Home Blog Page 3765

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 11 பேருக்கு கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (23) மாத்திரம் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மஸ்கெலியா மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் கொழும்பில் இருந்து சென்றவர்களுக்கும், அவர்களுடன் பழகியவர்களுக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் நேற்று 335 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வெளிநாட்டில் இருந்து வந்த இருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கொழும்பு – 189

கம்பஹா – 47

நுவரெலியா – 11

புத்தளம் – 11

கண்டி – 08

பொலிஸ் – 33

LPL தொடருக்கான நடுவர்கள் குழாம் அறிவிப்பு!

லங்கா ப்ரீமியர் லீக் ரி 20 கிரிக்கெட் தொடரின் போட்டி மத்தியஸ்தர், போட்டி நடுவர்கள் குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபையினால்  அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) போட்டி மத்தியதஸ்தர் ரஞ்சன் மடுகல்ல மற்றும் போட்டி நடுவர் குமார் தர்மசேன ஆகியோர், எல்பிஎல் தொடர் போட்டி இந்த குழாத்தில் இடம்பிடித்திருக்கின்றனர்.
எல்பிஎல் தொடரின் போட்டி மத்தியஸ்தர் குழாத்தில் ரஞ்சன் மடுகல்ல தவிர கிரேம் லப்ரோய், வென்டல் லப்ரோய் மற்றும் மனோஜ் மெண்டிஸ் ஆகியோரும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் இந்த நடுவர் குழாத்தில் குமார் தர்மசேனவுடன் இணைந்து எல்பிஎல் போட்டிகளுக்காக ருச்சிர பல்லியகுருகே, ரவிந்திர விமலசிறி, லின்டன் ஹன்னிபல், ப்ரகித் ரம்புக்வெல்ல ஆகிய சர்வதேச போட்டி நடுவர்களும் கடமையாற்றவிருக்கின்றனர்.
இவர்கள் தவிர இலங்கையின் முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களாக செயற்படுகின்ற தீபால் குணவர்தன, ஹேமந்த போட்ஜூ, கீர்த்தி பண்டார, அசங்க ஜயசூரிய, ரொஹித்த கொட்டஹச்சி மற்றும் ரவிந்திர கொட்டஹச்சி ஆகியோருக்கும் எல்பிஎல் போட்டிகளின் போது பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
எல்பிஎல் தொடருக்கான போட்டி நடுவர்களில் ஒருவராக இருக்கும் குமார் தர்மசேன 2012ஆம், 2018ஆம் ஆண்டுகளில் சிறந்த நடுவருக்காக ஐ.சி.சி. வழங்கும் டேவிட் செப்பர்ட் விருதினை வென்றிருப்பதோடு 2015ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களின் இறுதிப் போட்டிகளில் கள நடுவராக செயற்பட்ட அனுபவத்தினையும் கொண்டிருக்கின்றார்.
ரஞ்சன் மடுகல்ல, மொத்தமாக ஐ.சி.சி. இன் ஏழு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களில் போட்டி மத்தியஸ்தராக செயற்பட்ட அனுபவத்தினைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 15 நாட்கள் கொண்ட கிரிக்கெட் திருவிழாவாக இருக்கப் போகும் எல்பிஎல் தொடர் இம்மாதம் 26ஆம் திகதி ஹம்பந்தோட்டையில் ஆரம்பமாகின்றது.

பலியெடுக்கும் கொரோனா 3ஆவது அலை! 32 நாட்களில் 77 பேர் உயரிழப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் கடந்துள்ள 32 நாட்களில் மாத்திரம் 77 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் 22 வரையான சுமார் 8 மாத காலப்பகுதியில் கொரோனாவால் 13 பேரே உயிரிழந்திருந்தனர்.31 ஆம் திகதியாகும்போது மரண எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.

எனினும் கடந்துள்ள 23 நாட்களில் மாத்திரம் 70 பேர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் கொரோனா மரணங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்துள்ள 22 நாட்களில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா 3 ஆவது அலைமூலம் ( மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) நேற்று வரை 16 ஆயிரத்து 974 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இதில் 3 ஆயிரத்து 59 பேர் மினுவாங்கொட கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள்.  பேலியகொட கொத்தணி பரவல் 13 ஆயிரத்து 900 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 691 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை  இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று நள்ளிரவுவரை 20 ஆயிரத்து 508 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இவர்களில் 14  ஆயிரத்து 497 பேர் குணமடைந்துள்ளனர். 90 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘கொரோனா’ மேலும் மூவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 14, கொழும்பு 15 மற்றும் ஏனைய பகுதியை சேர்ந்த இரு பெண்களும், ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் 60 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.

 

இன்று மாத்திரம் 335 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 131 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று இதுவரை 335 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 508 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். 14 ஆயிரத்து 497 பேர் குணமடைந்துள்ளனர்.

நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மெலிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கியது.

உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தவசிக்கு இலவச சிகிச்சை அளித்து பேருதவி புரிந்தார் திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன்.

அதன்பிறகு, நடிகர்கள் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிடோர் உதவினார்கள். அவர்களையடுத்து, நடிகர் சிம்புவும் ஒரு லட்சம் நிதியுதவி அளித்தார்கள்.

இந்நிலையிலேயே சிகிச்சைபலனின்றி நடிகர் தவசி காலமானார்.  உயிரிழந்தார். அவருக்கு வயது 60.

நான் கடவுள், ஜில்லா, வீரம், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் தவசி. கடந்த 2013 ஆம் ஆண்டு சிவக்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் அப்பாவாக தவசியின் கருப்பன் குசும்புக்காரன் காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ்மா அதிபராகிறார் சீ.டி.விக்ரமரத்ன!

ஒரு வருடத்துக்கு மேலாக பதில் பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய சீ.டி.விக்ரமரத்ன இலங்கையில் புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படவுள்ளார்.

இவரின் பெயரை நாடாளுமன்ற பேரவையின் அங்கீகாரத்துக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுப்பிவைத்திருந்த நிலையில் அதற்கு இன்று அனுமதி கிடைத்துள்ளது.

நாடாளுமன்ற பேரவை இன்று கூடியது. இதன்போதே ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த பூஜித் ஜயசுந்தர, ஈஸ்டர் தற்கொலை குண்டுதாக்குதலையடுத்து கட்டாய விடுமுறையில் அனுப்பட்டார். அதன்பின்னர் 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி முதல் இற்றைவரை சீ.டி. விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக செயற்பட்டுவருகின்றார்.

இந்நிலையிலேயே அவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படவுள்ளார்.

கொழும்பிலிருந்து பசறை வந்தவருக்கு கொரோனா!

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஹுல்வத்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் இன்று (23) அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு, கொட்டாவ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் வேலைசெய்த இவர், தனது சொந்த ஊரான பசறை கோணக்கலை புஹுல்வத்தவுக்கு அண்மையில் வந்துள்ளார்.

கொழும்பில் இருந்து வந்ததால் அவர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டார். அதன்பின்னர் அவரிடம் பிரிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பிரிஆர் பரிசோதனை முடிவு இன்று வெளியானது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தயதலாவ காகொல்ல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ஆர். தோல்வி!

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வியடைந்தார். தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்று உள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல் நடைபெற்றது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கியுள்ளார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்கு எண்ணும் பணி சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் இன்று நடந்தது. தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் முரளி, தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வியடைந்தார். தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்று உள்ளார்.

முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.ராஜேந்தர் 337 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

‘ஆரம்பத்திலேயே கோட்டைவிட்ட ஹப்ரிடி’

இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இன்று (23) கொழும்பு வரவிருந்த சயிட் ஹப்ரிடி, விமானத்தை தவறவிட்டுள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ள ஹப்ரிடி, வெகுவிரைவில் இலங்கை வந்து எல்.பி.எல். போட்டிகளில் பங்கேற்பேன் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரராக விளங்கிய ஹப்ரிடி, எல்.பி.எல். தொடரில் Galle Gladiators அணியில் இடம்பிடித்துள்ளார். மாலிங்க பங்கேற்காததால் ஹப்ரிடியே தலைவராக செயற்படுவார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...