Home Blog Page 4049

நயன்தாராவுக்கு நழுவி போன ஷாருக்கான் பட வாய்ப்பு.. காரணம் இது தானா

தமிழில் மட்டுமல்ல தெனிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் தனது திரையுலக பயணத்தின் துவக்கத்தில் நடன இயக்குனர் மற்றும் நடிகருமான பிரபு தேவாவை காதலித்து திருமணம் வரைக்கும் சென்றார் என்பதை நாம் அறிவோம்.

ஆனால் அதன்பின் அவர்களுக்கு இடைய ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

நடிகை நயன்தாராவிற்கு பாலிவுட் திரையுலகில் நடிக்க வாய்ப்பு ஒன்று வந்துள்ளது.

ஆம் ஷாருக்கான், சத்யராஜ், தீபிகா படுகோன் இணைந்து நடித்து வெளிவந்த படம் சென்னை எக்ஸ்பிரஸ்.

இப்படத்தில் 1234 என பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு நயன்தாராவை கேட்டுள்ளனர்.

ஆனால் அப்படலுக்கு நயன்தாராவின் முன்னாள் காதலர் பிரபு தேவா நடன இயக்குனர் என தெரிந்ததும் அப்பட வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் நயன்தாரா.

அதன்பின் அப்படாளுக்கு நடிகை பிரியாமணி நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#tamil #tamilcinima

BigBoss-4 : சத்தமில்லாமல் நடைபெறும் ரகசியம்! எந்த வருடமும் இல்லாத செயல் – முக்கிய பிரபலம் போட்ட கண்டிசன்

வருடத்தில் பாதியை கடந்துவிட்டோம். டிவி நிகழ்ச்சிகளில் பலரின் கவனங்களை ஈர்த்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மீதான பார்வையும், எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொங்கியுள்ளது.

ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருவதால் சின்னத்திரைக்கான படப்பிடிப்புகள் நடத்துவதில் சிரமமான சூழ்நிலையே நிலவுகிறது.

பிக்பாஸ் சீசன் 4 க்கான நேரமும் வந்துவிட்டது. இவ்வருடம் நிகழ்ச்சி நடைபெறுமா என்ற சந்தேகமான கேள்வியே ரசிகர்கள் மனதில் இருக்கிறது. தமிழ் பிக்பாஸ் போல தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 4 ஐ இவ்வாண்டு ஒளிப்பரப்பாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால் கடந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் நாகார்ஜூனா கொரோனா முடியும் வரை படம் அல்லது டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது என கூறிவிட்டாராம்.

இந்நிலையில் நிகழ்ச்சி உருவாக்கக்குழு போட்டியாளார்களை Zoom ஆப் மூலம் மீட்டிங் நடத்தி, வீடியோ மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாம்.

கொரோனா குறைந்த பின் நிகழ்ச்சியை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளனர். மேலும் 6 அல்லது 7 வாரங்களில் நிகழ்ச்சியை முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

ஆனால் கொரோனா நீடித்தால் இந்நிகழ்ச்சி இவ்வருடம் ரத்தாகவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளார்கள்.

#BigBoss4

குடையுடன் செல்லுங்கள் மழை பெய்யும் என்கிறது வானிலை அறிக்கை

மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தின் கடலோர பகுதிகளிலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் அங்கு காற்றின் வேகமானது மணிக்கு 70-80 வரையில் வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

களுத்துறை தொடக்கம் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலனா கடலோர பகுதிகளில் கடல் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் வரையில் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கரையோரங்களில் கடலலைகளின் சீற்றம் அதிகரித்துக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

#srilanka #lka

தபால்மூல வாக்களிப்புக்காக இரு விசேட தினங்கள்!

பொதுத் தேர்தலுக்கான தபால் வாக்களிப்பில் பங்கேற்க முடியாதவர்களுக்காக இன்றும் நாளையும் இரு விசேட தினங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தபால் வாக்களிப்பு கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இடம்பெற்றன. அதன்போது வாக்களிக்க முடியாதவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையிலேயே இன்றும் நாளையும் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் கடந்த வாரம் வாக்களிக்க முடியாதவர்கள் இந்த இரண்டு தினங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

அதற்கிணங்க தமது நிறுவனங்களில் அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகள் முன்னிலையில் தபால் வாக்குகளை அளிக்க முடியும் என்றும் எவ்வாறெனினும் ராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் தபால் வாக்களிப்பு ஏற்பாடுகள் அந்த பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவுபெற்றதும் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
எதிர்காலத்தில் அந்த பிரதேசத்தில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

‘தோட்ட காணிகளை இளைஞர்களுக்கு வழங்கவும்’

கொவிட் 19 தொற்றால் தொழில் இழந்துள்ள பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழில் ஆரம்பிப்பதற்காக பெருந்தோட்டப் பகுதியிலுள்ள தரிசு நிலங்கள் பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டத்தில் அந்த காணிகள் அவர்களுக்கே சொந்தமாக வழங்க வேண்டும் என ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளேன் என பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.

லிந்துலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” வெளிமாவட்டங்களில் தொழில் புரிந்து தற்பொழுது தங்களது தோட்டங்களுக்கு திரும்பியுள்ள இளைஞர்கள் தோட்டத்தில் தொழில் செய்ய விரும்பவில்லை. அதே போல விவசாய தொழிலிலும் ஈடுபட விரும்பவில்லை. அவர்கள் வெளிமாவட்டங்களிலுள்ள சுற்றுலா விடுதிகளிலும் ஹோட்டல்களிலும் தொழில் புரிந்த இவர்கள் தற்பொழுது வேலையில்லாமல் வீடு திரும்பியுள்ளனர்.

இவர்களுக்கு சுற்றுலாத்துறையில் நன்கு அனுபவம் இருப்பதால் தோட்டங்களிலுள்ள தரிசு நிலங்களை இந்த இளைஞர்களுக்கு சொந்தமாக வழங்கினால் அவர்கள் அந்த காணியில் மலையகத்திற்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச பயணிகள் தங்குவதற்கான சுற்றுலா விடுதிகள் அமைத்து அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை தயாரித்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள முடியும்.

அந்த இளைஞர்களின் வேலையில்லா பிரச்சினையும் நீங்கிவிடும். அனேகமாக வெளிநாடுகளிலிருந்து மலையகத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மலையக தேயிலை தோட்டங்களை பார்ப்பதற்கு அதிகம் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

பெருந்தோட்ட பகுதியிலே அவர்களுக்கு தங்குவதற்கு வசதி கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். ஆகையால் பெருந்தோட்ட தரிசு நிலங்களை பெருந்தோட்ட இளைஞர்களுக்கு வழங்கும் பொழுது அவர்களுக்கு சொந்தமாகவே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்த எதிர்வரும் பொது தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியை வெற்றிப் பெற செய்ய வேண்டும் என்றார்.

மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் – முத்தையா பிரபு

மலையகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும். அதற்காகவே நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய ஆட்சியின்கீழ் நிச்சயத்தை மாற்றத்தை ஏற்படுத்துவோம் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அவரின் அபிவிருத்தி செயல்திட்டங்களை எமது பகுதியிலும் நடைமுறைப்படுத்தவேண்டும். அபிவிருத்தி என்பது வார்த்தையில் மட்டுமல்ல செயலிலும் இருக்கவேண்டும் என்பதற்காகவே நான் அரசியலில் குதித்துள்ளேன்.

தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பலரும் ஏமாற்றுவார்கள். ஆனால், செய்துகாட்டுவதற்காகவே நாம் அரசியலுக்கு வந்துள்ளோம்.
வருமானம் இன்மையே எமது மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாகும். அந்த வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான வழிமுறைகள் இங்கு இல்லை. அதற்கான திட்டங்களையும் அரசியல்வாதிகள் கொண்டுவரவில்லை.

நுவரெலியா மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இருந்தால் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லவேண்டியதில்லை. அவ்வாறான தொழிற்சாலைகளை கொண்டுவருவதற்கும் கடந்தகாலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான திட்டங்களையே நாம் கொண்டுவரவுள்ளோம்.

தொழிற்சாலைகளை உருவாக்கினால் உதிரி தொழில்களும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வீட்டின் அபிவிருத்தி கூடினால் மட்டுமே அபிவிருத்தி என்பது அர்த்தமுடையதாக இருக்கும்.  சுதந்திரகம் கிடைத்து 72 வருடங்கள் கடந்தும் தமிழ் அரசியல் வாதிகளால் நுவரெலியாவில் ஒரு தமிழ் தேசிய பாடசாலையை உருவாக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இவ்வாறான அரசியல் மாறவேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் வந்துள்ளேன். எனக்கும் வாய்ப்பு தந்து பாருங்கள், நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘கொரோனா’ – பலி எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 46  லட்சத்து   40 ஆயிரத்து 375 ஆக அதிகரித்து உள்ளது.

இவர்களில் 87 லட்சத்து  34 ஆயிரத்து 805 பேர் குணமடைந்துள்ளனர். 52 லட்சத்து 96 ஆயிரத்து 713 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 59 ஆயிரத்து 819  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 6 லட்சத்து 8 ஆயிரத்து 857  பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

‘மலையகம் இனியும் இப்படி பயணிக்கமுடியாது’ – மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர்களுக்கு முரளி அழைப்பு

லிந்துலை பிரதேசத்தில் மலையக இளைஞர்களுக்கான விளையாட்டுப் பயிற்சி நிறுவனம் நிர்மாணிக்கப்படும் என்று இலங்கைக் கிரிக்கெட் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஏக்கரில் அமையவுள்ள இந்த விளையாட்டு நிறுவனத்தில், விளையாட்டு வீர, வீரங்கனைகள் தங்கியிருந்து பயிற்சிப் பெறுவதற்கான வசதிகளும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு வர்த்தக பிரமுகர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முத்தையா முரளிதரன் மேலும் கூறியதாவது,

” மலையக இளைஞர்கள் தொழிலுக்காக தொடர்ந்தும் கொழும்பு வரும் நிலைமை தொடரக்கூடாது. மலையக இளைஞர்கள் தமது சொந்த காலில் நிற்கவேண்டும். அதற்காக சுயதொழில்துறையில் முன்னேற்றமடைய வேண்டும். சுயதொழில் பெறுவதற்கான வசதிகளை நாம் செய்துகொடுக்கத் தயார். இதற்கு அரசாங்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.

கடந்த 20 வருடங்களாக நாம் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளோம். இவற்றை நாம் வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. இருந்தாலும் இன்று சொல்கிறோம். ஏற்கனவே பதுளையில் எமது தொழில்கல்வி நிறுவனங்கங்கள் இருக்கின்றன. தற்போது நுவரெலியாவிலும் ஐந்து தொழில்கல்வி நிறுவனங்களை அமைக்கவுள்ளோம். தற்போது எனது சகோதரன் நுவரெலியாவில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அவருக்கு நீங்கள் விரும்பினால் வாக்களிக்கலாம். ஆனால் இந்த அரசாங்கம் தான் அடுத்த பத்து வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கப் போகிறது. எனவே, அரசாங்கத்தின் பங்காளிகளாக நாமும் இருக்க வேண்டும். அப்போது உங்களுக்குத் தேவையானவற்றை அரசாங்கத்திடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். அரசாங்கத் தரப்பில் போட்டியிடும் சகோதரன் பிரபு வெற்றி இதனை நாம் நிச்சயம் செய்வோம். அதற்கான அங்கீகாரத்தையே உங்களிடம் கேட்கிறோம்.

சகோதரனுக்கு வாக்களிக்காவிட்டாலும், நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். நுவரெலியாவில் தொழில்பயிற்சி நிலையங்களை நாங்கம் அமைப்போம். அதனைத்தவிர, லிந்துலையில் மலையக இளைஞர்களுக்கான விளையாட்டுப் பயிற்சி நிறுவனமொன்றையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஐந்து ஏக்கர் காணியும் பார்த்துள்ளோம். இதனை நிச்சயம் செய்துமுடிப்போம்.

இதனைத்தவிர, விவசாயம், கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, சுற்றுலா, விளையாட்டு ஆகிய துறைகள் வளர்ச்சி பெறவேண்டும். அரசாங்கத்தில் ஏராளமான திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த 20 வருடங்களாக தற்போதைய ஜனாதிபதியுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. அவர் நிச்சயம் செய்வார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அவர் தோல்வியடைந்தாலும், மலையகத்திற்கு செய்யும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

அவரை ஒரு அரசியல்வாதியாக நான் பார்க்கவில்லை. அவர் சிறந்த அரச நிர்வாகி. மலையகத்தை சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான திட்டம் இருக்கிறது. அதனை ஜனாதிபதி நிச்சயம் செய்வார். அப்படி செய்யும்போது நுவரெலியாவில் சுற்றுலாதுறை சார் தொழில்கள் உருவாகும்.  அத்துடன், இந்திய வீட்டுத் திட்டத்தில் இருந்து வீடுகளைப் பெற்றுக்கொடுப்போம்.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் இதுவரை 2000 ஆயிரம் வீடுகளை மட்டுமே கட்டி முடித்ததாக கூறுகின்றனர். இன்னும் 2000 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் இன்னும் நடப்பதாக கூறுகின்றனர். இதனை நான் கூறவில்லை. அவர்களே கூறியுள்ளார்கள். ஆனால், இந்தியா 14,000 வீடுகளை வழங்கியுள்ளது. இதனை ஏன் செய்துமுடிக்கவில்லை. அவர்களுக்குத் தேவையில்லை, அல்லது செய்யத் தெரியவில்லையா என்பது எனக்கு புரியவில்லை.

ஆனால், நாங்கள் இதனை செய்து முடிப்போம். எனது சகோதரன் ஊடாக இவற்றை நிச்சயம் நாங்கள் நிறைவேற்றுவோம். மலையகம் இனியும் இப்படி பயணிக்க முடியாது. அதனால் இளைஞர்கள் ஒரு திடமான தீர்மானத்தை எடுக்க வேண்டும். மலையகத்தை மாற்றும் சக்தி இளைஞர்களிடம் இருக்கிறது. இம்முறை இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்களுக்கு வாக்களியுங்கள். எனது சகோதரனும் இளைஞன் அவருக்கு வாக்களிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வெற்றியின் பங்காளியாக மாற முடியும்.

அத்துடன் அரசாங்கத்திடம் இருந்து பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நாம் மலையகத்திற்கு எடுத்து வருவதற்கு அங்கீகாரமாக இருக்கும். இந்த செய்தியை ஊரில் உள்ள உங்களின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று முத்தையா முரளிதரன் இதன்போது தெரிவித்தார்.

கொழும்பு வர்த்தக பிரமுகர்கள்  ஒழுங்குசெய்திருந்த நிகழ்வில், சுமார் 300 இற்கும் மேற்பட்ட கொழும்பில் பணிபுரியும் இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சி.ஐ.டியில் நாளை ஆஜராகுமாறு ரிஷாட்டுக்கு அழைப்பாணை!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை மீண்டும் நாளைக் காலை (20) 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர், பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூல கடிதம் ஒன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையிலும், அதற்கு மாற்றமாகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரி இன்ஷாப் அஹமட் தொடர்பிலான விவகாரம் ஒன்று குறித்தே, வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட், கட்டாயம் ஆஜராக வேண்டுமென, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC) இந்த அழைப்பாணையை விடுத்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அறிவுறுத்தலின் பின்னர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தமது தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதற்காக, அம்பாறைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே, இந்த அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் நாட்டின் ஏனைய இடங்களிலும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை குழப்பியடிக்கும் நோக்கிலேயே, இவ்வாறு அடிக்கடி அழைப்பாணைகள் விடுக்கப்படுகின்றன. கடந்த 09 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் 10 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்ட அவர், மூன்று தினங்களின் பின்னர் மீண்டும் விசாரணைக்கு வருமாறு கோரப்பட்டிருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் அரசியல் எழுச்சியை தடுத்து நிறுத்துவதற்காகவும், அவரது வெற்றியை இல்லாமல் ஆக்குவதற்காகவும், அவர் தலைமையிலான கட்சியின் பாராளுமன்ற ஆசனங்களை குறைப்பதற்காகவுமே, இவ்வாறன திட்டமிட்ட சூழ்ச்சிகள் அரங்கேற்றப்படுவதாக, கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘காங்கிரசுக்கு நிலையான வாக்கு வங்கியுள்ளது’

மலையகத்தில் நிலையான வாக்கு வங்கியுள்ள ஒரேயொரு கட்சியென்றால் அது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்தான் என்று காங்கிரஸின் ஊடகப்பேச்சாளரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

” இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது மக்களுக்கான செயற்படும் மக்கள் இயக்கமாகும். அதிலுள்ள உறுப்பினர்கள் குடும்ப உறுப்பினர்கள்போலவே கருதப்படுவார்கள். எனவே, காங்கிரஸ் என்பது குடும்ப கட்சி என்பது ஒருவிதத்தில் உண்மைதான். ஏனெனில் மலையக சமுகம் என்ற குடும்பத்துக்கான கட்சி அது.

பதவிகளுக்கு ஜனநாயக அடிப்படையிலேயே தேர்வுகள் இடம்பெறுகின்றன. கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் கோரிக்கையின் பிரகாரமே இ.தொ.காவின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.” – என்றும் அவர் கூறினார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

50 ஆண்டு கால இரும்புப் பாலம் துருப்பிடித்து சேதம்: உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

0
#பெயாவெல் தோட்டம் 50 ஆண்டு கால இரும்புப் பாலம் துருப்பிடித்து சேதம்: உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்! மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதி இன்றியமையாததாகும். ஆனால் மலையகப் பகுதிகளில் வாழும் மக்கள்...

பாதுகாப்பு பிரதி அமைச்சர், சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு!

0
இலங்கைக்கான சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை நேற்று கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இதன்போது, பாதுகாப்பு...