Home Blog Page 4051

‘கட்சி தாவும் தவளைகளுக்கு பாடம் புகட்டுவோம்’ – சீபி

” அமைச்சு பதவி இல்லாமல் சிலருக்கு இயற்கை கடனை முடிப்பது கூட கஷ்டம்தான். கட்சி தாவும் தவளைகள் எமது பக்கமும் உள்ளன. அவை எந்நேரத்திலும் பாயக்கூடும். அத்துடன், சுற்றுலாப் பறவைகளும் வருகின்றன. ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு அவை பறந்துவிடும். ஆனால், இந்த வீட்டுக்குருவிதான் உங்களுடன் இருக்கப்போகின்றேன்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.

பத்தனை பகுதியில் 17.07.2020 அன்று இரவு இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” வாக்கு என்பது உங்கள் உரிமை. அந்த வாக்குதான் ஆட்சியை தீர்மானிக்கப்போகின்றது. மக்களின் இறைமையே நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும். எனவே, அந்த உரிமையை எவரும் களவாடமுடியாது. முன்னர் கள்ள வாக்கு போட்டவர்கள் இருந்தனர், சாராயத்துக்கும், சாப்பாட்டுக்கும் வாக்குகள் அளித்தவர்களும் இருந்தனர். இந்த காலம் தற்போது மலையேறிவிட்டது.

கள்வர்கள் மற்றும் கொள்ளையர்களும் பாராளுமன்றம் தெரிவானதால் நல்லவர்களையும் மக்கள் திட்டினர். 225 பேருக்கும் இடிவிழ வேண்டும் எனவும் விமர்சித்தனர்.

சிலருக்கு அமைச்சு பதவி இல்லாவிட்டால் காலைக்கடனைகூட நிறைவேற்ற மனம்வராது. அவர்கள்தான் அந்தபக்கம், இந்த பக்கம் என தாவுகின்றனர். நாளை எந்த பக்கம் தாவுவார்கள் எனவும் தெரியாது. எமது பக்கத்திலும் இருக்கின்றனர்.உங்கள் புள்ளடி மூலம் சிறந்த பதிலடியை கொடுக்கவேண்டும். இதனால்தான் மஹிந்தவை விட்டுச்சென்றவர்களுக்கு வாக்களிக்ககூடாது என பிரசன்ன ரணதுங்ககூட கூறுகின்றார். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு முடிவுகட்ட வேண்டும்.

தற்போது பருவகால குருவிகள் வருகின்றன. அழகாக இருக்கின்றன. ஆனால், எதிர்வரும் 5 ஆம் திகதி பறந்துவிடும். ஆனால், இந்த வீட்டுக்குருவி உங்களுடன்தான் இருக்கும். வாக்குகளை வாங்கிக்கொண்டு தவளைகள்போல் தாவவில்லை. பதவிகள் பறிக்கப்பட்டபோதுகூட மஹிந்தவுடனேயே இருந்தேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களை வளைத்துபோட மொட்டு அணி வியூகம்

ஐக்கிய  தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அக்கட்சியின் ஆதரவாளர்களை தம்பக்கம் வளைத்துப்போடும் முயற்சியில் இறங்கியுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இதற்காக ‘பச்சை ஒளி’ (கொல எலிய) எனும் அமைப்பையும் உருவாக்கியுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அக்கட்சியின் உறுப்பினரான லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டதன் பலனாக அக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர் எம்முடன் இணைந்துவருகின்றனர். மாவட்ட மட்டத்திலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பரந்தப்பட்ட கூட்டணி அமைத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்ததால் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவர்களை நாம் பாதுகாப்போம். தற்போது ‘கொல எலிய’ (பச்சை ஒளி) எனும் அமைப்பை உருவாக்கியுள்ளோம். ஐக்கிய தேசியக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் இவ்வமைப்பில் இணைந்துள்ளனர். ஏனையோருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

அதேவேளை, புதிய கருத்து கணிப்பின் பிரகாரம் 139 ஆசனங்களை நாம் வெல்வது தற்போது உறுதியாகியுள்ளது. இனிவரும் நாட்களில் நிலைமைமாறும். எனவே, மூன்றிலிரண்டுக்கு அப்பால் பெறுவோம். ” – என்றார்.

‘உரிமை அரசியலுக்கு உயிர் கொடுத்த எம்மை பலப்படுத்துங்கள்’

” மலையக  தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டகையோடு கிடைத்திருக்கவேண்டிய உரிமைகளைக்கூட தமிழ் முற்போக்கு கூட்டணியே கடந்த நான்வரை வருடங்களில் பெற்றுக்கொடுத்தது. எனவே, மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வல்லமையும், பேரம் பேசும் ஆற்றலும் எமது அணிக்கே இருக்கின்றது. வாக்குரிமை மூலம் அதனை மக்கள் மேலும் பலப்படுத்தவேண்டும்.” – என்று  ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

2020 ஏப்ரல் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு கண்டி மாவட்டம் முழுவதும் வேலுகுமார் தலைமையில் தீவிர பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் பாத்ததும்பர தேர்தல் தொகுதியில்  நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வேலுகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

” மலையக  மக்களுக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி எதனையுமே செய்யவில்லை என்றும், கண்டி மாவட்டத்தில்கூட அபிவிருத்திகள் இடம்பெறவில்லை என்றும் பருவகால வேட்பாளர்களும், அரசாங்கத்தின் கைக்கூலிகளும் மக்கள் மத்தியில் போலிப்பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

அதுவும் என்னால் நிர்மாணிக்கப்பட்ட பாலத்தின்மீது நின்றபடி, எனது முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட தனிவீடுகளை பார்த்தப்படியே எதுவுமே நடக்கவில்லை என வாய்க்கூசாமல் பொய்யுரைக்கின்றனர். கண்டி மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை பட்டியலிட்டுக்காட்டி நான் உரிமையுடன் வாக்கு கேட்கின்றேன்.

என்னை விமர்சித்து வாக்கு கேட்பதே சிலரின் பிரச்சார வியூகமாக இருக்கின்றது. இன்று புள்ளபூச்சிகளுக்கும் கொடுக்கு முளைத்துள்ளன. பொட்டகோழிகூவி பொழுது விடியுமா என்ன? எனவே, எப்படிதான் விமர்சித்தாலும் எனக்கான மக்கள் ஆதரவை தடுக்கமுடியாது. மக்கள் சக்தி என்னுடனேயே இருக்கின்றது.

எமது மக்களுக்கு குடியுரிமை கிடைத்தகையோடு போராடியேனும் நிலவுரிமை, வீட்டுரிமை, கல்வி உரிமை, சுகாதார உரிமை, சம்பள உரிமை உட்பட மேலும் பல உரிமைகளை பெற்றிருக்கவேண்டும். ஆனால் அதற்கான தலைமைத்துவத்தை எந்த அரசாங்கம் வந்தாலும் அமைச்சுப் பதவிகளில் இருப்பவர்கள் வழங்கினார்களா? இல்லை. குடியுரிமை கிடைத்துவிட்டது, அதை வாங்கிக்கொடுத்தது நாம்தான் எனக்கூவி கூவியே வாக்குவேட்டை நடத்தினர்.
அதுமட்டுமல்ல மலையகத் தமிழர்களை வாக்களிப்பு இயந்திரமாக பயன்படுத்தும் ஆட்சியாளர்களின் முயற்சிக்கும் துணைபோனார்கள்.

குடியுரிமை கிடைக்கப்பெற்ற பின்னர் மலையக மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கியவர்கள் தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால் பல்வேறு உரிமைகளை முன்பே பெற்றிருக்கலாம். ஆனால், அமைச்சுப் பதவிகள் மட்டுமே அவர்களின் குறியாக இருந்தது.

தமிழ் முற்போக்கு கூட்டணி உதயமாகிய பின்னரே மலையகத் தமிழர்களுக்கு உரிமை அரசியலையும் முழுமையாக அனுபவிக்ககூடிய சூழ்நிலை உதயமாகியுள்ளது. நிலவுரிமை, வீட்டுரிமை ஆகியவற்றை பெற்றுக்கொடுத்துள்ளோம்

அத்துடன், அரசாங்க நிதியை தோட்டப்பகுதி அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு தடையாக இருந்த பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டோம். மலையகத்துக்கென தனியானதொரு அதிகார சபையையும் உருவாக்கியுள்ளோம். கண்டி மாவட்டத்திலும் தமிழர்களுக்காக உரிமை அரசியலும், அபிவிருத்தி அரசியலும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்டது. இப்படி எமது சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

எனவே, மலையகத்தில் சமூகமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே இருக்கின்றது. அந்த கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தே பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றது. அந்த கூட்டணியை தமிழ் மக்கள் வெற்றிபெறவைக்கவேண்டும்.

பிறந்தநாளைக் கொண்டாடும் உலக அழகிக்கு குவியும் வாழ்த்துக்கள்

பிறந்தநாளைக் கொண்டாடும் உலக அழகிக்கு குவியும் வாழ்த்துக்கள்

முன்னாள் உலக அழகியும், சினிமா நட்சத்திரமுமான பிரியங்கா சோப்ரா இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்துள்ள போதிலும், அவரது ரசிகர்கள் டுவிட்டரில் பிரியாங்கா சோப்ராவை ட்ரெண்ட் ஆக்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் உலகி அழகி பிரியாங்கா சோப்ராவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதில் ஆர்வமாகத்தான் இரசிகர்கள் இருக்கிறார்கள்.

உலக அழகியின் ட்ரெண்டிங் ஆகியுள்ள #டெங் இதோ
#HappyBirthdayPriyankaChopra

முச்சுதிணறல் – ஐஸ்வர்யா ராய் வைத்தியசாலையில் அனுமதி!

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் கொரோனா இருப்பது கடந்த 13 ஆம் திகதி  உறுதி செய்யப்பட்டது.

வைரஸ் அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யாவுக்கும் அவரது மகளுக்கும் நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் என இருவரும் மும்பையில் உள்ள நனாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமித்தாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஏற்கனவே கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராதியாவுக்கு கொரோனா தீவிரமடைந்ததையடுத்து இவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா? இதோ உங்களுக்காக

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவருக்கு உலகம் முழுதுமே பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் தங்கியுள்ளார்.

இவரின் வீட்டை பார்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு ரசிகனின் விருப்பமும் கூட.

அவரின் பிரமாண்ட வீடு இதோ உங்களுக்காக….


#Rajinikanth

நடிகர் அருண் விஜய்யை தொடர்ந்து கவுதம் மேனன் படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர், யார் தெரியுமா?

இயக்குனர் கவுதம் மேனன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர், இவர் அணைத்து முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிவிட்டார்.

இவர் இந்த லாக்டவுனில் கூட கார்த்திக் டைல் செய்த எண், ஒரு சான்ஸ் கொடு ஆகிய கூறும் படங்களை இயக்கியிருந்தார்.

மேலும் ஜோஸ்வா இமைபோல் காக்க, துருவ நட்சத்திரம் போன்ற திரைப்படங்களை இயக்கியும் வந்தார்.

அதுமட்டுமில்லாமல் பிரபல OTT நிறுவனத்திற்கு ஒரு Anthology திரைப்படத்தை இயக்கியும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜோஸ்வா இமைபோல் காக்க திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகரை நடிக்கவைக்க உள்ளாராம்.

பிரபல நடிகரான கிருஷ்ணா தான் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். இதற்கு முன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#GauthamVasudevMenon

மாஸ்டர் படத்தை 10 தடவை பார்த்துவிட்டேன், படம் எப்படியுள்ளது தெரியுமா?

மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய பின் நடிகர் விஜய்யுடன் இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதனால் மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இப்படம் லாக்டவுன் முடிந்த பின்பே வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் ட்ரைலருக்காக காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படம் குறித்து புதிய தகவலை கூறியுள்ளார்.

“மாஸ்டர் திரைப்படம் நன்றாக வந்துள்ளது, நான் இப்படத்தை 10 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். தளபதி விஜய்யின் ரசிகர்கள் மட்டுமில்லாமல், எல்லாத்தரப்பு ரசிகர்களுக்கும் மாஸ்டர் திரைப்படம் பிடிக்கும்” என கூறியுள்ளார்.

#Master #சினிமா

அகில இலங்கை புரட்சி மக்கள் பேரவை கட்சி ஆனந்தகுமாருக்கு ஆதரவு!

அகில இலங்கை புரட்சி மக்கள் பேரவை கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமாருக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

இறக்குவானை சூரியகந்த பகுதியில் நேற்று எஸ்.ஆனந்தகுமாரை சந்தித்த, அகில இலங்கை புரட்சி மக்கள் பேரவை கட்சியின் தலைவர் இராஜரட்ணம் பிரகாஷ், தனது ஆதரவை வழங்கினார்.

இரத்தினபுரி மாவட்டம் மலையகத்தின் ஒரு பகுதி என்பதை தமிழ் அரசியல்வாதிகள் மறந்துள்ளதாக கூறிய இராஜரட்ணம் பிரகாஷ், ஆட்சியிலிருந்த அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தமது கடமைகளை மறந்து செயற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

மலையகத்தின் ஏனைய மாவட்டங்களுக்கு வீடமைப்பு திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் புறக்கணிக்கப்பட்டதாக அவர் கவலை வெளியிட்டார்.

இரத்தினபுரியில் போட்டியிடும் ஏனைய தமிழ் வேட்பாளர் தமிழர்களை ஏமாற்றிய கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றமையினால், அவர் மீதான நம்பிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், மக்களுக்கு போலி வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல்வாதிகளை இனியும் தாம் நம்ப தயார் இல்லை என கூறிய இராஜரட்ணம் பிரகாஷ், ஐக்கிய தேசியக் கட்சியின் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி நேரயாக தமிழர் ஒருவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளமையினால், எதிர்வரும் காலங்களில் இரத்தினபுரி தமிழர்களுக்கான உரிமைகள் மற்றும் திட்டங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை தாம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அகில இலங்கை புரட்சி மக்கள் பேரவை கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமாரின் வெற்றியை உறுதி செய்ய இனிவரும் காலங்களில் உழைப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, இறக்குவானை – சூரியகந்த பகுதிக்கு விஜயம் செய்த எஸ்.ஆனந்தகுமாருக்கு மக்கள் பெருமளவிலான ஆதரவை வழங்கியிருந்தனர்.

புதிய எண்ணங்களுடன் களமிறங்கியுள்ள தமிழருக்கு தாம் ஆதரவு வழங்க தயார் எனவும் கூறியிருந்தனர்.

பெரும்பான்மை சமூகத்தின் முறையற்ற செயற்பாடுகளிலிருந்து தம்மை பாதுகாக்க உதவுமாறு விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த எஸ்.ஆனந்தகுமார், இரத்தினபுரி வாழ் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தான் முன்னின்று செயற்படுவதாகவும் உறுதியளித்திருந்தார்.

‘நல்லாட்சியே மலையகத்தின் பொற்காலம்’ – உதயா

” 2015 முதல் 2019 வரைதான் மலையகத்தின் பொற்காலம் என்று கூறலாம். காரணம் அந்த காலப்பகுதியில்தான்  உரிமை சம்பந்தமான பல விடயங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான உதயகுமார் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் காணியுரிமை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  திகாம்பரம், நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக நாலரை வருடம் இருந்தபோது தான் காணியுரிமை வீட்டு உரிமை ஆகியன பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டிலே மிகப்பெரிய பிரதேச சபைகளாக இருந்த நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகள் பிரிக்கப்பட்டு பல பிரதேச சபைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதில் இன்று தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் அதில் உறுப்பினராக வந்திருக்கின்றார்கள். ஆகவே உரிமையும், அபிவிருத்தியும் ஒன்றாக பெற்றுக்கொடுத்தது கடந்த நல்லாட்சி காலத்தில்தான் என்றும் குறிப்பிட்டார்.

கொட்டகலை கிரேக்லி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...