தலவாக்கலை இளைஞன் ரயிலில் பாய்ந்து தற்கொலை!
‘கொரோனா’ 2711 பேருக்கு தொற்று – 2035 பேர் குணமடைவு!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 12 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,O35 ஆக அதிகரித்துள்ளது.
665 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 711 ஆக இருக்கின்றது.
அரசாங்கத்துக்கு எதிராக ஹட்டனில் போராட்டம்!
‘ஜெட்’ வேகத்தில் உயர்வடைந்துள்ள பொருட்கள், சேவைகளின் விலையைக் குறைக்குமாறும், எரிபொருள் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் தேசிய மக்கள் சக்தி, மக்களோடு இணைந்து அட்டனில் 19.07.2020 அன்று போராட்டத்தில் ஈடுபட்டது.
அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற இந்த போராட்டத்தில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
” கொரோனா வைரஸ் உட்பட மேலும் பல பிரச்சினைகளால் மக்கள் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாமல் திண்டாடுகின்றனர். இந்நிலையில் நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக மனிதநேயமற்ற இந்த அரசாங்கம் பொருட்களின் விலைகளை தொடர்ச்சியாக உயர்த்திவருகின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். உடன் குறைக்குமாறும் வலியுறுத்துகின்றோம்.
அதேபோல் உலக சந்தையின் எரிபொருட்களின் விலையும் கடந்தகாலத்தில் வரலாறு காணாதவகையில் வீழ்ச்சியடைந்தது. தற்போதும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. ஆனால், அரசாங்கம் எரிபொருள் விலையைக்கூட குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மக்கள் நலன் மறந்து செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்.’ – என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
“ஏமாற்று வேண்டாம் உறுதியளித்த லீஸின் நிவாரணத்தை உடனே பெற்றுக்கொடு”, “சமையலறைக்கு வரி அறவிடும் ஆட்சி எமக்கு வேண்டாம்”, என எழுதப்பட்டிருந்த பதைதாகளையும் ஏந்தியவாறு அரசாங்கத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
க.கிசாந்தன்
‘உரிமை அரசியலுக்கு உயிர் கொடுத்த எம்மை பலப்படுத்துங்கள்’
” மலையக மக்களின் பிரச்சினைகளை தேசிய மயப்படுத்தி, அவற்றை அரசாங்க பொறிமுறைக்குள் உள்வாங்கி உரிய வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க கடந்த நான்கரை வருடங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி நடவக்கை எடுத்தது. அதுமட்டுமல்ல உரிமை அரசியலுக்கும் உயிர் கொடுத்தது. எனவே, எமது பயணத்தை பொதுத்தேர்தலில் மக்கள் மேலும் பலப்படுத்த வேண்டும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கம்பளை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் வேலுகுமார் மேலும் கூறியதாவது,
“கடந்த 2015 ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எமது மலையக மக்கள் எமக்கு முழுமையான ஆதரவை வழங்கினர். 15 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் வென்றெடுத்தனர்.
எம்மக்களின் ஆணையை ஏற்று, அவர்களின் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமை மேம்படுத்துவதற்காக நான்கரை ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம் முன்னெடுத்தோம். கண்டி மாவட்டத்திலும் உரிமை மற்றும் அபிவிருத்தி அரசியல் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தில் இருந்த சில சரத்துகள் – குறிப்பாக 33 ஆம் சரத்தானது தோட்டப்பகுதி அபிவிருத்திக்கு பெரும் தடையாக இருந்துவந்தது. இச்சட்டத்தின் பிரகாரம் தோட்டப்பகுதியானது தனியார் பகுதியாக – தனிப்பட்ட பகுதியாக கருதப்பட்டதால் அபிவிருத்திகளுக்கு அரசால் நிதி ஒதுக்கப்படவில்லை.
இதனால், அரச நிறுவனங்களாலும் உரிய சேவைகளை வழங்கமுடியாத நிலை இருந்தது. உள்ளாட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை அனுப்பினாலும் எதனையும் செய்யமுடியாது. உளளாட்சி சபைத் தேர்தலில் நாம் வழங்கும் வாக்குகள் வெத்து வேட்டுகளாகவே இருந்தன. தோட்டப்பகுதிக்கு பாதை அமைத்ததால் – அதனை சட்டத்துக்குபுறம்பான செயலாக கருதி பிரதேச சபை கலைக்கப்பட்ட கசப்பான வரலாறும் இருக்கின்றது. இதனை நாமே மாற்றியமைத்தோம்.
அதேவேளை, எமது மக்களுக்காக வெளிநாடுகள் மற்றும் அமைப்புகளுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி சிறந்த உறவை பேணியது. இதன்பயனாகவே 10 ஆயிரம் வீடுகளை வழங்குவதற்கு பாரத பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தார். அத்துடன், பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக 900 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் இந்தியா முன்வந்தது. இவ்வாறு எமது சமூக விடுதலைக்காக தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் அபிவிருத்தி அரசியல், உரிமை அரசியல் ஆகிய விதைகள் தமிழ் முற்போக்கு கூட்டணியால் விதைக்கப்பட்டன.
’19’ இற்கு சமாதி கட்டுவோம் – கம்மன்பில சூளுரை!
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழித்துக்கட்டி, 13 இலுள்ள விஷப் பற்களை பிடுங்குவதற்கு மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை எமக்கு வழங்கவேண்டும் என்று பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான உதயகம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 2015 ஆம் ஆண்டு எமது நாட்டில் உருவான அரசாங்கத்துக்கு உலகில் பலம்பொருந்திய நாடுகளின் ஆதரவு இருந்தது. நாடாளுமன்றத்திலுள்ள கட்சிகளும் நேசக்கரம் நீட்டின. எனவே, அத்தகையதொரு அரசாங்கத்தை எதிர்ப்பது, கருங்கல்லில் தலையை முட்டும் செயலுக்கு ஒப்பானதாகும் என சிலர் கருத்து வெளியிட்டனர். ஆனால், நாம் எதிர்த்து நின்றோம். கருங்கல்லை சிதறடிக்கவைத்து, ஆட்சிக்கு முடிவுகட்டினோம்.
நாட்டுக்காக அரசாங்கத்துக்குள் இருந்தபடி எமது போராட்டம் தொடரும். தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறமுடியாமல்போ
அதேபோல் அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்கும், பொதுவானதொரு சட்டத்தை கொண்டுவருவதற்கும், நாட்டு வளங்களை பாதுகாப்பதற்கும் அன்று எதிரணியில் இருந்து முன்னெடுத்த போராட்டத்தை அரசாங்கத்துக்குள் இருந்தும் செய்வோம் என மக்கள் நம்புகின்றனர். நிச்சயம் அதனை செய்வோம் என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு வழங்குகின்றோம்.
19 ஆவது திருத்தச்சட்டத்தை மைத்திரிபால சிறிசேனகூட விமர்சிக்கின்றார். அது நீக்கப்படவேண்டும். 13 இல் உள்ள விஷப்பற்களை பிடிங்கியெறியப்படவேண்டும். எனவே, புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம். அதனை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.” – என்றார்.
மஞ்சள் தூளில் கலப்படம் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை : இந்த இலக்கத்திற்கு முறையிடுங்கள்
சமகாலத்தில் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூளில் பல்வேறு கலப்படங்கள் உள்ளதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பெற்று கொள்ளும் மஞ்சள் தூளில் பல்வேறு கலப்படம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய, விற்பனை நிலையங்களை திடீர் சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவ்வாறு வர்த்தக நிலையங்களில் கிடைத்த மஞ்சள் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் இயக்குனர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற ஏனைய சுற்றிவளைப்புகள் பொதுவான முறையில் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
மோசடியான வர்த்தகர்கள் தொடர்பான தகவல் வழங்குவதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1977 என்ற இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க முடியும்.
கொழும்பு யோன் வீதிக்கு அருகில் இடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக விலையின் கீழ் இந்த மஞ்சளை விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் அதிகளவானோர் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதனால் ஆபத்துக்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#lka #srilanka #kuruvinews #sritamil
‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மாத்திரம் 7 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவியவர்களில் 2 ஆயிரத்து 23 பேர் குணமடைந்துள்ளனர். 670 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

#lka #srilanka #kuruvinews #sritamil #COVID19SL #COVID19LK #COVID19
‘இருப்பை தக்கவைக்க முற்போக்கு கூட்டணியை ஆதரிப்போம்’
‘கொரோனா’ வைரஸ் பரவல் – அரசாங்கம்மீது மனோ குற்றச்சாட்டு!
“வெளிநாட்டு கதை வேண்டாம். இந்த நாடு ஒரு தீவு என்பதால் எமக்கு இயற்கை பாதுகாப்பு கிடைத்தது. அதனால்தான், நோயாளர் தொகை 3,000 க்குள் நிற்கிறது. ஆனால், நாட்டை முன்கூட்டியே மூடி “லொக் டவுன்” செய்து 3,000 கொரோனா நோயாளர்களை 300 க்குள் நிறுத்தி இருக்கலாம்.
நீங்கள் மார்ச் 19, தேர்தல் வேட்பு இறுதி தினம் வரை, அதாவது பிரதான எதிர்க்கட்சி உடைவது உறுதியாகும்வரை, அரசியல் இலாபத்தை மனதில் கொண்டு, நாட்டை திறந்து வைத்தீர்கள். இதனால்தான் முழு நாடும் இன்று பாடுபடுகிறது.” என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
” ஜனாதிபதி, மார்ச் 2 ம் திகதியன்று பாராளுமன்றத்தை கலைத்து, வேட்பு மனு மற்றும் தேர்தல் திகதிகளை அறிவித்தார். இதற்கு பதில் அவர் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விட்டு, முழு நாட்டையும் கொரோனாவை எதிர்த்து போராடும் தயார் நிலைக்கு கொண்டு சென்று இருக்கலாம். இதை அவர் செய்யவில்லை.
பொறுப்பற்ற நிலையில் வேட்பு மனு மற்றும் தேர்தல் திகதிகளை அறிவித்ததால், நாடு திறந்த நிலையில் இருந்தது. கட்சிகளின் இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் நாடு முழுக்க ஆங்காங்கே கட்சி அலுவலகங்களில் கூடினார்கள்.
அதற்கிடையில் கொழும்பில் பல்லாயிரகணக்கானோர் கூடும் ரோயல்-தோமியன், ஆனந்த-நாலந்த கல்லூரிகளின் இறுதிப்போட்டிகளையும் நடத்த விட்டு, அதில் ஜனாதிபதி மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டு கொரோனானவை வளர விட்டீர்கள். வேட்பு மனு முடிந்த மறுநாளே, அதாவது 20ம் திகதியே நாட்டை “லொக்டவுன்” செய்தீர்கள். அதாவது வரும் ஆபத்து பற்றி தெரிந்துக்கொண்டே, அரசியல் இலாபம் கருதி செயற்பட்டீர்கள்.
பெப்ரவரி 25ம் திகதியும், மார்ச் 5ம் திகதியும் என இரண்டு முறை அன்றைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில், கொரோனா ஆபத்து பற்றி கேள்வி எழுப்பி, உரை நிகழ்த்தினார். அப்போது நாடு கொரோனா பற்றி அறிந்திருக்கவில்லை.
ஆனால், சஜித் சபையில் பிரதமரையும், சுகாதார அமைச்சரையும் இதுபற்றி எச்சரிக்கை செய்தார். நாட்டை மூடி, விமான நிலையங்களை மூடி நாட்டை தயார் நிலையில் வைக்க சொன்னார். நீங்கள் சபையில் அவரை கிண்டல் செய்தீர்கள். அவர் சொன்னதை கணக்கில் எடுக்கவில்லை.
இன்று கொரோனா ஒரு சுகாதார பிரச்சினை மட்டும் இல்லை. அது வீட்டு பொருளாதாரத்தையும், நாட்டு பொருளாதாரத்தையும் நாசமாக்கி விட்டது. நோயில் இறந்து, நோயால் சுகவீனமடைந்து, வருமானம் இழந்து, தொழில்கள் நலிவடைந்து, குடும்ப நிகழ்வுகள்கூட வடத்த முடியாமல் தவிக்கும் அனைவருக்கும் நீங்கள் பொறுப்பு கூற வேண்டும். இனி கொரோனா இரண்டாம் அலை வந்தால் நிலைமை மோசமடையும். அதற்கும் நீங்கள் பொறுப்பு கூற வேண்டும்.
இங்கே நான் அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதார துறையினரை குறை கூற வில்லை. இந்நிலையிலும் பொறுப்புடனும், தியாக உணர்வுடனும் செயற்படும் சுகாதார, இராணுவ, போலிஸ் அதிகாரிகளை நாம் மனதார பாராட்டுகிறோம்.
அவர்களுக்கு வேண்டிய தேவைகளை கூட நீங்கள் ஒழுங்காக நிறைவேற்றவில்லை. மார்ச் முதலாம் திகதியன்றே நாட்டை “லொக் டவுன்” செய்யாமல் திறந்து வைத்து, அரசியல் இலாபத்தை மனதில் கொண்டு இங்கே பொறுப்பற்று செயற்பட்டது, உங்கள் அரசாங்கம்தான். இதை வரலாறு பதிவு செய்யும்.” – என்றார்.
‘எதிர்க்கட்சி தலைவர் பதவிகூட சஜித்துக்கு கிடைக்காது’ – எஸ்.பி.
ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதான எதிர்க்கட்சி பதவியைக்கூட பெறமுடியாத நிலை ஏற்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
கொத்மலை பகுதியில் 18.07.2020 அன்று மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தார்,
“குருணாகலை சம்பவம் தொடர்பில் எனக்கு தெரியாது. ஆனால், தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்று உடைக்கப்பட்டிருக்குமானால் அது தவறு
ஐக்கிய தேசியக்கட்சி புதுவழியை நோக்கி பயணிக்க முயற்சித்தாலும் அதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் இடமளிக்கமாட்டார்.
ஐக்கிய தேசியக்கட்சி இன்று இரண்டாக பிளவுபட்டுள்ளது. சஜித்துடன் 80 வீதமானோரும், ரணில் பக்கம் 20 வீதமானோரும் உள்ளனர். எனவே, ஐக்கிய தேசியக்கட்சியால் மீண்டெழமுடியாது.
அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் பெறும் ஆசனங்களைவிட, சஜித் அணி குறைவாகவே பெறும். பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தைகூட பெறமுடியாமல் போகும்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக்கட்சியுடன’ இணைந்துகொண்டு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு வதைகொடுத்தனர். அப்படியானவர்கள் இன்று எம்பக்கம் வந்துள்ளனர். இதனால்தான் சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.” -என்றார்.
க.கிசாந்தன்





