Home Blog Page 4032

‘எனக்கு எதிரான சதிவேலை நடக்கிறது’ – ஏ.ஆர். ரஹ்மான் கவலை

பாலிவுட்டில் என்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள  ‘தில் பெசாரா’ திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:-

பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்தி செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்.

‘தில பெசாரா’ படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், ‘பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள்.

அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்’ என்று கூறினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று

பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன்.இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

கொட்டகலையில் ஹெரோயின் விற்பனை – வீடு சுற்றிவளைப்பு! இருவர் கைது!!

கொட்டகலை நகரில் மிகவும் சூட்சுமமான முறையில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டுவந்த வீட்டை நேற்று சுற்றிவளைத்த பொலிஸார், 240 மில்லிகிராம் ஹெரோயினையும், 15 கிராம் கஞ்சாவையும் மீட்டுள்ளனர்.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் பிரதான சூத்திரதாரி தலைமறைவான நிலையில் அவரது மனைவியும், போதைப்பொருள் வாங்கவந்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டு, பத்தனை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக இவ்வியாபாரம் இடம்பெற்றுவந்துள்ளது எனவும், வீட்டைசூழ நவீனரக கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளே திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

மஹிந்த ஆட்சியில் ‘பொய்’ – நல்லாட்சியிலேயே ‘மெய்’ – ராதா

நல்லாட்சியிலேயே மலையகத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் அதற்கு இடமளிக்கப்படவில்லை. எனவே, நல்லாட்சியில் எதுவும் நடைபெறவில்லை எனக்கூறப்படுவது பொய்யாகும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (27) இடம்பெற்ற மதியம் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

இந்த அரசாங்கத்துக்கு ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கு தற்போது இல்லை. 60 வீதத்தால் அது குறைவடைந்திருப்பதை உணரமுடிகின்றது. இவ்வாறு அரசாங்கத்தின் செல்வாக்கு குறைவடைந்திருப்பதால் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெறும்.

எனவே, மக்கள் சிந்தித்து வாக்குரிமையை பயன்படுத்தவேண்டும். குடும்ப ஆட்சிக்கு வாக்களிப்பதா அல்லது ஜனநாயகத் தலைவனுக்கு வாக்களித்து, ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதா என்பது தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுக்கவேண்டும்.

சஜித் பிரேமதாச என்பவர் ஊழல்அற்ற அதேபோல் நிதானமாக செயற்படக்கூடிய தலைவர் என்பதால் அவர் தலைமையிலான அணிக்கு வாக்களித்து, அதிகூடிய ஆசனங்களை பெறுவதற்கு மக்கள் ஆதரவு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

‘சிறிகொத்தவை கைப்பற்றுவோம்’ என்ற கதையானது ரணில் தரப்புக்கும், சஜித் அணிக்கும் இடையிலான உட்கட்சி விவகாரமாகும். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில்தான் நாம் அங்கம் வகிக்கின்றோம். எனவே, உட்கட்சி விவகாரங்கள் தொடர்பில் நாம் கருத்து வெளியிடமுடியாது. அவர்கள்தான் பேசி முடிவுக்குவரவேண்டும்.

அதேவேளை, எங்களுடைய ஆட்சிகாலத்தில்தான் ஏழு பேர்ச்சஸ் காணியுடன் மக்களுக்கு தனி வீடுகள் வழங்கப்பட்டன. கல்வித்துறை கட்டியழுப்பட்டது. பாடசாலைகள் மேம்படுத்தப்பட்டன. இவை கடந்த ஆட்சியில் நடக்கவில்லை என்பதே மெய். நல்லாட்சியில் நடக்கவில்லை எனக் கூறப்படுவது பொய் .” – என்றார்.

2023வரை ரணிலே ஐ.தே.கவின் தலைவர் – நவீன் திட்டவட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் ரணில் விக்கிரமசிங்க 2023 வரை நீடிப்பார். அதற்கு முன்னர் மாற்றம் வேண்டுமெனில் கட்சி சம்மேளனத்தைக்கூட்டி கட்சி யாப்பின் பிரகாரமே மாற்றங்கள் செய்யப்படவேண்டும் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐ.தே.கவின் தலைமைப்பதவியை ஏற்பதற்கு தயாரென நவீன் திஸாநாயக்க விடுத்திருந்த அறிவிப்பு தொடர்பில் வஜீவ அபேவர்தன கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தார். வஜிரவின் இந்த அணுகுமுறை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நவீன் திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

நுவரெலியாவில் 27.07.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” வஜீர அபேவர்தன எனக்கு எதிராக கடுமையான முறையில் விமர்சனங்கள் எதனையும் முன்வைக்கவில்லை. தனது கருத்தையே அவர் வெளியிட்டிருந்தார். இவ்வாறு கருத்து வெளியிடும் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கின்றது. இதுதான் ஐக்கிய தேசியக்கட்சியிலுள்ள ஜனநாயகப் பண்பாகும்.

அந்தஅடிப்படையிலேயே தலைமைத்துவம் தொடர்பில் நான் கருத்து வெளியிட்டிருந்தேன். அதே உரிமை வஜீர போன்றவர்களுக்கும் இருக்கின்றது.

அத்துடன், பெரும்பான்மையானோரின் விருப்பத்துடன் ஜனநாயகமுறைப்படியே தலைமைத்துவ தேர்வு இடம்பெறவேண்டும் என்ற விடயத்தையும் நான் குறிப்பிட்டிருந்தேன். எனவே, ரணில் விக்கிரமசிங்க விலகும்போது, இரகசிய வாக்கெடுப்புமூலம் தலைவரை தெரிவுசெய்வதே ஏற்புடைய நடவடிக்கையாக அமையும். இதன்போது வஜீரவாலும் போட்டியிடமுடியும்.

நுவரெலியா மாவட்டத்தில் நாம் சிறந்த மட்டத்தில் இருக்கின்றோம். இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவது உறுதி. அந்த எண்ணிக்கையை மூன்றாக அதிகரித்துக்கொள்வதற்கே பாடுபடுகின்றோம். நாடு தழுவிய ரீதியிலும் முன்னர் இருந்ததைவிடவும் பலமாக இருக்கின்றோம்.

2023 ஆம் ஆண்டுவரை தலைமைப்பதவியில் இருப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு 2019 இல்கூடிய எமது கட்சி சம்மேளனம் அனுமதி வழங்கியுள்ளது.  அதில் மாற்றம் செய்யவேண்டுமெனில் சம்மேளனத்தை மீண்டும் கூட்டவேண்டும். சஜித்தையும் பொறுமைகாக்குமாறு கோரினோம். ஆனால், அவர் சூழ்ச்சியில் சிக்கிவிட்டார். ” – என்றார்.

க.கிசாந்தன்

50 அடி பள்ளத்தில் வீழ்ந்தது லொறி – சாரதி படுகாயம்!

ஹட்டனிலிருந்து பொகவந்தலாவை நோக்கி பயணித்த டிப்பர் ரக லொறியொன்று இன்று மாலை 4 மணியளவில்  டின்சின் பகுதியில் வைத்து 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுயாமடைந்துள்ளார்.

அவர் சிகிச்சைக்காக பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகவேகம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த லொறி விபத்துக்குள்ளான காட்சி அவ்வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரீவி கமராவில் பதிவாகியுள்ளது.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

“என்மீதான விசாரணைகள் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே” – ரிஷாட்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தன்னை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா, ஈரற் பெரியகுளத்தில் அமைந்துள்ள, குற்றப் புலனாய்வு திணைக்களக் கிளையில் இன்று (27) இடம்பெற்ற விசாரணையின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

விமல் வீரவன்ச போன்ற இனவாதிகளும் மதவாதிகளும், சஹ்ரானின் தாக்குதலுடன் என்னை தொடர்புபடுத்தி, எப்படியாவது கூண்டிலடைக்க வேண்டுமென சதி செய்து வருகின்றனர்.

கடந்த அரசில், இந்தத் தாக்குதலுடன் என்னை சம்பந்தப்படுத்தி, குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது, தற்போதிருக்கும் பொலிஸ்மா அதிபரே, பொலிஸ் விஷேட குழுவொன்றை நியமித்து, இது தொடர்பில் விசாரிக்குமாறு தனது அதிகாரிகளைப் பணித்திருந்தார்.

இது தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கும் அவகாசம் வழங்கி, பகிரங்க அழைப்பொன்றையும் விடுத்தார். “ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஏதாவது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் பொலிஸில் முறையிடுங்கள்” என்றார். அதுவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஊடாக, ஏழு நாட்கள் வரையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

அதன் பிறகு விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அதுரலியே ரத்ன தேரர், எஸ்.பி.திஸாநாயக்க உட்பட இனவாதிகள் பலர், என் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை கையளித்தனர். அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் விசாரிக்கப்பட்டன. பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இப்போதிருக்கும் அதே பொலிஸ்மா அதிபரே, அன்று எழுத்துமூலம் விசாரணை அறிக்கையை அனுப்பி வைத்தார்.

அந்த அறிக்கையின் பிரகாரம் “ரிஷாட் பதியுதீனுக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடனோ, வேறு எந்த பயங்கரவாத சம்பவத்துடனோ, எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது” என  எழுத்துமூலம் அறிவித்திருந்தார். அது பாராளுமன்றத்தில் அறிக்கையாகவும் வெளிவந்திருக்கின்றது.

அவ்வாறிருந்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்ற இந்த 15 மாத காலத்தின் பின்னர், இப்போது தேர்தல் நெருங்குகின்ற வேளை, என்னை இலக்கு வைத்து விசாரணைக்கு அழைத்தனர். அதன் பின்னர், நான் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு விசாரணைக்கு சென்றபோது, 10 மணித்தியாலங்கள் வரை என்னை அங்கு வைத்திருந்து, நான் முன்னர் பதவி வகித்த அமைச்சு மற்றும் நிறுவனங்கள் தொடர்பிலும், மன்னாரைச் சேர்ந்த அலாவுதீன் மற்றும் அவர் கட்சியுடன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்தும் துருவித்துருவி விசாரித்தனர்.

அவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன். அன்றைய தினம், இரவு எட்டு மணிக்கே என்னை வெளியேற அனுமதித்தனர். அதன் பிறகு இரண்டு தினங்கள் கழித்து, மீண்டும் வருமாறு அழைப்பு விடுத்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் நான் தீவிரமாக ஈடுபட்டிருப்பதால் நாடளாவிய ரீதியில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்க வேண்டியதை தெரிவித்தேன். எனது பிரச்சார நடவடிக்கைகள் இதனால் தடைப்படுகிறதெனக் கூறி, பதினைந்து மாதங்கள் வாளாதிருந்த நீங்கள், தேர்தல் முடியும்வரை பொறுத்திருந்து, அதன் பின்னர் அழைக்குமாறு கோரினேன்.

அதற்கு அவர்கள் இணங்காததினாலேயே, தேர்தல்கள் ஆணையகத்தில் முறையிட்டேன். எனது முறைப்பாட்டை கருத்திலெடுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்களும் கையெழுத்திட்டு, எனது நியாயமான கோரிக்கையை ஏற்று, பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்..

எனினும், அவை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்றனர். அதன் பின்னர், என்னை இன்று வவுனியாவில் விசாரணைக்கு அழைத்தார்கள். கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் தெளிவான பதில் கொடுத்தேன்.

எனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென பொலிஸுக்கு நன்கு தெரியும், மக்களுக்கும் தெரியும். ஏன் முழு நாட்டுக்கே தெரியும். ஏற்கனவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவும், அதனை உறுதிப்படுத்திவிட்டது” இவ்வாறு முன்னாள் அமைச்சர் தெரிவித்தார் என்றார்.

“இதனை நீங்கள் அரசியல் பழிவாங்கல் என்று கருதுகிறீர்களா?” என்ற ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், “நிச்சயமாக இதனை ஒரு அரசியல் பழிவாங்கலாகவே பார்க்கின்றேன்” என்றார்.

“மஹிந்தவுடன் இருந்துவிட்டு மைத்திரிக்கு ஆதரவளித்தது காரணமென கருதுகின்றீர்களா?” என்ற மற்றொரு ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர், “ஆம், அதுவும் ஒரு காரணம்தான். அத்துடன் 52 நாள் சட்டவிரோத அரசாங்கத்துக்கு நான் கைகொடுக்கவில்லை என்பதும் இன்னுமொரு காரணம். இவை எல்லாவற்றையும் சேர்த்துவைத்தே  இந்தத் தண்டனைகள்தரப்படுகின்றன” என்று அவர் கூறினார்.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து ஒரு கோடி பேர் தப்பினர் – 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் பலி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதேவேளை, உலகளவில் ஒரு கோடியே 64 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளது.

‘காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்குரிமையை பயன்படுத்தவும்’

தேர்தல் தினத்தில் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று மொட்டு சின்னத்திற்கு எதிரே புள்ளடியிட்டு தங்களது பெறுமதிமிக்க வாக்கை பயன்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ச பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

குருநாகல் மாவத்தகம பிரசேத்தில் இன்று (2020.07.27) முற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

69 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அவருக்கு ஒத்துழைப்பை வழங்கக்கூடிய பாராளுமன்றமும் அமைச்சரவையும் தேவைப்படுகிறது.

நாடளாவிய ரீதியிலுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம், பாடசாலைகளை நிறுவுதல், வைத்தியசாலைகளை நிறுவுதல் மற்றும் பாரிய அளவிலான அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் பலவற்றை ஆரம்பிப்பதற்கும் ஜனாதிபதியினால் இதுவரையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அந்த திட்டங்களை செயற்படுத்த வேண்டுமாயின் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய பாராளுமன்றமொன்று அவசியம். இது தொடர்பில் கவனம் செலுத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தேர்தல் தினத்தில் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று மொட்டு சின்னத்தின் எதிரே புள்ளடியிட்டு தமது பெறுமதிமிக்க வாக்குகளை பயன்படுத்துமாறு பிரதமர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

‘அடாவடி அரசியலில் ஈடுபடுபவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்’

வன்முறை அரசியல் என்பது ஜனநாயக விரோதச்செயலாகும். அவ்வாறு அடாவடி அரசியலில் ஈடுபடுபவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதுடன் கொள்கை அடிப்படையில் அரசியல் நடத்தும் எம்மை பாராளுமன்றம் அனுப்பிவைக்கவேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவுபெறுவதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தினேஷ்குமாருக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.

இந்நிலையில் மஸ்கெலியா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் மேலும் கூறியதாவது.

“ விகிதாரசார தேர்தல் முறையால் விருப்பு வாக்குகளுக்காக ஒரே அணியைச்சேர்ந்த உறுப்பினர்கள்கூட முட்டிமோதிக்கொள்கின்றனர். பணபலம் படைத்தவர்கள் கோடிகளை வாரிவழங்கி விளம்பரம் செய்கின்றனர். இதனால் கொள்கை அரசியல் என்பது இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. அதற்கு நாம் உயிர் கொடுக்கவேண்டும். கடினமாக இருந்தாலும் அதனை செய்யவேண்டும்.

ஏனெனில் சமூகமாற்றத்துக்கான எமது அரசியல் பயணத்தில் இதுவும் ஒன்று.  தெளிவான கொள்கை இருந்தால் மாத்திரமே இலக்கை அடையமுடியும். அவ்வாறு இல்லாததால்தான் சிலருக்கு சந்தர்ப்பவாத அரசியலை நடத்தவேண்டிய நிலை ஏற்படுகின்றது.தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்புகள் இருக்கவேண்டும் என தேர்தல் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது நடைமுறையில் இல்லை. இதனால்தான் சாராயத்தைக்கூட அன்பளிப்பாக வழங்கி பணபலம் படைத்தவர்கள் வாக்குகளை கொள்ளையடித்துவருகின்றனர்.

இத்தகைய அரசியலானது ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தலாகும். இப்படியானவர்கள் பாராளுமன்றம் சென்றால் நாளை எதனையும் செய்யக்கூடும்.ஆகவேதான் கொள்கைவகுத்து, திட்டங்களை முன்வைத்து நேர்வழியில் பயணிக்கும் எம்மைபோன்றவர்களை மக்கள் சபைக்கு அனுப்பவேண்டும்.எங்களுக்கும் ஒரு வாய்ப்பை தந்து பாருங்கள். அரசியல் என்பது மக்களுக்கானது என்பதை நிச்சயம் நிரூபித்துக்காட்டுவோம்.” – என்றார்.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 2,121 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 15 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,121 ஆக அதிகரித்துள்ளது.

650 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 782 ஆக இருக்கின்றது.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...