Home Blog Page 4035

‘ஆற்றல் மிகுந்த தலைவர்களை பாராளுமன்றம் அனுப்பவும்’ – பிரமர் மஹிந்த

பொறுப்பொன்றை ஒப்படைக்கக் கூடிய ஆற்றல் மிகுந்த தலைவர்களை இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பயமின்றி பொறுப்பை ஒப்படைக்கக் கூடிய ஆற்றல் மிகுந்த உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்து அனுப்புவது பொதுமக்களின் கடமை என்று நுவரெலியா ராகல பிரதேசத்தில் இன்று (2020.07.26) முற்பகல் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்துக் கொண்ட பிரதமர் இதன்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் கைவிடப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டு சென்று வேலையற்று காணப்படும் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது விரைவில் நிறைவேற்ற வேண்டியது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பொறுப்பாக கருதப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட வளங்களை விற்பனை செய்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர், ஐந்து வருடங்களுக்கு நியமிக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிர்கால சந்ததியினருக்காக உள்ள நாட்டின் வளங்களை விற்பனை செய்யமுடியாது என்பதை ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கங்களும் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

முறையான கொள்கை அற்றவர்கள் ஆட்சிக்கு வருவதனால் நாட்டிற்கு ஏற்படும் இவ்வாறான சேதங்களை தவிர்ப்பதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 69 இலட்சம் மக்கள் ஒன்றிணைந்து ஏற்றுக்கொண்ட சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அதிகாரத்தை பெற்றுக்  கொடுக்குமாறு இதன்போது பிரதமர் மேலும் கேட்டுக் கொண்டார்.

குறித்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

குறித்த சந்திப்பில் கலந்துக் கொள்வதற்கு முன்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ சாரிபுத்தாராம ரேவன பிரிவெனாவிற்கு சென்று அங்கு பிரிவெனாதிபதி பிடிகல வஜிர தேரரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதுடன், பின்னர் ராகல ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திற்கு சென்று ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

‘இனத்தின் பெயரில் உள்ள கட்சிகளை தடைசெய்யவேண்டும்’ – விமல்

இனம் மற்றும் மதத்தின் பெயரில் அரசியல் கட்சிகளை பதிவுசெய்யும் செயற்பாட்டை புதிய அரசியலமைப்பின் ஊடாக தடைசெய்ய வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல்வீரவன்ஸ தெரிவித்தார்.

” இன மற்றும் மதத்தின் பெயரில் கட்சிகளை பதிவுசெய்துக்கொண்டு அரசியல் நடத்துவது தவறான விடயமாகும். இதற்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தடைவிதிக்கப்பட வேண்டும் என்பதே எனது யோசனையாகும்.
தேசிய நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றுக்கும் இது தடையாக இருக்கின்றது. எனவே, முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும் விடயங்கள் தடுத்துநிறுத்தப்படவேண்டும்.” – என்றும் விமல்வீரவன்ஸ கூறினார்.

’13 இற்கு முடிவு கட்டவே மூன்றிலிரண்டு பலத்தை கோருகிறது அரசு’

” அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை இல்லாதொழிப்பதற்காகவே இந்த இனவாத அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை கோருகின்றது. எனவே, மொட்டுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரானவை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டன், அக்கரபத்தனை பகுதியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினையை தீர்க்கின்றோம், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தாருங்கள் என ராஜபக்ச ஒருவர் கோரியுள்ளார். 2010 ஆம் ஆண்டு முதல் ராஜபக்சக்களிடம் மூன்றிலிரண்டு பலம் இருந்தது. அப்போது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை. தற்போது வாக்குகளுக்காக போலி அறிவிப்புகளை விடுக்கின்றனர்.
அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை நீக்குவதற்கே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இந்த இனத்துவேச அரசாங்கம் கோருகின்றது. எனவே, மொட்டுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரானவை என்பதை புரிந்துகொள்வோம்.
மொட்டுக்கு வாக்கித்தால் குடும்ப ஆட்சியே மலரும். ஜனநாயக ஆட்சி வேண்டுமானால் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும்.” – என்றும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

‘நான் அமைச்சராவது உறுதி’ – வடிவேல் சுரேஷ் மீண்டும் தெரிவிப்பு

” பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் அமையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நானே அமைச்சர். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொஸ்லாந்த மீரியாகல தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நான் செய்த சேவைகளை மக்கள் அறிவார்கள். அரசாங்கம் மாறியதும் ஒரு சில வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கலாம்.  அவை தற்காலிகமாகவே இடை நிறுத்தப்பட்டுள்ளன. மீண்டும் புதிய அரசாங்கம் அமையும். அதில் நானும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அமருவேன்.விட்டுச்சென்ற வேலைகளை மீண்டும் தொடருவேன்.” – எனவும் கூறினார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

கினிகத்தேனையில் ஆணின் சடலம் மீட்பு! கொலையா என விசாரணை!

கினிகத்தேனை பொல்பிட்டிய சமலன நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையிலிருந்து இன்று காலை 7.30 மணியளவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீதியில் இறந்துகிடப்பதைகண்ட பொதுமகன் ஒருவர், வழங்கிய தகவலையடுத்தே சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சடலத்தை மீட்டனர்.

உயிரிழந்திருப்பவர் யாரென இன்னும் அடையாளம் காணப்படவில்லை. குறித்த நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

உடல் எடையை குறைத்து ஸில்மாக மாறிய நடிகை ஹன்சிகா

தனுஷ் நடித்த மாப்பிள்ளை எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

ஆனால் இதற்கு முன்பு ஹிந்தியில் சில படங்களில் நடித்துள்ளார்.

இதன்பின் தமிழ், தெலுங்கு என ஆகிய இரு மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

ஆனால் சில வருடங்கள் முன்பு நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

மேலும் தற்போது சிம்புவடன் மஹா, பார்ட்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் இவருக்கு முன்பு இருந்தது போல் தமிழ் திரையுலகில் வரவேற்பு மக்கள் மத்தியில் இல்லை என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் சமீப காலமாக ஒர்க் அவுட் செய்து தான் உடல் எடையை குறைத்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை ஹன்சிகா மிகவும் ஸ்லிமாக எழும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

டோனி தொடர்ந்தும் விளையாட வேண்டும் – கம்பீர் கருத்து

நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் டோனி இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வயது என்பது வெறும் நம்பர் தான். நீங்கள் நல்ல பார்முடன் இருந்தாலோ, உண்மையிலே பந்தை நன்றாக அடித்து ஆடினாலோ தொடர்ந்து விளையாடலாம். இதே போல் டோனி பந்தை நன்கு அடித்து ஆடினாலோ, சிறப்பான பார்மில் இருந்தாலோ, ஆட்டத்தை அனுபவித்து ஆடினாலோ மற்றும் தன்னுடைய பேட்டிங் வரிசையில் களமிறங்கி இன்னும் தன்னால் இந்திய அணிக்கு வெற்றி தேடிக்கொடுக்க முடியும் என்று நினைத்தாலோ அவர் தொடந்து இந்திய அணிக்காக விளையாடலாம்.

வலுவான உடல் தகுதியுடனும், நல்ல ஆட்டத்திறனுடனும் இருந்தால் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். ஏனெனில் யாரும், யாரையும் ஓய்வு பெறச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. வயதை காரணம் காட்டி டோனி போன்றவர்களுக்கு பல நிபுணர்கள் நிறைய நெருக்கடி அளிக்கலாம்.

ஆனாலும் ஓய்வு என்பது தனிப்பட்டவர்களின் முடிவாகும். கிரிக்கெட்டை எப்போது விளையாட தொடங்குகிறீர்கள் என்பதும், அதில் இருந்து எப்போது விலகப் போகிறீர்கள் என்பதும் உங்களுடைய தனிப்பட்ட முடிவாகும்.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி முந்தைய எல்லா போட்டிகளையும் விட பெரியதாகும். ஏனெனில் இந்த போட்டி தேசத்துக்கானது என்று கருதுகிறேன். போட்டி எங்கு நடக்கிறது. எந்த அணி வெற்றி பெறப்போகிறது. யார் அதிக ரன்கள் குவிக்கிறார். யார் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துகிறார் என்பது பெரிய விஷயமல்ல.

ஐக்கிய அரபு அமீரகம் எந்த வடிவிலான போட்டியையும் நடத்துவதற்கு சிறப்பானதொரு இடமாகும். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் நடக்க உள்ள இந்த ஐ.பி.எல். போட்டி தேசத்தின் மனநிலையை மாற்றப் போகிறது என்பது தான் மிகவும் முக்கியமானதாகும்.

இவ்வாறு கம்பீர் கூறினார்.

39 வயதான டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த விதமான போட்டிகளிலும் விளையாடவில்லை. ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக களம் இறங்க உள்ள டோனி இதில் அசத்தினால் மட்டுமே இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவதற்கு வாய்ப்பு உருவாகும்.

வடகொரியாவுக்குள் ஊடுருவியது கொரோனா – ஊரடங்கும் அமுல்

வடகொரியாவில் முதன்முறையாக ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என உலகம் முழுவதும் பரவியது. உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில் இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வந்தநிலையில் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அதிபர் கிம் ஜாங்க உன் உயராதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினார்.

நாடு தழுவிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாகவும், கொரோனா தொற்று பரவால் தடுக்க கேஸாங் நகரில் முழு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்ட நபர் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும், இது ஒரு ஆபத்தான சூழ்நிலை. இது பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று அந்நாட்டுசெய்தி ஊடகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென் கொரியாவில் தற்போது ஒரு நாளைக்கு 40 முதல் 60 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவில் கடந்த பெப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி, பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவுக்கு 5 தேசிய பாடசாலைகள் – தடுத்து நிறுத்தியது யார்? அம்பலப்படுத்துகிறார் திகா!

நுவரெலியா மாவட்டத்துக்கு ஐந்து தேசிய பாடசாலைகள் அமைப்பதற்கு 2014 இல் அனுமதி கிடைத்திருந்தது. எனினும், இங்குள்ள அமைச்சர் ஒருவரும், விஜேசிங் போன்ற கல்விகற்ற துரோகிகளுமே இதனை தடுத்துநிறுத்தி சமூகத்துக்கு அநீதியிழைத்தனர் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் 25.07.2020 அன்று மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த நான்கரை வருடங்களாக மக்களுக்கு உணர்வுப்பூர்வமாக சேவையாற்றிவிட்டு, அவற்றை பட்டியலிட்டுக்காட்டியே நாம் வாக்கு கேட்கின்றோம். ஆனால், திகாம்பரம் முன்னெடுத்த திட்டங்கள் சரியில்லை. மோசடி இடம்பெற்றுள்ளது என குறைகூறிதான் சிலர் வாக்கு சேகரித்து வருகின்றனர். நான்கரை வருடங்கள் நான் ஏமாற்றினேனா, சேவையாற்றினேனா என்பது மக்களுக்கு தெரியும். எனவே, வேலைசெய்யாமல் மக்களை இதுவரை காலமும் ஏமாற்றி வந்தவர்களை மக்கள் நிராகரிக்கவேண்டும்.

இம்முறை கொழும்பில் மனோவும், கண்டியில் வேலுகுமாரும், பதுளையில் அரவிந்தகுமாரும் வெற்றிபெறுவது உறுதி. நுவரெலியா மாவட்டத்தில் நாங்கள் மூவரும் வெற்றிபெறுவோம். திலகரையும் இணைத்துக்கொண்டு மொத்தம் 7 பேர் பாராளுமன்றம் செல்வது உறுதி. எனவே, பொதுத்தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது.

நான் உங்களில் ஒருவன், தொழிலாளியின் பிள்ளை. அரசியல்வாதி அல்லது முதலாளியின் மகனாக இருந்து அமைச்சராகியிருந்தால் என்னாலும் உணர்வுபூர்வமாக வேலை செய்ய முடியாமல் போயிருக்கும். மக்களோடு மக்களாக வாழ்ந்து, கஷ்டங்களை அனுபவித்ததால்தான் என்னால் மக்களுக்கான சேவையை உரிய முறையில் வழங்கமுடிகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலை இல்லை என்று முத்தையா முரளிதரனின் சகோதரர் பிரபு கூறுகின்றார். நுவரெலியா மாவட்டத்துக்கு 5 தேசிய பாடசாலைகளை அமைப்பதற்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் அனுமதி பெற்றிருந்தேன். அப்போது பந்துல குணவர்தனவே கல்வி அமைச்சராக இருந்தார்.

இதனை கேள்வியுற்றதும் இங்குள்ள அமைச்சர் அவசரமாக அதிபர்களை அழைத்து குறிப்பாக ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் அதிபர் விஜேசிங்க போன்றோர், இங்கு தேசியப்பாடசாலை தேவையில்லை, மாகாண அதிகாரம் இருந்தால்போதும் என கடிதம்மூலம் அறிவித்தனர். அதன்பின்னர் அமைச்சரும், அதிபர்களும் தேசியப்பாடசாலை தேவையில்லை என கூறுகின்றனர், வழங்கமுடியாது என பந்துல குணவர்தன குறிப்பிட்டார். இப்படியான துரோகிகளே தேசியப்பாடசாலையை தடுத்துநிறுத்தினர்.” – என்றார்.

க.கிசாந்தன்

இரத்தினபுரி தமிழர்களுக்கு காணி உரிமை – ஆனந்தகுமார் உறுதி!

இரத்தினபுரி – வேவல்வத்தை பகுதியில் வாழும் தமிழ் மக்களை ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

வேவல்வத்தை பகுதிக்கு கள விஜயத்தில் ஈடுபட்ட போதே அவர் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

இரத்தினபுரி தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள், வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்சினைகள் தொடர்பிலும் எஸ்.ஆனந்தகுமார் அவதானம் செலுத்தியிருந்தார்.

தான் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றவுடன் இரத்தினபுரி தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முன்னின்று செயற்படுவதாக அவர் இதன்போது உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து, கள பிரசார நடவடிக்கைகளையும் எஸ்.ஆனந்தகுமார் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் எல்லை பகுதியான பனில்கந்த பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் கலந்துக்கொண்டிருந்தார்.

மலையகத்தில் ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்துவரும் தாம், இதுவரை காலம் கவனீப்பாரற்று காணப்படுவதாக அந்த பிரதேச மக்கள் தமது கவலைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஏனைய தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் சிறிதளவு உரிமையேனும், இலங்கையின் தென் பகுதியில் வாழும் தமக்கு கிடைக்கவில்லை என அவர்கள் எஸ்.ஆனந்தகுமாரிடம் தெரிவித்தனர்.

தான் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த தருணம் முதல் காணி உரிமைகளை இழந்திருக்கும் இரத்தினபுரி வாழ் தமிழ் மக்களுக்கும் காணி உரிமைகளை பெற்றுகொடுக்க முன்னின்று போராடுவதாக அவர் இதன்போது உறுதியளித்தார்.

இதன் ஒரு கட்டமாக 10 பர்சஸ் காணிகளை பகிர்ந்தளிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...