Home Blog Page 4048

‘பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும்’

பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் கொரோனா தொற்று கடமையிலிருந்து விலகி இருக்க தீர்மானித்திருப்பதாக தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

” இன்று உலகம் பூராவும் கொரோனா தொற்று பெரும் அளவில் பரவி வருகின்றது. இலங்கையிலும் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டுபிடிக்கப் படுகிறார்கள்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களுடைய கடமையில் இருந்து விலகி இருப்பது இந்த தொற்று பரவாமல் இருப்பதை தடுப்பதற்கு உகந்த ஒரு விடயமாக நான் கருதவில்லை.

எனவே அரசாங்கம் இவர்களை அழைத்து கலந்துரையாடி இவர்கள் கேட்கும் அந்த அதிகாரங்களை இவர்களுக்கு வழங்கி அவர்களையும் இணைத்துக் கொண்டு இந்த கொரோனா தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட முடியுமாக இருந்தால் அதுவே வெற்றியான செயல்பாடாக இருக்கும் என நான் கருதுகின்றேன்.

கடந்த காலங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களை அர்ப்பணித்து இந்த கடமையில் ஈடுபட்டதை நாங்கள் காண முடியும் எனவே அனைவரையும் இணைத்துக் கொண்டு இந்த பயணத்தை செல்வோமாக இருந்தால் மாத்திரமே கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பா.திருஞானம்

‘கொழும்பில் நடுத்தர வர்க்க மக்களுக்கு விசேட வீட்டுத்திட்டம் சஜித் ஆட்சியில் அமுலாகும்’

கொழும்பில் வாடகை வீடுகளில் வாழும் மத்திய வர்க்கத்தை சார்ந்த அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகிய நடுத்தர மட்ட வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு, அவர்கள் இன்று வாடகையாக செலுத்தும் தொகையையே சொந்த வீட்டுக்கான மாத கட்டணமாக மாற்றி அவர்களுக்கு சொந்த மனைகளை வழங்கும் வீட்டுத்திட்டத்தை சஜித் ஆட்சியில் முன்னெடுப்போம் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

மட்டக்குளிய, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் உரையற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

எமது நல்லாட்சியின் போது, வடகொழும்பில் 13,500 தொடர்மாடி வீட்டுமனைகளை கட்டி பின்தங்கிய குடிசைகளில் இங்கு வாழும் மக்களை புதிதாக குடியமர்த்தினோம். இன்னமும் இத்தகைய 10,000 தொடர்மாடி வீட்டு மனைகளுக்கு அடித்தளம் இட்டுள்ளோம். கடந்த நான்கு வருடங்களில் வட கொழும்பில் குடிசைகள் வெகுவாக மறைந்து விட்டன. நண்பர் அமைச்சர் சம்பிக ரணவக்க இந்த அபிவிருத்திக்கு பொறுப்பாக இருந்தார். இந்த வீட்டு திட்டங்களில் பாரபட்சமின்றி குடிசைகளில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களே பெரும்பான்மையாக குடியேற்றப்பட்டார்கள். பாரபட்சங்கள் நிகழாவண்ணம் நாம் கண்காணித்து கொண்டோம்.

இதற்கு முந்தைய ராஜபக்ச அரசாங்க காலத்தில் இந்த தமிழ், முஸ்லிம் மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் நடந்ததையும், அப்போது அவற்றுக்கு எதிராக நாம் போராடி அவற்றை தடுத்து நிறுத்தியதையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.

அதேபோல் மத்திய தர வர்க்க மக்களுக்கான விசேட வீட்டு மனைத்திட்டத்தை முன்னெடுக்கும்படி கோரிகைகளை பலமுறை நான் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்தேன். என்னுடன் இணைந்து இதற்காக நண்பர் முஜிபுர் ரஹ்மானும் கோரிக்கை விடுத்தார். எனினும் பிரதமர் ரணில் இதை கடைசிவரை தட்டிக்கழித்தே விட்டார். இந்த நடுத்தர வர்க்க மக்களுக்கான வீட்டுத்திட்டம் நடைமுறையாகும் பட்சத்தில், அது அன்றைய தேசிய வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவின் கீழ் வந்திருக்கும். இதுதான் இந்த திட்ட ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படாததன் காரணாமா என எனக்கு புரியவில்லை.

எனினும் எமது ஆட்சியின் கீழ் இந்த திட்டம் நடைமுறையாகும். இது கொழும்பில் பெரும்பான்மையாக வாடகை வீடுகளில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.” என்றார்.

சஜித்தின் கூட்டணி வாடகைக் கட்சி – நவீன் திஸாநாயக்க விளாசல்!

ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சியாகும். அந்த கட்சிக்யென கொள்கைகள் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கொத்மலை நவதிஸ்பன பகுதியில் 20.07.2020 அன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

” ஐக்கிய தேசியக்கட்சிக்கென ஒரு கட்டமைப்பு இருக்கின்றது. அது எமது கலாச்சாரம், மதம். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியென்பது, அதிக தலைவர்கள் உள்ள கட்சியாகும். சஜித்தை தலைவர் என்கின்றனர், மேலும் சிலர் சம்பிக்க தலைவர் என்கின்றனர். ஆனால், உறுதியான தலைவர் ஒருவர் இல்லாத கட்சியாகும்.

எனது தந்தை ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வெளியேறியபோது புதிய கட்சியொன்றை உருவாக்கினார். ஆனால், சஜித் அணியினர் கட்சியொன்றை வாடகைக்கு வாங்கியுள்ளனர். அந்த கட்சிக்கு கொள்கை இல்லை, இரண்டாம் தலைமைத்துவமும் இல்லை.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக பல கட்சிகள் உருவாகலாம். அவற்றுக்கு ஆயுள் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அழிக்கமுடியாது. 50 களில் பண்டார நாயக்க வெளியேறினார். சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கை சின்னம் இருந்தது. அதன் பின்னர் கதிரை, வெற்றிலை என இன்று மொட்டு சின்னத்தில் வந்து நிற்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இதே நிலைமையை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித்துக்கும், சம்பிக்கவுக்குமிடையில் அதிகாரப்போட்டி ஆரம்பித்துவிட்டது. நிதி பலத்தை பலப்படுத்தி சஜித் பக்கம் உள்ள உறுப்பினர்களை பாட்டளி வாங்கிவிடுவார். அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ஆவதே அவரது இலக்காகும். எமது கட்சியிலும் மறுசீரமைப்பு அவசியம். அதனை நிச்சயம் செய்வோம். என்றார்.

க.கிசாந்தன்

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மேலும் அறுவர் தப்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 06 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,O41 ஆக அதிகரித்துள்ளது.

672 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 724 ஆக இருக்கின்றது.

அரசியல் ஜாம்பவான்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் தேசியப் பட்டியலில் வருவது ஏன்?

அரசியலில் ஜம்பவான்கள் என கூறிய அரசியல்வாதிகள் இம்முறை பொதுத் தேர்லில் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.
நேற்று (2020.07.19) மாலை மொனராகலை மெதகம ஆர்.எம். குணசேன மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது பிரதமர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி ரணில் – சஜித் என பிளவுப்பட்டுள்ளதன் மூலம் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் சில அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்யாமல் தங்கள் வளர்ச்சியை மாத்திரம் கருத்திற் கொள்வதனால் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறான அரசியல்வாதிகளுக்கு இம்முறை மக்களின் வாக்குகள் ஒரு போதும் கிடைக்காதென்பதனை அரசியல்வாதிகள் அறிந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அமைத்து உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மொட்டு கட்சியால் முடிந்தது.
புதிய கட்சி ஒன்று உருவாக்கினால் ராஜபக்சக்கள் நடுவீதிக்கு செல்ல நேரிடும் என கூறியவர்களை இணைத்துக் கொண்டு இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட காரணம், நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு சென்று பொருளாதாரத்தை மேற்கொண்டு புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். நாட்டின் அரசியலை விற்பனை செய்யும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக புதிய சக்தி ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்கால சந்ததியினருக்காக புதிய தொழிற்சாலைகளை  உருவாக்குதல், விவசாயம் உட்பட பயிர்செய்கைகளை வளர்ச்சியடைய செய்தல், தொழில்நுட்ப கல்வி ஊடாக தொழில்களை உருவாக்குதல் உட்பட பொறுப்புடன் நாட்டை வளர்ச்சியடைய செய்யும் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக  இதன் போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறவுள்ள திகதி விபரத்தை கல்வி அமைச்சு இன்று (20) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதன்படி க.பொ.த. உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரையில் நடைபெறும் என்றும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தரம் 11,12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

130இற்கும் மேற்பட்ட பிரபலங்களின் டுவிட்டரை ஹேக்கிங் செய்த 21 வயது இளைஞர்

கடந்த புதன்கிழமையன்று நடந்த மிகப்பெரிய ஹேக்கிங்கை நடத்தியது 21 வயது இளைஞர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த புதன் கிழமை 130க்கும் மேற்பட்ட பல்வேறு முக்கிய பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. பிரபலங்களின் கணக்கில் க்ரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் மோசடிப்பதிவுகள் பகிரப்பட்டன.

இந்த கணக்குகள் மூலமாக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டு, அந்த லிங்க் வழியாக அனுப்பப்படும் பணம், இரட்டிப்பாக திருப்பிக்கொடுக்கப்படும் என்றும் டுவீட் செய்யப்பட்டிருந்தது.

ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மாஸ்க், ஜோ பீடன், மைக் ப்ளூம்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், பிளாய்ட் மெவேதர் மற்றும் கிம் காதர்சியான் ஆகியோரின் டுவிட்டர்கள் உட்பட உலகமெங்கும் பல பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளில் இந்த டுவீட்கள் வலம் வந்தன.

இதைதொடர்ந்து, டுவிட்டர் நிறுவனம் போராடி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனாலும் இதன் மூலமாக பிட்காயின் வாலட்டில் குறைந்தது 300 பரிவர்த்தனைகள் வழியாக, பல லட்சம் ஹேக்கர்களால் பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த ஹேக்கிங் எப்படி நடந்தது என்பது பற்றி எப்.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.இப்போது இந்த ஹேக்கிங் தாக்குதல் பற்றிய புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. சைபர் செக்யூரிட்டி குழு கண்டறிந்த தகவல்களின்படி ப்ளக்வாக்ஜோ என்ற ஹேக்கர் இந்த பெரிய ஹேக்கிங் தாக்குதலில் ஈடுபட்டுள்ள ஆவணங்கள் கிடைத்துள்ளன.

இந்த ஹேக்கர் ஏற்கனவே பல இணைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.ப்ளக்வாக்ஜோ என்னும் ஹேங்கர் 21 வயதுடைய ஜோசப் ஜேம்ச் கான்னர் என்பதும், இவர் லண்டன், லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் எனவும்,தற்போது ஸ்பெயினில் வசித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மாபெரும் ஹேக்கிங் பற்றிய முழு விபரங்களையும் திரட்டிவருகிறோம் என சைபர் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

கதிர்காமம் உற்சவ கொடியேற்றம் நாளை

வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்தின் கொடியேற்ற திருவிழா நாளை(21)செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

கொடியேற்றம் இடம்பெற்று 15 நாள் திருவிழாவின் பின்னர் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் ஆடிவேல் விழா நிறைவடையவுள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஆலயங்களின் திருவிழா , பக்தர்களின் வருகை என்பன என்பன மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ஆலயங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

உகந்தமலை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இவ்வருட கொடியேற்ற திருவிழா நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

இம்முறை ஆடிவேல் விழா உற்சவம் குறைந்தளவு பக்தர்களுடன் நடாத்த ஆரம்ப குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்னதானம், பாத யாத்திரை என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.

பகல் திருவிழா காலை 7மணி முதலும் இரவு திருவிழா மாலை 5மணி முதலும் நடைபெறவுள்ளன. திருவிழா உபயகாரர்கள் 50 பேர் வலை இரவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். திருவிழா காலங்களில் ஏனைய பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதியில்லை.

பதுளையில் அடை மழை – கடும் குளிர்….

பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடந்த சிலநாட்களாக கடும் மழை பெய்து வருகின்றமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகின்றது. இன்று (20/07/2020) அதிகாலை முதல் அடைமழை பெய்வதோடு பனிமூட்டமும் நிறைந்து காணப்படுகிறது.
அத்தோடு வழமைக்கு மாறாக அதிக குளிர் காலநிலைமையும் உணரக்கூடியதாகவுள்ளது. இதன்காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பிரதான வீதிகளிலும்  பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகனசாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸாரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நடராஜா மலர்வேந்தன்

‘தமிழ் மக்களுக்கு விசேடமாக எதனையும் வழங்க தேவையில்லை’

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்களின் ஒத்துழைப்பின்றி ஜனாதிபதியை தெரிவுசெய்யும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ் மக்களுக்கு விசேடமாக எதனையும் வழங்கவேண்டியதில்லை என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் துளியும் மாறவில்லை. நாட்டைகூறுபோடும் விதத்திலான தீர்வையே கோருகின்றனர். அதற்கேற்ற வகையிலேயே தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுவருகின்றன.

இம்முறை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பிரிவினைவாத சிந்தனைகளே உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே, அதனை அரசாங்கம் நிராகரிக்கவேண்டும்.  அவ்வாறு இல்லாது ஏற்கும்பட்சத்தில் ராஜபக்சக்களுக்கு ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

உள்நாட்டுபோர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதியொருவர் தமிழ் பேசும் மக்களின் ஆதரவு இன்றி வெற்றிபெறலாம் என்பதும் கடந்த ஜனாதிபதி தேர்தல்மூலம் உறுதியானது. ஆகவே, தமிழர்களுக்கு விசேடமாக எதனையும் வழங்கவேண்டியதில்லை.” –என்றார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

முடிவுக்கு வந்தது போர்: 19 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்து! ஈரான் அறிவிப்பு

0
அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று (16) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு...

தன்னை கைது செய்ய தடை உத்தரவுகோரி கோட்டாபய மனு!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தான் கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்ககோரி , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன...

50 ஆண்டு கால இரும்புப் பாலம் துருப்பிடித்து சேதம்: உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

0
#பெயாவெல் தோட்டம் 50 ஆண்டு கால இரும்புப் பாலம் துருப்பிடித்து சேதம்: உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்! மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதி இன்றியமையாததாகும். ஆனால் மலையகப் பகுதிகளில் வாழும் மக்கள்...