Home Blog Page 3764

‘நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 89 பேருக்கு கொரோனா’ – 25 பேர் தீபாவளிக்கு வந்தவர்கள்!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்றுவரை 89 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 25 பேர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்கள் எனவும் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க இன்று (24.11.2020) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 2 ஆயிரத்து 442 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் 89 தொற்றாளர்கள் நேற்றுவரை அடையாளம் காணப்பட்டனர். இதில் 28 பேர் கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து வந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு உட்பட கொரோனா வைரஸ் வேகமாக பரவும் பகுதிகளில் இருந்து வெளியிடங்களுக்கு வரவேண்டாம் என தீபாவளி பண்டிகைக்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டது. தடுப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி வருகையை கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது. எனினும், அதற்கு முன்பாக வந்தவர்களிடம் தற்போது பரிசோதனை நடத்தப்பட்டுவருகின்றன.

அதேவேளை, கொழும்பில் இருந்து தற்போதும் தோட்டப்பகுதிகளுக்கு மக்கள் வருகின்றனர்.  அவ்வாறு வருபவர்களிடம் கலுகல்ல பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் வைத்தே பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெறும் நடவடிக்கை சனிக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. சனிக்கிழமை 50 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டன. மூவருக்கு தொற்று உறுதியானது.இது நூற்றுக்கு 3 சதவீதமாகும்.

அதேபோல கண்டி, நுவரெலியா வீதியில் எல்பொட பகுதியில் உள்ள சோதனைச்சாவடியிலும் இன்று முதல் இவ்வாறு பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும். இதற்காக விடேச குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தோட்டப்பகுதிகளுக்கு வைரஸ் பரவுவதைக்கட்டுப்படுத்தவே நாம் இவ்வாறு செயற்படுகின்றோம். மக்களும் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றவேண்டும்.” – என்றார்

க.கிசாந்தன்

தெல்தோட்டை குறுப் பகுதியில் கொரோனா தொற்றாளர்!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை குறுப் பகுதியில் கொரேனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் நேற்று (23) அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து 25 வயதுடைய குறித்த நபர் பொக்கொல்லயிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமும் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளன.

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் தொழில் செய்த அவர், கடந்த 11 ஆம் திகதி ஊருக்கு வந்துள்ளார். கொழும்பில் இருந்து வந்தவர் என்பதால் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டார். 20 ஆம் திகதி அவரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகள் நேற்று (23) வெளியான நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருதானையிலிருந்து தெல்தோட்டை வந்தவருக்கு கொரோனா!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை பல்லேகம பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

54 வயதுடைய குறித்த நபர் பொக்கொல்லயிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமும் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளன.

கொழும்பு, மருதானை பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் இவர் கடந்த 10 ஆம் திகதி பல்லேகம பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதனையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். அவரிடம் கடந்த 20 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. நேற்று (23) பிரிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்புரிய சிறந்த இடங்களின் பட்டியலில் எயார்டெல்

இலங்கையிலுள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான எயார்டெல் லங்காவை Great Place to Work நிறுவனம் நான்காவது தடவையாக இலங்கையில் சிறந்த தொழில்புரியும் 40 இடங்களுக்குள் பட்டியலிட்டுள்ளது.

இந்த மதிப்பீடு குறித்து கருத்து தெரிவித்த எயார்டெல் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷீஷ் சந்திரா, ‘இறுதியில், கலாச்சாரத்திற்கு உயிர் கொடுப்பதும் அந்த கலாச்சாரத்தை பெருமைக்கு வழிவகுப்பதும் மக்கள் தான். ஆகவே, எமது இந்த தொடர்ச்சியான வெற்றிக்கு காரணம், எமது ஆர்வமுள்ள வலுவான அணிகளின் தயாரிப்புக்கள், அவர்களது செயற்பாடுகள், கூட்டிணைந்து அவர்கள் உருவாக்கும் தொடர்புகளே ஆகும்.’ என தெரிவித்தார்.

விசேடமாக கொவிட்-19 தொற்றுநோய் பரவும் அபாயத்துடன், வர்த்தக ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நிறுவனத்திடமுள்ள தொழில்நுட்ப மற்றும் ஒழுங்கமைப்புக்களில் உள்ள துரிதத் தன்மையை பயன்படுத்தி ‘புதிய இயல்பு’ நிலைமைக்கு ஏற்ற விதத்தில் நடவடிக்கைகளை மீளமைத்துக் கொள்ளும் சவால்களை ஊழியர்கள் பொறுப்பேற்பதனால் எயார்டெல்லின் நடவடிக்கைகள் துரிதமாகவுள்ளது. இந்த காலத்திற்கு ஏற்றபடி மாற்றமடைந்ததனால் எவ்வித தடைகளும் இன்றி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் முக்கிய வேலையை செய்து முடித்தது மட்டுமன்றி தொழில்புரியும் இடங்களில் பல்வேறு தீர்வுகளுக்காகவும் வசதிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒன்லைன் தளங்களை நோக்கிய உள்-அலுவலக தொடர்புகளின் மாற்றம் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மனிதவள தீர்வுகள் ஆகியவை இதில் அடங்கும். ஆட்சேர்ப்பு முதல் டிஜிட்டல் on-bording, வேலை ஈடுபாடு, தகவல் தொடர்பு, திறன் மேம்பாட்டுத் திட்;டங்கள் வரை எயார்டெல் அதன் தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை எவ்வித இடையூறும் இல்லாமல் மற்றும் திறமையான பணி அனுபவத்தை எளிதாக்குகிறது.

அத்துடன், Great Place to Work மதிப்பீட்டின் மூலம் எயார்டெல் நிறுவனம் ஒரு சிறந்த இடத்தில் பட்டியலிடப்பட்டதன் மூலம் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தி படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கங்களுக்கு ஊக்கம் அளித்து அதனை மேம்படுத்த ஏற்ற தொழில்புரியும் சூழலை உருவாக்குவதற்கு அந்த நிறுவனம் காட்டும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு இதன்மூலம் பிரதிபலிக்கிறது.

சாதி, மதம், பாலின பேதம் பாராமல் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து ஒரே சமமாக கலாச்சாரத்தை மேம்படுத்துவதை எயார்டெல்லினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் சேவை செய்யக் கூடிய சிறந்த தொழில்புரியும் இடங்களுக்கான ஆய்வுகள் 2019இன் ஆரம்ப வேலைத்திட்டத்தில் இலங்கையில் பெண்கள் தொழில்புரியக்கூடிய சிறந்த 10 நிறுவனங்கள் பட்டியலிலும் எயார்டெல் லங்கா நிறுவனம் இடம்பிடித்திருந்தமை விசேட அம்சமாகும்.

விசேட தேவையுடைய நபர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக எயார்டெல் லங்கா நிறுவனம் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் மிகவும் நெருக்கமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் அந்த பயிற்சியாளர்களின் விசேட நிபுணத்துவத்தின் அடிப்படையில் நிறுவனத்திற்குள் அவர்களது பயிற்சி கால எல்லையை நீடிப்பதற்கும் நிறுவனத்திற்குள் நிரந்தர தொழில்வாய்ப்புக்களுக்கு இணைத்துக் கொள்ளவும் வாய்ப்பளித்துள்ளது. மேலும் அனைத்து பணியாளர் சலுகைகளும் மூன்றாம் தரப்பு ஊழியர்களுக்கு நீடிக்கப்படுகின்றன, இதன்மூலம் நிறுவனத்திற்குள் தனிநபரின் தனிப்பட்ட அர்ப்பணிப்பை மேம்படுத்தி எயார்டெல் நிறுவனம் விசேட தொழில்புரியும் இடமாக மாற்றியுள்ளது.

வருடம் தோறும் சுயாதீன கண்காணிப்புக் குழுவொன்றின் மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் பின்னர் Great Place to Work நிறுவனத்தினால் இந்த பட்டியல்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

Great Place to Work, நிறுவனத்தின் தலைமை காரியாலயம் அமெரிக்க ஐக்கிய இராஜ்ஜியத்தில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் சிறந்த நம்பிக்கை மற்றும் சிறந்த செயற்பாட்டுத் திறன் கொண்ட தொழில்புரியும் இடங்களின் கலாச்சாரத்தை மதிப்பீடு செய்வதற்காக உலகளாவிய ரீதியில் தலைமைத்துவம் வகித்து வருகிறது. விசேடமாக தொழில் புரியும் இடங்களின் குறிகாட்டி மற்றும் பணிபுரியும் இடங்களின் விமர்சனங்கள் உள்ளிட்ட உரிமையாளர் மதிப்பீட்;டு கருவிகள், ஆலோசனைச் சேவைகள் மற்றும் சான்றிதழ் அளிக்கும் வேலைத் திட்டங்கள் மூலம் Great Place to Workஇனால் நிலையான மற்றும் புகழ்பெற்ற பணியிட கலாச்சாரங்களின் முன்னுதாரணங்கள், மாதிரிகள் மற்றும் பிரத்தியேகங்களை வழங்குகின்றது. இது இலங்கை உட்பட ஐந்து கண்டங்களில் 57க்கும் மேற்பட்ட நாடுகளில் வர்த்தக நடவடிக்கைகள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு நிர்வாக அளவிலான ஆலோசனை மற்றும் கலாச்சார ஆலோசனை சேவைகளை இது வழங்குகின்றது.

பாரதி எயார்டெல் லங்கா நிறுவனம் தொடர்பாக:

2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது.

‘வெட்டுப்புள்ளியால் மாணவர்களுக்கு அநீதி’ – நுவரெலியாவில் போராட்டம்!

பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில் இதன் மூலம் மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

வெட்டுப் புள்ளிகளை நிரணயிக்கின்ற பொழுது உரிய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி போராட்டம் ஒன்றை பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பு நுவரெலியாவில் இன்று (24.11.2020) ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் இன்று (24.11.2020) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

” இறுதியாக நடைபெற்ற க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் அண்மையில் பழ்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் வெட்டுப் புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டு அவை வெளியிடப்பட்டுள்ளன. இந்த வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையானது புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாகவுமே இரண்டு முறைகளில் நடைபெற்றது.இந்த அடிப்படையில் வெட்டுப்புள்ளிகளை நிர்ணயிக்கின்ற பொழுது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை.

இவ்வாறான ஒரு நிலைமை 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொழுது அந்த சந்தர்ப்பத்தில் சரியான முறையை கையாண்டு அதற்கான தீர்வு சரியான முறையில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இம்முறை அந்த முறை கடைபிடிக்கப்படவில்லை  அதிகாரிகள் தங்களுக்கு என்ன தோன்றியதோ அதனையே செய்திருக்கின்றார்கள்.இதனால் பாதிக்கப்பட்டிருப்பது எங்களுடைய மாணவர்கள்.

இதன் காரணமாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு பழ்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.உதாரணமாக ஏ 2 பி பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு பழிகலைக்கழகம் செல்ல முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களை ஒன்லைன் மூலமாக பதிவு செய்யுமாறு கேட்டிருக்கின்றார்கள்.அனைவருக்கும் அந்த வசதி இருக்கின்றதா?என்பது ஒரு கேள்விக்குறியே.இதன் காரணமாக இன்று மாணவர்கள் பெரும் மன உலைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள்.மாணவர்கள் மாத்திரமன்றி அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றார்கள்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாவதற்கான நிலை இருக்கின்றது.இந்த விடயத்தை நாங்கள் இன்று நுவரெலியாவில் போராட்டம் செய்தது போல நாடு முழுவதும் செய்வதற்கும் தீர்மானித்திருக்கின்றோம்.இதற்கு உரிய பதிலை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நுவரெலியாவில் மதுபான விற்பனை நிலையமொன்றுக்கு பூட்டு!

நுவரெலியா நகர மத்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றை நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினர் இன்று (24.11.2020) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
குறித்த மதுபான விற்பனை நிலையத்திற்கு கண்டியை சேரந்த ஒருவர் வருகை தந்து அங்கிருந்து மதுபானம் அருந்தி சென்றுள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இந்த மதுபான விற்பனை நிலையம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.குறித்த மதுபான விற்பனை நிலையம் நுவரெலியா நகரில் பிரதான வீதியில் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
நகரில் இயங்குகின்ற அனைத்து விற்பனை நிலையங்களிலும் வாடிக்கையாளர்களின் விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.ஏற்கனவே குறித்த அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும் ஒரு சில விற்பனை நிலையங்களில் தகவல்கள் பேனப்படுவதில்லை என அறிய முடிகின்றது.
தகவல்களை முறையாக பேனாத வியாபார நிலையங்கள் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.மேலும் சுற்றுலா விடுதிகளுக்கு அவதானம் நிறைந்த பகுதிகளில் இருந்து வருகை தருகின்றவர்களை எந்த காரணம் கொணடும் அவர்களுக்கு தங்க வைக்க இடம் கொடுக்க வேண்டாம் எனவும் சுகாதார பிரிவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
இது தொடர்பாக சுற்றுலா விடுதி முகாமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்
எங்களிடம் வருகின்ற வாடிக்கையாளர்களின் தேசிய அடையாள அட்டையை கருத்தில் கொண்டே அவர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் அவதானம் நிறைந்த அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வருகை தருகின்றார்களா? என்பதை அறிந்து கொள்ள முடியாத ஒரு நிலைமை இருக்கின்றது. ஏனெனில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது அவதானம் நிறைந்த பகுதிகளில் இருந்து வருகை தந்தாலும் அநேகமானவர்களுடைய தேசிய அடையாள அட்டையில் இருப்பது வேறு பகுதிகளில் இருக்கின்ற விலாசமாகும்.
ஊதாரணமாக நுவரெலியா சேர்ந்த ஒருவர் கொழும்பில் சென்று வேலை செய்கின்ற பொழுது அவருடைய தேசிய அடையாள அட்டையில் நுவரெலியா விலாசமே இருக்கும் எனவே அவருக்கு தங்குமிட வசதிகளையோ அல்லது வேறு தேவைகளையோ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய கட்டாயத்திலேயே நாங்கள் இருக்கின்றோம்.
எனவே இது ஒரு சிக்கலான விடயமாகவே இருக்கின்றது எங்களுக்கு எங்களுடைய வியாபாரத்தை முன்னெடுத்து செல்வதற்கு.இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பது தொடர்பாக சுகாதார பிரிவினரே எங்களுக்கு உரிய அறிவித்தலை வழங்க வேண்டும்.எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியாவை பொறுத்த அளவில் சுகாதார துறை முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்த நிலையிலேயே இருக்கின்றது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் தொழிலை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவர்களுக்கான நிவாரணமும் வழங்கப்படுவதில்லை.இவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கின்றது.இவர்;கள் தொடர்பாக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தாழமுக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

வங்காள விரிகுடாவின் தெற்மேற்குப் பகுதியில் உருவான பவன தாழமுக்கம் பற்றி வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்தத் தாழமுக்கம், அடுத்த 24 மணித்தியாலங்களில் புயலாக மாறலாம். அது வடமேற்குத் திசையில் நகர்ந்து, தீவிர புயலாக தமிழ் நாட்டை தாக்கலாம் என அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வடக்கு கிழக்கு கடல் சடுதியாக கொந்தளிக்கலாம். காற்றின் வேகம் திடீரென மணிக்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.

புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். அ

டுத்து வரும் நாட்களில் இரண்டு முதல் மூன்று மீற்றர் வரை உயரமான அலைகள் எழுவதுடன், மன்னாரில் இருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரங்களில் கடல் அலைகள் கரையைத் தாண்டி தரைக்குள் வரும் சாத்தியமும் உள்ளதென திணைக்களத்தின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தில் இருந்து கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும், இந்தக் கடற்பரப்புக்களில் இருப்பவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

லுனுகலை ஶ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் 20 மாணவர்கள் சிறப்பு சித்தி

பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட லுனுகலை ஶ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் அண்மையில் வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி 20 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து கல்லூரிக்கு பெருமைத் தேடி தந்துள்ளனர்.

இவர்களில் எம்.ரில்வான் 191, ஜி.மதுஷானி 187, ஏ. பிரனுக்ஸா 182, ஜே.டியானி 177, எஸ். தருஷ்னவி 176, எஸ். அபிஷேக் 175, எம். ஜினுஷ்கா 175, வை.நேத்ரன் 174, டி.வர்ஷாலினி 171, எஸ். கஜிந்திரன் 170, எஸ். கபிஹாஷினி 169, எம். கேஷவர்தினி 168, சீ.ஜானி 167, ஏ.டிலானி 167, கே.பிதுர்ஷன் 165,

எம். ஹரீஷா 165, கே.சுஜித்ரா 162, ஜே.மரியஜென்சிகா 159, ஜே.சமில் ரோய் 158,ஆர்.பிரவினேஷ் 174 என புள்ளிகளைப் பெற்று பரீட்சையில் சித்தியடைந்துள்ளதோடு, பரீட்சைக்கு தோற்றிய 40 மாணவர்களுள் 38 மாணவர்கள் 70 இற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்களையும் அதிபர் டி.இராஜரட்ணம், உப அதிபர். எஸ். பசுபதி, வகுப்பாசிரியை திருமதி.வி. ஶ்ரீகாந்தி மற்றும் உதவி ஆசிரியை திருமதி.எம். ரேகா ஆகியோரை படங்களில் காணலாம்.

பின்வாங்கினார் ட்ரம்ப்! ஜோ பைடனிடம் ஆட்சியை ஒப்படைக்க பச்சைக்கொடி!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு டொனல்டு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் 2021 ஜனவரி மாதம் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், தற்போதைய அதிபரான டொனால்டி டிரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக அவர் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். மேலும், ஆட்சி அதிகாரத்தை பைடனுக்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையையும் டிரம்ப் தாமதப்படுத்தி வந்தார். இதனால், பல தரப்பில் இருந்தும் டிரம்ப் மீது விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்தது.

இந்நிலையில், அமெரிக்க ஆட்சி அதிகாரத்தை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு முறையாக மாற்றம் செய்வதற்கும் தற்போதைய அதிபர் டிரம்ப் இன்று சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதிகார மாற்றத்தை மேற்கொள்ளும் ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதாக தெரிவித்திருந்தது. டிரம்பால் நியமிக்க்கப்பட்ட இதன் நிர்வாகிகள் இதற்கு முன்பு வரை பைடனின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தனர்.

அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை தற்போது ஏற்றுகொண்டுள்ள ஆட்சி மாற்ற அமைப்பு டிரம்ப்பிடமிருந்து அதிகார அமைப்புகளை பைடனுக்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையில்தற்போது இறங்கியுள்ளது. இந்த தகவலை ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பின் தலைவர் எமிலி மெர்பி உறுதிபடுத்தியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகளின் நிர்வாக பொறுப்புகளை பைடனிடம் ஒப்படைக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. அதிகார மாற்ற நடைமுறைகளை ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு மேற்கொள்ள தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு எமில் மெர்பி மற்றும் அவரது அமைப்பினர் அதிகார மாற்றத்திற்கான தேவையான முதல்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். எனது குழுவையும் அதிகார மாற்றத்திற்கான தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்’ என்றார்.

வெளிநாட்டு கள்ள நோட்டுகளுடன் கந்தளாயில் இருவர் கைது!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நூறு டொலர் பெறுமதியுடைய 372 அமெரிக்க கள்ள நோட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றிரவு (23) கந்தளாய் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் குருணாகல் பகுதிகளைச் சேர்ந்த 48 , 49 வயதுடைய இருவரே கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அமெரிக்கா டொலர்கள் இலங்கை பெறுமதியில் சுமார் 68 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாவாகும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...