Home Blog Page 4060

‘ மலையக மக்களை எந்த கொம்பனும் சீண்டமுடியாது’ – திகா திட்டவட்டம்

” தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியே மலையகத்தின் வெற்றி. எனவே, கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மலையக மக்களை பாதுகாப்பதற்கு நானுஎம், மனோவும், ராதாகிருஷ்ணனும் இருக்கின்றோம். எனவே, எந்த கொம்பனுக்கும் அஞ்சவேண்டாம்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

லிந்துலை மெராயா கௌலினா தோட்டத்தில் நேற்று (12) மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” காணி உரிமை, தனிவீடு, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு என மலையக மக்களுக்கு பலசேவைகளை நான் கடந்த நான்கரை வருடங்களில் செய்திருந்தாலும், திகாம்பரம் ஒன்றுமே செய்யவில்லை என பொய்யுரைத்து சிலர் வாக்குகேட்பதை காணமுடிகின்றது. என்னை விமர்சித்தே சின்ன, சின்ன வாண்டுகளெல்லாம் ஓட்டு கேட்கின்றன. அதுமட்டுமல்ல மலையகத்தை ஒரே நாளில் மாற்றியமைக்கப்போவதாகவும் கொக்கரிக்கின்றனர்.

யார் என்ன சொன்னாலும், எனக்கு எனது மக்களே முக்கியம். நான் உங்களில் ஒருவன். எனது மக்களுக்கு எவராவது துரோகம் செய்தால் அவர் நிம்மதியாகவாழ முடியாத நிலை ஏற்படும் என்பதையும் கூறிவைக்கவிரும்புகின்றேன்.

எனக்கு நம்பிக்கை நிச்சயம் என்னை வெற்றிபெற வைப்பீர்கள். எனது வெற்றியே மலையகத்தின் வெற்றி. மாற்று அணியினரை வெற்றிபெறவைத்தால் அது மலையகத்துக்கு ஏற்படும் தோல்வியாகும்.

மலையக மக்களை காப்பாற்றுவதற்கு யாருமே இல்லையே என குமுறிவருகின்றனர். உங்களை நான் காப்பாற்றுவேன். தோட்டதுரையாக இருந்தாலும் எந்த கொம்பனாக இருந்தாலும் உங்களை சீண்டவிடமாட்டேன். எவருக்கும் பயப்படவேண்டாம்.

கொட்டகலை பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. இதனை தட்டிக்கேட்கமாட்டார்கள். ஆனால், துணைபோவார்கள். ” – என்றார்.

க.கிசாந்தன்

செந்திலின் கரங்களைப் பலப்படுத்தும் பூமிநாதன்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூமிநாதன், ஊவா மாகாண ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

செந்தில் தொண்டமானுக்கு பதுளையில் உள்ள பல பிரதேச சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினரகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் தமது ஆதரவை வழங்க முன்வந்துள்ள நிலையில், ஜே.வி.பியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி தரப்பில் பதுளை மாவட்டத்தில் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதியாக செந்தில் தொண்டமானுக்கு பலமிக்க அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படும் என்று பதுளை மாவட்டத்தின் பொதுஜனபெரமுன தேர்தல் குழுத் தலைவர் தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செந்தில் தொண்டமானுக்கு சிறுபான்மை சமூகத்தில் கிடைத்துவரும் ஆதரவு இரட்டிப்பாகியுள்ளது.

ஜீவன் தொண்டமானுக்கு வடக்கு, கிழக்கில் வாழும் மலையகத் தமிழர்களும் பேராதரவு

கடந்த 26 ஆம் திகதி முதல் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு, நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பேராதரவு பெருகிவருகின்றது.

இளைஞர் – யுவதிகள், மலையக புத்திஜீவிகள், சகோதர இனங்களைச் சேர்ந்த மக்கள், மாற்று கட்சிகளின் ஆதரவாளர்கள் என பலரும் ஜீவனின் கரங்களைப் பலப்படுத்துவதற்காக ஓரணியில் திரண்டுள்ள நிலையில் –  வடக்கு, கிழக்கில் வாழும் இந்திய வம்சாவளி மக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

“ பொதுத்தேர்தலில் நுவரெலியா, பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் ஜீவன் தொண்டமான் தலைமையில்  களமிறங்கியுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, மலையகத் தமிழர்களின் தாய்க்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ,தேசிய கட்சி என்பதற்கான அங்கீகாரத்தை வழங்குமாறு எமது சொந்தங்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்று வடக்கு, கிழக்கில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறியதாவது,

“ 87 இனக்கலவரம் உட்பட இதரகாரணங்களால் மலையகத்தில் இருந்து இடம்பெயறவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. நாம் இங்கு வாழ்ந்தாலும் எமது அடையாளம் மலையகம்தான். எமக்கான அரசியல் அடையாளம் காங்கிரஸ்தான். ஏனெனில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா காலத்தில் எம்மையும் அரவணைத்தே அவர் பயணித்தார்.

மலையகத்தில் மட்டுமல்ல கொழும்பு, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் காங்கிரஸ் காலூன்றியிருந்தது. தேசிய கட்சி, தேசிய தலைவர் என்ற கட்டமைப்பு இருந்தது. 1974 இல் உருவான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில்கூட சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா உப தலைவராக செயற்பட்டார். அந்த நிலைமை மீண்டும் திரும்ப வேண்டும் என விரும்புகின்றோம். ஜீவனின் வருகை எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் அவருக்கு ஆதரவை வழங்குமாறு எம் சொந்தங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானும் எமக்கு பல சேவைகளை செய்துள்ளார். ஆனால், அவரை நுவரெலியா மாவட்டத்துக்குள்ளேயே சிலர் முடக்கியனர்.  எமக்கும் அவருக்கும் இடையிலான உறவை துண்டித்தனர். எனினும், கடந்த 6 மாதங்களில் அந்த உறவு புதுப்பிக்கப்பட்டது. அவர் அடிக்கடி வடக்குக்கு வந்தார். ஆனால், திடீரென எம்மை விட்டு பிரிந்துவிட்டார். அந்த இடைவெளியை ஜீவன் நிரப்பவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

இ.தொ.காவின் ஆசியுடன் வடக்கில் சில பகுதிகளில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களையும் நாம் நிச்சயம் ஆதரிப்போம். எல்லைகள்தாண்டி காங்கிரஸின் சேவை தொடரவேண்டும் என்பதுடன் தேசிய கட்சி, தேசிய தலைவர் என்ற கட்டமைப்பையும் புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.” – என்றனர்.

‘ஒரு கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியது’

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 5 லட்சத்து 71 ஆயிரத்து 574 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 71 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 30 லட்சத்து 36  ஆயிரத்து 550  பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 75 லட்சத்து 82 ஆயிரத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் நேற்று மாத்திரம் 106 பேருக்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்று மாத்திரம்  106 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்கள் என்பதுடன் ஏனையவர்கள் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்பதுடன், மேலும் சிலர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் ஆயிரத்து 981 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 625 கொரோனா நோயாளிகள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

  வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? அரசின் நிலைப்பாடு என்ன?

தேர்தலை ஒத்திவைப்பதாக இருந்தால் இறுதிநேரம்வரை காத்திருக்காமல், தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுநடத்தி உடனடியாக அரசாங்கம் முடிவொன்றை எடுக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
கண்டியில் நேற்று (12) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொரோனா வைரஸ் மீண்டும் பரவுகின்றது. அவதானமாக இருக்குமாறு எனக்கு நேற்று (நேற்றுமுன்தினம்) அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. அதன்காரணமாகவே பாதுகாப்பான முறையில் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளேன்.
‘கொரோனா’ வைரஸ் பரவியுள்ளதா என்பதை கண்டறிவதற்காக பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு ஆரம்பத்திலேயே நான் வலியுறுத்தி இருந்தேன். அவ்வாறு செய்திருந்தால் இன்று இந்நிலைமை ஏற்பட்டிருக்காது. ஓரளவேணும் நிலைமையை கட்டுப்படுத்தியிருக்கலாம்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று பஸில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
‘கொரோனா’ முதலாவது தாக்கத்தின்போது, அதனை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி நாட்டை முடக்கினார். அதற்கு நானும் ஒழு ஆதரவு வழங்கினர். இதனால் என்னை ‘டீல்’ காரர் என்றுகூட சிலர் விமர்சித்தனர். அப்போதுகூட பரிசோதனையை அதிகரிக்குமாறே நான் கோரிக்கை முன்வைத்திருந்தேன்.
அதனை செய்யாமல், தேர்தலை இலக்காகக்கொண்டு அரசியல் இலாபம் தேடும் நோக்கில்  5 ஆயிரம் ரூபா பங்கிடப்பட்டது. அவசரமாக தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
உண்மை நிலைமை என்னவென்று சுகாதார சேவைகள் பணிப்பாளரும் கூறுவதில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் கொழும்பு கிளையும் உரிய தகவல்களை வெளியிடுவதில்லை.
முதலாம் கொரோனாவில் இருந்து மீள்வதற்கே எமக்கு 6 ஆயிரம் மில்லியன் டொலர் தேவைப்படுகின்றது. இந்நிலையில் 2ஆவது அலை ஏற்பட்டால் இத்தொகை இரட்டிப்பாகும்.
எனவே, தேர்தலை ஒத்திவைப்பதற்காக இருந்தால், இறுதிநேரம்வரை காத்திருக்காமல், தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்தின் உடடியாக முடிவொன்றை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு இல்லாவிட்டால் வீண் செலவுகளே அதிகரிக்கும்.
” – என்றார்.

‘பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம்’

பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (2020.07.12) காலை பாதுக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ச,
இந்த நிலத்திற்குள் நுழையும் போதே என்னால் மிகவும் மகிழ்ச்சியை உணர முடிகின்றது. எங்கள் அரசாங்கம் காணப்பட்ட காலப்பகுதியில் நான் பாடசாலை ஒன்றை திறக்க வந்தவுடன் இந்த நிலத்தை பார்க்க வந்தேன். இங்கு மிகப்பெரிய சதுப்பு நிலமே காணப்பட்டது.
நான் அந்த நேரத்திலேயே அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பேற்படுத்தி இந்த நிலத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறினேன். அவர் அந்த வேலையை செய்தார்.
 இதனால் இன்று நங்கள் இந்த முறையில் மிகவும் சுத்தமாக, தெளிவான அபிவிருத்தியடைந்த இடத்தில் கூட்டத்தை நடத்துவது குறித்து எனக்கு மிகப்பெரிய
மகிழ்ச்சியை உணர முடிந்தது.
அன்று நாங்கள் சிறிய கலந்துரையாடலில் ஆரம்பித்த பொதுஜன பெரமுனவின் வருகை இன்று மிகப்பெரிய சக்தியாகியுள்ளது. பிரதேச சபை தேர்தலில் நான்காயிரம் பிரதிநிதிகளை நியமிக்க முடிந்தது. அன்று 71 சதவீத வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றோம். வடக்கு – கிழக்கை தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் நாங்கள் மிகவும் தெளிவான விசேட வெற்றியை பெற்றோம் என்று கூறினால் சரியாக இருக்கும்.
கடந்த அரசாங்கம் இரண்டு வருடங்களாக மாகாண சபை தேர்தலை பிற்போட்டது. மாகாண சபை தேர்தலை பிற்போட்டுவிட்டு முடிந்த விடயங்களை செய்தார்கள். நாட்டில் நல்ல நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்த நேரிட்டது.
நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியை பெற்றோம்.இந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசியலமைப்பில் மாற்றம் மேற்கொண்டு பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
கடந்த 5 வருட ஆட்சியில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் முடிந்த விடயங்களை செய்தோம். எனினும் கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இருந்த மோதல் காரணமாக மக்களுக்கு எந்த ஒரு விடயமும் கிடைக்கவில்லை. தற்போது என்றாலும் ஐக்கிய தேசிய கட்சியில் பிளவுப்பட்டவர்கள் அரசாங்கம் ஒன்றை அமைக்க வாக்கு கேட்கவில்லை.
வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வாக்கு கேட்காத முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அவர்கள் சிறிகொத்தவை கைப்பற்றவே வாக்கு கேட்கின்றார்கள். அது நீதிமன்றத்திற்கு சென்றாவது தீர்த்துக் கொள்ள முடியும். நாட்டை அமைக்க எங்களுடன் இணையுமாறு நான் எங்கள் இளைஞர் யுவதிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
தொழில், தொழிற்சாலை, அபிவிருத்தி என்ற துறை நாட்டிற்கு அவசியமாகும். எங்கள் நாடு எங்கள் காலத்தில் மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டது. துறைமுகம், விமான நிலையம் மாத்திரமல்ல. பாடசாலைகளை எடுத்துக் கொண்டால் மஹிந்தோதய விஞ்ஞான பீடத்தின் ஊடாக நாங்கள் பாரிய கல்வி வளர்ச்சி ஒன்றை மேற்கொண்டோம்.
பாடசாலைகளை கட்டியெழுப்ப நாங்கள் பாரிய வேலைத்திட்டங்களை செய்துள்ளோம். வடக்கு – கிழக்கு உட்பட முழு இலங்கைக்கும் நூற்றுக்கு நூறு வீதம் மின்சாரம் வழங்கினோம். தற்போது முழு நாட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதே எங்கள் நோக்கமாகும். மின்சாரம் வழங்கியது போன்றே நாங்கள் நாட்டு வீதிகளுக்கு கார்ப்பெட் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டோம்.
தற்போது இலங்கையில் கார்ப்பெட் இல்லாத கிராமம் ஒன்று இல்லை. திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கு கூட மண் வீதி ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை என திரைப்பட இயக்குநர்கள் சிலர் கூறினார்கள்.
ஒரு லட்ச கிலோ மீற்றர் நெடுஞ்சாலை அமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எந்த பிரச்சினை வந்தாலும் இந்த பயணம் தொடர்ந்து செல்ல வேண்டும். சிறிய கால பகுதிக்கு மக்கள் சர்வதேச சூழ்ச்சியில் ஏமாற்றப்பட்டு எங்களை வீட்டிற்கு அனுப்பினார்கள்.
அதில் ஏற்பட்ட நட்டத்தை சரி செய்துக் கொள்ள வேண்டும். நாட்டில் முன்னோக்கி கொண்டு செல்ல வேலை செய்ய கூடியவர்களை நாங்கள் களமிறக்கியுள்ளோம். அவர்களை தெரிவு செய்வதற்கு மக்கள் கடமைகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகின்றோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, காமினி லொக்குகே, கீதாஞ்சன குணவர்தன, மஹேஸ் அல்மேதா, ரவிந்திர ஜயசிங்க ஆகியோர் உட்பட குழுவினர் இணைந்திருந்தனர்.

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (13) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சருக்கும், சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுக்குமிடையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘ஆயிரம் ரூபாவை விமர்சிப்பவர்களே 88 ஆயிரம் ரூபாவை தடுத்தனர்’

மலையக மக்களுக்கு அரச நியமனங்களை கூட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே பெற்றுக்கொடுத்தது. எதிர்காலத்திலும் பல திட்டங்கள் உள்ளன. எனவே, அரச ஊழியர்கள் எமக்கே ஆதரவை வழங்குவார்கள் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

தலவாக்கலை பகுதியில் 12.07.2020 அன்று மாலை  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேர்தல் என்பதைவிடவும் நாடும், நாட்டு மக்களுமே எமக்கு முக்கியம். எனவே, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றோம்.

நாளை தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகின்றது. மலையக இளைஞர், யுவதிகளுக்கு காங்கிரஸே அரசாங்க வேலைகளை பெற்றுக்கொடுத்தது. எம்மவர்களுக்கு அரச நியமனங்கள் கிடைக்கவேண்டும் என்பதில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உறுதியாக இருந்தார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆசிரியர் நியமனம், தபால் ஊழியர் நியமனம், தொடர்பாடல் அதிகாரிகள், மலையக உதவி ஆசிரியர்கள் என அந்த பட்டியல் நீள்கின்றது.

அதேபோல் பொதுத்தேர்தலில் பின்னர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி மலரும். அந்த ஆட்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிஸ் பிரதான பங்காளியாக இருக்கும்.  அந்த ஆட்சியின்போது அரச துறை உட்பட பல்துறைகளிலும் எமது இளைஞர், யுவதிகளுக்கு நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்படும்.

கடந்த ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின்போது மலையகத்தில் எந்தவொரு அரசாங்க நியமனமும் உரியவகையில் கிடைக்கவில்லை. எனவே, அரச ஊழியர்கள் தமது ஆதரவை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வழங்கவேண்டும். எமது வெற்றியில் அவர்களின் பங்களிப்பு இருக்கும் என உறுதியாக நம்புகின்றோம்.

அதேவேளை, 100 ரூபாவை வாங்கிக்கொடுக்கின்றோம் என தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய 88 ஆயிரம் ரூபாவை தடுத்தவர்களே இன்று ஆயிரம் ரூபா தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். நிச்சயம் ஆயிரம் ரூபாவை எந்தவொரு நிபந்தனையும் இன்றி பெற்றுக்கொடுப்போம். தேர்தல், வாக்குகள் என்பதைவிடவும் எமக்கு மக்களே முக்கியம்.

கொட்டகலையிலும் இராணுவ முகாம் – ராதாகிருஷ்ணன் தகவல்

நாட்டை இராணுவமயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் இந்த அரசாங்கம், கொட்டகலையிலும் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது மக்களுக்கு பெரும் இடையூறாக அமையும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொட்டகலையில் இன்ற (12) மாலை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

” ஜனாதிபதி தேர்தலின் போது நாம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தோம். எமது மலையக மக்களும் அவருக்கே வாக்களித்தனர். ஆனால், துரதிஷ்டவசமாக அவரால் வெற்றி பெற முடியாமல் போனது. பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம்செய்தே மொட்டு தரப்பு வெற்றிபெற்றது.

பாதுகாப்பு பற்றி கதைத்தவர்கள் இன்று கொட்டகலையிலும் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு இராணுவ முகாம் அமையுமானால் அது மக்களுக்கு இடைஞ்சலாகவே அமையும். இரவில் நடமாடினால் உள்ளே போட்டுவிடுவார்கள். பொலிஸாரிடம் சரி, உணமையை எடுத்துகூறிவிட்டு வந்துவிடலாம். ஆனால், இராணுவம் வந்தால் அவ்வாறு செய்யமுடியாது. சிவில் நிர்வாகத்துக்கும், இராணுவ நிர்வாகத்துக்குமிடையிலான வேறுபாடு இதுதான்.

அத்துடன், அமைச்சுகளுக்கான செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என எல்லாப்பதவிகளுக்கும் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். இவ்வாறு படிப்படியாக நாடு இராணுவ ஆட்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. போதாகுறைக்கு மலையகத்துக்கும் முகாம்வரப்போகின்றது. இதனை தடுத்து நிறுத்தவேண்டுமானால் எமது ஆட்சி உருவாகவேண்டும். எனவே, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

13ஆவது திருத்தச்சட்டம், 19ஆவது திருத்தச்சட்டம் ஆகியனவும் நீக்கப்படும் என்கின்றனர். இதனை தடுப்பதற்கு மொட்டு கட்சிக்கு வாக்களிக்ககூடாது.” – என்றார்.

க.கிசாந்தன்

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இஸ்ரேல் அடிபணியாது: அமைதி ஒப்பந்தத்துக்கு போர்க்கொடி!

0
"ட்ரம்ப் உருவாக்கியுள்ள அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது" - என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் தெரிவித்துள்ளார். இது குறித்து பென் கிவிர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "...

ஒன்றிணைந்து செயல்பட எதிரணிகளுக்கு பீரிஸ் அழைப்பு!

0
“மாகாணசபைத் தேர்தல், நீதித்துறையின் சுயாதீனம் உட்பட தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினைகளின்போது எதிரணிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கான பொது மேடையே கூட்டு எதிரணியாகும்.” என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கண்டிக்கு பயணம்...

படைகளை மீள பெறமாட்டோம்: இஸ்ரேல் திட்டவட்டம்!

0
லெபனான் எல்லைப் பகுதிகளில் இருந்து தங்கள் ராணுவத்தை விலக்கிக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Israel Katz திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். போர்நிறுத்த உடன்படிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக லெபனான், சிரியா...