட கம்பனிகள் வசமே உள்ளன. 25 வீதம்தான் சிறுதோட்ட உரிமையாளர்களிடம் இருக்கின்றது. ஆனால் ஏற்றுமதியில் சிறுதோட்ட உரிமையாளர்களின் பங்களிப்பு 75 வீதமாகவும், பெருந்தோட்டக் கம்பனிகளின் பங்களிப்பு 25 வீதமாகவும் இருக்கின்றது.

எனவே, தேயிலை ஏற்றுமதி அதிகரிக்கப்படவேண்டுமானால் பெருந்தோட்டங்களின்கீழ் இருக்கின்ற நிலங்கள், தோட்டத்தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும். அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக உள்வாங்க வேண்டும். இன்று வெளியார் உற்பத்தி என்ற போர்வையில் சில செயற்பாடுகள் இடம்பெற்றாலும் அவை தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கும் வகையிலும் அடிமை சாசன முறையாகவுமே இருக்கின்றன.

தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிலத்தை வழங்கிவிட்டு, தாங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு கொழுந்தை கேட்கின்றனர். இதனால் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு. எனவே, இது விடயத்தில் அரசாங்கம் நேரடியாக தலையிடவேண்டும். நிலங்களை பகிர்ந்தளித்து தோட்டத் தொழிலாளர்களை பங்காளிகளாக்கவேண்டும்.  ஏனெனில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் காணி குத்தகைக்குதான் வழங்கப்பட்டுள்ளது. அப்போது தேயிலை பயிர்செய்கை கொடிகட்டி பறக்கும். தொழிலாளர்களும் கிராமவாசிகளாக, சிறுதோட்ட உரிமையாளர்களாக மாறுவார்கள். இதனை அமைச்சர் செய்வார் என நம்புகின்றோம்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாகவே ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும்.” – என்றார்.

 

 

கொழும்பிலிருந்து கலஹா வந்த இளைஞனுக்கு கொரோனா!

கொழும்பிலிருந்து கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை, யோகலெட்சுமி தோட்டத்துக்கு வருகைதந்திருந்த நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, மெலிபன் வீதியிலேயே இவர் தொழில் புரிந்துள்ளார். இவருடன் தொழில்புரிந்த நிலையில் பொகவந்தலாவை வந்த இருவருக்கு கடந்த 16 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இது பற்றி பொகவந்தலாவ சுகாதார பிரிவினரால், தொழுவ சுகாதார அதிகாரிகளுக்கு 17 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து யோகலெட்சுமி தோட்டத்துக்கு வந்த 25 வயது இளைஞன் தனிமைப்படுத்தப்பட்டார். அவரிடம் கடந்த 25 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (26) வெளியான நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

‘குழந்தைகளுக்கான படத்தை ஜனவரியில் வெளியிட திட்டம்’

குழந்தைகளை நல்வழியில் நடத்திசெல்வது ஒரு சவால் என்ற கருத்தை எடுத்துரைக்கும் வகையில் குழந்தைகளுக்கான படமொன்று வெளிவரவுள்ளது.

“ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி…” என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளின் கருத்தை அடிப்படையாக வைத்து, ‘தகவி’ படத்தை உருவாக்கி வருகின்றோம் என்று டைரக்டர் சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

“குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அவர்களை நல்வழியில் நடத்தி செல்வது ஒரு சவால் என்ற கருத்தை சொல்லும் குழந்தைகளுக்கான படம், இது” என்றும் அவர் கூறினார்.

எஸ்.நவீன்குமார் தயாரிக்கும் இந்த படத்தில், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனுடன் ராகவ், ஜெய் போஸ் ஆகிய இருவரும் கதாநாயகன்களாக நடித்துள்ளனர்.

பயில்வான் ரங்கநாதன், அஜய் ரத்னம், வையாபுரி, சாப்ளின் பாலு மற்றும் பல குழந்தைகள் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர். கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் இசையமைக்கிறார்.

சேலம், ஏற்காடு, விநாயகம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தை ஜனவரி மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தனிமைப்படுத்தல் நிலையத்துக்குசென்ற பஸ் விபத்து – 17 பேர் காயம்!

ஓமான் நாட்டிலிருந்து இலங்கை திரும்பிய 25 பயணிகளை யாழ். விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு, ஏற்றிவந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.

கிளிநொச்சி பளை – ஆனைவிழுந்தான் பகுதியிலேயே இன்று காலை 9.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்துள்ள 3 பேர் உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். ஏனையோர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்விய 254 பேர் தனிமைப்படுத்தலுக்காக விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு 11 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

‘அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபா வேண்டும்’

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று (27) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அரசாங்கத்தால் கூறப்பட்டது. தற்போது 2021 ஜனவரி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலாளிமார் சம்மேளனம் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டுவருகின்றது.

எனவே, கடந்த காலங்களைபோல் ஏமாற்றாமல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த கொடுப்பனவு நிச்சயம் வழங்கப்படவேண்டும். அதுவும் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். ” – என்றும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.

மத்திய மாகாணத்தில் 377 பேருக்கு கொரோனா தொற்று!

மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது என்று மாகாண சுகாதார காரியாலயம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் 177 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில 100 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 100 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது என  மத்திய மாகாண சுகாதார அத்தியட்சகர் நிகால் விரசுரிய தெரிவித்தார். 

” முகக்கவசம் அணியாமல் யாரும் வெளியில் செல்லவேண்டாம். சமூகஇடைவெளியை பின்பற்றுதல், கைகளை முறையாக கழுவுதல் உட்பட சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றும் அவர் கூறினார்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

கலஹா – வீசந்திரமலை பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா – வீசந்திரமலை பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

33 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அவரை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கடந்த 9 ஆம் திகதி கலஹா, வீசந்திரமலை பகுதிக்கு வந்த இளைஞர் ஒருவருக்கு 13 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கடந்த 25 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் நேற்று (26) வெளியாகின.

இதில் குறித்த நபரின் சகோதரிக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

‘750 ஐ தாண்டியது சிறைச்சாலை கொத்தணி’

கொரோனா வைரஸ் தாக்கத்தின் சிறைச்சாலை கொத்தணிமூலம் நேற்றுவரை 760 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. கைதிகள் 713 பேருக்கும், சிறைச்சாலை அதிகாரிகள் 47 பேருக்குமே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.

அதேவேளை, பொலிஸ் கொத்தணியும் ஆயிரத்து 200 ஐ தாண்டியுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு முதலிடம்!

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தல் பட்டியலில் பேராதனை பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

பல்கலைக்கழகங்களை அவற்றின் தர நிர்ணய நியமங்களின் அடிப்படையில் வருடாந்தம்  மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலிலேயே பேராதனை பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

2021 ஆண்டுக்கான பல்கலைக்கழகத் தரப்படுத்தல் வரிசையில் பேராதனை பல்கலைக்கழகம் முதலாவது இடத்தையும், கொழும்பு பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளதோடு, மொரட்டுவ பல்கலைக்கழகம், ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியன முறையே நான்காம், ஐந்தாம் இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளன.

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, போதனை சார் வள ஆளணியினரின் எண்ணிக்கை, கற்பிக்கப்படும் கற்கை நெறிகள், ஆராய்சிக் கட்டுரைகளின் சர்வதேச சமர்ப்பணம் போன்ற பல அளவு கோல்களின் அடிப்படையிலேயே இந்தத் தரப்படுத்தல் தீர்மானிக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தல் வரிசையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நான்காம் இடத்திலும், மொரட்டுவ பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகளாவிய  ரீதியில் நாடுகளினதும், பல்கலைக்கழகங்களினதும் வரிசைப்படுத்தலை https://www.topuniversities.com/university-rankings/asian-university-rankings/2021 என்ற இணையத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.-

‘இன்றைய போட்டியில் ‘யாழ்ப்பாணம் மாலிங்க’ பங்கேற்பு!

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ், காலி கிளேடியட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

அம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.

Jaffna Stallions அணிக்கு திஸர பெரேரா தலைமை தாங்குகின்றார்.Galle Gladiators அணியின் தலைவராக சயிட் அப்ரிடி செயற்படுவார்.

இன்றைய போட்டியில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியில், வளர்ந்துவரும் வேகப்பந்து வீச்சாளர் செபாஸ்டியம்பிள்ளை விஜயராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இணையத்தில் வைரலாக பரவிய காணொளி, யார் இந்த மாலிங்கவை போன்று பந்து வீசுபவர் என்பது தான். பின்னர் இவர் செபாஸ்டியம்பிள்ளை விஜயராஜ் என அடையாளங் காணப்பட்டார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...