Home Blog Page 4061

‘எங்களுக்கு எவரும் பாடம் கற்பிக்கவேண்டியதில்லை’

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வெளியில் இருந்து எவரும் பாடம் கற்றுக்கொடுக்கதேவையில்லை.  எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமானால் அனைத்து பயிற்சிகளும் எமக்கு வழங்கப்பட்டுள்ளன – என்று இ.தொ.காவின் நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

ஹட்டனில்   நகர வர்த்தகர்களுடான நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” நுவரெலியா மாவட்டத்தின் தலைமை வேட்பாளராக தலைவர் ஆறுமுகன் தொண்டமானே நியமிக்கப்பட்டிருந்தார். அவரின் மறைவின் பின்னர், அப்பதவி வேறு யாரிடமோ சென்றுவிடும் என சிலர் கூறினர். அவ்வாறு செல்லவில்லை. தலைமை வேட்பாளர் பதவி ஜீவன் தொண்டமானுக்கே வழங்கப்பட்டது. அவருக்கு அனுபவம் இல்லையென்றால் அப்பதவியை மொட்டு கட்சிக்காரர்கள் வழங்கியிருப்பார்களா?

கடந்த நான்கு வருடங்களாக செல்லும் இடங்களுக்கெல்லாம் ஜீவனை, தலைவர் அழைத்துசென்றார். பயிற்சிகளை வழங்கினார். எனவே, இ.தொ.கா. என்ற பலம்வாய்ந்த அமைப்புக்கு எவரும் பாடம்கற்றுக்கொடுக்கவேண்டியதில்லை. சமுகத்தை வழிநடத்தும் சக்தியும், அனுபவமும் எமக்கு இருக்கின்றது.

காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தல் காலத்தில் மட்டும் வருபவர்கள் அல்லர். மக்களோடு மக்களாக வாழ்பவர்கள். எனவே, பொதுத்தேர்தலில் எமது ஐந்து வேட்பாளர்களையும் வெற்றிபெற வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இன்று மலையக சமுகம் ஓரணியில் திரண்டுள்ளது. நிச்சயம் இ.தொ.காவை பலப்படுத்துவோம் என உறுதியளித்துள்ளனர். ” – என்றார்.

க.கிசாந்தன்

‘ஓரணியில் திரண்டு மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ – ஜீவன் அறைகூவல்

” ஒற்றுமையின்மை மற்றும் குறைகூறும் அரசியலாலேயே எமது மலையகம்  பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆனால், எமது சமுகம் அடுத்துவரும் காலப்பகுதியில் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தொடர்பில் என்னிடம் தெளிவான வேலைத்திட்டங்கள் உள்ளன. எனவே, மக்கள் ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹட்டன் வர்த்தக சமுகத்தினருடன் நேற்றிரவு ஹட்டனில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” தம்மைதாமே அரசியல் ஜாம்பவான்கள் எனக்கூறிக்கொள்ளும் சில அரசியல்வாதிகள், கடந்தகாலம் முழுவதும் ஆயிரம் ரூபா தொடர்பில் குறைகூறியே ஏனையப் பிரச்சினைகளை மூடிமறைத்தனர்.   இன்று படித்த இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு கல்விக்கேற்ப வேலை இல்லை. அதேபோல் சொந்தகாலில் நிற்பதற்கு முயற்சிக்கும் இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளும் இல்லை. மலையக மக்களுக்கு தோட்டத்தொழிலைதவிர வேறு எதுவும் தெரியாது என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலைமையை மாற்றவேண்டும்.
மலையகத்தில் நகரப்பகுதிகளில் கூலி வீடுகளில் வாழ்பவர்களுக்கான வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பிலும் எனது தந்தை திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரை விமர்சித்தனர். இன்று என்னை விமர்சிக்கின்றனர். இவர்களால்தான் மலையகத்துக்கு போதைப்பொருள் வந்தது எனக்கூறி கீழ்த்தரமான அரசியலை நடத்துவதற்கு நான் விரும்பவில்லை. ஆனால், போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி மலையகத்தில் அததன தடுப்போம்.
ஹட்டன் சந்தை ஹட்டனின் அடையாளம். அதனை திருத்தி அழகுப்படுத்தினால்போதும். ஹட்டனில் மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும். நிச்சயம் ஹட்டனை மலையகத் தமிழர்களின் தலைநகராக மாற்றலாம். நாம் ஆளுங்கட்சியில் இருக்கின்றோம். எனவே, எமக்கு வாக்களித்தால்தான், எமது மக்கள் வாக்களித்துள்ளனர் எனக்கூறி பேரம்பேசி, மக்களுக்கான தேவைகளை இலகுவில் நிறைவேற்றிக்கொள்ளகூடியதாக இருக்கும்.
இது என்னுடைய மலையகம். நீங்கள் என்னுடைய மக்கள். எனவே, இன்னும் 20 ஆண்டுகளில், 50 ஆண்டுகளில் மலையகம் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற இலக்கு என்னிடம் உள்ளது. அதனை நோக்கியே நாம் பயணிக்கவேண்டும். அதற்கு உங்களின் ஒத்துழைப்பும் அவசியம். ” – என்றார்.
க.கிசாந்தன்

‘சஜித் அணிக்கே வெற்றி – நான் அமைச்சராவது உறுதி’ – திகா திட்டவட்டம்

” 80 ஆண்டுகளாக பொய்யுரைத்து மலையக மக்களை ஏமாற்றியவர்கள் இன்றும் அதனையே செய்கின்றனர். ஆனால், நாம் பொய்யுரைக்கவில்லை. நான்கரை வருடங்களில் மக்களுக்கு சேவையாற்றிவிட்டு வந்து, அவற்றை முன்வைத்தே வாக்கு கேட்கின்றோம்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கடந்த ஆட்சியின்போது நாம் மலையக மக்களுக்கு பல சேவைகள் செய்தோம். ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்த பின்னர், எமது அமைச்சும் பறிபோய்விட்டது. அமைச்சின்கீழ் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் எல்லாம் பாதியிலேயே நிற்கின்றன.புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர், திட்டங்களை முன்னெடுக்க நிதியும் ஒதுக்கவில்லை, கவனமும் செலுத்தவில்லை. எமது ஆட்சி தொடர்ந்திருந்தால் இந்நேரம் வேலைத்திட்டங்கள் எல்லாம் முடிக்கப்பட்டிருக்கும்.

எம்மால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். உண்மை என்னவென்பது அவர்களுக்கு தெரியும். ஆனால், திகாம்பரம் நிர்மாணித்துக்கொடுத்த வீடுகள் குருவிக்கூடு, நான்கரை வருடங்கள் மக்களை ஏமாற்றினர் என சிலர் பிரச்சாரம் முன்னெடுத்து, மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.

எதுஎப்படியோ எமக்கான ஆதரவை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.புதிய அரசாங்கம் பதவிக்குவந்த நாள் முதல் இனவாத அடிப்படையிலேயே செயற்படுகின்றது. 5000 ரூபா கொடுப்பனவுகூட கட்சிசார்பாகவே வழங்கப்பட்டது. பொருட்கள், சேவைகளின் விலைகளும் உயர்வடைந்துள்ளன.

எனவே, நடைபெறவுள்ள தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான எமது கூட்டணி வெற்றிபெறும். நாம் அமைச்சராவதும் நிச்சயம். அபிவிருத்தி திட்டங்களும் தொடரும்.

அதேவேளை, தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று விமல்வீரவன்ஸ குறிப்பிடுகின்றார். தேவையில்லை என்றால் எதற்காக அவர்களுக்கு வாக்களிக்கவேண்டும்? எமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் உதிரிவேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால், மக்கள் எமக்கு வாக்களிப்பதன் ஊடாகவே உரிமைகளையும், அபிவிருத்திகளையும் வென்றெடுக்கமுடியும். ” – என்றார்.

க.கிசாந்தன்

‘சாதனைகளை படைக்க இ.தொ.காவுக்கு பேராதரவை தாருங்கள்’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அமையவுள்ள பலம்பாய்ந்த அரசாங்கத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பலமாக இருந்தால்தான் எமது மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து, சாதனைகளை படைக்ககூடியதாக இருக்கும். எனவே, மக்கள் பேராதரவை வழங்கவேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், ஊடகப்பேச்சாளருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

ஹட்டன் வர்த்தக சமுகத்தினருடன் நேற்றிரவு ஹட்டனில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” இன்று எமது சமுகத்தின் எதிர்ப்பார்ப்பு, இளைஞர்களின் அபிலாசைகள் எல்லாம் வெவ்வேறான நோக்கங்கள், இலக்குகளை கொண்டனவாக அமைந்திருக்கின்றன. அவற்றை அடைவதற்கான வழியை காட்டுவதற்காக மலையகத்திலிருந்து புதிய தலைமைத்துவம் புறப்பட்டிருக்கின்றது. தம்பி ஜீவனின் பேச்சு, சிந்தனை என்பவற்றை பார்க்கும்போது, ஒரு சாதாரண வட்டத்துக்குள் சுழழாமல், தூரநோக்கு சிந்தனை இருப்பதை அவதானிக்கமுடிகின்றது.

இன்னும் 50 வருடங்களுக்கு தேவையான அடித்தளத்தை இந்த தேர்தல் போடவுள்ளது. ஒற்றுபட்டிருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நாம் வென்றிருக்கின்றோம். ஐயா சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலும், மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் இது நடைபெற்றுள்ளது. தற்போதும் மக்கள் ஒன்றுபட்டுள்ளனர். இதன்வெளிப்படாகவே கூட்டங்களுக்கு அணிதிரண்டுவருகின்றனர். காங்கிரசுடன் இணைகின்றனர். பல துறைகளை சேர்ந்தவர்களும் ஆதரவை வெளிப்படுத்திவருகின்றனர்.
நடெபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியே வெற்றிபெறும். மூன்றிலிரண்டு பலத்துடன் ஆட்சியமைப்பதே இலக்காக இருக்கின்றது. இவ்வாறு அமையும் பலம்வாய்ந்த அரசாங்கத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பலமாக இருக்குமானால் மிக கூடுதலான சாதனைகளை நிலைநாட்ட முடியும். மக்களுக்கான தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளமுடியும். அதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது.
இதற்காகவே ஐந்து வேட்பாளர்களை ஆறுமுகன் தொண்டமான் நிறுத்தினார். ஐவரும் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. எனவே, மக்களிடம் இருந்து பெரும் ஆதரவை எதிர்ப்பார்க்கின்றோம். அதனை மக்கள் வழங்குவார்கள் எனவும் உறுதியாக நம்புகின்றோம். ” – என்றார்.
க.கிசாந்தன்

மலையக அரசியல்வாதிகள் ஓரணியில் திரளவேண்டும்!

மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி சமுகமாற்றத்தை நோக்கிப் பயணிப்பதற்கு கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் அனைத்து மலையக அரசியல்வாதிகளும், தொழிற்சங்கத் தலைவர்களும் ஓரணியில் திரளவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வித நிபந்தனைகளும் இன்றி ‘மக்களின் நலன்’ என்ற ஒரு விடயத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு இணைந்து பயணிக்கும் முடிவை கூடியவிரைவில் எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் வேலாயுதம் தினேஷ்குமார், இளைஞர், யுவதிகள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்டோரையும் சந்தித்து, அடுத்தக்கட்ட திட்டங்கள் சம்பந்தமாக விபரித்துவருகின்றார்.
இவ்வாறு நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மலையகத்தில் மாற்றம் வேண்டும் என்ற கோஷம் ஆரம்பம் காலம்தொட்டு எழுப்பட்டுவந்தாலும் அந்த இலக்கை நோக்கி இன்னும் பயணிக்கமுடியாதுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக எமது சமுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மையும் இதில் பிரதான காரணியாகும்.

ஒரு தரப்பு எதையாவது செய்தால் மறுதரப்பு காலை வாருவரும், விமர்சனங்களை முன்வைப்பதுமாகவே எமது அரசியல் கலாச்சாரம் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலைமை மாறவேண்டும். அதனை மாற்றியமைப்பதற்காகவே அரசியலில் இறங்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் வந்தது. எல்லாம் இணைந்து மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே எனது தந்தையின் எதிர்ப்பார்ப்பாகவும் இருந்தது.

‘ஒற்றுமை’ என்ற ஆயுதம் பலம்பொருந்தியது. ஓரணியில் இருந்தால் எதனையும் சாதிக்கமுடியும். ஒரு கையில் ஓசை எழுப்புவதைவிடவும் இரு கரங்களும் இணைந்தால் பலமாக சத்தம் வரும்.  குறிப்பாக சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலின்போது மலையக தலைவர்கள் அன்று இணைந்து செயற்பட்டனர். இதனால் இரண்டு பிரதிநிதிகளை சபைக்கு அனுப்பக்கூடியதாக இருந்தது.

இவ்வாறு இணைந்து செயற்பட்ட சந்தர்ப்பங்களிளெல்லாம் எமக்கு வெற்றியே கிடைத்துள்ளது.

மலையகத்தில் மாற்றம், சமுக விடுதலை, மக்களின் வாழ்வாதார மேம்பாடு, உரிமைகள் உட்பட மேலும் பல விடயங்களில் கட்சிகளின் நிலைப்பாடுகள் ஒருமித்ததாகவே காணப்படுகின்றன. எனவே, அவற்றை அடைவதற்கு இணைந்து செயற்பட்டால் , மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பேரம் பேசும் ஆற்றலும் உயரும். இது தொடர்பான கருத்தாடலை மலையக புத்திஜீவிகளும், சமுக செயற்பாட்டாளர்களும் ஆரம்பிக்கவேண்டும். ” என்றார்.

‘இனவாதத்தை தூண்டுபவர்களை கைதுசெய்யவேண்டும்’

இலங்கை என்பது பல்லின மக்களும் வாழும் நாடாகும். இந்நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடனேயே வாழ்கின்றனர். இந்நிலையில் ஒரு சில பௌத்த மதகுருமார்கள் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். இது விடயத்தில் அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட  வேட்பாளர் வடிவேல் சுரேஸ் வலியுறுத்தியுள்ளார்.

” ஒரு சில மதகுருமார்கள் இனவாத்தை தூண்டும் வகையில் தமிழர்களின் வரலாற்றை மாற்றியமைக்க முயற்சிக்கின்றனர்.இது முற்றிலும் தவறானது.ஏனைய அயல் நாடுகள் நம்மை பார்த்து வியக்கும் வண்ணம் நம் ஒற்றுமையை காட்ட வேண்டும்.

இப்படி இனவாதத்தையும் மதவாதத்தையும் காட்ட கூடாது.இவ்வாறு காட்ட எத்தணிப்பவர்களை பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் கைதுசெய்யப்பட வேண்டும்.” – என்றும் வடிவேல் சரேஷ் குறிப்பிட்டார்.

 

‘கொரோனா’ – தொற்றாளர்களின் எண்ணிக்கை 2511 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 43 பேரில் 13 பேர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்தவர்கள் எனவும் ஏனைய 30 பேர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,511 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘வாக்குகளை விற்று எதிர்காலத்தை வீணடிக்காதீர்’

” தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் துளியும் தெரியாதவர்கள்கூட, பல்வேறு உறுதிமொழிகளை வழங்கி தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு வாக்களிப்பது எமது எதிர்காலத்தை வீணடிக்கும் செயலாகும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் எஸ். சதாசிவம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” தோட்டத் தொழிலாளர்களின் வரலாறு மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அறியாதவர்களும், அனுபவமற்றவர்களும், தொழிலாளர்களுக்காக குரல்கொடுப்பதுபோல் நடித்து வாக்குகேட்கின்றனர்.

மக்களே சிந்தியுங்கள், வாக்கு என்பது விற்பதற்கு அல்ல. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அதனை பயன்படுத்தவேண்டும். தொழிலாளர்கள் பற்றி தெரியாதவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் எமது எதிர்காலத்தை வீணடிக்கும்.” – என்றார்.

‘திகாவின் குடும்பம் கொழும்பில் சொகுசு வாழ்க்கை’ – பிரபு பதிலடி

” தமிழ் முற்போக்கு கூட்டணி ஒழுங்காக அரசியல் செய்திருந்தால், நாம் அரசியலுக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. சொகுசு வாழ்க்கையை விரும்பிய முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள், மலையக மக்கள் தொடர்பில் சிந்திக்கவில்லை.” என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” நான் பரசூட் வேட்பாளர் என்று தொலைபேசியில் வாக்குகேட்கும் முன்னாள் அமைச்சர் ஒருவர் கருத்து வெளியிட்டுவருகின்றார். நான் இலங்கை நாட்டுப்பிரஜை. எங்குவேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம்.அது எனது உரிமை.

தான் லயத்தில் இருந்து வந்தவர் எனவும் அவர் கூறுகிறார். ஆனால் கொழும்பில்தான் வாழ்கின்றார். அவரின் மகன் ஆஸ்திரேலியாவில் படிக்கின்றார். ஏனையோர்கூட மலையகத்தில் உள்ள பாடசாலைகளில் படிக்கவில்லை. சொகுசு வாழ்க்கையையே விரும்புகின்றனர்.

முன்னாள் பிரதமர் ரணிலையும், முன்னாள் அமைச்சர் நவீனையும் இன்று குறைகூறுகின்றனர்.  50 ரூபா கிடைக்கவில்லையெனில் அன்று பதவி விலகியிருக்கலாம்தானே? தமிழ் முற்போக்கு கூட்டணி என்ன செய்தது? தைரியம் இல்லை.

சொகுசு வாழ்க்கையை விரும்பும் அவர்கள், மலையக மக்கள் பற்றி சிந்திப்பதில்லை. அவர்கள் ஒழுங்கான முறையில் அரசியல் செய்திருந்தால் நாங்கள் இங்கு வந்திருக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

செந்தில் தொண்டமானே மக்கள் சேவகன் – சென்னன் புகழாரம்

பதுளை மாவட்டத்தில் மாகாண அமைச்சராக இருந்து கொண்டு செந்தில் தொண்டமானே மக்களுக்கு அதிகளவு சேவை செய்துள்ளார். மாவட்டத்திற்கு அதிகளவு சேவையை நானே செய்தேன் எனக் கூறுபவர்கள் தமது அபிவிருத்தி பட்டியலை ஆதாரத்துடன் வெளியிட்டு மக்களிடம் சென்று வாக்கு கேட்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா முக்கியஸ்தருமான டி.வி. சென்னன் தெரிவிக்கின்றார்.

கிளன்-எல்பின் தோட்ட ஹிங்குருகம பிரிவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“செந்தில் தொண்டமான் முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார்.அவர் பாராளுமன்றம் சென்ற பின்னர் எவ்வாறான சேவைகளை செய்வார் என்பதை மாகாண அமைச்சராக பதவி வகித்த போது நிரூபித்து காட்டியுள்ளார்.கெபினட் அமைச்சரோ, பாராளுமன்ற உறுப்பினரோ செய்யாத அபிவிருத்தி பணிகளை அவர் மாவட்ட மக்களுக்கு செய்துள்ளார்.

 பாகுபாடின்றி தோட்ட, கிராம மற்றும் நகர மக்களுக்கு இவரது சேவைகள் சென்றடைந்துள்ளன.

சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தில் வேலையில்லா யுவதிகளுக்கு தையல் இயந்திரம், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், ஓய்வூதியம் பெற்று இருப்பர்களுக்கு அரச நிவாரண கொடுப்பனவு, பாடசாலைகளுக்கு தளபாடங்கள், பாடசாலை கட்டிடங்கள் நிர்மாணம், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு கல்விசாரா ஊழியர்களை நியமித்தல் போன்ற இவரது அபிவிருத்திகளை அடுக்கி கொண்டே போகலாம்.

                      முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தானே அதிக சேவை செய்தாக கூறிக்கொண்டு இருக்கின்றார். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது ரோபேரி தோட்டம் தொடக்கம் நீட்வுட் தோட்டம் வரை 75 வீதமான தோட்டங்களுக்கு மின்சாரம் வழங்கினேன்.

அப்புத்தளை தம்பேத்தன வித்தியாலயம், பசறை தமிழ் தேசிய பாடசாலை, பாரதி கனிஷ்ட வித்தியாலயம் என்பவற்றிற்கு கட்டிடங்கள் அமைத்து கொடுத்துள்ளேன். மக்கள் பிரதிநிதிகளாக பதவி வகிப்பது சேவை செய்யவே இச்சேவைகளில் செந்தில் தொண்டமான் முதன்மையானவராக திகழ்கின்றார். எனவே ஆளுங்கட்சி ஊடாக இன்னும் பல சேவைகளை பெற அனைவரும் அவரை ஆதரித்து வெற்றி பெற செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

ஒன்றிணைந்து செயல்பட எதிரணிகளுக்கு பீரிஸ் அழைப்பு!

0
“மாகாணசபைத் தேர்தல், நீதித்துறையின் சுயாதீனம் உட்பட தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினைகளின்போது எதிரணிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கான பொது மேடையே கூட்டு எதிரணியாகும்.” என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கண்டிக்கு பயணம்...

படைகளை மீள பெறமாட்டோம்: இஸ்ரேல் திட்டவட்டம்!

0
லெபனான் எல்லைப் பகுதிகளில் இருந்து தங்கள் ராணுவத்தை விலக்கிக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Israel Katz திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். போர்நிறுத்த உடன்படிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக லெபனான், சிரியா...

சொந்த நிலங்களை மீட்க வீதியில் இறங்கிய மக்கள்!

0
  - யாழ். மாவட்ட செயலகம், பலாலி சந்தியில் மாபெரும் போராட்டங்கள் யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையப் பகுதியில் இருந்து தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன்று திங்கட்கிழமையுடன்...