Home Blog Page 4063

‘மக்கள் படை என் பக்கமே – அரசியல் கோழைகளுக்கு 5 ஆம் திகதி பதிலடி’

” மக்கள் மத்தியில் எனக்கான ஆதரவு பெருகிவருவதால் –  தோல்வி பீதியில் தொடை நடுங்கிபோயுள்ள சிலரே , கைக்கூலிகளை ஏவிவிட்டு, கோழைகள்போல் மறைந்திருத்து தாக்குதல் நடத்துகின்றனர். மக்கள் படை என் பக்கமே நிற்கின்றது. எனவே, ஆகஸ்ட் 5 ஆம் திகதி வாக்குரிமை என்ற ஆயுதத்தின் ஊடாக தக்கபதிலடி கொடுக்கப்படும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்தார்.

புரட்டொப் பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு புஸல்லாவை நோக்கி பயணிக்கையில் பிரபுவின் வாகனம்மீது, ஒளிந்திருந்த சிலர் கற்களைவீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள முத்தையா பிரபு, தேர்தல் ஆணைக்குழுவிடமும், பாதுகாப்பு தரப்புகளிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடி வேட்பாளராகவே நான் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவருவதே எனது இலக்காகும்.

இதனை முன்னிலைப்படுத்தியே பிரச்சாரத்திலும் ஈடுபட்டுவருகின்றேன். ஏனையோர்போல போலி வாக்குறுதிகளை வழங்கவில்லை.
இதனால் மக்கள் மத்தியில் எனக்கான ஆதரவு பெருகிவருகின்றது. இந்நிலையில் தோல்விபீதியில் இருக்கும் சில வேட்பாளர்கள், வன்முறை, அடாவடிமூலம் எனது பயணத்தை தடுப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

மறைந்திருந்து தாக்குகின்றனர். எனது வெற்றி உறுதி என்பதாலேயே இப்படியெல்லாம் செயற்படுகின்றனர்.

நாம் நாகரீகமான அரசியல் கலாச்சாரத்தை விரும்புபவர்கள். வன்முறையை விரும்புவதில்லை. எனவே, என்னுடைய அரசியல் களத்தில் மோதுவதாக இருந்தால், கொள்கைகளை முன்வையுங்கள். விவாதிப்போம். அதனைவிடுத்து மறைந்திருந்து கோழைகள்போல செயற்படவேண்டாம். மக்கள் ஆகஸ்ட் 5 ஆம் திகதி பதிலடி கொடுப்பார்கள்,’ – என்று முத்தையா பிரபு தெரிவித்தார்.

முத்தையா பிரபுவின் வாகனம்மீது தாக்குதல்!

கொத்மலை தேர்தல் தொகுதிக்குட்பட்ட பூச்சிக்கொட தோட்டத்தில் (புரட்டொப்)  வைத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபுவின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மறைந்திருந்த சிலர் கற்களைக் கொண்டு தாக்கினர் என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்திற்காக சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே அவதானம்! இலங்கையில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் இன்று ஒரே நாளில் புதிதாக 57பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரி வித்துள்ளது.

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் உட்பட 450 பேரிடம் மேற் கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோத னையில் அவர்களில் 56 பேருக்குக்கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனச் சுகாதாரசேவைப் பணிப்பாளர் நாயகம் விசேடவைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த நபர் கடந்த மூன்று மாதக்காலமாக கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத் தப்பட்ட நபராவார்.

அதன்படி, அங்கிருந்த கைதிகள் உட்பட 450 பேர் பி.சி.ஆர். பரிசோத
னைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், இன்று காலை மாரவிலபிரதேசத்தில் கொரோனாத் தொற்றுக் குள்ளான பெண் ஒருவர் இனங்காணப் பட்டார்.

கந்தக்காடு போதைப்பொருள் புனர் வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோச
கராகச் செயற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

மக்களே, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் என சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றவும். பொறுப்புடனும், பொதுநலன் கருதியும் செயற்பட்டு கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவும்.

ஒரு மாதத்துக்குள் 62,686 பேர் கைது!

கடந்த ஜூன் மாதம் 06ஆம் திகதி முதல், இம்மாதம் 08ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப் புகளின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 62 ஆயிரத்து 686 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிபொருள்கள், சட்டவிரோத மதுபானம்வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தச் சந்தேகநபர்கள் கைதுசெய்யப் பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித் துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 12 ஆயிரத்து 186 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த குற்றச்சாட் டில் 23 ஆயிரத்து 446 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 ஆயிரத்து 87 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 6 ஆயிரத்து 6 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 515 பேரும் கைதுசெய்யப்பட்டுள் ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 128 பேரும், வெடிபொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 11 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 12
ஆயிரத்து 307 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்புகளில் ரி – 56 வகை துப்பாக்கிகள் 11, ரி – 81 வகை துப்பாக்கி
01, 12 துளை கொண்ட துப்பாக்கிகள் 42, கைத்துப் பாக்கிகள் 04, உள்நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கிகள் 29, ரிபிட்டர் வகை துப்பாக்கிகள் 74,வேறு துப்பாக்கிகள் 15, தோட்டாக்கள் 692, வாள்கள்06, கத்திகள் 02 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின்போது வெடிபொருள், டெட்டனேட்டர்கள், கைக்குண்டுகள் ஆகியனவும் கைப் பற்றப்பட்டுள்ளன. அத்தோடு, 4 இலட்சத்து 37 ஆயிரத்து 466 லீற்றர்
சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும்
பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

‘ஐ.தே.கவை விட்டு சென்றவர்கள் மீண்டும் வருவார்கள்’

ஐக்கிய தேசிய கட்சி நூற்றாண்டு கடந்தும் நிலைத்து நிற்கும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் 100 ஆண்டுகள் நாட்டில் இருக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சி தனது நற்பெயரை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைளை எடுக்கும். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி வேறு அரசியல் கட்சிகளுக்கு சென்றவர்கள் சம்பந்தமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மிகவும் துரதிஷ்டவசமான கட்சி. அந்த கட்சிக்கு சென்ற பலர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொள்வார்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

5 ஆண்டுகளுக்குள் மாற்றத்தை ஏற்படுத்துவேன் – ஜீவன் சபதம்

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒரு குடும்பம். கொட்டகலை என்பது எமது கோட்டை. எனவே, எந்நேரமும் அங்கே எமது மக்கள்  வரலாம். என்னை சந்திக்கலாம். பிரச்சினைகள் இருந்தால் கூறலாம். ஆலோசனைகளை இருந்தால் முன்வைக்கலாம். எனக்கு ஒருமுறை வாய்ப்பு தந்து பாருங்கள், ஐந்து வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டுவேன.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தெரிவித்தார்.

கொட்டகலை மேபீல்ட், சாமஸ் தோட்டத்தில் 09.07.2020 அன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் கூறியதாவது,

” எவ்வித நிபந்தனையும் இன்றியே ஆயிரம் ரூபா அவசியம் என அப்பா வலியுறுத்தியிருந்தார். எனவே, நிபந்தனைகளுடன் ஆயிரம் ரூபாவை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. இன்று சில துரைமார் ஆட்டம் போடுகின்றனர். இரண்டு கிலோ, மூன்று கிலோ கூடுதலாக பறிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர். அவர்கள் ஆடட்டும். எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டப்படும். எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஆயிரம் ரூபா கிடைக்கும். இது ஆறுமுகன் தொண்டமான் மீது சத்தியம்.

தனிவீட்டுத்திட்டத்தை கடந்த காலத்தில் குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போலவே முன்னெடுத்துள்ளனர். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மாத்திரமே வீடுகள் என்றனர். ஆனால், மலையகத்தில் வீடில்லாத அனைவருக்கும் வீடுகள் கிடைக்கவேண்டும் என்பதே எமது திட்டம். அத்துடன், பொருளாதாரமும் மேம்படுத்தப்படவேண்டும். நிதிப்பாய்ச்சல் எம்மை சூழவே இருக்கவேண்டும்.

ஜீவன் தொண்டமான் சின்ன பையன், அனுபவம் இல்லை என விமர்சிக்கின்றனர். மலையகத்தை இந்த சின்ன பையனிடம் தந்து பாருங்கள், ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகின்றேன்.

கண்டியில் போட்டியிடும் எமது இளம் வேட்பாளர் பாரத் அருள்சாமி என்ன செய்யப்போகின்றேன் என கூறி வாக்கு கேட்கின்றார். ஆனால், இவர் பிரதிநிதித்துவத்தை அழிக்க வந்துள்ளார் எனக்கூறியே மற்றவர்கள் வாக்கு கேக்கின்றனர்.

அதேபோல் பதுளையில் செந்தில் தொண்டமான் 10 வருடங்களாக மக்களுக்கு சேவைகளை செய்துள்ளார். அவர் திடீரென வானத்தில் இருந்து குதித்தவர் அல்லர். எனினும், இவர் எதனையும் செய்யவில்லை என விமர்சித்தனர். திட்டங்களை முன்வைத்தால் விலக தயார் எனவும் சவால் விட்டனர். செந்தில் தொண்டமான் ஆதாரங்களை வெளியிட்டார். ஆனால், அவர் தேர்தலில் இருந்து விலகவில்லை.

அதேவேளை, சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையேற்கும் போது அவருக்கு 26 வயது. இப்போது எனக்கும் அதே வயது தான். உங்களின் முன்னோர்கள் அவரை நம்பினர். நீங்கள் என்னை நம்புவீர்களா? எனக்கும் ஒருமுறை வாய்ப்பு தந்து பாருங்கள்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘ஜனாதிபதி செயலணிகளுக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம்’

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு ஜனாதிபதி செயலனியிலும் சிறுபான்மை சமூகம் உள்வாங்கப்படாமையானது எங்களை ஒரம் கட்டுவதாகவே கருதவேண்டியுள்ளது.

எனவே வர்த்தமாணியில் திருத்தம் ஒன்றை கொண்டு வந்து சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்வதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று மஸ்கெலியா மவுசாகலை லக்சபான பகுதியில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்

அண்மையில் ஜனாதிபதியினால் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல் பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலனியும் பாதுகாப்பான நாடொன்று ஒழுக்க நெறியுள்ள குணநலன் கொண்ட மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கான செயலனி ஆகிய இரண்டு செயலனியிலும் அங்கம் வகிக்கின்றவர்களின் விபரம் தொடர்பான வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு செயலனியிலும் சிறுபான்மை சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் உள்வாங்கப்படாமையானது எங்கள் மத்தயில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் பிரதமர் மகிந்த ராஜபக்ச இரண்டு சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்களை நியமிப்பதாக கூறியிருந்த நிலையிலேயே இந்த வர்த்தமாணி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இந்த வர்த்தமாணி அறிவித்தலை மீள் பரிசீலனை செய்து சிறுபான்மை சமூகங்களை பிரதிநதித்துவம் செய்கின்ற வகையில் அதனை வெளியிடுவதற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும்.

அதே நேரம் இது தொடர்டபாக டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டு வருவதையும் இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுவதுடன் அனைத்து சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்களும் ஒன்றினைந்து குரல் கொடுக்க முன்வரவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ரத்து

பாகிஸ்தானில் செப்டம்பரில் நடைபெற இருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் (ரி-20) போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பெற்றிருந்தாலும் அந்த உரிமையை இலங்கை கிரிக்கெட் சபைக்கு விட்டுக்கொடுப்பதாகவும், அதற்கு பதிலாக அடுத்த ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் சபை தலைவர் சவுரவ் கங்குலி இன்ஸ்டாகிராம் நேரலையில் நேற்று பேசுகையில், செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.

கொரோனா பரவலால் ஆசிய கோப்பை போட்டியை ரத்துசெய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இசான் மணியும் கூறியுள்ளார்.

‘உள்ளக சுயநிர்ணய உரித்தை மறுத்தால் விளைவு பாரதூரம்’

தமிழ் மக்கள் ஒரு நீண்டகால கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பின்பற்றி வருகின்றார்கள். அவர்களின் உரிமைகளை எவரும் நிராகரிக்கவே முடியாது. இதனை மிகவும் உறுதியாக வலியுறுத்த விரும்புகின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்த கருத்துக்கு இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினை விசேடமாக தமிழ் மக்களுடைய பிரச்சினை நாடு சுதந்திரமடைந்த காலம் முதற்கொண்டு நீடித்து வருகின்றது.

1956ஆம் ஆண்டு தொடக்கம் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் இந்த நாட்டில் ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காக ஜனநாயக ரீதியான கோரிக்கைகளை வைத்து தமிழ் மக்கள் தங்களுடைய ஏகோபித்த ஆதரவை அந்தக் கட்சிகளுக்கும் கொள்கைகளுக்கும் வழங்கி வந்துள்ளார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில், ஒரு மக்களை ஆட்சி புரிவதற்கு ஜனநாயக ரீதியாக அந்த மக்களுடைய சம்மதமும் இணக்கமும் பெறப்பட வேண்டும். அதனடிப்படையில் 1956ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட ஜனநாயக ரீதியான தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும்.

அது என்னவென்றால், ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட்டு அதியுச்ச அளவில் அதிகாரங்கள் பகிந்தளிக்கப்பட்டு மக்கள் தங்களுடைய கருமங்களைக் கையாளக்கூடிய அரசியல் சாசன ரீதியாக உலகத்தில் பல நாடுகளில் நிலவுகின்து போல் ஒரு ஆட்சி முறை ஏற்பட வேண்டும் என்பதே. இதனை எவராலும் உதாசீனம் செய்ய முடியாது.

இலங்கை அரசின் சம்மதத்துடன் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் குடியியல் உரிமைகளின் அடிப்படையிலும், பொருளாதார சமூக கலாசார உரிமைகளின் அடிப்படையிலும் ஒரு மக்கள் குழாமூக்கு உள்ளக சுயநிர்ணய உரித்து உள்ளது. இவையெல்லாவற்றையும் இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இவற்றை நிறைவேற்ற வேண்டியது இலங்கை நாட்டினதும் அரசினதும் கடமையாகும். இவை மறுக்கப்படுகின்றபோது விளைவுகள் பாதகமாக அமையலாம்.

ஒரு நீண்டகால கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பின்பற்றி வருகின்ற தமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாதவையாகும். இதனை மிகவும் உறுதியாக வலியுறுத்த விரும்புகின்றோம்” – என்றுள்ளது

‘உளவுத்துறையை முடக்கியது நல்லாட்சி அரசாங்கம்’ – பிரதமர்

நல்லாட்சி அரசாங்கம் உளவுத்துறையை முடக்கி தகவல்களை மறைப்பதன் மூலம் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு வழி ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

குருநாகல் கடுகம்பளை பிரதேசத்தில்  நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர்,

பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டிருந்த போதிலும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு இடமளித்துள்ளது எனக் கூறினார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களுக்கு தகவல் கிடைத்திருந்த போதிலும் உளவுத்துறை அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் கிடைத்த முன்கூட்டிய எச்சரிக்கையை மறைத்ததன் மூலம் அப்பாவி மக்கள் பலர் உயிரிழக்க நேரிட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் தெரிவித்த பிரதமர், ”மாவட்டமொன்றை அபிவிருத்தி செய்வதைவிட முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே எமது பொறுப்பு. குருநாகல் என்பது நான்கு இராஜ்ஜியங்கள் இருந்த மிகவும் பலம் வாய்ந்த மாவட்டமாகும்.

எமக்கு நாட்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறந்த புரிந்துணர்வு உள்ளது. ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பாராளுமன்றமொன்று அவசியம். எப்பொழுதும் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியே அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பின்போது அமைச்சர் ஜொன்ஸ்டன் பர்னாந்து கலந்துக் கொண்டிருந்தார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

அமெரிக்க, ஈரான் அமைதி ஒப்பந்தம் ஜெனிவாவில் கைச்சாத்து!

0
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம், விரைவில் சுவிட்சர்லாந்தில் கைச்சாத்திடப்படவுள்ளதென தெரியவருகின்றது. ஜெனிவாவில் இதற்குரிய நிகழ்வு இடம்பெறலாம் என ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இரு தரப்பு அமைதி பேச்சில் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானின்...

காணாமல்போன 6 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

0
காணாமல்போன 6 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! - பருத்தித்துறையில் சோகம் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, புலோலி வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கிணற்றில் விழுந்து 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பருத்தித்துறை...

2029 இல் நாமலே ஜனாதிபதி: மஹிந்த முன்னிலையில் அர்ச்சுனா சூளுரை!

0
" 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சதான் ஜனாதிபதி. அவருடன் பேசி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்." என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்ற...