Home Blog Page 4036

பாடசாலைகள் நாளை ஆரம்பம் – வகுப்பு நேரங்களில் மாற்றம்

‘கொரோனா’ வைரஸ் தாக்கத்தால் மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளில் நாளை (27) திங்கட்கிழமை முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

இதன்படி காலை 7.30 மணிமுதல் மாலை 3.30 வரை கல்வி நட வடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தரம் 05, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்கள் மாத்திரமே நாளை பாடசாலைக்குச்செல்லவேண்டும்.

அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இலங்கையில் ‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (25) மாத்திரம் 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் சென்னையில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா தடுப்பு முகாமில் கண்காணிக்கப்பட்டவர்களாவர்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 2 ஆயிரத்து 103 பேர் குணமடைந்துள்ளனர். 656 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 11 பேர் பலியாகியுள்ளனர்.

தேர்தல் முடிந்தகையோடு தோட்ட கம்பனிகளுடன் பேச்சு!

பொதுத்தேர்தலுக்கு பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று அறிவித்தார்.

ஹப்புத்தளை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே எம்மிடம் தொண்டமான் முன்வைத்த இறுதி கோரிக்கையாகும். அதனை நிறைவேற்றுவோம். தேர்தல் முடிந்த பின்னர் கம்பனிகளுடன் கலந்துரையாடப்படும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 98 லட்சம் பேர் மீண்டனர்

உலகம்  முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சத்து 35  ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 60 லட்சத்து 35 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 98 லட்சத்து 2 ஆயிரத்து 994  பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 36 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர்.

சுய தனிமையில் இருப்போருக்கு 31 ஆம் திகதி வாக்களிக்க ஏற்பாடு!

”  வீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு நிலையங்களினூடாக எதிர்வரும் 31 ஆம் திகதி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.” – என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னரே தவிசாளர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

” தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஜூலை 31 ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்தவும், வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான வாக்கெடுப்பை 4 ஆம் திகதி நடத்தவும் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுடனான கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், 4 ஆம் திகதி அதனை மேற்கொள்வது சிரமம் என தற்போது தௌிவாகின்றது. ஏனெனில், வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை 4 ஆம் திகதி ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லவுள்ளோம். இதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான வாக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதி நடத்த தற்போது தீர்மானித்துள்ளோம்.

எவரேனும் வீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் 31 ஆம் திகதி அவர்கள் தமது வாக்கினை பதிவு செய்யமுடியும். குறித்த பகுதிகளில் நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அரசியல் கட்சிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்ப முடியும்

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் உள்ள வாக்காளர்கள் யார் என்பது தொடர்பான தகவல்களை சேகரிக்கவும் புகைப்படங்களை எடுத்து பகிரங்கப்படுத்துவதற்கும் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

புதிய ஆட்சியிலேயே இனி அமைச்சரவை கூடும்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அடுத்த வாரத்துக்கான (29.07.2020)  அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது என தெரியவருகின்றது.

பொதுத்தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரங்களில் அமைச்சர்கள் பங்கேற்கவேண்டியுள்ளதாலேயே அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறாது என அறியமுடிகின்றது.

கடந்தவாரம் நடைபெற்ற கூட்டமே இந்த ஆட்சியின்கீழ் நடைபெற்ற கடைசி அமைச்சரவைக் கூட்டம் என்றும், 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதால் அன்றைய தினமும் அமைச்சரவை கூடாது என தெரியவருகின்றது.

எனவே, பொதுத்தேர்தலில் வெற்றிபெறும் கட்சி புதிய அரசாங்கமொன்றை நிறுவி, அமைச்சரவையை நியமித்த பின்னரே இனி அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும்.

விவாதத்துக்கு வருமாறு மஹிந்தவுக்கு சஜித் மீண்டும் சவால்!

பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

கண்டி தெல்தெனிய பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் இந்த சவாலை விடுத்தார்.

” எனக்கு பொருளாதாரம் தொடர்பான அறிவில்லை என்று பிரதமர் விமர்சித்துள்ளார். பரவாயில்லை, அவரை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். அவ்விவாதத்தின்போது பொருளாதாரம் பற்றி கலந்துரையாடலாம்.” – என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அண்மையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டமொன்றின்போதும் மேற்படி சவாலை சஜித் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘எனக்கு எதிரான சதிவேலை நடக்கிறது’ – ஏ.ஆர். ரஹ்மான் கவலை

பாலிவுட்டில் என்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள  ‘தில் பெசாரா’ திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:-

பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்தி செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்.

‘தில பெசாரா’ படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், ‘பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள்.

அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்’ என்று கூறினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று

பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன்.இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

‘கண்டி மாவட்டத்தில் மொட்டும், யானையும் எமக்கு சவால் அல்ல’

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கண்டி மாவட்டத்தில் கடந்த நான்கரை வருடங்களில் தளம்பலற்ற செல்வாக்குநிலை தொடர்ந்தது.கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதுகூட இதனை நிரூபித்தோம். பொதுத்தேர்தலிலும் பலத்தைக்காட்டுவோம் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் நாவலப்பிட்டிய, கம்பளை, பாத்ததும்பர மற்றும் பாத்த ஹேவாஹெட்ட ஆகிய நான்கு தொகுதிகளில் மாத்திரமே சஜித் பிரேமதாச வெற்றிபெற்றார். அத்தொகுதிகளில்தான் தமிழ் மக்களே அதிகம் வாழ்கின்றனர். எனவே, வெற்றிக்கான களத்தை முற்போக்கு கூட்டணியே எமது செயற்பாடுகள் ஊடாக அமைத்துக்கொடுத்தது. எமது செல்வாக்கு எப்படியுள்ளது என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.

அதுமட்டுமல்ல கடந்த உள்ளாட்சிமன்றத்தேர்தலில் தனித்துபோட்டியிட்டு 23 ஆயிரம் வாக்குகளைப்பெற்றோம். எமக்கென இன்று 11 உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். எனவே, இத்தேர்தலிலும் எமக்கான மக்கள் செல்வாக்கு தொடரும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.

கண்டி மாவட்டத்தில் மொட்டும், யானையும் போட்டியிடுகின்றன. இவை இரண்டுமே எமக்கு சவால் அல்ல. ஏனெனில் மக்கள் ஆதரவு எமக்கே இருக்கின்றது. கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இனி எப்போதும் இழக்கக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.

கடந்தகாலங்களில் இருந்து பாடமும் கற்றுள்ளனர். எனவே, தமிழ்ப் பாராளுமன்றத்தை இழக்கும் வகையிலான தவறை அவர்கள் செய்யமாட்டார்கள். எனவே, மேற்படி இரு கட்சிகளைவிடவும் நாம் பலமாக இருக்கின்றோம். ” – என்றும் வேலுகுமார் கூறினார்.

 

இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிய மேலும் நால்வர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து வருகைதந்து, கொரோனா தடுப்பு முகாமில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நால்வருக்கே வைரஸ் தொற்றியிருப்பது பிசிஆர் பரிசோதனைமூலம் தெரியவந்தது.

இதன்படி இலங்கையில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 2 ஆயிரத்து 103 பேர் குணமடைந்துள்ளனர். 654 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 11 பேர் பலியாகியுள்ளனர்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...