Home Blog Page 4062

‘தேர்தல் என்பது தர்ம யுத்தம் அல்ல – போலிகளை தோற்கடிப்போம்’ – திகா

” நேர்மையானவர்களுக்கும், போலிகளுக்குமிடையிலான போட்டியே இத்தேர்தலாகும். எனவே, நேர்மையானவர்களை, சேவை செய்தவர்களை தெரிவுசெய்யவேண்டியது மக்களின் கடமையாகும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் இன்று (11) தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

” வில்லை எடுத்துக்கொண்டு போருக்குபோவதுபோல, இந்த தேர்தல் தர்ம யுத்தம் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறு தர்ம யுத்தம் ஒன்றும் கிடையாது. மக்களுக்கு நேர்மையாக சேவை செய்த அரசியல் வாதிகள் யார், ஏமாற்றியவர்கள் யார் என்பதை அறிந்து, நேர்மையானவர்களுக்கு வாக்களிக்கும் தேர்தலாகும்.

இத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுப்போம் என்றார்கள். நடக்கவில்லை. ஜனாதிபதி வாங்கி தருவார் என்றார்கள், இப்போது ஜனாதிபதியே ‘பல்டி’ அடித்துவிட்டார்.

இதனை நாங்கள் சுட்டிக்காட்டினால், 50 ரூபா எங்கே என்று கேட்கின்றனர். அதனை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தேன். அங்கீகாரமும் கிடைத்தது. ஆனால், மலையகத்தில் இருந்த அமைச்சரும், பெருந்தோட்டத்துறை அமைச்சரும் இணைந்து ஆப்புவைத்து விட்டனர்.

எது எப்படியோ கடந்த நான்வரை வருடங்களில் மக்களுக்கு சேவை செய்துள்வோம். இவ்வாறு சேவைகளை செய்துவிட்டே வாக்குகேட்டு வந்துள்ளோம். எனவே, நாங்கள் தோல்வியடைந்தால் அது மக்களுக்கு ஏற்படும் தோல்வியாகும். தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு சிலர் போட்டியிடுகின்றனர்.

இதற்கு அரசாங்கமும் துணைநிற்கின்றது. எமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவேண்டுமெனில் தொலைபேசிக்கு வாக்களிக்கவேண்டும். சிலர் வாக்குகளைப் பெறுவதற்காக போலி வாக்குறுதிகளை வழங்கிவருகின்றனர். மக்கள் அதனை நம்பக்கூடாது.” – என்றார்.

க.கிசாந்தன்

‘சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுவோம்’

“கொவிட் – 19” வைரஸ் பரவல் தொடர்பில் சமுகத்தில் வதந்திகள் பரப்பட்டுவருகின்றன. எனவே, போலித்தகவல்களை நம்பவேண்டாம், பரப்பவேண்டாம் என்று இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” கொரோனா வைரஸால் நாட்டில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும், நாடு முடக்கப்படும் என்றெல்லாம் கருத்துகள் பரப்பட்டுவருகின்றன. வீண் அச்சத்தை ஏற்படுத்தும் விதத்திலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. எனவே, வதந்திகளை நம்பவேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்படும் தகவல்களை மட்டும் ஏற்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை, சமூகஇடைவெளி, முகக்கவசம் அணிதல் உட்பட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். எம்மிடம் ஒளிப்பதற்கு ஒன்றும் இல்லை.

அத்துடன், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கவேண்டியே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். எனவே, சுகாதார தரப்புகளால் வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றுமாறு நாம் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

‘ஐ.தே.கவால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்’ – ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியால் மாத்திரமே இந்நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

” டி.எஸ். சேனாநாயக்கவால் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியே இந்நாட்டில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டது. எனவே, பிரச்சினைகளை எப்படி தீர்ப்பது என்ற அனுபவம் எமது கட்சிக்கு உள்ளது.

சர்வதேச நாடுகளும் எமக்கு உதவி செய்யும். ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் பொருளாதாரம் வீழ்ந்தது. டிசம்பரில் மீட்டெழுத்தோம்.  அதிகாரம் கிடைத்த பின்னர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம்.

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் இருந்தால்தான் அதனை செய்யமுடியும். அந்த கட்சியை விட்டு வெளியேறினால் என்னால்கூட அதனை செய்யமுடியாது என்பதை வெளியேறியவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 73 லட்சம்பேர் மீண்டனர்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 5 லட்சத்து 62 ஆயிரத்து 900 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 62 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 237  பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 73 லட்சத்து 66 ஆயிரத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

நாவலப்பிட்டியவில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு!

நாவலப்பிட்டிய நகருக்கு இன்று (10.07.2020) வருகைதந்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அத்துடன், பொதுமக்களுடன் சிநேகப்பூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி மாவட்டந்தோறும் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இதன்படி கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று களப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதன் முதற்கட்டமாக நாவலப்பிட்டியவுக்கு ஜனாதிபதி வருகைதந்தார்.

நாவலப்பிட்டிய ஜயதிலக்க மைதானத்தில் வந்திரங்கிய அவர், சர்வமத வழிபாட்டில் பங்கேற்றபின்னர், மக்களை சந்திப்பதற்கு சென்றார்.

நாவலப்பிட்டிய பேருந்து நிலையத்தில் சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி மக்கள் திரண்டிருந்தனர். ஜனாதிபதியை கண்டதும் ‘ஜனாதிபதி வாழ்க, ஜனாதிபதி வாழ்க’ என கோஷம் எழுப்பி தமது ஆதரவை வெளிப்படுத்தி – வரவேற்பளித்தனர்.
இதன்பின்னர் பலர் ஜனாதிபதியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துகொண்டனர். மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவும் பங்கேற்றிருந்தார். அவருக்கு ஆதரவாகவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது

க.கிசாந்தன்

யார் திருடன்? ரவி ஆவேசம்! சஜித்துக்கும் பகிரங்க சவால்!!

” பிணைமுறி விவகாரம், ஐக்கிய தேசியக்கட்சிக்கு துரோகமிழைத்தது யார் என்பது உட்பட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் சஜித் பிரேமதாசவுடன் நேரில் விவாதிப்பதற்கு நான் தயார். சஜித் அணி மொத்தமாக வந்தாலும் தனி ஒருவனாக பதிலடிகொடுப்பேன்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க சவால் விடுத்துள்ளார்.மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய திருடன் கொழும்பு மாவட்டத்தில் இருப்பதாக சஜித் குறிப்பிடுகின்றார். இது உங்களை நோக்கி தொடுக்கப்படும் விமர்சனம்தானே என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ரவி கருணாநாயக்க இந்த சவாலை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் நபரும் கொழும்பில்தான் இம்முறை போட்டியிடுகின்றார். சிலவேளை, அவராகவும் இருக்ககூடும். அரசியலுக்கு வருவதற்கு முன்னரே நான் செல்வந்தன். மக்களுக்கு சேவையாற்றவே அரசியலுக்கு வந்தேன். ஆனால், தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் நடத்துகின்றனர்.

எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போலியானவை என்பதனை நிரூபிப்பதற்கு நான் தயார். விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு பதிலடியும் கொடுப்பதற்கு தயார் நிலையிலேயே இருக்கின்றேன். முடிந்தால் சஜித்தை விவாதத்துக்கு வரசொல்லுங்கள். தனியாக முடியாவிட்டால் அவரை சூழவுள்ளவர்களையும் அழைத்துவர சொல்லுங்கள்.

சஜித், சம்பிக்க, அஜித் பி பெரேரா, சுஜீவ சேனசிங்க, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன என எல்லோரையும் வரட்டும். அவர்களின் வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றுவேன்.

அதேவேளை, எனக்கும் கொழும்பில் உள்ள பாதாளகுழுக்களுக்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை. மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாலேயே என்மீது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.” – என்றார்.

ஒரே மேடையில் 2 பெண்களை கரம்பிடித்த இளைஞர் கைது!

ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞரை, பொலிஸார் கைது செய்தனர்.

மத்திய பிரதேசம் பெத்துல் மாவட்ட தலைமையகத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள கோடடோங்ரி தொகுதியின் கெரியா கிரமத்தை சேர்ந்தவர் சந்தீப்.

இவர் போபாலில் படிக்கும் போது அங்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வைந்து உள்ளனர். இந்த நிலையில் சந்தீப்புக்கு வீட்டில் பெண் பார்த்து மணமுடிக்க முடிவு செய்து உள்ளனர்.

இதற்கு சந்தீப் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.ஆனால் பெற்றோர் பிடிவாதமாக இருந்து உள்ளனர். இதனால் சந்தீப் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.

இதை தொடர்ந்து இந்த விவகாரம் பஞ்சாயத்துக்கு சென்றது. சந்தீப் குடும்பம், சந்தீப் காதலியின் குடும்பம், சந்தீப் பெற்றோர் பார்த்த பெண்ணின் குடும்பத்துடன் பஞ்சாயத்தார் சமரசம் பேசினர். இதை தொடர்ந்து இரண்டு இளம் பெண்களும் சந்தீப்புடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டனர்.

அதன் பின்னர் அவரது திருமணம் கெரியா கிராமத்தில் நடைபெற்றது. திருமண விழாவில் மணமகனின் குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் மற்றும் இரண்டு மணப்பெண்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இந்த திருமணம் குறித்து மூன்று குடும்பங்களுக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொண்டதால், அவர்களுக்கு திருமணம் செய்யப்பட்டது என கோடடோங்ரி கிராம பஞ்சாயத்து துணைத் தலைவரும் திருமணத்திற்கு சாட்சியுமான மிஸ்ரிலால் பர்ஹத் கூறினார்.

சந்தீப்பை மணந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவர் ஹோஷங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றொரு இளம் பெண் கோலாரி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் 2 பெண்களை திருமணம் செய்ததால் சந்தீப் உய்கே கைது செய்யப்பட்டு உள்ளார்.

மலையகத்தில் கோதுமை மாவில் மஞ்சள் தூளை கலந்து விற்பனை

மலையகத்தின் பிரதான நகரங்களிலுள்ள வியாபார நிலையங்கள் சிலவற்றில், மஞ்சள் தூளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அத்துடன் சில வியாபார நிலையங்கள், கோதுமை மாவில் மஞ்சள் தூளை கலந்து, அதனை மஞ்சள் தூள் என விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஒரு கிலோகிராம் மஞ்சள் தூள் 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே இது தொடர்பில், நுகர்வோர் அதிகார சபை கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

‘மலையக மக்களுக்கான எமது குரல் ஓங்கி ஓலிக்கும்’ – அநுர

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக எமது அணி தொடர்ந்தும் குரல் எழுப்பும் என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

” எதிர்க்கட்சிக்கான பொறுப்பை எமது அணியே கடந்தகாலங்களில் சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. அனைத்து துறைகளுக்காகவும் குரல் எழுப்பியுள்ளோம். அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து நாட்டுக்கு எதிரான திட்டங்களை தடுத்து நிறுத்தியுள்ளோம்.

ஜே.வி.பி. உறுப்பினர்கள் திருடர்களுக்கு எதிராக குரல் எழுப்பிவருகின்றனர். இந்நிலையில் எம்மை தோற்கடிப்பதற்கு நிதி வழங்கப்படும் என கம்பனியொன்றின் பிரதானி குறிப்பிட்டுள்ளார். எமது அரசியல் கொள்கை திருடர்களுக்கு வலிக்கின்றது. இதனால்தான் எமக்கு எதிராக பிரச்சாரம் செய்ய பணம் வழங்கப்படுகின்றது. திருடர்கள் எம்மை எதிர்ப்பதுகூட எமக்கு அரசியலில் கிடைத்த வெற்றியாகும்.

மக்கள் எமக்கு ஒருமுறை வாய்ப்பை வழங்கவேண்டும். ஆட்சிசெய்யமுடியாவிட்டால் நிச்சயம் அடுத்தமுறை வரமாட்டோம்.” – என்றார்.

ஆயிரம் ரூபா அல்ல 1,426 ரூபா அவசியம் – உதயா

விலைவாசி உயர்வை ஒப்பிடும் போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 426 ரூபா கிடைக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.

“ஆயிரம் ரூபா வழங்கப்படும் என 2015 மே மாதம் வாக்குறுதியளிக்கப்பட்டது. 2020 இலும் அந்த தொகை பற்றியே பேசப்படுகின்றது.

ரூபாவின் பெறுமதி, விலைவாசி உயர்வு, வாழ்க்கைச்செலவு ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இன்று எமக்கு ஆயிரத்து 426 ரூபா கிடைக்கவேண்டும்.  எனவே, ஆயிரம் ரூபா என்பது போதாது.

எமது இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தால், பெற்றோரின் சுமை குறையும். பொருளாதாரம் மேம்படும். ” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

அமைதி ஒப்பந்தம் தயார்: ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு!

0
அமெரிக்கா, ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாட்டை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வரவேற்றுள்ளார். எனினும், இந்த உடன்பாட்டை அனைத்து தரப்பினரும் உடனடியாகவும் முழுமையாகவும் செயல்படுத்துவதே இப்போதைய முக்கிய...

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா!

0
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் (UEDS) 20ஆவது ஆண்டு நிறைவு விழாவில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...