Home Blog Page 4033

மஸ்கெலியாவில் ‘மெகா’ கொள்ளை – 9 கடைகள் உடைப்பு!

மஸ்கெலியா நகரிலுள்ள சில வர்த்தக நிறுவனங்கள் இன்று (27) அதிகாலை உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

காய்கறி கடை, உணவகம்  ,பலசரக்கு கடை உட்பட 9 கடைகள் இவ்வாறு உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளன.

சிசிடிவி கெமரா பதிவுகளின்படி திருடன்  முகத்தை முழுமையாக மூடியிருந்ததாகவும்  தனி நபர் ஒருவரே   கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதையும் காணகூடியதாக இருக்கின்றது.

மேலும் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவைம் நகர பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில்  மஸ்கெலிய பொலிஸார்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாமிமலை ஞானராஜ்

‘தோட்டத்தொழிலாளர்கள்மீது இந்த அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கத்துக்கு, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கவேண்டும் என்ற அக்கறை இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ஹிரண்யா ஹேரத் தெரிவித்தார்.

வலப்பனை – ஹெய்போரஸ்ட் தோட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” பெருந்தோட்டக்கைத்தொழில்துறை அமைச்சுப்பதவியை வகித்த நவீன் திஸாநாயக்க, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக எதனையும் செய்யவில்லை. குறைந்தபட்சம் 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்குகூட முன்வரவில்லை.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தாலும் இன்னும் அந்த கொடுப்பனவு கிடைக்கவில்லை. ஏன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஜனாதிபதியிடம் கேட்க விரும்புகின்றேன்.” – என்றார்.

‘ஆக்கப்பூர்வமான அரசியல் பயணத்துக்கு மக்கள் ஆதரவு தொடரும்’ – வேலுகுமார்

பாராளுமன்றம் செயற்பட்ட கடந்த நான்கரை வருடங்களில் விமர்சன அரசியல் நடத்தியவர்களுக்கு மத்தியில் நாம் வினைத்திறன்மிக்க சேவைகளை மக்களுக்காக முன்னெடுத்தோம். எனவே, ஆக்கப்பூர்வமான அந்த அரசியல் பயணத்தை தொடர்வதற்கு கண்டி மாவட்ட மக்கள் இம்முறையும் பேராதரவை வழங்குவார்கள் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டியில் இன்று (27.07.2020) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் வேலுகுமார் மேலும் கூறியவை வருமாறு,

“ தமிழ் முற்போக்கு கூட்டணி ஆளுங்கட்சியின் பங்காளியாக இருந்தபோதிலும் ஒருபோதும் சலுகைகளுக்கு அடிபணிந்து தலையாட்டும் அரசியலை நடத்தியதில்லை. ஆளுங்கட்சிக்குள் இருந்துக்கொண்டே போராடியது. அதன்காரணமாகவே அபிவிருத்தி மற்றும் உரிமை அரசியலை சமாந்தரமாக முன்னெடுக்ககூடியதாக இருந்தது. பல தசாப்தங்களாக செய்துமுடிக்கமுடியாமல்போன திட்டங்களைக்கூட வெற்றிகரமாக முன்னெடுத்து பெருந்தோட்டப்பகுதிகளையும் அரச நிர்வாகப்பொறிமுறைக்குள் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே, 2015 ஆம் ஆண்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம், அவர்கள் எதிர்ப்பார்த்தவற்றை எம்மால் முடிந்தளவு நிறைவேற்றக்கூடியதாக இருந்தது. மேலும் சில திட்டங்களுக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் கிடைத்தால் நிச்சயம் அவற்றையும் செய்துமுடிப்போம். இது மக்களுக்கும் தெரியும். அதனால்தான் எம்மால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களில் பங்கேற்று பேராதரவை வழங்கிவருகின்றனர்.

அதேவேளை, தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற தேர்தல் இதுவாகும். இத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையில் நாம் வெற்றிபெறுவோம் என்பது உறுதி. சிலவேளை, நிலைமை மாறினால்கூட நாம் பாராளுமன்றத்தில் பலமாக இருக்கவேண்டும். அப்போதுதான் எமது இருப்பையும், தமிழ் பேசும் சமூகத்துக்கு எதிரான பிரேரணைகளையும் தடுக்ககூடியதாக இருக்கும்.

எனவே, தனிநபர்களை தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்பும் தேர்தலாக அல்லாமல் சமூகத்தின் இருப்பை, எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் தேர்தல் என்பதால் மக்கள் மதிநுட்பத்துடன் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.” – என்றார்.

ராஜாவை தாக்கியது யார்? விசாரணை வேட்டையில் விசேட பொலிஸ் குழு!

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளரான கனகரத்தினம் ராஜாமீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக பொகவந்தலாவைப் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ராஜாவுக்கு தொலைபேசிமூலம் அச்சுறுத்தல் விடுத்தார் எனக் கூறப்படும் நபரின் தொலைபேசி இலக்கத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என்றும், இதன் பின்னணியை கண்டறிவதற்காக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு ஆட்டோவொன்றில் வீடு திரும்புகையிலேயே கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாத குண்டர் குழுவினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த ராஜா உடனடியாக பொகவந்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் மேலதிக வைத்தியசாலைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

ம.மமுவின் தோட்ட தலைவர் காங்கிரஸில் இணைவு

மலையக மக்கள் முன்னணியின் ஒஸ்போன் கீழ்பிரிவு தோட்ட தலைவர், டிக்கோயா
பிரதேச அமைப்பாளர் உட்பட அக்கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இணைந்துகொண்டுள்ளனர்.

இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானை நேரில் சந்தித்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.

பொகவந்தலாவ நிருபர் – எஸ்.சதீஸ்

CB,SBயின் கூட்டங்களில் பிரபுவிற்கு வாக்ககளிக்கக் கோரிய பிரதமர் மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்ச, நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபுவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரிய நிலையில், பிரபுவின் வெற்றி உறுதியாகியுள்ளதாக அந்தக் கட்சியின் நுவரெலியா மாவட்ட ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் முகமாக பிரதமர் மகிந்த ராஜபக்சவும் சூறாவளி சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.அந்த வகையில் நேற்று நுவரெலியாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச அந்தக் கட்சியின் வேட்பாளர்களின் கூட்டங்களிலும் பங்கெடுத்தார்.

இதன்போது நுவரெலியா மாவட்டத்தின் வேட்பாளர்களான சீ.பீ. ரத்நாயக்க, எஸ்.பீ. திசாநாயக்க ஆகியோரின் கூட்டங்களிலும் பங்கெடுத்தார. இதன்போது முத்தையா பிரபுவின் 10ஆம் இலக்கத்திற்கும் வாக்களிக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், பிரதமரின் இந்த கோரிக்கை முத்தையா பிரபுவின் வெற்றியை நுவரெலியா மாவட்டத்தில் உறுதிசெய்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டிக்கோயாவில் 20 பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து

டிக்கோயா அளுத்தகல பகுதியில் இன்று (27) காலை ஆட்டோவொன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும், ஆட்டோ ஓட்டுனருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து டிக்கோயாவை நோக்கி வந்த ஆட்டோவே, அதிக வேகம் காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கண்டியில் முதன்முறையாக சஞ்சாரியின் ‘சௌந்தர்யம்’ நிகழ்வு

கலைகள் மனிதனை வாழ்விப்பவை அந்தவகையில் எம் ஒவ்வொருவரது படைப்பும் எம் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையிலே அமைகிறது.

ஆனால் எமக்கான மேடையை நாமே உருவாக்க எமது கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டிய தேவை உணரப்படுகிறது.

அந்தவகையில் சஞ்சாரியின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டத்தில் உள்ள மூவினத்தைச் சேர்ந்த கலைஞர்கள், சிரேஷ்ட கலைஞர்கள் மற்றும் வளர்ந்து வருகின்ற இளம் கலைஞர்களுக்கிடையிலான ‘சௌந்தர்யம்;’ நிகழ்வு கடந்த சனிக்கிழமை கண்டியில் இடம்பெற்றது.

கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி பாரத் அருள்சாமி  தலைமையிலும் அனுசரனையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் கண்டி மாவட்டத்தில் உள்ள கலைஞர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் மற்றும் கலைத்துறையின் முன்னேற்றம் , தற்போதைய நிலை குறித்தான பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது சட்டத்தரணி பாரத் அருள்சாமியின் கலை கலாசார மேம்பாட்டுத் திட்டம் ஒன்றும் முன்வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலைஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் , சிரேஷ்ட கலைஞர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்விற்கு அழகு சேர்க்கும் முகமாக கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

பவதாரணி ராஜசிங்கத்தின் சஞ்சாரி ஏற்பாடு செய்த இந்நிகழ்வு நூற்றுக்கணக்கான கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் கண்டி மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

‘ தோட்டங்களை மக்களுக்கு வழங்கி சுயதொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை’

ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி தமிழ் அமைப்பாளரும் வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் இரத்தினபுரியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

இரத்தினபுரி வேவல்வத்தை பகுதி மக்களை சந்தித்த அவர், அந்த பகுதி மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

தமது பகுதியிலுள்ள தோட்டங்கள் மூடப்பட்டுள்ளமையினால், தமது தொழில்வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன், தமக்கான காணி மற்றும் வீட்டு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கு பதிலளித்த எஸ்.ஆனந்தகுமார், தான் பாராளுமன்றத்திற்கு சென்று இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுகொடுப்பதாக உறுதியளித்தார்.

செயலிழந்துள்ள தேயிலை தோட்டங்களை மக்களுக்கு வழங்கி சுயதொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த உறுதிமொழி தமக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.

மலையக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘கொரோனா’ வைரஸ் தாக்கத்தால் மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளில் இன்று (27) திங்கட்கிழமை முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

அதிபர், ஆசிரியர்கள் மற்றும்  தரம் 11, 12 ,13 ஆம் வகுப்பு மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளுக்கு வருகைதந்திருந்தனர்.

இதன்படி முகக்கவசம் அணிந்து வந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள இடத்தில் கைகளை கழுவினர். அதன்பின்னர் அவர்களின் உடல் உஷ்ணம் கணிப்பிடப்பட்டது. அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பிறகு அதிபர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதன்போது சுகாதார நடைமுறைகளை எவ்வாறு பின்பற்றுவது, மாணவர்கள் வருகைதந்த பின்னர் அவர்களிடையே சுகாதார பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பது எப்படி, யாருக்காவது திடீரென சுகயீனம் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்பது உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் அதிபர்களால் விளக்கமளிக்கப்பட்டதுடன், ஆசிரியர்களின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டன.
சமூக இடைவெளியைப் பின்பற்றி வகுப்பறையில் இடஒதுக்கீடுகள் இடம்பெற்றிருந்தனர். சிலமாணவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்திருந்தனர். அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...