Home Blog Page 4059

மலையகத்தில் வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்!

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மலையகத்தில் தோட்டப்பகுதிகளில் வாழும் வாக்காளர்களுக்கு, தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுவருகின்றது.

அதன் முதல் கட்டமாக இன்று (14)  ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை, டயகம, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இராகலை, உடபுஸ்ஸலாவ, பண்டாரவளை, பதுளை ஆகிய பகுதிகளில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.

தபால் ஊழியர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களிடம் விநியோகித்து வருகின்றனர். தேர்தல் ஆணையாளரினால் வாக்களர் அட்டைகளை தபால் நிலையத்தின் மூலம் விநியோகிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

க.கிசாந்தன்

‘கொரோனா’ – சுகாதார அமைச்சின் தரவுகள் குறித்து பலத்த சந்தேகம்!

கொவிட் – 19 தொடர்பில் சுகாதார அமைச்சால் வெளியிடப்படும் தரவுகள் தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அவற்றை நம்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

” கொரோனா வைரஸ் குறித்து ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்ப் பிரிவும் பரிசோதனைகளை நடத்திவந்த நிலையில், அங்கு உரிய முறையில் பரிசோதனை  நடைபெறுவதில்லை என குறிப்பிட்டு, அந்த விசாரணைப் பிரிவை,,  சுகாதார அமைச்சு நீக்கியது.

இலங்கையில் முதற்கட்டமாக கொரோனா வைரஸ் பரவியபோது கடந்த ஏப்ரல் மாதம் எனக்கும், மைத்திரிக்கும் குறித்த  பல்கலைக்கழகத்தின் பரிசோதனை பிரிவே, கொரோனா பரவியுள்ளதா என பரிசோதனை நடத்தியது. முடிவு வெளியானதும், எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டது. அவர்களின் பரிசோதனை பிழையெனில் எனக்கு நோய் ஏற்பட்டிருக்கவேண்டும்.

குறிப்பாக ஜிந்துபிட்டியவில் இருந்து ஒருவர் அழைத்துவரப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என பல்கலைக்கழகத்தின் பரிசோதனை பிரிவு கூறியுள்ளது. அவ்வாறு இல்லை. அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என பதிவிடுமாறு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்கலைக்கழகம் உடன்படிவில்லை.

நான் கூறும் இந்த விடயம் தவறெனில் உரிய விளக்கத்தை வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கேட்டுக்கொள்கின்றேன். எண்ணிக்கையை குறைத்துக்காட்டுமாறு வலியுறுத்தப்பட்டதாக பல்கலைககழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாரதூரமான விடயமாகும்.

உலகில் ஏனைய நாடுகள் பரிசோதனைகளை அதிகரித்துவருகின்றன. ஆனால், இங்கு இருந்த விசாரணைப்பிரிவையும் அகற்றியுள்ளனர். எனவே, சுகாதார அமைச்சு என்ன செய்கின்றது என்ற வினா எழுகின்றது. குறித்த அமைச்சால் வழங்கப்படும் தரவுகள் சரியானவையா என்பதில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தரவுகளை ஏற்கமுடியுமா? இன்று மக்கள் அச்சமடைந்துள்ளனர். அந்த அச்சநிலையை மட்டுமே மொட்டு அரசால் உருவாக்கமுடிந்தது.” – என்றார்.

முரளிக்கு பதிலடி கொடுத்தார் மனோ!

“இலங்கை அணியில் போராடிய தன் சக நண்பர்கள் குமார் சங்ககார, மஹேல ஜயவர்தன ஆகியோருக்காக கூட வாய் திறக்காத முரளி, இப்போது விமல் வீரவன்சவுக்காக வாய் திறந்துள்ளார். வாழ்க!” -என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் விமல்வீரவன்ஸவை ஆதரித்து நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய முத்தையா முரளிதரன்,

” இவ்வளவு காலமும் இருந்த மனோ கணேசன் ஒன்றும் செய்யவில்லை. அவர் அவ்வாறு செய்யாவிட்டால் எதற்காக மீண்டும், மீண்டும் அவருக்கு வாக்களித்து ஏமாறவேண்டும்.” – என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு,

” ஆம், முத்தையா முரளிதரன்! கொழும்பு உட்பட நாடு முழுக்க வாழும் தமிழருக்காக நான் “ஒன்றுமே செய்யவில்லை!”

ஆகவே கொழும்பில் வாழும் தமிழர்கள் எல்லோரும், இங்கே கொழும்பில் போட்டியிடும் “தலைவர்” விமல் வீரவன்சவுக்கே வாக்களிப்போம்!

அவர் தமக்கு தமிழ், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்று சொன்னாலும்கூட, நாம் அவருக்கே வாக்களிப்போம்!

இலங்கை அணியில் போராடிய தன் சக நண்பர்கள் குமார் சங்ககார, மஹேல ஜயவர்தன ஆகியோருக்காக கூட வாய் திறக்காத முரளி, இப்போது விமல் வீரவன்சவுக்காக வாய் திறந்துள்ளார். வாழ்க!” – என்றார்.

‘மனோ ஒன்றும் செய்யவில்லை – அவருக்கு ஏன் வாக்களிக்கவேண்டும்’? – முரளி

” இவ்வளவு காலமும் இருந்த மனோ கணேசன் ஒன்றும் செய்யவில்லை. அவர் அவ்வாறு செய்யாவிட்டால் எதற்காக மீண்டும், மீண்டும் அவருக்கு வாக்களித்து ஏமாறவேண்டும்.” – என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கேள்வி எழுப்பினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவன்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் கொழும்பு வர்த்தக சங்கத்துடன் நடைபெற்ற சிநேகப்பூர்வமான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு வினா எழுப்பினார்.

நாட்டுக்கு உயிரூட்டும் கொழும்பு 19 எனும் தொனிப்பொருளின்கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய முத்தையா முரளிதரன் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் எனக்குமிடையில் 20 வருடங்களாக நெருக்கமான தொடர்பு இருக்கின்றது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அவர்களே வெற்றிபெறபோகின்றனர். அவர்கள் தலைமையிலேயே ஆட்சி அமையப்போகின்றது.

நான் அரசியல்வாதி கிடையாது.  அரசியலுக்கு வரவும்மாட்டேன். பணம் சம்பாதிக்கவேண்டிய தேவையும் இல்லை.  ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சமுக சேவகராகவும் மரணிக்கவே விரும்புகின்றேன்.

நுவரெலியா மாவட்டத்தில் வாழும் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்குமாறும், அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி என்னிடம் கோரிக்கை விடுத்தார். அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்பதால் ஏற்கவில்லை. ஆளுநர் பதவியையும் வேண்டாம் என்றேன்.

இவ்வளவுகாலமும் இருந்த மனோ கணேசன் ஒன்றும் செய்யவில்லை. அவர் அவ்வாறு செய்யாவிட்டால் எதற்காக மீண்டும், மீண்டும் அவருக்கு வாக்களித்து ஏமாறவேண்டும்.” – என்றார்.

கொட்டகலையில் இராணுவ முகாமா? ராதாவின் கருத்துக்கு ராணுவம் மறுப்பு!

கொட்டகலையில்  இராணுவ முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தனக்கு எவ்வித உத்தியோகப்பூர்வத் தகவலும் கிடைக்கவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொட்டகலையில் இராணுவ முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான இராதாகிருஷ்ணன் நேற்று (12) தெரிவித்த கருத்தின் உண்மைத் தன்மை குறித்து வினவியபோதே, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இராணுவப் பேச்சாளர் சந்தன விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,

” நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானிக்கும் எந்த இடத்திலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படலாம். எனினும், கொட்டகலை சம்பவம் குறித்து எனக்குத் தெரியாது. கொட்டகலையில் இராணுவ முகாமொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எவ்வித உத்தியோகப்பூர்வ தகவலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதும் இல்லை” என்றார்.

கொட்டகலையில் நேற்று (12) மாலை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது,

பாதுகாப்பு பற்றி கதைத்தவர்கள் இன்று கொட்டகலையிலும் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு இராணுவ முகாம் அமையுமானால், அது மக்களுக்கு இடைஞ்சலாகவே அமையும். இரவில் நடமாடினால் உள்ளே போட்டுவிடுவார்கள். பொலிஸாரிடம் சரி, உண்மையை எடுத்துக்கூறிவிட்டு வந்துவிடலாம். ஆனால், இராணுவம் வந்தால் அவ்வாறு செய்ய முடியாது. சிவில் நிர்வாகத்துக்கும் இராணுவ நிர்வாகத்துக்கும் இடையிலான வேறுபாடு இதுதான்.” – என்றார்.

நன்றி – medialk.com

‘மொட்டுக்கு வாக்களித்து அரச பங்காளிகளாகுவோம்’ – சக்திவேல்

“பொதுத் தேர்தலில் ஆளும் பொதுஜன பெரமுன கூடுதலான ஆசனங்களைப் பெற்று பலம் வாய்ந்த அரசாங்கத்தை அமைக்கும். மலையக மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறினை இந்தத் தேர்தலிலும் விடாமல் பொதுஜன முன்னணிக்கு வாக்களித்து அரசாங்கத்தின் பங்காளியாக மாற வேண்டும்.

அப்போதுதான் எமது பிரச்சினைகளையும், தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும் எனவே நுவரெலியா மாவட்ட அரச ஊழியர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கு தங்களின் வாக்குகளை வழங்கி எங்களை வெற்றி பெறச் செய்து எங்களின் குரல்களை பாராளுமன்றில் ஒலிக்கச் செய்யுங்கள்.”

இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமாகிய பி.சக்திவேல் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலவாக்கலை கிளை காரியாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா அவர்கள் முதன் முறையாக மத்திய மாகாணத்திலும் ஊவா மாகாணத்திலும் தமிழ் கல்வி அமைச்சை கேட்டு பெற்றார். அக்காலகட்டத்தில் மலையகத்தில் கல்வியின் வளர்ச்சி மிக மோசமாக காணப்பட்டது.

அதனை சரிசெய்யவும் மலையக மக்கள் ஏனைய சமூகத்திற்கு மத்தியில் கல்வியில் வளர்ச்சியடைந்து ஏனைய சமூகங்களுக்கு நிகரான சமூகமாக வாழ்வதற்காகவே இந்த கல்வி அமைச்சை மத்திய அரசுடன் பேரம் பேசி பெற்றார்.

இந்த கல்வி அமைச்சினூடாக மலையகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த எண்ணிணார்.அவர் அன்று எண்ணியவாறு இன்றுவரை மலையகத்தில் கல்வியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது. தொழிலாளர் வர்க்கமாக இருந்த எமது சமூகம் இன்று பல்வேறு துறைகளில் உயர்ந்திருக்கின்றோம். அன்று அவர் கண்ட கனவு இன்று நனவாகி இருப்பதை காணமுடிகிறது.

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சினால் பாரிய மாற்றங்கள் தொடர்ந்து மலையகத்தில் ஏற்ப்பட்ட வண்ணமே இருக்கின்றன. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பெரும்பான்மை அரசியல்வாதிகளும் மலையகத்தின் ஒரு சில அரசியல்வாதிகளுக்கும் ஒரு இலக்கு இருந்தது இந்த மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சை எப்படியாவது இல்லாமல் செய்து விட வேண்டும் என இதுவே இந்த அமைச்சு கடந்த சில வருடங்களாக நம்மிடமிருந்து இல்லாமல் போக காரணமாக அமைந்தது.

அதனை எமது சமூகத்திற்கு மீண்டும் தனது பலத்தால் பெற்றுக்கொடுத்தவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான். எனவே எமது புத்திஜீவிகள் நன்கு சிந்திக்க வேண்டும் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக எண்ணில் அடங்காத சேவைகளை செய்து வரும் மாபெரும் ஸ்தாபனம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதே உண்மை.

எனவே இத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் ஐவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டிய கடமை உங்களிடம் உள்ளது என்றார்.

தலவாக்கலை  பி.கேதீஸ்

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராக அநுர நீதிமன்றில் மனு!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைங்களை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தமக்கு விடுக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யக் கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவன்காட் நிறுவனத்தை அடிப்படையின்றி கையக்கபடுத்தியதன் ஊடாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் நிசங்க சேனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த விடயம் தொடர்பாக சாட்சியமளிக்க அநுரகுமார திஸாநாயக்க ஜூன் மாதம் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

அவன்கார்ட் நிறுவனத்தை தான்தோன்றித்தனமாக கையகப்படுத்தியதால் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நிசங்க சேனாதிபதி முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இந்த முறைப்பாடு தொடர்பில் சாட்சியம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க 17 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செந்தில் தொண்டமானை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர்!

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திசாநாயக்க, தனது தேர்தல் பிரசாரத்தில் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வருவதைக் காண முடிகிறது.

பதுளை தோட்டப்புறங்களில் அசைக்க முடியாது செல்வாக்கு செந்தில் தொண்டமானுக்கு இருப்பதால், அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தி வாக்குச் சேகரிப்பில் பெரும்பான்மையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மாகாண சபையில் முதலமைச்சரை தீர்மானிக்கும் சக்தியாக செந்தில் தொண்டமான் இருந்தார். இதற்கு முன்னரும், நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா உள்ளிட்ட முன்னணி அரசியல்வாதிகளும் செந்தில் தொண்டமானின் படத்தைப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

தோட்டப்புறங்களில் செந்தில் தொண்டமானின் புகைப்படமின்றி எந்தவொரு பெரும்பான்மை வேட்பாளரும் வாக்குளைப் பெற முடியாது என்பதை அறிந்துள்ளதால் அவர்களது சுவரொட்டிகளுடன் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தையும் சேர்த்து அச்சிட்டுள்ளதைக் காண முடிகிறது..

பலம்மிக்க அமைச்சுப் பதவியொன்று செந்தில் தொண்டமானுக்கு வழங்கப்படும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் தொண்டமானுக்கு இருந்த பெருமளவிலான ஆதரவு தற்போது இரட்டிப்பாகியுள்ளது. இதனால், செந்தில் தொண்டமானுக்கு முன்னர் இருந்த ஆதரவைவிட தற்போது ஆதரவளிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

பதுளைத் தேர்தல்களம் நாளுக்குநாள் பரபரப்படைந்து வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தமிழ் வேட்பாளராக களமிறங்கியுள்ள செந்தில் தொண்டமானின் செல்வாக்கு தோட்டப்புறங்களில் அசைக்க முடியாத அளவு வளர்ச்சிக்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தேர்தலை ஒத்திவைக்குமாறு சஜித் அவசர கோரிக்கை

பொதுத்தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

“கொரோனா 2ஆவது அலை உருவாகியுள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, மக்களின் நலனின் கவனம் செலுத்தி தேர்தல் திகதியை பிற்போடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அவ்வாறு செய்யாமல் பிரச்சாரத்துக்கு நிபந்தனைகளை விதிப்பது ஜனநாயக முறைப்படியான நடவடிக்கையாக அமையாது.” எனவும் குறிப்பிட்டார்.

கொட்டின குளவிகள் – 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பதுளை, நமுனுகுல பிங்கராவ தோட்ட தொழிற்சாலை பிரிவில் தேயிலை கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 14 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பள்ளகெட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை (13/07) முற்பகல் 10.30 மணியளவில் குளவி கூடொன்று கலைந்து சராமரியாக தொழிலாளர்களை தாக்கியுள்ளது. அண்மை காலமாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குளவிகளின் தாக்கத்திற்குள்ளாவதுடன் மலைகளில் மிகுந்த அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடராஜா மலர்வேந்தன்

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...